திருக்கார்த்தியல், ராஜவனம், புலிக்குத்தி போன்ற அற்புதமான புனைவு படைப்புகளை தந்தவர் ராம் தங்கம். மூன்று படைப்புகளுமே பலதரப்பட்ட வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. திருக்கார்த்தியல் அவருடைய முதல் புனைவு புத்தகம். அந்தப் புத்தகத்தை தான் பலரும் அவருடைய முதல் புத்தகமென நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் எழுதிய முதல் புத்தகம் "ஊர்சுற்றிப்பறவை" என்கிற அவருடைய பயணக்கட்டுரை புத்தகம் தான்.

இந்தப் புத்தகத்தை இரண்டாவது முறை தட்டச்சு செய்து கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதே முழு புத்தகத்தையும் வாசித்துவிட்டேன். குமரியை நோக்கிய பயணத்தின் போது தன் நண்பர்களுக்கு தன் சொந்த ஊரின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து மகிழ்கிறார் வினோத் என்கிற இளைஞர். அந்தக் காட்சிகள் வாரணம் ஆயிரம் படத்தின் ஒரு பாடலில் வரும் "என்னோடு வா வீடு வரைக்கும்... என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்" என்ற வரிகளை நினைவூட்டியது. அந்த வரிகளுக்கேற்ப வினோத் தன் நண்பர்களுக்கு சொல்லும் குமரி மாவட்டத்தின் எழுத்தாளர்கள், அறிஞர்கள், சுற்றுலா தலங்கள், உணவுகள் போன்ற தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப்பூர்வமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதான் பிறந்து வளர்ந்த ஊரை உயிருக்கு உயிராக நேசித்தால் மட்டுமே இப்படியொரு புத்தகம் எழுத முடியும். புனைவுகள் மற்றும் பயணக்கட்டுரைகள் இரண்டிலுமே குமரி மாவட்டத்தின் நிலங்களையும் உணவுகளையும் அவற்றின் தன்மைகளையும் மிக துல்லியமாக பதிவு செய்து வருகிறார் ராம் தங்கம். சமீபத்தில் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ அவர்களின் வீட்டில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து தான் பார்த்து ரசித்த இயற்கை காட்சிகளை முகநூலில் எழுதி இருந்தார். அந்தப் பதிவை வாசித்த பலரும் excellent என்று கமெண்ட் செய்திருந்தார்கள். அதுபோன்ற எழுத்து நடை அமையப்பெறுவதெல்லாம் நிச்சயம் இயற்கை கொடுத்த ஆசிர்வாதம் தான். அந்த excellent ரக எழுத்து நடையை இந்த ஊர்சுற்றிப்பறவை புத்தகத்திலும் உணரலாம்.

அதே சமயம் இந்தப் புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பு பற்றி சொல்லியே ஆக வேண்டும். குமரி மாவட்டம் என்றாலே அதிகாலையில் கடலுக்குள் இருந்து எழும் சூரியன் தான் எனக்கு (எல்லாருக்கும்) நினைவுக்கு வரும். அந்த சூரிய உதயத்தை பார்க்கவில்லை என்றால் நாம் குமரி சென்றதற்கு அர்த்தமே இல்லை. அப்படிபட்ட சூரிய உதயத்தையும் புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலையையும் அட்டைப்படத்தில் இடம்பெற செய்தது, கண்குளிர செய்கிறது. இந்தக் காட்சிகளை மீண்டும் ஒருமுறை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற ஆர்வத்தையும் தூண்டுகிறது.
இந்த "ஊர்சுற்றிப்பறவை" புத்தகம் படித்த பிறகு, எனக்கும் என் சொந்த மாவட்டமான கரூரை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பிறந்தது. கரூர் மண்ணில் பிறந்து வளர்ந்து பத்ம பூசண் விருது வரை சென்ற வா. செ. குழந்தைசாமி அய்யா /நினைவுக்கு வந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி, எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்தாளர் பொ. வேல்சாமி, புலியூர் முருகேசன் போன்ற எனது மாவட்டத்திலும் பக்கத்து மாவட்டத்திலும் வாழும் இலக்கிய ஆளுமைகளை பற்றி தெரிந்துகொண்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்று பெரும் முயற்சி செய்த அய்யா நம்மாழ்வர் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் என்கிற பகுதியில் விதைக்கப்பட்டுள்ளார். தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் ஆறுநாட்டான் மலையில் கல்வெட்டு ஆராய்ச்சி செய்துள்ளார் அந்த தகவல் பள்ளி பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கவுண்டமணி நடித்த 49-O என்கிற படத்தில் வருவதை போல ஒரு ஊர் மக்கள் அனைவருமே வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ஊர் என்கிற பெருமை கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியை சேரும். தற்போதைய பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை ஐபிஎஸ் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியை சேர்ந்தவர். அதேபோல எங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிமணி எம்.பி தமிழக பெண் அரசியல் ஆளுமைகள் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார். முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி முதல்முறையாக கரூரில் உள்ள குளித்தலையில் தான் வேட்பாளராக நின்றார். இந்த செய்திகளை அறிந்ததும் கரூர் இவ்வளவு சிறப்புகளை கொண்ட ஊரா என்று வியந்தேன்.

எங்கள் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து எளிய மனிதர்களின் நம்பிக்கை பத்திரிக்கையாளர்களாக இருக்கும் துரை வேம்பையன், சிபி சக்கரவர்த்தி போன்றோரை முகநூலில் பின்பற்றி வருகிறேன். எனக்குள் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களை தான் இந்தப் புத்தகத்தின் உண்மையான வெற்றியாக நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு முன்பு கரூர் என்றால் பஸ் பாடி கட்டுவதற்கும், நெசவுத்தொழிலுக்கும் மட்டுமே பேமஸ் என்கிற தகவல் மட்டும் தான் எனக்கு தெரிந்திருந்தது.
நானும் ஒருநாள் "ஊர்சுற்றிப்பறவை - கரூர் மாவட்டத்தில் ஒரு சரித்திர பயணம்" என்கிற தலைப்பில் புத்தகம் எழுதுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை படித்த பிறகு நீங்களும் உங்கள் மாவட்டத்தை பற்றிய சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள்.
வானவில் பதிப்பகம்
விலை: 199
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.