Published:Updated:

என் புரிதலை மாற்றிய தியாகத் திருநாள்! | My Vikatan

Representational Image

இப்ராஹிம், இஸ்மாயில் இது சாதாரண பெயர்கள் என்று நேற்று வரையில் நினைத்திருந்தேன். தியாகத் திருநாள் பற்றி படிக்கத் தொடங்கியதும் புரிந்தது அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, இறைத்தூதர்கள் என்று புரிந்துகொண்டேன்.

என் புரிதலை மாற்றிய தியாகத் திருநாள்! | My Vikatan

இப்ராஹிம், இஸ்மாயில் இது சாதாரண பெயர்கள் என்று நேற்று வரையில் நினைத்திருந்தேன். தியாகத் திருநாள் பற்றி படிக்கத் தொடங்கியதும் புரிந்தது அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, இறைத்தூதர்கள் என்று புரிந்துகொண்டேன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தியாகத் திருநாள் பற்றி முதன் முதலாக கட்டுரை எழுதுகிறேன்.

ஆதலால்...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

என்று சொல்லி ஆரம்பிக்கிறேன்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் முதன்மையானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் தந்த "சீறாப்புராணம்" ஆகும். இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது.

இக்காப்பியம் 3 காண்டங்களை கொண்டது. 1) விலாதத்துக் காண்டம் 2)நுபுவ்வத் காண்டம் 3) ஹிஜ்ரத் காண்டம்

விலாதத்துக் காண்டம் நபிகள் பிறப்பு பற்றி போற்றிப் பாடுகிறது. நுபுவ்வத் காண்டம் இறைத்தூதர் ஜிப்ரீல் நபிகள் நாயகத்துக்கு குர்ஆன் அருளியதை விவரிக்கிறது. ஹிஜ்ரத் காண்டம் நபிகள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்றதை பற்றி விளக்குகிறது.

"திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய்

தெளிவினும் தெளிவாய்ச் சிறந்த

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்

மதித்திடாப் பேரொளி யனைத்தும்.."

சீறாப்புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம். இந்த

காண்டத்தின் முதல் பாடல் இது. இறைவனின் அழகையும் எல்லாப் பொருள்களிலும் உள் உறைந்து திகழ்கின்ற உண்மைப் பொருள் என்றும் தெளிந்த அறிவினும் சிறந்த அறிவுடையவன் உலகை காத்து ரட்சிக்கும் இறைவனை மனத்தின் கண் இருத்துவோம் என்று உமறுப்புலவர் எடுத்துரைக்கிறார்.

இறைவன் ஒருவனே. அவரின் தூதர் முஹம்மது நபி என்ற மூல மந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தொழுகை, ஏழை வரி, நோன்பு, புனித யாத்திரை செய்தல் போன்ற நற்செய்கைகள் இணைந்ததே இஸ்லாம் என்பதை தெளிவுபடுத்துகிறார்..

Representational Image
Representational Image
Photo by Utsman Media on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஒருத்தன்நா யகனவற்கு உரிய தூதெனும்

அருத்தமே யுரைகலி மாஅந் நிண்ணயப்

பொருத்தம்ஈ மான் நடை புனைத லாம்அமல்

திருத்தமே இவைஇசு லாமில் சேர்தலே"

இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கான முக்கிய ஐந்து

கடமைகள் (கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்) பற்றி குறிப்பிடும் போது

தீதுஇலா மறைப்பொரு ளாய்த்திகழ் ஒளியாய்

நிறைந்தஅல்லாச் செகத்தின் மேல்தன்

தூதராய் உமையிருக்க அனுப்பினதுங்

காலம்ஐந்தும் தொழுக என்றுங்

காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும்

பறுல்எனவே கழறும் ஐந்தும்

என்று சொல்லி இறைவன் விதித்துள்ள கட்டாய கடமைகள் பற்றியும் மேலே உள்ள பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

இறைவனால் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நாம் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் சுய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களும் உலகமும் நன்றாக இருக்கும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமுதாயப் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை

கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் 'நான் பெற்ற செல்வம்'

படத்தில் அழகான பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இதுதானடா...

வாழ்ந்தாரைக் கண்டால் மனசுக்குள் வெறுக்கும்

வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால் நடிப்பென சொல்லும்......"

