Published:Updated:

பிரமிக்க வைக்கும் பனிப்பாறைகள், ஜில்லென்ற நன்நீர் ஏரி! - கனடா தேசிய பூங்கா ஹைலைட்ஸ்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பனிப்பாறை தேசிய பூங்காவில் 150 பனிப்பாறைகள் இருந்தன. பருவநிலை மாறுபாட்டால் தற்போது சுமார் 25 மட்டுமே உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்திருந்த நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்தியபின், இந்த கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க நாங்கள் தேர்வு செய்த இடம் மொன்டானா மாகாணத்திலுள்ள “பனிப்பாறை தேசிய பூங்கா”. நாங்கள் வசிக்கும் வடக்கு கலிப்போர்னியா மாகாணத்திலிருந்து சுமார் 1000 மைல் தொலைவில் கனடா நாட்டு எல்லை அருகில் அமைந்துள்ளது. விமானம் முலம் பயணிப்பது மிகவும் எளிதாகும்.

இந்த பூங்காவின் அனைத்து சாலைகளும் கோடை காலத்தின் ஜூன் முதல் செப்டம்பர் வரையே திறந்திருக்கும். கொரோனா காரணமாக குறைவான விமானங்கள், அதிக வாடகையிலான கார்கள், குறைந்த எண்ணிக்கையிலான தங்கும் விடுதிகள் எனவே, பயணதிட்டமிடல் மிகவும் இன்றியமையாதது.

இந்த பூங்காவானது சுமார் 10 லட்சம் பரப்பளவில் ஏராளமான பனிப்பாறைகள் மற்றும் 19 நன்நீர் ஏரிகளைக் உள்ளடக்கியது . பூங்கா கனடாவின் எல்லையைத் தாண்டியும் நீண்டுள்ளது. கனடா பகுதியில் உள்ளவற்றை waterloon Park என்றும் அழைக்கின்றனர். அமெரிக்கா - கனடா பகுதியில் அமைந்த ஒருங்கிணைக்கப் பெற்ற இந்த பூங்கா உலகின் முதல் சர்வதேச அமைதி பூங்காவாகும்.

Glacier National Park
Glacier National Park

பனிப்பாறை குறைபட்சம் 25 ஏக்கர் அளவில் உள்ளது, இங்கு பனியானது பல்வேறு வருடங்களில் உருவாகி, காலநிலை மாறுபாட்டைக் கடந்து நிற்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பனிப்பாறை தேசிய பூங்காவில் 150 பனிப்பாறைகள் இருந்தன. பருவநிலை மாறுபாட்டால் தற்போது சுமார் 25 மட்டுமே உள்ளன.

இவ்வளவு இயற்கை எழிலுடைய பூங்காவிற்கு செல்ல, மிகுந்த உற்சாகத்துடன் ஓக்லாண்ட் விமான நிலையத்திலிருந்து வடக்கு மொண்டானாவில் உள்ள கால்சிபில் நகரத்தை அடைந்தோம். விமான நிலையத்திலிருந்து பூங்காவின் மேற்கு நுழைவாயில் சுமார் 25 மைல் தொலைவில் உள்ளது. வாடகை கார் எடுத்துக் கொண்டு பூங்காவின் எல்லையருகில் உள்ள முகாமில் (Recreational Vehicle Camp Ground) ஒரு சிற்றறையில் (cabin) தங்கினோம்.

கொரோனா காரணமாக பூங்காவில் நாள் ஒன்றுக்கு 1000 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது அனுமதி சிட்டு இல்லாத எங்களைப் போன்றவர்கள் காலை 6 மணிக்கு முன்போ அல்லது மாலை 5 மணிக்கு பின்பே தான் உள்ளே செல்ல முடியும். உற்சாகமாக காலை 4.45 க்கு எழுந்து, குளித்து விட்டு உணவை எடுத்துக் கொண்டு பூங்காவின் நுழைவாயில் அடையும் போது மணி 5.45. எங்களைப் போன்றே அனுமதி சீட்டு இல்லாத இதர வாகனங்களும் அதே சமயம் பூங்காவினுள் நுழைந்தன.

பிரமிக்க வைக்கும் பனிப்பாறைகள், ஜில்லென்ற நன்நீர் ஏரி! - கனடா தேசிய பூங்கா ஹைலைட்ஸ்

பூங்காவின் மேற்கு நுழைவாயில் (Western Glacier) இருந்து கிழக்கு நுழைவாயிலுக்கு உட்பட்ட 52 மைல் சாலையானது “Going to the Sun Road” என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் சாலையாகும். இந்த சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த மரங்கள், நீல நிறம் கொண்ட நன்னீர் ஏரிகள், பனிபடர்ந்த மலைத் தொடர்கள், பசுமையான மரங்கள், மற்றும் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கியது.

