Published:Updated:

பறவைகள் எப்போதுமே 'V ' வடிவில் பறப்பது ஏன்? | My Vikatan

Representational Image

வலசை செல்லும் பறவைகள் தொடங்கி கண்டம் விட்டு கண்டம் வந்து திரும்பிச் செல்கையில் தன்னுடைய குஞ்சுகளுடன் பறவைகள் பறந்து செல்கிறது என்பதை செய்தியாக கடந்திருப்போம்.

பறவைகள் எப்போதுமே 'V ' வடிவில் பறப்பது ஏன்? | My Vikatan

வலசை செல்லும் பறவைகள் தொடங்கி கண்டம் விட்டு கண்டம் வந்து திரும்பிச் செல்கையில் தன்னுடைய குஞ்சுகளுடன் பறவைகள் பறந்து செல்கிறது என்பதை செய்தியாக கடந்திருப்போம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எனக்கு எப்போதுமே பறவைகளின் இறகுகளை சேகரிப்பது பிடிக்கும் பறவைகளின் இறகுகளை சேகரிப்பவன் என்பீர்கள் என்னை ஆனால்.. நான் பறவைகளின் வானத்தை சேகரிப்பவன் என்பேன் என்னை!

இப்படியாக பறவைகள் பற்றிய கவிதைகள் ஏராளம். வானில் பறவைகள் பறந்து செல்வதை காண்பது பரவசமூட்டும் அனுபவம்தான். வலசை செல்லும் பறவைகள் தொடங்கி கண்டம் விட்டு கண்டம் வந்து திரும்பிச் செல்கையில் தன்னுடைய குஞ்சுகளுடன் பறவைகள் பறந்து செல்கிறது என்பதை செய்தியாக கடந்திருப்போம். இன்னும் ஒரு சில ஊர்களில் பறவைகளுக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக பல வருடங்களாக பட்டாசு வெடிப்பதே இல்லை என்ற தகவலை கேட்டிருப்போம்.

Representational Image
Representational Image

சிறு வயதில் வைகை ஆற்றங்கரையில் நின்று கொண்டு வயல் வெளியில் இருந்து கூட்டமாக வானில் V வடிவில் பறந்து செல்வதை பார்ப்போம். அப்படி பறந்து செல்லும் கொக்கு கூட்டத்தை கண்டவுடன், எங்களுடைய உடலில் உள்ள ஒரு மச்சத்தை பார்த்து வைத்துக் கொண்டு பாடுவோம்

' கொக்கே வீரபாண்டி போற கொக்கே எனக்கொரு மச்சம் போடு!'

என்று பாடுவோம்.

உடனே இதோ கொக்கு இந்தா எனக்கு மச்சம் போட்டு விட்டது என்று ஏற்கனவே பார்த்து வைத்த மச்சத்தை காட்டி குதூகலமான கொண்டாட்டமாக இருக்கும். அப்படியாக வானில் எப்போதுமே கூட்டமாக பறந்து செல்லும் பறவைகள் ' V ' வடிவத்திலே பறப்பதை வழக்கமாக வைத்திருப்பது ஏன் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

கண்டம் விட்டு கண்டம் என நெடுந்தொலைவு பறந்து வரும் பறவைகள் எப்போதுமே ' V ' வடிவிலே பறந்து செல்வதை பார்த்திருப்போம். பறவைகள் தங்களுடைய சிறகினை கீழாக அழுத்தி பறக்க பறவைகள் மேலே எழும்பி பறக்கின்றன. ஒரு பறவை தன்னுடைய சிறகை வேகமாக வலுவாக காற்றினை மேலிருந்து கீழாக அழுத்துகையில் அழுத்தப்படும் காற்று சிறகுக்கு பின்பாக மேலாக செல்லும். இப்படியாக 'V ' வடிவில் முன்பாக பறக்கும் பறவை தன்னுடைய முழுமையான திறனையும் கூட்டி வலுவாக சிறகினால் அழுத்தும். அவ்வாறாக அழுத்தி அந்த பறவை முன் நகர்கையில் சிறகினால் அழுத்தப்பட்ட காற்று மேலே எழுப்பிடும்.

Representational Image
Representational Image

இப்படியாக மேல எழுப்பிடும் காற்று அடுத்து பின்னால் வரும் பறவையின் சிறகினை மேலே எழுப்பிடும். முன்பாக பறக்கும் பறவை அழுத்திய காற்றின் இடைவெளியில் பறவையின் சிறகு கீழாக இறங்கிடும். இவ்வாறாக முன்பாக பறக்கும் பறவையின் சிறகுகள் ஏற்ப்படுத்தும் காற்றின் மேடு பள்ளமான இடைவெளிகள் அடுத்தடுத்து வரும் பறவைகள் தங்களுடைய திறனை வலுவாக அழுத்த தேவையில்லாத நிலையில் அவற்றின் சிறகுகள் இயல்பாக மேலே கீழாக சென்று வர எளிதாக கடந்து விட இயலும். இவ்வாறாக முன்பாக பறந்து செல்லும் பறவையானது மிகுந்த வலுவாக சிறகுகளை அழுத்திப் பறப்பதறனால் விரைவாக சேர்வடையும். இதனால் பின்பாக வரும் பறவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்பாக பறக்கும் பறவையின் இடத்தை மாற்றிக் கொள்கின்றன.

இப்படியாக ' V ' வடிவில் நெடுந்தூரங்களை பறந்து கடக்கும் பறவைகளில் ஒரு சில பறவைகள் ஒரு சில நேரங்களில் தனித்து பாதை தவறிப் போகும் நேரங்களில், அந்தப் பறவை தனியாக சிரமப்படும் என்பதை உணர்ந்து சில பறவைகள் சென்று அந்த பறவையுடன் இணைந்து ' V ' வடிவாக பறந்து முன்பாக பறக்கும் பறவை பொறுப்பினை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டு பறந்து மொத்தமாக பறக்கும் ' V ' வடிவிலான கூட்டத்தில் சேர்த்து பறக்கின்றன. இதுவே பறவை ' V ' வடிவாக பறந்து நீண்ட நெடுந்தூரங்களை எளிதாக கடந்திடும் ரகசியம். ஆம்.....

மனிதர்கள் பிறந்து வளர்ந்து கற்றுக் கொள்கிறார்கள்.

பறவைகளும் , விலங்குகளும் கற்றுக் கொண்டே பிறக்கின்றன.

-வீ.வைகை சுரேஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.