பல்வகைப்பட்ட மனிதர்கள் சூழ்ந்துள்ள இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும். சவால்களை வென்று முழு மனிதன் ஆக வேண்டும்.

தேடிச் சோறுநிதந் தின்று — பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக உழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து — நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே — நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ?

ஏதோ பிறந்தோம், வயிற்றுப்பிழைப்புக்காக வேலையை தேடி

உணவு உண்டு பின் வெட்டி கதைகளை பேசி, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நிகழ்வுகளால் மனம் நொந்து நாமே நன்றாக இல்லை பிறர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என பிறர்க்கு தீங்கான செயல்கள் செய்து வழக்கம் போல நரை விழுந்து இறக்கும் பேதை மனிதர்களைப் போல இறக்கக்கூடாது என்று வலியுறுத்தி சொல்லி இருக்கிறார் தேசிய கவி பாரதியார்.

Representational Image
Representational Image
Photo by Adli Wahid on Unsplash

வாழும் வாழ்க்கையில் நாம் எதையாவது சாதிக்க வேண்டும். அந்த சாதனை புரிய காத்திருப்பவர்கள் மேல் இறைவன் பார்வை படும். அவர்களை புனிதர்களாக மாற்ற இறைவன் சில சோதனைகளை தந்து ஆட்கொள்வார்.

இப்ராஹிம், இஸ்மாயில் இது சாதாரண பெயர்கள் என்று நேற்று வரையில் நினைத்திருந்தேன். தியாகத் திருநாள் பற்றி படிக்கத் தொடங்கியதும் புரிந்தது அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, இறைத்தூதர்கள் என்று புரிந்துகொண்டேன்.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இறைத்தூதர் இப்ராஹீம். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத அவருக்கு அவரது 86 வது வயதில் இறைத்தூதர் இஸ்மாயில் பிறந்தார்.

இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் சோதனை மயமாக இருந்தது. அல்லா ஒருவரே இறைவன் அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே தனது கடமையாகும் என்பதை கொள்கையாக கொண்டவர்.

இஸ்லாத்தில் உருவ வழிபாடு கூடாது. இதற்கு எதிராக இருந்த தனது தகப்பனாரிடம் நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள் நிச்சயமாக ஷைத்தான் அர்ரஹ்மானுக்கு மாறு செய்பவன் என்று சொல்கிறார் (குர்ஆன் 19:44). மக்களிடமும் தனது தகப்பனார் வடிக்கும் சிலைகளை வாங்கி வணங்கக்கூடாது என்று எடுத்துரைக்கிறார்.

Mecca
Mecca

தனக்கு எதிராக செயல்படும் மகனை "நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா.. நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மை கல்லெறிந்து கொல்வேன், இனி நீர் என்னை விட்டு நெடுங்காலம் விலகிப் போய்விடும் என்றார்.(குர்ஆன் 19:46) .

தந்தை வடித்த சிலைகளை உடைத்து அதன் மூலம் மக்களின் கோபத்துக்கு உள்ளாகி, மன்னர் நம்ரூத் உத்தரவால் நெருப்பு குண்டத்தில் வீசப்பட்டார். இறைவன் தன்னை காப்பாற்றுவார் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இருந்தார். இறைவனும் "நெருப்பே நீ இப்ராஹீம் மீது குளிர்ச்சியாகவும் , சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்கிறார். (குர்ஆன் 21:69)

அதன் பிறகும் சோதனைகள் தொடர்கதையாக மாற இறைவனின் கட்டளையின் படி தனது குடும்பத்தை ஆள் நடமாட்டமில்லாத மக்கா பாலைவனத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறார். அங்கே ஜம்ஜம் நீரூற்று உருவாக அவர்களை பயன்படுத்தினார் இறைவன். ஜம் ஜம் தண்ணீர் இன்று ஒரு புனித பொருளாகிவிட்டது.

