வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
காலையில் அரசின் 47 ஆவது டிசம்பர் 30 ல் தொடங்கி எழுபது நாட்கள் வரை நடைபெறும் என்ற செய்தியைப் பார்த்தபோது, ஹை ஜாலி எனக் கூற நா எழுந்தது. சிறு வயதிலிருந்தே எக்ஸிபிஷன் (exhibition) என்றே கூறுவது வழக்கம்.
முதன்முதலில் நான் பொருட்காட்சிக்குச் சென்றது நான் ஏழாம் வகுப்புப் படிக்கையில். வீட்டில் அப்போதைய ரேஞ்சுக்கு கையில் பத்து ரூபாய் குடுத்து அனுப்பினார்கள். காலை பதினோரு மணிக்கெல்லாம் நாங்கள் சிறுமிகள் அங்கு உள்ளே நுழைந்தோம். ஆச்சிரியத்துடன் கண்ணை விரித்து ஒவ்வொரு பகுதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்க, எங்கள் ஆசிரியர் பார்த்தது போதும் வாங்க வாங்க என எங்களை அழைத்தார்.

அவசர அவசரமாக பச்சைநிற பெயிண்ட் அடித்த மீன் வடிவ ஹேர்க்ளிப் ஒரு ஜோடி இரண்டு ரூபாய் என்று வாங்கி வந்து அதை தலையில் அணிந்து அழகு பார்த்தது இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று..
என் திருமணத்திற்குப் பிறகு , எப்போதெல்லாம் பொருட்காட்சி நடைபெறுகிறதோ,, அப்போதெல்லாம் தவறாமல் என் குடும்பம் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அங்கு ஆஜர் ஆகிவிடும்.. ஞாயிறு மாலை நகரத்தின் மொத்தக் கூட்டமும் , கடற்கரைக்கு அடுத்தபடியாக பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடலின் முன் தான் குழுமியிருக்கும்.. தேடிக் கண்டுபிடித்து ஒருஇடத்தில் வாகனத்தை நிறுத்தினால், yes என்று இப்போதெல்லாம் வாட்ஸ்ஆப் gif ல் முஷ்டியை மடக்கி ஒரு குண்டு குழந்தை கூறுமே, அந்த உணர்வு நமக்கும் கிடைக்கும்.

வருடா வருடம் விதவிதமான முகப்புகள் கண்ணைக் கவரும். வாயிலில் டிக்கெட் வாங்கி உள்ளேச் சென்றால், முதலில் வருவது அரசின் திட்டங்களை விளக்கும் சில பகுதிகள். அதைத் தாண்டிச் சென்றால் எப்போதும் போல் எதை எடுத்தாலும் பத்து ரூபாய் பிளாஸ்டிக் ஐயிட்டங்கள் , பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், துணிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், இதர சாமான்கள் என வரிசையாக இருக்க அங்கு கூட்டம் அள்ளும்.
அதைத் தாண்டிச் சென்றால் தான் நம் ஃபேவரைட் டெல்லி அப்பளம் கடை வரும். என்னதான் நம் ஊரில் lays, kurkure, piknik என கலர் கலர் பாக்கெட்டுகளில் வறுவல்கள் வந்தாலும், டெல்லி அப்பளத்திற்கு இணையாகுமா? சொல்லுங்கள். நான் செக்கு எண்ணய செக் பண்ணித்தான் வாங்குவேன் என பெருமையடித்துக் கொள்ளும் இல்லத்தரசிகள் கூட இங்கு வந்தால் , எந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கிறார்கள் என்று கவலைப்படாமல் ஒரு ஃபுல் அப்பளத்தை மிளகாய் பொடித் தூவி சாப்பிடாமல் இருக்கமாட்டார்கள்.

பிறகு இருக்கவே இருக்கிறது விளையாட்டு ஏரியா..பொருட்காட்சி என்றால் Giant wheel .. ராட்சத ராட்டினம் தான். எங்கிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய இது பொருட்காட்சியின் பிரதான அடையாளம்.. இதைத்தவிர இன்னும் பல... பார்த்தாலே ஹார்ட் அட்டாக் வரவழைக்கக் கூடிய விளையாட்டு அம்சங்கள்..போவோமா ஊர்கோலம்..என்று சிலரால் தான் இந்த பயங்கர விளையாட்டுகளை விளையாட முடிகிறது.
குழந்தைகள் பிரிவு விளையாட்டுகள் எப்போதும் ஜாலி தான்..Toy train, Duck train, என ஒரு சிறிய வட்டத்தில் மெதுவாக வட்டமடிக்கும். பெற்றவர்களும் அதில் குழந்தைகளை. ஏற்றிவிட்டு அது சுற்றி சுற்றி வரும்போது அவர்களைப் பார்த்து கையசைப்பது அந்த நாள் முதல் இந்த நாள் வரை, தொடர்ந்து வரும் செய்கைகள்.

வருடா வருடம் பொருட்காட்சியில் ஏதாவது மாற்றங்கள் வந்தாலும், எப்போதும் மாறாதது ஒலிபெருக்கியில் சில வசனங்கள்..
* அரசன் சோப் ரொம்ப நல்ல சோப்
* சொக்கத் தங்கம் வாங்க சொர்ணா ஜ்வல்லர்ஸ்க்கு வாங்க
* ப்ரௌன் கலர் சட்டை ப்ளாக் நிற ஃபான்ட் அணிந்த ஆறு வயதுடைய முருகேசன் என்ற சிறுவனைக் காணவில்லை. காண்பவர்கள் கன்ட்ரோல் ருமிற்கு வரவும்.
மேற்கூறிய அனைத்தையும் எக்ஸிபிஷன் சென்று வந்தவர்கள் அனுபவித்து இருப்பார்கள்..நகரம் எவ்வளவுதான் முன்னேறட்டுமே, குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்கள், என ஏதேதோ வரட்டுமே... வெட்டவெளியில், கூரை இல்லாமல் பனிக்காலத்தில் தொடங்கும் இந்த சுற்றுலா பொருட்காட்சியை விளம்பர பாணியில் சொல்லவேண்டுமென்றால்... இது நம் தலைமுறைகளைத் தாண்டிய பந்தம்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.