Published:Updated:

இவர் ஆளுமை அல்ல நம்மில் ஒருவர்! - கதை சொல்லியின் ரசிகன்

பவா செல்லதுரை

விடிய விடிய இலக்கிய உரையாடல்கள், கதை சொல்லும் நிகழ்வுகள், நாடகங்கள் என எப்பொழுதும் படைப்புகள் சூழ் நிலமாக திகழ்கிறது "பத்தாயம்"..

இவர் ஆளுமை அல்ல நம்மில் ஒருவர்! - கதை சொல்லியின் ரசிகன்

விடிய விடிய இலக்கிய உரையாடல்கள், கதை சொல்லும் நிகழ்வுகள், நாடகங்கள் என எப்பொழுதும் படைப்புகள் சூழ் நிலமாக திகழ்கிறது "பத்தாயம்"..

Published:Updated:
பவா செல்லதுரை

ஒவ்வொரு நாளும் உலகம் நவீன மயமாகிக் கொண்டிருக்கிறது . நொடிக்கு நொடி விஞ்ஞானம் வளர்கிறது. மனிதர்கள் மெட்ரோ ரயிலை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்துக்கு ஒருமுறையேனும் செல்போனை எடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிக்கும் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டது. சில நேரங்களில் மனிதர்கள் சக மனிதர்களிடம் பேசுவதையே மறந்து விடுகின்றனர்.

ஒரு காலத்தில் கிராமத்தில் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு மாலையில் ஓரிடத்தில் கூடி அன்று நடந்ததையெல்லாம் ஆசை தீரப் பேசிக் கொள்வார்கள். நல்லதோ, கெட்டதோ அன்று அனைவரும் கூடிப் பேசும் வழக்கம் இருந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கனவு இருந்தது... ஒவ்வொரு கனவுக்குள்ளும் மிகப் பெரிய கதை இருந்தது.

Representational Image
Representational Image

பள்ளி நாட்களில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து "அம்மா எங்கப்பா'' என்று கேட்டால்... ''யார் வீட்லயாவது கதை பேசிட்டு இருப்பா.." என்று அப்பாவிடமிருந்து பதில் வரும். கதைகள் பேசுவதற்கும், கேட்பதற்கும் அவ்வளவு இனிமையானது, சுகமானது, சுவாரஸ்யமானது... அதனால் தான் அந்தக் காலக் குழந்தைகளுக்கு தாத்தா,பாட்டி என்றால் அவ்வளவு பிரியம்.

தாத்தா பாட்டிகளிடம் பணம் கிடைக்கும், பாசம் கிடைக்கும் முக்கியமாக நிறைய கதைகள் கிடைக்கும். பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து, ராஜா போருக்குச் சென்ற கதை வரை அத்தனைக் கதைகளையும் தனக்குள் சேகரித்து வைத்திருந்தனர். தாத்தா பாட்டிகள் கதை சொல்லியே குழந்தைகளை தங்கள் மடியில் தூங்க வைத்ததும், அம்மாக்கள் நிலாவைக் காட்டிச் சோறூட்டியதும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு கிடைப்பது அரிது. அதுமட்டுமல்லாமல் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் இந்த தலைமுறையிடம் அதிகமில்லை. புத்தகத்தின் மீது ஆர்வமிருந்தாலும் அதை வாசிக்கும் முறை நிறையவே மாற்றமடைந்து விட்டது. இ-புக், ஆடியோ புக் என வாசிப்பில், வாசிப்பு முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போதைய யூடியூப் காலத்தில் புத்தகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மக்களிடத்தில் கொண்டுச் செல்வதில் "கதை சொல்லி"களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

இன்றையச் சூழலில் அனைத்தையும் யூடியூப்பிலேயே கண்டுக் கொள்கிறோம், கற்றுக் கொள்கிறோம். இணையத்தில் இல்லாதது, யூடியூபில் தேடிக் கிடைக்காதது என்று எதுவுமே இல்லை. அதேப்போல் சில புத்தகப் பிரியர்கள் புத்தகத்தை வாசிப்பதைக் காட்டிலும் அதை பிறர் சொல்லிக் கேட்பதில் ஆர்வமாக உள்ளனர். அதன்பேரில் புத்தகத்திற்காகவே, நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தவே நிறைய யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. வாசகர்களிடமும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன உதாரணமாக ஆர்.ஜே. ஆனந்தி அவர்களின் "தி புக் ஷோ" என்ற யூடியூப் சேனல்.

