Published:Updated:

மயான பணியாளர்களை எப்படி காட்டுகிறது தமிழ் சினிமா? | My Vikatan

சுடுகாடு ( Representational Image )

அந்த படங்களில் மயான பணியாளர்கள் எப்படியெல்லாம் காட்டப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

மயான பணியாளர்களை எப்படி காட்டுகிறது தமிழ் சினிமா? | My Vikatan

அந்த படங்களில் மயான பணியாளர்கள் எப்படியெல்லாம் காட்டப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

Published:Updated:
சுடுகாடு ( Representational Image )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“மாண்புமிகு பொணங்களே வருக வருக…! மயானம் உங்களை அன்புடன் வரவேற்கிறது…!” கவுண்டமணி வெட்டியானாக நடித்த "மாமனிதன்" திரைப்படத்தின் ஒரு காட்சியில் இந்த வரிகளை பார்க்க முடியும். "மாமனிதன்" மட்டுமல்ல “பிதாமகன்”, “பிறகு”, ”ஸ்பைடெர்”, “செந்நாய்” “நெஞ்சுக்கு நீதி” போன்ற படங்களில் வெட்டியான் எனப்படும் மயான பணியாளர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த படங்களில் மயான பணியாளர்கள் எப்படியெல்லாம் காட்டப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

மயான பணியாளர்களை எப்படி காட்டுகிறது தமிழ் சினிமா? | My Vikatan

வெட்டியான் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது “மாமனிதன்” திரைப்படம் தான். இந்த படத்தில் துபாயிலிருந்து திரும்பிய கவுண்டமணி செத்துப்போன தன் அப்பாவை தானாகவே இழுத்துச் சென்று மயானத்தில் புதைப்பார். அதனால் ஊர் வெட்டியான் கோவித்துக்கொண்டு ஊரைவிட்டு சென்றுவிட, "அந்த வெட்டியான் வேலையை நீயே பாரு" என்று கவுண்டமணியிடம் சொல்வார்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர்கள். திரும்ப துபாய்க்குப் போக பணமில்லாததால் கவுண்டமணியும் அந்த வேலையை செய்ய ஒப்புக்கொள்வார். எப்படியாவது துபாய் போக வேண்டும் அதற்கு எப்படியாவது பணம் வேண்டும் என்று கவுண்டமணி தவிக்க அப்போது அங்கு வரும் செந்தில், “பழைய வெட்டியான டிரான்ஸ்ஃபெர் பண்ணிட்டாங்களா?’ என்று கேட்க,” "பெரிய சென்ட்ரல் கவுர்ண்மென்ட் ஜாப்பு…” என்று கவுண்டமணி பதிலளிப்பார்.

“நான் வேணும்னா பொண புரோக்கரா மாறிட்றேன்” என்று செந்தில் சொல்ல, “கழுத்த நெரிச்சாவது பொணத்த அனுப்பு” என்பார் கவுண்டமணி. ஊருக்குள் நடமாடும்போதும் “வாழ வைக்கும் மனங்களே… வருங்கால பிணங்களே…” என்று நக்கலாக பேசுவது போலும், ரயில் விபத்தில் ஐந்நூறு பேர் இறந்துவிட்டார்கள் என்றதும் நமக்கு துபாய் போக பணம் ரெடியாக போகிறது என்று கவுண்டமணி மகிழ்வதுபோலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். உண்மையில் மயான பணியாளர்கள் இப்படி நினைப்பவர்களா என்கிற கேள்வி எழுகிறது.

இயக்குனர் வி.சேகர் இயக்கத்தில் வெளியான "ஒன்னா இருக்க கத்துக்கணும்!" என்ற படத்தில் சிவக்குமார், கவுண்டமணி, செந்தில், மனோரமா, எஸ்எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வெட்டியானாக (சுடலை கதாபாத்திரத்தில்) கவுண்டமணி நடித்திருப்பார். கிட்டத்தட்ட இப்படத்தின் முதன்மை நாயகனே வெட்டியான் சுடலை தான். ஆரம்ப காலத்தில் வறுமை காரணமாக முதியவர்களை பார்த்து "சீக்கிரம் போயிடு... அப்பதான் எனக்கு பொழப்பு ஓடும்" என்று வசனம் பேசுவது போலும் "காலரா" நோயால் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழப்பு ஏற்பட தனக்கு காசு வரப்போகிறது என்பதற்காக கவுண்டமணி மகிழ்வது போலும், தன் மகன் டாக்டர் ஆகிறேன் என்று சொல்லும்போது "வேணாம்டா கண்ணா... எல்லாரும் உசுரு பிழைச்சுட்டா நம்ம பொழப்பு ஓடாது..." என்று பேசுவது போலும், மயானத்தில் பிணத்தின் மீதுள்ள பணத்தை கண்டு மகிழ்வது போலும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அவருடைய மகன் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு உயிரிழக்க, அவரது மகனை எரிப்பதற்கு முன் அக்கம்பக்கத்தினர் சிறுவன் உடல்மீது பணம் வைக்க வர, "பணம் வைக்காதிங்க... நான் இவ்வளவு நாளா சாவ ரொம்ப அலட்சியப்படுத்திட்டேன்... இப்ப தான் எனக்கு சாவோட வலி புரியுது..." என்று தனது தவறை உணர்ந்து எரிந்துகொண்டிருக்கும் மகனின் சடலத்தை கண்டு கதறி அழுவார். "சமத்துவம் இந்தப் பாடையில..." என்ற பாடலையும், "ஏழுமலை சாமி கொஞ்சம் இறங்கி வாங்க சாமி..." என்ற பாடலையும் கவுண்டமணி பாடுவது போலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இவையிரண்டும் மிக முக்கியமான பாடல்கள். அதேபோல இப்படத்தில் 45 சுதந்திர தின விழாவில் வெட்டியான் கவுண்டமணியை தேசிய கொடி ஏற்ற வைப்பது போலும் காட்சி இடம்பெற்றிருக்கும். ("ஒன்னா இருக்க கத்துக்கணும்" என்ற படத்தை பற்றி தகவல் தந்த ஆசிரியர் மணிகண்ட பிரபுவுக்கு மனமார்ந்த நன்றி!")

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பிறகு” என்கிற படத்தில், வடிவேலு “சமரசம்” என்கிற வெட்டியானாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் இறப்பு குறித்த சினிமா பாடல்களை அடிக்கடிப் பாடுவார்.

“கட கன்னிக்கு வந்து மக்களோட மக்களா கலந்தா தான் நல்லாருக்கு” என்று மயான பணியாளரின் தனிமை மன நிலையையும் விளக்குவார். அப்போது கடைக்காரர், “வியாபாரம் எப்படி இருக்கு” என்று கேட்க, “தொழில் எப்படி இருக்குன்னு கேளு” என்று பதிலளிப்பார் வடிவேலு. தான் ஒரு கவுர்மெண்ட் சர்வென்ட் என்றும், பொணவாடையில் சோறு சாப்பிட்டு வளர்ந்த கஷ்டம் பற்றியும், பிணங்களை தெய்வமாக நினைப்பது பற்றியும் தன்னிடம் பேச்சு கொடுப்போரிடம் விளக்கம் தருவார்.

Representational Image
Representational Image

அப்படிபட்ட வடிவேலு, “சமரசம்” என்கிற பெயர் தனக்கு எப்படி வந்தது என்று விளக்கம் கூறும்போது, பரம்பரை பரம்பரையாக தங்களது குடும்பம் வெட்டியான் வேலை செய்து வருவதாகவும் தான் சுடுகாட்டில் பிறந்ததாகவும் பிறந்த அன்று பதினாறு பிணங்கள் தொடர்ச்சியாக வந்ததால் தன்னுடைய அப்பா “மகிழ்ந்ததாக”வும் அதே மகிழ்ச்சியில் சமரசம் என்று பெயர் வைத்தாகவும் கூறுவார். “மாமனிதன்” படத்தைக் காட்டிலும் “பிறகு” படம் ஓரளவுக்கு மயான பணியாளர்களை மனிதநேய மிக்கவர்களாக காட்டியிருக்கிறது என்றாலும் “மரணங்களை கண்டு மகிழ்ந்தார்” என்று பேசியிருப்பது கவனிக்க வேண்டிய விஷியம்.

அம்பத்தூர் இந்து மயான பூமி
அம்பத்தூர் இந்து மயான பூமி

“ஸ்பைடெர்” திரைப்படத்தில் மயான பணியாளர் ஒருவரின் மனைவி கருவுற்று இருப்பதாகவும் கருவிலிருக்கும் அந்தக் குழந்தை மயானத்திலயே ஊர் மக்களின் அழுகுரலை கேட்டபடியே பிறப்பதாகவும், அழுகுரலை கேட்டபடியே பிறந்ததால் அந்த சத்தம் அந்தக் குழந்தைக்கு பிடித்துப் போயி தொடர்ந்து ஊர் மக்களின் அழுகுரலை கேட்க வேண்டுமென்று சைக்கோவாக மாறி கொலைகள் செய்வது போலும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மயானத்தில் பணியாற்றுபவர்கள் மரணங்களை ரசிக்கிறார்களா? என்று இந்தப் படமும் கேள்வி எழுப்புகிறது.

2016ஆம் ஆண்டு நாமக்கல் நகராட்சி மின்மயானத்தில் பணிபுரிந்த எம்.ஏ பட்டதாரியான ஜெயந்தி என்பவர் “கல்பனா சாவ்லா விருது” வாங்கி மயானத்தில் பணிபுரியும் பெண்கள் குறித்து பேச வைத்தார். எழுத்தாளர் இமையம் “மயானத்தில் பயமில்லை” என்கிற சிறுகதையில் ஊர்ப்புற மயானத்தில் பணிபுரியும் இளம்பெண்ணின் வாழ்க்கையை பதிவு செய்திருப்பார். பவா செல்லத்துரை, செம்மலர் அன்னம் நடித்த “செந்நாய்” திரைப்படம் ஊர்ப்புற மயானத்தில் பணிபுரியும் பெண்ணின் வலிகளை அங்கு நிலவும் சாதிய வேறுபாட்டை அழுத்தமாக பதிவு செய்தது. இந்த படைப்புகள் மற்றும் ஜெயந்தி குறித்த செய்திகள் கொடுத்த தாக்கத்தினாலோ என்னவோ சமீப காலங்களாக சில யூடியூப் சேனல்கள் மின்மயானத்தில் மற்றும் ஊர்ப்புற மயானத்தில் பணிபுரியும் பெண்களை நேர்காணல் செய்து அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்து வருகிறது. அப்படி நேர்காணல் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் வைரமணி என்கிற ஊர்ப்புற மயான பணியாளர்.

மயானம்
மயானம்

வைரமணி, அவரது தாய், அவரது மகள் என்று மூன்று தலைமுறை பெண்களும் மயான பணியில் ஈடுபடுவதாகவும், அவர் பிறந்தததே மயானத்தில் தான் என்றும், பண்ணிரெண்டு வயதில் மயான வேலைக்கு வந்ததாகவும் தற்போது தன் மகளும் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு மயான பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறியிருந்தார். இவை மின்மயான பணியாளர்களுக்கு, ஊர்ப்புற மயான பணியாளர்களுக்கு சங்கம் இருக்கிறதா? அவர்களின் மகள் மகன்கள் பட்டதாரி ஆகிறார்களா? என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

மின்மயானங்கள் தனியார் அமைப்புகளின் கீழ் இயங்கி வருவதால் மின்மயான ஊழியர்கள் சங்கம் அமைப்பதில் எதாவது சிக்கல் இருக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதே நேர்காணலில் மயான பணியாளர் வைரமணியும் அவரது மகளும் திடீரென அழுகிறார்கள். ஏன் அழுகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்க, “நிறைய பேரோட இறந்த குழந்தைங்கள புதைச்சத நினைச்சு அழுகிறோம்” என்று சொல்கிறார்கள். இமையம் எழுதிய “மயானத்தில் பயமில்லை” என்கிற சிறுகதையிலும் மயான ஊழியராக வரும் பெண், பலதரப்பட்ட மனிதர்களின் இறந்த குழந்தைகளை புதைத்ததை நினைத்து வருந்துவார். ஆக, “மரணங்களை ரசிக்கிறார்களா மயான பணியாளர்கள்?” என்கிற கேள்விக்கு புனைவிலும் நிஜத்திலும் பதில் கிடைத்துவிட்டது. குழந்தைகளை புதைக்கும்போது மனசு வலிக்கும் என்று பெரியவர்களே சொல்லும்போது மயானத்தில் பணிபுரியும் சிறுவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

வேலூர் மின் மயானம்
வேலூர் மின் மயானம்
நா.ராஜமுருகன்

பாலாவின் “பிதாமகன்” படத்தில், ஊர்ப்புற மயானத்தில் ஒரு பெண் மடிந்து இறப்பதாகவும் அவளுக்குப் பிறந்த குழந்தையை “ஈசனின் மகன்” என்று சொல்லி மயான பணியாளர் தூக்கி வளர்த்துவது போல் “பிறையே பிறையே” பாடலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அக்குழந்தை வளர்ந்து மயான பணிகள் செய்வது போலும் எரியும் பிணத்தருகே அமர்ந்து சாப்பிடுவது போலும், சின்ன குழந்தையின் சடலத்தை பெரியவர்கள் சுமந்துவர, சிறுவன் அந்தக் குழந்தைக்கு குழி தோண்டி அதில் குழந்தையை புதைப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மயானத்தில் வளர்ந்தவனை இயல்பானவனாக காட்டாமல் மூர்க்கத்தனமானவனாக காட்டியதாக பாலா மீது விமர்சனங்கள் எழுந்தன.

“நெஞ்சுக்கு நீதி” படத்தில் ஊர்ப்புற மயான பணியாளரின் மகன் பள்ளியில் தன் ஆசிரியருக்கு டிபன் பாக்ஸ் கழுவி கொடுப்பது போல் முதல் காட்சி துவங்கும். “இந்த இடமே நல்லா தான இருக்கு… நம்ம தாத்தாவ மட்டும் ஏன் எரிமேடைல எரிக்காம கீழ வச்சு எரிச்சோம்” என்று கேட்க, “நம்மள எரிக்க தான் விடுவாங்க… ஆனா எரிய விடமாட்டங்க…” என்று மயான பணியாளர் சொல்லிவிட்டு கேள்விகேட்ட தன் மகனுக்கு பிணம் எரியும் இடத்தருகிலயே சோறு ஊட்டிவிடுவார். தன் பள்ளியில் படித்த தன் ஊர்க்கார சிறுமிகளின் சடலங்களை அந்த சிறுவன் தான் எரிப்பான். அப்போது தரையில் எரியும் சிறுமிகளின் சடலங்களையும் காலியாக இருக்கும் எரிமேடையையும் பார்ப்பான் அச்சிறுவன்.

மகாமுனி
மகாமுனி

படத்தின் இறுதியில் அந்தச் சிறுவன் “ஆர்ட்டிக்கிள் 15” குறித்து தன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பேசுவான். மயான பணியாளரின் மகனை நேர்மறையாக காட்டியதற்கு அருண்ராஜா காமராஜாவை வெகுவாகப் பாராட்டலாம். “மகாமுனி” படத்தில் சுடுகாட்டில் அமர்ந்து சாப்பிடும் ஆர்யா, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த போது பக்கத்திலிருந்த சுடுகாட்டில் இருந்து வரும் பொண வாடையிலும் சாப்பிடுவது எப்படி பழக்கமானது, கடுமையான் பசி தான் எல்லாத்தையும் சகிச்சுக்க கத்து தருது என்றும் விளக்கமளிப்பார். பொண வாடையில் சாப்பிட்டும் சிறுவர் சிறுமிகள் குழந்தைகளின் சடலங்களை எரித்தும் புதைத்தும் வளரும் இந்த மாதிரியான சிறுவர்கள் நிஜத்தில் வேறன்ன மாதிரியான வலிகளை அனுபவிக்கிறார்கள், அவர்கள் படிப்பு சீராக அமைகிறதா? பட்டதாரி ஆகிறார்களா? என்பது கேள்விக்குறி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.