Published:Updated:

எப்படியா இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க? - அதிர்ச்சியில் ஆழ்த்திய சீன வங்கி அலுவலர்| My Vikatan

Representational Image

அன்றும் அமெரிக்க நாணயத்தை , சீன நாணயமாக மாற்ற முடிவு செய்து, விடுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீன விவசாய வங்கியை வந்தடைந்தேன். கூட்டம் குறைவாக இருந்தது.

எப்படியா இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க? - அதிர்ச்சியில் ஆழ்த்திய சீன வங்கி அலுவலர்| My Vikatan

அன்றும் அமெரிக்க நாணயத்தை , சீன நாணயமாக மாற்ற முடிவு செய்து, விடுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீன விவசாய வங்கியை வந்தடைந்தேன். கூட்டம் குறைவாக இருந்தது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நாளை மறுநாள் விடிகாலையில் ஷாங்காயில் இருந்து கிளம்ப வேண்டியிருந்தது.  அன்றைய தினம் ஷாங்காயை சுற்றி பார்க்க , தங்கியிருந்த விடுதியின் வரவேற்பறையில் ஆலோசனை செய்தபின்,  ரேடியோ கோபுரத்தை காண முடிவு செய்தேன். இது 2011ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான ( 405மீட்டர்) கோபுரமாக இருந்தது. 

அன்றும் அமெரிக்க நாணயத்தை , சீன நாணயமாக மாற்ற முடிவு செய்து, விடுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீன விவசாய வங்கியை வந்தடைந்தேன்.  கூட்டம் குறைவாக இருந்தது. அவர்கள் கொடுத்த விண்ணப்பத்தில் அனைத்து விபரங்களையும் பதிவு செய்தேன். இதில் சீனாவில் வந்தடைந்த பின் வாங்கிய அலைபேசி எண்ணும், தங்கியிருந்த விடுதியின் முகவரியும் அடக்கம். இந்த அலைபேசி எண் செய்ய போகும் மாயாஜாலத்தை,  அப்போதைக்கு நான் உணரவில்லை.

Representational Image
Representational Image

எனது முறை வந்ததும்,  விண்ணப்பத்தை சமர்ப்பித்து எனக்கு தேவையான சீன நாணயத்தை பெற்றுக்கொண்டு,  அங்கிருந்து ரேடியோ கோபுரத்தை தரிசிக்க வாடகை காரில் கிளம்பினேன்.  சீனாவின் ஷாங்காய் நகர வீதிகளில் தவழ்ந்த படியே, தரைக்கு கீழே,  அதிக வெளிச்சமுள்ள குகைப்பாதையினூடே சென்று கொண்டிருந்தது கார். நான் கொண்டு சென்றிருந்த கையடக்க புகைப்பட கருவியில் காணொளி எடுத்த வண்ணம் சென்றேன்.  இந்த காரின் ஓட்டுநர் ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தார்.

ஒருவாறாக,  ரேடியோ கோபுரத்தை சுற்றிப்பார்க்க தொடங்கினேன்.  நமது ஊரின் சுற்றுலாதளங்களில் இருக்கும் புகைப்படக்கலைஞர்களை போல் , அங்கும் புகைப்பட கலைஞர்கள் , சுற்றுலாவாசிகளை ரேடியோ கோபுரம் முழுதும் பின்புலத்தில் தெரியும்படி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.  உடனடி புகைப்படம் என்பதால் நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டு ரேடியோ கோபுரத்தில் ஏறத்தொடங்கினேன்.  ஒவ்வொரு தளத்திலும் கைவினைஞர்களின் வேலைப்பாடுகள் நிறைந்த ஒவியங்கள் விற்பனைக்கு இருந்தன. அங்கிருந்த பீங்கானாலான சீனப்பெருஞ்சுவர் பொருளை வாங்கினேன். 

இப்படி ரேடியோ கோபுரத்தை சுற்றி திரிந்ததில் பசி எடுக்க ஆரம்பித்தது. அங்கிருந்து சிறிது தொலைவில்,  இந்திய உணவகம் உள்ளது என்றறிந்து வாடகை காரை பிடிக்க எத்தனிக்கையில்,  எனது அலைபேசி அழைத்தது.  

Representational Image
Representational Image

இந்த அழைப்பு சீன விவசாய வங்கியிலிருந்து வந்தது. நான் மாற்றிய நாணயத்தின் விகிதம் குறைவாக மதிப்பிடப்பட்டதாகவும்,  அன்றைய நிலவரப்படி நாணய விகிதத்தை ஓப்பிடுகையில் , எனக்கு அந்த வங்கி பாக்கி தர வேண்டி உள்ளதால் , வந்து வாங்கி செல்லுமாறு அழைத்தார்கள்.  எனது கார் வாடகை , அந்த தொகையை விட இருமடங்கு என்பதாலும், ஏற்கனவே ரசீது வழங்கப்பட்டு விட்டதாலும், என்னால் வர இயலாது எனக்கூறினேன்.  ஆயினும் அவர்கள் வற்புறுத்தியதால்,  எனது பயண அட்டவணைப்படி,  மாலை 4.30அளவில் விடுதியை அடைவேன் என்றும், தேவைப்பட்டால் என்னை விடுதியில் வந்து சந்திக்குமாறு கூறி , இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.  

ஒருவாறாக இந்திய உணவகத்தை வந்தடைந்த மதிய உணவை உண்டேன்.  அங்கு உணவகம் நடத்துபவர் நேபாளி என்று  உணவு பரிமாறுபவர் கூறினார்.  விடுதிக்கு கிளம்ப தயாராகி நேரத்தை பார்த்தேன். சரியாக முக்கால் மணி நேர பயணம், விடுதியை சென்றடைந்தேன். 

சரியாக 4.30மணி அளவில் வரவேற்பவறையிலிருந்து தொலைபேசி ஒலித்தது. தங்களை காண சீன விவசாய வங்கியில் இருந்து ஒருவர் வந்திருக்கிறார் என்று. அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்ந்து போனேன்.  அந்த வங்கியிலிருந்து வந்த நபர் , நாணய மாற்று விகிதத்தை குறைவாக மதிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரியதுடன் , மிச்ச தொகையை என்னிடம் அளித்து,  பழைய ரசீதை வாங்கி கொண்டு , தயாராக கொண்டு வந்திருந்த புதிய ரசீதை கொடுத்தார்.  இந்த சம்பவம் இன்றளவும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.  

இப்படியும் வங்கி சேவையை உலகளவில் எவரேனும் அனுபவித்திருந்தால் பகிரவும்.

அன்புடன்

சரோவை 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.