இறைத்தூதர் இஸ்மாயில் பாலப் பருவத்தில் இருந்து ஓடியாடித் திரியும் பருவத்துக்கு வந்ததும் அடுத்த சோதனை வந்தது. தனது மகனை அறுத்து இறைவனுக்கு பலியிடுமாறு உத்தரவு வருவது போல இப்ராஹிம் கனவு காண்கிறார். இது இறைவனின் உத்தரவுதான் என்பதை தெளிவாக உணர்ந்த அவர் மனைவி மகனிடம் அதைப் பற்றி கூறுகிறார். அவர்களும் அதை நிறைவேற்றும் படி கூறினார்கள். இந்த சோதனையில் இப்ராஹிம் தோல்வியடைய மூவரிடமும் ஷைத்தான் மாறி மாறி சாகச வார்த்தைகள் பேச முயன்று தோற்றுப் போனது. மூவரும் ஷைத்தானை கல்லால் அடித்து துரத்துகிறார்கள்.

இறைவன் கட்டளையை நிறைவேற்ற முற்படும் போது வானவர் ஜிப்ரீல் மூலம் தடுத்து அதற்கு பதில் ஒரு ஆட்டை வானத்தில் இருந்து கொடுத்து அறுத்து பலியிட செய்தார்.

அதன் நினைவாக ஆண்டுதோறும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அன்று அது கடைபிடிக்கப்படுகிறது.

மெக்கா
மெக்கா

அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற இறைத்தூதர் இப்ராஹீம் தம் குடும்பத்தோடு மக்கா வருகிறார். அங்கே இறைவனை வழிபட கஅபா என்னும் இறை ஆலயத்தை நிர்மாணித்தார். அதை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அதுதான் ஹஜ்.

"தொழுகையின் போது நீங்கள் கஅபா வின் பக்கம் உங்கள் முகங்களை திருப்புங்கள், எனக்கு மட்டுமே பயப்படுங்கள் என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக வைப்பேன். நீங்கள் நிச்சயம் நேரான வழியை அடைவீர்கள்.."

(குர் ஆன் 2:150) -இது அல்லாவின் கட்டளை.

மனிதர்களுக்காக கட்டப்பட்ட முதல் வழிபாட்டுத்தலம் மக்காவில் உள்ளதுதான். அருள் நலம் வழங்கப்படும் இடமாகவும் அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் உள்ளது. (குரான் 3:96)

இறைவன் ஒருவனே. அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதே நமது கடமை. அதன் மூலமாக அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்ற நல்ல சிந்தனையோடு செயல்பட்டார் இறை தூதர் இப்ராஹிம். அதனால்தான் இந்த இறைதூதரை இறைவன் நண்பனே என்று அழைத்தார். குர் ஆன் பதினான்காம் பக்கம் "இப்ராஹிம் (அலை) என்பதுதான் சிறப்பு.

Representational Image
Representational Image

"மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டு வருவதற்காகவே இவ்வேதத்தை உம்மீது இறக்கி இருக்கின்றோம், புகழுக்குரியவன், வல்லமை மிக்கவனாகிய (அல்லாஹ்வின்) பாதையில் அவர்களை நீர் கொண்டு வருவீராக (குர்ஆன் 14:1)

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்" - மலர் போன்ற மனதில் நிறைந்த இறைவனை பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் என்று வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.

அனைவரும் நன்கறிந்த இந்த விஷயங்களை மீண்டும் நான் சொல்கிறேன்...இல்லை...இல்லை...சொல்ல வைக்கப்படுகிறேன்.

கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்கிறார்...

"கொடுக்கிறேன் என்று நினைப்பவனே

கொடுப்பதற்கு நீ யார்...?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்

உனக்குக் கொடுக்கப்பட்டதல்ல வா?

உனக்கு கொடுக்க பட்டதெல்லாம்

உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை

உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே...."

இந்த தெளிவு கிடைக்கும் போது இறைவன் அருகில் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

"கடவுளிலே கருணை தன்னை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்

அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்..."

என்று புலவர் புலமைப்பித்தன் மூலமாகவும் இறைவன் நமக்கு உணர்த்தியுள்ளார்.

தியாகத் திருநாளை போற்றி வணங்குவோம். ..'எல்லோரும் கொண்டாடுவோம்..வோம்...அல்லாவின் பெயரைச் சொல்லி.'. இல்லாதவருக்கு முடிந்ததை வாரி வழங்குவோம்.

"அல்லாஹு அக்பர்.."

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.