இந்த சாலை அமைக்கும் பணி 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1932 ஆம் ஆண்டு முடிவடைந்தது. 1933 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பனிகாலத்தில் இந்த சாலை சில பகுதிகள் 80 அடிவரை பனிபடர்ந்து இருக்கும். உலகின் அதிவேகமான பனிவிலக்கு (Snow Plowing) இயந்திரம் (சுமார் 4000 டன் /மணி சக்தியுடையது) கூட நாள் ஒன்றிற்கு 500 மீட்டர் நீளத்துக்கான பனியை மட்டுமே விலக்கும். இந்த மலையின் மொத்த பனியையும் விலக்கும் பணி ஏப்ரல் மாதம் முதல் தொடங்க சுமார் 10 வாரங்கள் நீடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூங்காவின் மேற்கு நுழைவாயிலிலிருந்து முதலில் வரும் இடம், Lake McDonald என்னும் நன்னீர் ஏரியாகும். பனிப்பாறைகள் உருகுவதால் உண்டாகும் இந்த நீர் உலகின் மிகத் தூய்மையான நீராகும். இந்த ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். நுழைவாயிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ள அடுத்த இடம் Avalanche Lake ஆகும். பள்ளத்தாக்கில் உள்ள இந்த இடமானது கடுமையான பாறைகள் இல்லாத மலைப் பகுதிகளை சூழ்ந்தது. குளிர்காலத்தில் மலைகள் மீது வீழும் பனியானது எளிதில் பனிச்சரிவை உண்டாக்கும் காரணத்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்குள்ள அருவியைக் காண செல்லும் 0.7 மைல் பாதையானது மரதளத்தால் (wooden deck) அமையப் பெற்றது.

Lake McDonald
Lake McDonald

அவலாஞ்சி ஏரிக்கு அடுத்த இடம் loop எனப்படும் பூங்காவின் ஒரே ஒரு கொண்டை ஊசி வளைவாகும். சமவெளியில் பயணித்த சாலையானது இங்கு முதல் மலைகளுக்கு மேலே ஏறுகிறது. அடுத்த 20 மைல் தூர சாலையின் அருகே அருவிகள், சுரங்கப்பாதைகள், பனிமலைகள், பசுமையான பள்ளத்தாக்குகளை தாண்டி, கான்டினென்டல் டிவைட் எனப்படும் Logan Pass என்ற இடத்தை அடைவோம். இப்பகுதி பூங்காவின் மிக உயரமான இடமாகும். இங்கிருந்து பூங்காவின் புகழ்பெற்ற இரண்டு hiking trialகள் உள்ளன, Hidden Lake மற்றும் Highline Trail.

இதற்குப் பிந்தய இடமானது மலைச்சரிவாகும். சாலையின் இப்பகுதியிலிருந்து தூரத்தில் பனிப்பாறைகள், தாவரங்கள் மற்றும் சிலவகை காட்டு விலங்குகளை காண முடியும். இதற்கு பிறகு அடையும் இடம் St Mary Lake எனப்படும் அடுத்த பெரிய நன்னீர் ஏரியாகும். இங்கிருந்து படகு சவாரி மூலம் ஏரியின் அடுத்த கரையை அடைந்து அங்கிருந்து 3 மைல் hike செய்த பின் அருவியை அடையலாம். கோடை வெயிலின் தாக்கத்தை பனிப்பாறைலிருந்து வரும் தண்ணீர் தணித்தது. இதனை அடுத்து பூங்காவின் கிழக்கு நுழைவாயில் வருகிறது. இங்கிருந்து அடுத்த 20 மைல் தொலைவில் பூங்காவின் இன்னோரு நுழைவாயில் உள்ளது. இங்கிருந்து கனடா நாட்டின் எல்லை 14 மைல் மட்டுமே. கொரோனா காரணமாக அமெரிக்க - கனடா எல்லை அடைக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அடுத்து நுழைவாயில் வழியாக “Mary Glacier” பகுதியை அடைந்தோம். குறைந்த பரப்பளவில் உள்ள அதிகமான பனிப்பாறைகளைக் கொண்ட இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

இப்படியான அனுபவத்துடன் 5 வது நாள் வீடு திரும்பினோம்

- விஜய் ஆறுச்சாமி

டப்ளின், கலிபோர்னியா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு