Published:Updated:

மாமியார் காஃபி!

Kumbakonam Degree coffee ( Photo: Vikatan / Gunaseelan.K )

என் மாமியார் பள்ளி விட்டு வரும் வழியில் கங்கையம்மன் கோயில் அருகில் ஒரு குறிப்பிட்ட கடையில் காபித்தூள் வாங்கிவந்து காஃபி போட்டு தருவார்.

மாமியார் காஃபி!

என் மாமியார் பள்ளி விட்டு வரும் வழியில் கங்கையம்மன் கோயில் அருகில் ஒரு குறிப்பிட்ட கடையில் காபித்தூள் வாங்கிவந்து காஃபி போட்டு தருவார்.

Published:Updated:
Kumbakonam Degree coffee ( Photo: Vikatan / Gunaseelan.K )

இனிமையை தக்கவைக்கும் அமுது! நிம்மதியின் நுழைவுவாயில்!காலைப் பொழுதின் உத்வேகம்... விவரம் புரியாத வயதில் விடுமுறைக்கு ஆயா வீட்டிற்கு செல்லும்போது மாட்டுத் தொழுவத்தில் மாட்டின் காம்பை இதமாய், பதமாய் பிடித்து விளக்கெண்ணெய் தடவி, பாலைக்கறந்து, விறகு அடுப்பில் சூடேற்றி அதனுடன் துணியில் வடிகட்டிய டிகாஷனை கலந்து கருப்பட்டி சேர்த்து ஆயாபித்தளை லோட்டாவில் கொடுத்த பானம் இருக்கே... அப்பொழுது 'காபி 'என்று தெரியாது . ஆனால் அதை குடித்த உடன் ஒரு உத்வேகமும் உற்சாகமும் வந்துவிளையாட கிளம்பி விடுவேன்.

காஃபி
காஃபி

பள்ளிப் பருவக் காலத்தில் அம்மா விழுப்புரத்தில் ஒரு குறிப்பிட்ட கடையில் காபி கொட்டையை வறுத்து அரைத்து அதனுடன் இதமாய் சிக்கிரியை கலந்து வாங்கி வருவார். (வீட்டிற்குள் வரும் பொழுதே வாசம் நம்மை ஏதோ மேஜிக்செய்யும்). அம்மா பித்தளை பில்டரில் முதலில் ஒரு சிட்டிகை உப்பை போட்டு அதன் மேல் காபி தூளைப் போட்டு கம்பியை அழுத்தமாக பிடித்துக் கொண்டு கொதிக்கும் நீரை மெதுவாக ஊற்ற,சொட்டு சொட்டாக அந்த டிக்காஷன் இறங்கும். (அழகான கவிதை)இறங்கிய டிகாஷனை சூடான பாலில் கலந்து தேவையான சர்க்கரை சேர்த்து அம்மா என்னுடைய டம்ளரில் கொடுப்பார்கள். (டம்ளர் ரொம்ப முக்கியம் பாஸ்) (அந்த டம்ளர் இன்னமும் என்னுடனேயே பயணிக்கிறது) அதை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு வந்து நான் படித்த செய்யுள்கள் எல்லாம் இன்னமும் தூக்கத்திலிருந்து எழுப்பிக்கேட்டாலும் சொல்லும் அளவிற்கு எனக்கு மனப்பாடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே' என்ற குறுந்தொகைப் பாடல்,

அதேபோல் "ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று வான் தரு கற்பின் மனையுறை மகளிரின் தான் தனி ஓங்கிய தகைமையளன்றோஆதிரை நல்லாள்"

"ஆதிரை கணவன் ஆய் இழை கேளாய் சாதுவன் என்போன் தகவலன் ஆகி அணியிழை தன்னை அகன்றனன் போகிக் கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க வட்டினும்,சூதினும் வரன்பொருள் வழங்கி..." என்ற சிலப்பதிகாரச் செய்யுள்...

இன்னமும் நினைவில் இருக்கிறது என்றால் அம்மா கொடுத்த காபியை குடித்துக் கொண்டே படித்ததுதான்.