வாசகர்களுக்கு இன்னும் நெருக்கமான, பிடித்தமான முறையில் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்த, ஒரு கதையை சொல்ல நிறைய கதைச்சொல்லிகள் யூடியூப் மூலம் அறியப் படுகின்றன.

வயலில் பவா செல்லதுரை
வயலில் பவா செல்லதுரை

இன்று எத்தனையோ கதைச் சொல்லிகள் இருந்தாலும்... கதை சொல்லி என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் இவர் தான்...

கதைச் சொல்வதில் இவர் தனித்துவமானவர், இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர், அனைவராலும் அறியப்படுபவர்...

இன்றும் இவர் கதை சொல்கிறார் என்றால் "பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து வந்து இவரை நேரில் பார்த்துக் கதைக் கேட்டுப் செல்ல அத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்".

தன்னுடைய பணிகளை எல்லாம் விட்டு இவரின் குரலுக்காகவே எத்தனை தூரமிருந்தும் வர தயாராக இருக்கும் ஏராளமான வாசக உள்ளங்களை, நல்ல மனிதர்களை சம்பாதித்திருப்பவர் தான் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் மற்றும் கதைச் சொல்லி திரு. பவா செல்லதுரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவண்ணாமலையில் வசிக்கிறார். இவரின் இணையர் கே.வி.சைலஜா (மொழிபெயர்ப்பாளர்), மகன் வம்சி, மகள் மானசி. இவர் கதை சொல்லி மட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட, நிலம், நட்சத்திரங்கள் ஒளிந்துக்கொள்ளும் கருவறை, 19 டி.எம். சாரோனிலிருந்து, எல்லா நாளும் கார்த்திகை, பங்குக்கறியும் பின்னிரவுகளும் போன்ற குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியுள்ளார்.

நடிகராக "ஜோக்கர், பேரன்பு, சைக்கோ, வால்டர், ஜெய்பீம்..." போன்ற திரைப்படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் என இவருக்கு எத்தனை முகங்கள் இருந்தாலும் மக்களிடம் அறியப்படுவது "கதை சொல்லி" பவா'வாகத் தான்.

அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையை நோக்கி வரும் இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கியத்தை நேசிப்பவர்கள், வாசகர்கள் என அனைவருக்கும் தாய்வீடாக மாறிக்கொண்டிருக்கிறது பவா செல்லதுரையின் "பத்தாயம்". (பவா அவர்களுடைய வீடு இருக்கும் நிலத்தின், இடத்தின் பெயர் தான் பத்தாயம்). பத்தாயத்திற்கு யார் வந்தாலும் மனசும், வயிறும் நிறையாமல் திரும்பியதேயில்லை.

விடிய விடிய இலக்கிய உரையாடல்கள், கதை சொல்லும் நிகழ்வுகள், நாடகங்கள் என எப்பொழுதும் படைப்புகள் சூழ் நிலமாக திகழ்கிறது "பத்தாயம்".

ஆரம்பத்திலிருந்தே இவருடைய வீடு இலக்கியவாதிகள் வந்து போகும் வேடந்தாங்களாகவே இருந்திருக்கிறது. ஜெயகாந்தன், லா.ச.ரா.வில் தொடங்கி ஜெயமோகன், கோணங்கி, வேல ராமமூர்த்தி , எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் போன்ற ஏராளமான இலக்கிய ஆளுமைகளும்...

பாலுமகேந்திரா, பாரதிராஜா, எடிட்டர் லெனின், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மிஷ்கின், ராம், பாலா, சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ், பார்த்திபன், நாசர், லிங்குசாமி, கே.வி.ஆனந்த், மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜெனநாதன், ராஜு முருகன், மாரி செல்வராஜ் போன்ற திரை ஆளுமைகள் என பிரபலங்கள் முதல் எளியவர்கள் வரை அனைவரும் அவ்வபோது வந்து போகும் நிலமாக படைப்பாளர்கள் உருவாகும் பட்டறையாக தன்னை அர்ப்பணித்து அடையாளப்படுத்தி நிற்கிறது பவா செல்லதுரை அவர்களின் "பத்தாயம்".

வீடும் வயலும்
வீடும் வயலும்

சரி கதைச் சொல்லி பவா செல்லதுரைக்கு வருவோம். பவா செல்லதுரை, மைக் முன்னால் நின்றுக் கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நிற்கும் அழகிற்கும், ஒவ்வொரு கதைக்கும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு கதையை பக்குவமாக சொல்லும் நேர்த்திக்கும், எளியவர்களின் மனதைக் தொடும் இவரின் வசீகரிக்கும் குரலுக்கும் மயங்காத ஆட்களே இருக்க முடியாது.

இவர் கதைச் சொல்லும் பாணியும், யுக்தியும், ஆற்றலும் அட்டகாசமானது. இவர் கதை சொல்லும் போது தான் "அந்த எழுத்தாளர் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறாரா... என்ற எண்ணம் வரும்.

சில நேரங்களில் இவர் சொல்லும் கதையை கேட்ட பிறகு அக்கதையை எழுதிய எழுத்தாளரின் பெயரையே மறந்து அது பவா செல்லதுரையின் கதையாகவே மாறிவிடும். அந்த அளவுக்கு ஒரு கதையை அந்த கதையின் சாரம்சத்தை, அணு அணுவாக, ரசித்து ரசித்து சொல்லி கதைக் கேட்பவர்களை கட்டிப் போட்டு விடுவார் பவா செல்லதுரை.

விரக்தியில் இருப்பவர்கள் இவரின் கதையைக் கேட்டு உற்சாகமடைந்திருக்கிறார்கள், தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் மீண்டு வந்திருக்கிறார்கள்.. இவரின் கதைகள் மூலம் இதுபோன்று இன்னும் சில மாற்றங்களும், மாயங்களும் ஏராளமானோர் வாழ்வில் நிகழ்ந்துள்ளது... ஏனெனில் இவர் சொல்வது வெறும் கதைகள் மட்டுமல்ல வாழ்வியலை, மனிதத்தை, நம்பிக்கையை, கொண்டாட்டத்தை, தான் வாழ்கிறேன் என்று ஒரு மனிதன் உணரக் கூடிய ரசனையை இன்னும் இன்னும் பலவற்றை..!

யூடியூப்பில் தட்டினால் இவர் கதை சொல்லும் வீடியோக்கள் ஆயிரம் கிடைக்கும். இருந்தாலும் இன்றும் பல கிலோமீட்டர்கள் கடந்து, பல மைல்கள் கடந்து தூக்கம் தொலைத்து இரவு பகல் பயணித்து பத்தாயத்தைத் தேடி மனிதர்கள் வருகிறார்கள் என்றால் வெறுமனே கதைகளுக்காக மட்டுமல்ல இவரின் உபசரிப்பிற்காக, இவரின் மனதிற்காக, இவரின் முகத்திற்காக, இவரின் குரலுக்காக, இவரின் புன்னகைக்காக இத்தனையும் தாண்டி "பவா" என்ற ஒற்றைச் சொல்லுக்காக. பவா செல்லதுரை ஆளுமை அல்ல நம்மில் ஒருவர்... பவா செல்லதுரை நம்மில் ஒருவர் மட்டுமல்ல இந்த தலைமுறையில், சமகாலத்தில் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை..!

-கோ.ராஜசேகர், தருமபுரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism