Published:Updated:

அன்பிற்கினியாள்! - குட்டி ஸ்டோரி

Representational Image

அடுத்த நாள் ஐந்து மணி ஆனது. அந்த இரு புறாக்களும் தங்களால் முடிந்தளவு பூக்களை வாயில் கவ்விக்கொண்டு அவள் இருக்கும் இடம் நோக்கிப் பறந்தன. அந்த பூக்களை அவள் அருகில் போட்டன.

அன்பிற்கினியாள்! - குட்டி ஸ்டோரி

அடுத்த நாள் ஐந்து மணி ஆனது. அந்த இரு புறாக்களும் தங்களால் முடிந்தளவு பூக்களை வாயில் கவ்விக்கொண்டு அவள் இருக்கும் இடம் நோக்கிப் பறந்தன. அந்த பூக்களை அவள் அருகில் போட்டன.

Published:Updated:
Representational Image

அன்பு ஒரு விவசாயியின் மகள். சென்னையில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறாள். இப்பொழுது வீட்டில் இருந்தே பணிபுரிகிறாள். அவளது வீட்டின் வெளியில் நிறைய மரங்களும், பூச்செடிகளும் உள்ளன. வேலை இல்லாத சமயத்தில் அந்த மரங்கள் மற்றும் செடிகளில் உள்ள கனி மற்றும் பூக்களை பார்த்து ரசிப்பதே அவளின் பொழுதுபோக்கு. இவள் கைப்பட்டால் எந்த செடியாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட மண்ணாக இருந்தாலும் சரி நெடுநெடுவன வளர்ந்துவிடும். தினமும் மாலை ஐந்து மணி ஆகிவிட்டால் போதும் அந்த தோட்டத்தில் உள்ள செடிகளில் பூப்பறிப்பது மற்றும் தண்ணீர் ஊற்றுவது இவளது தினசரி வேலை. சில சமயங்களில் அவற்றுடன் பேச்சுவார்த்தை கூட நடத்துவாள். தண்ணீர்ப்பட்டு காலில் சேற்றுடன் இருப்பாள். இதற்காக அம்மாவிடம் திட்டு வாங்குவாள்.

Representational Image
Representational Image

பின் பறித்த பூக்களை மாலையாக கோர்த்து அந்த தோட்டத்தின் நடுவே இருக்கும் விநாயகருக்கு போடுவாள். இவளது இந்த தினசரி வேலையை இரு வெண்ணிற புறாக்கள் அவளது வீட்டின் மேற்கூரையின் மீது அமர்ந்தபடி பார்த்துக்ககொண்டே இருக்கும். அதற்கும் சிறுதானியங்கள் கொடுத்து அதனிடம் பேசுவாள். ஒரு நாள் காலை அவளது வீட்டில் உள்ள படியில் தவறி விழுந்துவிட்டாள். நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டாள். அவள் அப்பா மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அவளிடம் டாக்டர் இரண்டு நாட்கள் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று சொன்னார். மணி மாலை ஐந்து ஆனது. அந்த இரு புறாக்கள் அவளது வீட்டின் மீது அமர்ந்தபடி இவளைத் தேடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோட்டத்து செடிகளில் உள்ள மலர்கள் இவள் வருவாள் என காத்துக்கொண்டு இருந்தன. அவைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த நாள் ஐந்து மணி ஆனது. அந்த இரு புறாக்களும் தங்களால் முடிந்தளவு பூக்களை வாயில் கவ்விக்கொண்டு அவள் இருக்கும் இடம் நோக்கிப் பறந்தன. அந்த பூக்களை அவள் அருகில் போட்டன. அப்போது அவள் தூங்கிக்கொண்டு இருந்தாள். இப்படி பல முறை பூக்களைப் பறித்துக்கொண்டு அவளிடம் சென்றன. அவள் விழித்துப் பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தாள். அவளின் அருகில் நிறைய பூக்கள் இருந்தது.

Representational Image
Representational Image
Photo by Artem Beliaikin

ஜன்னலின் வெளியே பார்த்த போது அந்த இரு புறாக்கள் அமர்ந்து இருந்தது. பின் அந்த பூக்களை மாலையாக கோர்த்து அந்த ஜன்னலின் அருகே வைத்தாள். அதை எடுத்துக்கொண்டு அந்த இரு புறாக்களும் பறந்தன. அன்பு அடுத்த நாள் தன் தந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தாள். வந்ததும் அவள் முதலில் பார்த்தது அந்த தோட்டத்தில் இருந்த விநாயகர் சிலையைத்தான். ஏனென்றால் அவள் முன்தினம் அந்த புறாக்களிடம் கொடுத்த மாலை விநாயகர் மீது இருந்தது. அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த புறாக்கள் வீட்டின் மீது அமர்ந்தபடி இவளை பார்த்தது. அன்பும் அவற்றைப் பார்த்தாள். கடவுளிடமும் சரி பிற உயிர்களிடத்திலும் சரி அன்பை செலுத்துபவர்கள் அந்த அன்பிற்கே உரியவர்கள் ஆகிறார்கள்.

-சந்தோஷ் குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.