கொட்டும் மழையை... திண்ணையில் உட்கார்ந்து ரசித்துகொண்டே இலங்கை வானொலியை கேட்டு கொண்டு காப்பியை குடித்ததெல்லாம் அழகிய கனாக்காலம். (அதிலும் இரு கை உரசி சேர்த்த சூட்டில் இந்த சூட்டையும் கலந்து... கண்ணில் ஒற்றி எடுக்கும் போது வரும் பாருங்கள் ஒரு புத்துணர்ச்சி... பூலோக சொர்க்கம்.)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் மாமியார் பள்ளி விட்டு வரும் வழியில் கங்கையம்மன் கோயில் அருகில் ஒரு குறிப்பிட்ட கடையில் காபித்தூள் வாங்கிவந்து (அத்தைக்காக ஸ்பெஷலாக அரைத்து தருவார் அந்தக் கடைக்காரர்) காஃபி போட்டு தருவார். இருவரும் குடித்துக் கொண்டே... அன்றைய நிகழ்வுகளை பேசியதெல்லாம் கண்முன் நிழலாடுகிறது.

எத்தனை கவலைகள், எத்தனை பிரச்சினைகள் என்னுள் எழுந்தாலும் அத்தை போட்டுக் கொடுக்கும் காஃபி ஒன்று போதும் அதையெல்லாம் மறப்பதற்கு.

சில நேரங்களில் குழம்பித் தவிக்கும் என்னைத் குதூகலிக்க அழைக்கும் அத்தை கொடுக்கும் காஃபி. (அத்தை உங்க காஃபியை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் அத்தை..) அத்தை போட்டுக் கொடுக்கும் காஃபியில் அன்பும் பாசமும் சற்று தூக்கலாக இருக்கும். அத்தை மிகவும் ரசனையோடு காபி தயாரிப்பார். எப்போதும் புது டிக்காஷனில் தான் சூடான பாலை கலந்து காபி போட்டுத் தருவார். லவ்யூ அத்தை.

டிகிரி காபி
டிகிரி காபி

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கையில் சுடச்சுட காபி.. கண் முன்னே அன்றைய தினசரி நாளிதழை படிக்கிற சுகம் இருக்கே... அட அட அட அது அனுபவித்தால் மட்டுமே புரியும். ஞாயிற்றுக்கிழமைகளில் (மற்ற நாட்களை விட)

காஃபி உற்சாகமூட்டி, உந்துசக்தி தந்து, நாள் முழுவதும் அயராமல் உழைக்க உட்கொள்ளும் ஊக்க மருந்தாய் செயல்படும் எனக்கான நொடிகள், எனக்குப் பிடித்த தனிமை, என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபியை ரசித்து ருசித்து குடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

சில நேரங்களில் காபியுடன் இளையராஜா சேரும்பொழுது இசைத்தென்றல் இசைமழை இசைத்தேன்...

வீசி ஓடி வீழ்ந்து பொழிந்து வெள்ளமாக என் நெஞ்சை சூழும்.

ஒரு கையில் சூடான காபி அதை சிப் சிப்பாக பருகிக்கொண்டே இளையராஜாவின் இசையைக் கேட்க ... வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்?

(குறிப்பாக' ஒரு ஜீவன் அழைத்தது',' என்ன சத்தம் இந்த நேரம் ''அடியே மனம் நில்லுனா நிக்காதடி'... இப்படி இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டே காபி குடிக்க... காஃபியின் புத்துணர்வும், இளையராஜாவின் இசை மருத்துவமும் ஒன்றுசேர்ந்து நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைக்கொடுக்கும் காபியை பற்றி இப்படியெல்லாம் சொல்லிவிட்டு ஒரு தத்துவம் சொல்லாமல் போனால் எப்படி?? "சுட்டுவிடும் எனத் தெரிந்தும் சூடாக இருக்கும் காபியை குடிப்பதில் காட்டும் நிதானம் தான் வாழ்க்கையின் தத்துவம்.(அடிக்க வந்திராதீங்க)

சரிதானே நட்பூக்களே!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism