Published:Updated:

குழந்தையும், கிழவனும்! | My Vikatan

Representational Image

‘அவருக்கு ‘இதைச் சாப்பிடுங்க’ லேசாத்தான் இருக்கும் குலோப்ஜாமுனும், திருநெல்வேலி அல்வாவும் கொடுத்தார்கள், அவர், அதை ஸ்பூனில் தோண்டி எடுத்து லாவகமாக விழுங்க குழந்தை, அவரையே ஆசையாய்ப் பார்த்தது.

குழந்தையும், கிழவனும்! | My Vikatan

‘அவருக்கு ‘இதைச் சாப்பிடுங்க’ லேசாத்தான் இருக்கும் குலோப்ஜாமுனும், திருநெல்வேலி அல்வாவும் கொடுத்தார்கள், அவர், அதை ஸ்பூனில் தோண்டி எடுத்து லாவகமாக விழுங்க குழந்தை, அவரையே ஆசையாய்ப் பார்த்தது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அந்த  குழந்தை தாராவுக்கு ஐந்து மாதம் முடிந்து ஆறு ஆகிறது.  இப்போதுதான் திட உணவாக காய்கறிகள், பழங்களை  வேக வைத்ததைக் கொடுத்துப் பரிசோதிக்கத் தொடங்கியிருந்தார்கள். அதன் பெற்றோர்கள்.

அந்தக் குழந்தை கேரட் வேக வைத்ததைச் சுவைத்துக் கடிக்க முயன்று கொண்டிருந்தது. ஈறு முற்றி, பற்கள் முளைக்கத் தொடங்கும் காலம் என்பதால், ஈறு எதையாவது மென்று கடிக்க ஆசைப் பட வேண்டும் என்று அதன் செயல் பாடுகள் மூலம் புரிகிறது. 

அடிக்கடி கைக்கு அகப்படும் எதையும் கடித்துத் தின்ன ஆசைப்பட்டுக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்க வந்த உறவினர்கள் ஆளுக்கு ஒரு ஸ்வீட் என்று வகை வகையாய் வாங்கி வந்து அடுக்கிவிட்டுப் போயிருக்க, அவற்றைக் குழந்தைக் கண்முன்வைத்தே அதன் அருகில் உட்கார்ந்து தின்னத் தொடங்கினார்கள் பெரியவர்கள். அது, ஆசையாய் தின்பவர்களை வேடிக்கைப் பார்த்தது.

இரண்டு வயதவரை,  ‘ஸ்வீட், உப்பு’ எதுவும் கொடுக்க மாட்டோமென்று வைராக்கியத்தில் இருந்தார்கள் ‘வாட்ஸாப்பில் நவீன செய்தி’ தெரிந்து கொண்ட அதன் பெற்றோர்கள். 

அருகே உட்கார்ந்திருந்தார் தாத்தா. பல் எதுவுமில்லை அவருக்கும் பொக்கை வாய், அந்தக் குழந்தைக்கும் பொக்கை வாய்.

Representational Image
Representational Image

‘அவருக்கு ‘இதைச் சாப்பிடுங்க’ லேசாத்தான் இருக்கும் குலோப்ஜாமுனும், திருநெல்வேலி அல்வாவும் கொடுத்தார்கள்,  அவர்,  அதை ஸ்பூனில் தோண்டி எடுத்து லாவகமாக விழுங்க குழந்தை,  அவரையே ஆசையாய்ப் பார்த்தது.

‘தங்கம் தங்கம்’னு கொஞ்சுவயே கெழவா, அந்த குழந்தை தங்கம், நான் இங்கே தவிச்சு பார்த்துட்டே இருக்கேன். பாவி, ஒரு விள்ளல் கொடுக்கக் கூடாதா? குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒண்ணுங்கற பாட்டைப் பாடி தூங்கெல்லாம் பண்ணுவயே, தூண்டு அல்வா துளி ஊட்டினா என்ன?’ என்பது போல இருந்தது அதன் பார்வை.

‘கொடுக்கக் கூடாது!’ என்று கட்டாயப் படுத்தியதால்,  அதற்குத் தின்னக் கொடுக்காமல் விட்டுவிட்டார் அவர். ஆனாலும் மனசு கேட்கவில்லை அவருக்கு.

சுட்ட தட்டை வடையை மிக்ஸியில் போட்டுப் பொடி பண்ணி, கின்னத்தில் போட்டு கிறுகிறுக்கத் தின்கிறான் கிழவன். குழந்தைக்கு ஒரு சிட்டிகை ஊட்டவில்லை. 

அந்தக் குழந்தை ஆசையாய் பெரியவர்கள் தின்பதைப் பார்க்கையில் மனதைப் பிசைந்தது. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?!! அப்படி ஒருவரைப் பார்க்க வைத்துத் தின்றால், பகவான் சும்மா இருப்பானா? இதென்ன ‘கல்மனசு?’ என்று கொன்று போட மாட்டானா?’ மனசுக்குள் நினைத்தார். இருந்தாலும், குழந்தைக்கு இந்த வயதில் கொடுக்கக் கூடாது. ஒத்துக் கொள்ளாது என்கிறார்கள். ஜீரணமாகாதாம்!. ஆனால்  நமக்கு மட்டும் ஆகுமோ?!

பல் இல்லை என்றால், மெள்ள முடியாது! வயித்தால போகும்னா, கிழவனுக்கும்தானே பல் இல்லை? அவனுக்குப் போகாதா?! கொடுக்கக் கூடாது என்று உலகம் முடிவு செய்தால், அதற்கொரு சாக்குக் கண்டு பிடித்துவிடுகிறதே!.

யார் கண் பட்டதோ தெரியவில்லை.  அன்று கிழவனுக்கு வயிறு ஒத்துக் கொள்ளாமல், போய்க்கொண்டே இருந்தது.

குழந்தை கண் போடாது!.  அப்போ யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடவுள் போட்டிருப்பாரோ? இருக்காது.  காரணம் கடவுளுக்குத்தான் கண் இல்லை எங்கிறார்களே!  

ஒன்று நன்றாய்ப் புரிகிறது. குழந்தையும், கிழவனுக்கு ஒன்றுதான். பல் இல்லாத ஒரு விஷயத்தில் மட்டும். ஆனால், எதையாவது தின்னும் குழந்தையிடம் கேட்டால், வாயில் இருப்பதை எச்சிலோடு எடுத்துக் கொடுத்து கபடமின்றிச் சிரிக்கும். அந்த பண்பு நமக்கு வரவேவராது.

குழந்தையைப் பார்க்க வைத்துத் தின்றால், பசியாறாது. பதிலாக பேதியாகும். காரணம். குழந்தையும் தெய்வமும் ஒன்று. 

குழந்தைகளைப் பார்க்க வைத்துத் தின்பது என்பது மகா பாவம். பங்கித் தின்றால் பசியாறும். யாரென்று பேதம் பாராமல் பங்கித் தின்பதில்தான் பண்பும் பரிவும் இருக்கிறது.

                                                        ***********

-வளர்கவி, கோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.