Published:Updated:

பிக்வான் vs சித்திரங்குடி! - வெளிநாட்டு பறவைகளைக் காக்கும் உள்ளூர் மக்கள்

சித்திரங்குடி ( Tamilnadu tourism twitter handle )

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பறவைகள் சரணாலயம் இருக்கும் உப்பங்கழி செல்லும் 10 கி.மீ சாலை போல மோசமான சாலை தமிழ்நாட்டில் நான் சிறுவனாக இருந்த காலத்தில்கூட இருந்ததில்லை...

பிக்வான் vs சித்திரங்குடி! - வெளிநாட்டு பறவைகளைக் காக்கும் உள்ளூர் மக்கள்

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பறவைகள் சரணாலயம் இருக்கும் உப்பங்கழி செல்லும் 10 கி.மீ சாலை போல மோசமான சாலை தமிழ்நாட்டில் நான் சிறுவனாக இருந்த காலத்தில்கூட இருந்ததில்லை...

Published:Updated:
சித்திரங்குடி ( Tamilnadu tourism twitter handle )

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் செல்லும் வழியில் இருக்கிற சிறு நகரம் பிக்வான் (Bhigwan). இந்தப் பகுதியில் ஓடும் பீமா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் காரணமாக ஏற்பட்ட உப்பங்கழியின் ஓரத்தில் இருப்பதுதான் பிக்வான். இந்த உப்பங்கழியில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் சிறு வீடுகளைக் கட்டியுள்ளனர். இந்த உப்பங்கழியில் மீன் பிடிப்பது அவர்களின் முக்கியத் தொழில். அது தவிர, டிசம்பர் முதல் மார்ச் வரை ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிக்வானுக்கு வரும் பறவைகளை சுற்றுலா பயணிகளுக்கு காண்பிப்பது இவர்களின் இன்னொரு பணி.

பிக்வான் (Bhigwan)
பிக்வான் (Bhigwan)

கடந்த வாரம் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். புனே சோலாப்பூர் நெடுஞ்சாலை நன்றாக இருக்கிறது. ஆனால், அந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பறவைகள் சரணாலயம் இருக்கும் உப்பங்கழி செல்லும் 10 கி.மீ சாலை போல மோசமான சாலை தமிழ்நாட்டில் நான் சிறுவனாக இருந்த காலத்தில்கூட இருந்ததில்லை. என்னவளே அடி என்னவளே பாடலில் ஒரு வரி, "வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லா உருண்டையும் உருளுதடி". அப்படிதான்... பிக்வான் சாலையில் என் கார் குலுங்கியதில் இதயமும் சிறுநீரகமும் உருண்டு இடம் மாறிவிடும் போலிருந்தது. உண்டியலைப் போல குலுங்கிக்கொண்டே 10 கி.மீ பயணம் செய்து மீனவ கிராமத்தை அடைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பறவைகளைப் பார்க்க கரையில் இருந்து கொஞ்ச தூரம் உப்பங்கழியில் பயணம் செய்ய வேண்டும். Life Jacket கேட்டோம், கொடுத்தனர். பயணம் செய்யும் முன் சிறுநீர் கழிக்க வேண்டும், கழிப்பறை எங்கே இருக்கிறது என்று கேட்டேன். இது கிராமம், இங்கே கழிப்பறை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்! உலகமே ஒரு நாடக மேடை என்று ஷேக்ஸ்பியர் சொன்னார். உலகமே ஒரு கழிப்பறை என்று நினைக்கிற மக்களுடன் வாழும் பொழுது, வெட்கப்பட்டு பயனில்லை.

பிக்வான் (Bhigwan)
பிக்வான் (Bhigwan)

திறந்தவெளி கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு படகில் ஏறினோம். படகைக் கொஞ்ச தூரம் இயந்திரத்தின் மூலம் இயக்கினார் படகோட்டியாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவர். பின்னர், இயந்திரத்தை நிறுத்திவிட்டு, துடுப்பை பயன்படுத்தினார். இயந்திர சத்தம் பறவைகளைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காகத் துடுப்பை பயன்படுத்த ஆரம்பித்தது அந்தப் படகோட்டியின் நற்குணத்துக்கு எடுத்துக்காட்டு. அனைத்துப் பறவைகளைப் பற்றிய விவரங்களையும் நன்கு விளக்கினார். Seagull பறவைகள் பிஸ்கட் சாப்பிட பழகி யிருக்கின்றன. பிஸ்கட்டை தூக்கிப் போட்டால் தண்ணீருக்குள் விழுவதற்கு முன்பே பிடித்து விடுகின்றன. சில தண்ணீரில் விழுந்தவற்றையும் எடுத்துக்கொண்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Flamingo பறவைகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. இவை சைபீரியாவில் இருந்து வந்தவை. Flamingo நீர்ப்பாசியை மட்டும் சாப்பிடும், மீன்களை சாப்பிடாது என்று சொன்னார் படகோட்டி. இப்படி பல பறவைகளைப் பற்றி சிறப்பாக விளக்கினார். அப்பொழுது நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் மாவட்டத்தில் (ராமநாதபுரம்) உள்ள பறவைகள் சரணாலயமான சித்திரங்குடிக்குச் சென்றது நினைவுக்கு வந்தது.

Flamingo
Flamingo

சித்திரங்குடிக்கு ஆண்டுதோறும் நிறைய வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. அங்கே சென்றிருந்தபோது பறவைகளைப் பார்க்க ஒரு சிறிய கண்காணிப்பு கோபுரம் (Watch Tower) இருந்தது. துருப்பிடித்த நிலையில் இருந்த அந்தக் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி பார்த்தோம். தூரத்தில் பறவைகள் இருந்தன. இப்போது சரணாலயம் என்ன நிலையில் இருக்கிறது என்று சமீபத்தில் அங்கு சென்று வந்த என் நண்பனிடம் விசாரித்தேன்.

சிமென்ட்ல் புதிய கண்காணிப்பு கோபுரம் கட்டியிருப்பதாகச் சொன்னார். அதில் ஏறுவதற்கான படியில் கருவேல மர முட்களை வைத்து அடைத்திருக்கிறார்கள். முள்வேலியைத் தாண்டி கண்காணிப்பு கோபுரத்தில் எப்படி ஏறுவது என்று சிந்தித்து கொண்டிருந்த என் நண்பனிடம் அக்கிராமத்தைச் சேர்ந்த நபர் முள்வேலியை எடுத்து விட்டு மேலே செல்லுமாறு சொல்லியிருக்கிறார்.

``ஆடு குட்டிக மேலே ஏறிருதுப்பு, அதுக்காகத்தா முள்ளை வெட்டி அடச்சுருக்கோம்’’ என்று சொல்லியிருக்கிறார்! அந்த கண்காணிப்பு கோபுரத்திற்கு ஒரு கதவு போடுவது தமிழக அரசின் முதல் பணியாக அமைந்தால் அக்கிராம மக்களும் பறவைகளை பார்க்க வரும் பயணிகளும் மகிழ்வார்கள்.

அக்கிராம மக்களுக்கு பறவைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற அதீத ஆர்வமும், பறவைகளைப் பார்க்க வரும் மக்களை அன்போடு உபசரிக்கும் குணமும் இருப்பதாக நண்பர் சொன்னார். கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து பறவைகள் இருக்குமிடம் இருக்கும் நீண்ட தூரத்துக்கு அப்பால் இருக்கிறது. எனவே, பறவைகளைத் தெளிவாகப் பார்க்க முடியாத சூழல் உள்ளது. அங்கே பரிசல்கள் மற்றும் சிறு படகுகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப கண்மாயை சீரமைக்க வேண்டும். இந்த ஏற்பாட்டால் அப்பகுதி மக்களுக்கு சில மாதங்கள் வேலை வாய்ப்பும் உருவாகும். அல்லது சில பெரிய கண்காணிப்பு கோபுரங்களை நிறுவி அதில் பைனாகுலர்களை நிறுவ வேண்டும்.

சித்திரங்குடி
சித்திரங்குடி

இது போன்ற அமைப்பை அமெரிக்காவின் Smokey Mountain இல் பார்த்திருக்கிறேன். சித்திரங்குடிக்கு செல்லும் சாலை சிறப்பாக இருப்பதாக நண்பர் சொன்னார். அதற்கு அருகே கீழக்காஞ்சிரன்குளம் கண்மாயிலும் பறவைகள் இருப்பதாக நண்பர் சொன்னார். அங்கேயும் மக்கள் பறவைகளைப் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுச்சூழலுக்காகத் தனி அணி வைத்திருக்கும் தி.மு.க இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் சித்திரங்குடி மற்றும் கீழக்காஞ்சிரன்குளத்தை சிறந்த பறவைகள் சரணாலயமாக மாற்ற முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆவண செய்ய வேண்டும். இதற்கான முயற்சியை அம்மாவட்ட அமைச்சர் மாண்புமிகு கண்ணப்பன் முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு : பிக்வான் செல்ல விரும்புபவர்கள் ஸ்வப்னில் ஜெராட் என்ற நபரை 83083 83050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒரு படகிற்கு ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். அங்கே செல்ல சிறந்த மாதங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி. பிப்ரவரியிலும் செல்லலாம். பிப்ரவரியில் கொஞ்சம் வெப்பம் அதிகமாக இருக்கும். காலை எட்டுமணிக்கு முன்பு அங்கே போனால் நல்லது. அங்கே செல்வதற்கான மேப் https://maps.app.goo.gl/2ifzFTisF7nkPzCi6
சித்திரங்குடி செல்பவர்கள் மாலை நேரத்தில் செல்லவும்.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, மூத்த முதன்மை விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism