Published:Updated:

காலம் மாறினாலும் இந்த அறமற்ற கேள்வி மட்டும் மாறவேயில்ல! - வாசகர் வாய்ஸ்

இதுவரை வந்த தமிழ் சினிமாவில் ஆண்கள் மனதில் எவ்வளவு சாதிவெறி உள்ளது என்பது மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மனதிலும் சாதிப்பற்று என்கிற நச்சு செடி அடர்ந்து படர்ந்து வளர்ந்துள்ளதை ஏனோ தமிழ்சினிமா அவ்வளவாக பதிவு செய்யவில்லை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"சிவாஜி" படத்தில் மாடர்ன் சென்னையை வியர்ந்து பார்த்தபின் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பிச்சை எடுப்பதை பார்த்து "எல்லாம் மாறிடுச்சு... ஆனா இது மட்டும் மாறல..." என்பார் ரஜினி. அதுபோல காலம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்றாலும் நம் சமூகத்தில் இன்றைக்கும் அழிந்தொழியாமல் இருக்கிறது "நீங்க என்ன ஆளுங்க?" என்ற கேள்வி.

இதுவரை வந்த தமிழ் சினிமாவில் ஆண்கள் மனதில் எவ்வளவு சாதிவெறி உள்ளது என்பது மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மனதிலும் சாதிப்பற்று என்கிற நச்சு செடி அடர்ந்து படர்ந்து வளர்ந்துள்ளதை ஏனோ தமிழ்சினிமா அவ்வளவாக பதிவு செய்யவில்லை.

மாவீரன் கிட்டு, மதயானைக்கூட்டம், கயல், மண்டேலா போன்ற சமீபத்திய படங்களில் பெண்கள் மனதில் உள்ள சாதிவெறியை வெளிக்காட்ட ஓரளவுக்கு முயற்சி செய்திருப்பார்கள் அந்த திரைப்பட இயக்குனர்கள்.

Representational Image
Representational Image

வட்டி தொழிலுக்கு பெயர்போன ஒரு ஊரில் எனக்கும் என் அம்மாவுக்கும் நடந்த அனுபவத்தைக் கூறுகிறேன். உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்ப எங்கள் ஊருக்கு நானும் அம்மாவும் திரும்ப பயணிக்க முற்பட்டோம். பிரைவேட் பஸ் ஒன்றில் ஏறினோம். ஒரு சீட்டை தவிர மீதி எல்லா சீட்டுகளும் நிரம்பி இருந்தன. அந்த ஒற்றை சீட்டிலும் ஜன்னலோரம் ஒரு நாற்பத்தைந்து அகவையை எட்டிய பெண் அமர்ந்திருந்தார்.

அந்தப் பெண் அருகே என் அம்மா அமர சென்றார். ஆனால் அந்தப் பெண்ணோ... என் அம்மாவை அமர விடாமல் நிறுத்தி "இரு ஒரு நிமிஷ்ம்... நீங்க என்ன ஆளுங்க...?" என்ற கேள்வியை கேட்டார். அந்த ஒரு நொடி என் அம்மாவின் முகம் சிவந்து கண்கள் கலங்கிவிட்டது. எனக்கோ அந்தப் பெண்ணின் கன்னத்தில் சப்பு சப்புனு நாலு அப்பு விட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அந்த அம்மாவுக்கோ டூலெட் படத்தில் வரும் ஹவுஸ் ஓனர் மாதிரி கொஞ்சம் கூட கூச்சமே இல்லை.


பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியதும்... "என்ன பொம்பளைங்களோ... இப்படி சாதிவெறி புடிச்சு இருந்து என்னத்த சாதிக்க போறாங்களோ..." என்று புலம்பியபடியே வீட்டிற்கு வந்தார் என் அம்மா.


- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு