Published:Updated:

ஒப்பீடு எவ்வாறு இருக்க வேண்டும்? | My Vikatan

Representational Image

குழந்தை இப்போது சாப்பிட தொடங்கியது, தாயிக்கு மகிழ்ச்சி, தன் குழந்தை நன்றாக சாப்பிட்டான் என்று. கை கழுவ செல்லும் முன் அவள் தன் விரலில் இருந்த சோற்றுப்பருக்கையை சுவைத்து பார்க்கிறாள், அதில் சிறிதளவு கூட உப்பு இல்லை.

ஒப்பீடு எவ்வாறு இருக்க வேண்டும்? | My Vikatan

குழந்தை இப்போது சாப்பிட தொடங்கியது, தாயிக்கு மகிழ்ச்சி, தன் குழந்தை நன்றாக சாப்பிட்டான் என்று. கை கழுவ செல்லும் முன் அவள் தன் விரலில் இருந்த சோற்றுப்பருக்கையை சுவைத்து பார்க்கிறாள், அதில் சிறிதளவு கூட உப்பு இல்லை.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தாழ்வு மனப்பான்மை நம்முள் உருவாக முக்கிய காரணம் நாம் நம்மை மற்றவருடன் ஒப்பீடு செய்துகொள்வதுதான்.

இந்த ஒப்பிடுதல் நாம் கற்றுக்கொண்ட பழக்கம் அல்ல, சிறு வயதிலிருந்தே நம்முள் திணிக்க பட்ட ஒன்று.

ஓர் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுகிறாள் அந்த குழந்தை உண்ண அடம்பிடிக்கிறது , ஏதேதோ விளையாட்டு காட்டுகிறாள், குழந்தை எதற்கும் மசியவில்லை, இறுதியாக பக்கத்து வீட்டுல பாரு அந்த குட்டி பையன் எப்படி சாப்பிடறான் நீயும் தான் எனக்குனு வந்து சேர்ந்து இருக்கியே! என்று கடிந்து கொள்கிறாள்.

குழந்தை இப்போது சாப்பிட தொடங்கியது, தாயிக்கு மகிழ்ச்சி, தன் குழந்தை நன்றாக சாப்பிட்டான் என்று. கை கழுவ செல்லும் முன் அவள் தன் விரலில் இருந்த சோற்றுப்பருக்கையை சுவைத்து பார்க்கிறாள், அதில் சிறிதளவு கூட உப்பு இல்லை.

இப்போதுதான் அவளுக்கு புரிந்தது உணவில் ருசி இல்லை என்பதால்தான் அதை உண்ண மறுத்தது குழந்தை என்று. ஆனால் அவள் செய்த ஒப்பீட்டால், விருப்பம் இல்லாத உணவை கூட அந்த குழந்தை உண்டது. சிறிது நேரத்தில் வாந்தி, அந்த குழந்தை உண்ட அனைத்தும் வெளியேறியது.

Representational Image
Representational Image

இதுபோலத்தான், அவன் நல்ல மதிப்பென் பெற்று இருக்கிறான், நீ ஏன் அவனை விட சிறப்பாக மதிப்பென் பெறவில்லை. அவன் வீடு சிறப்பாக உள்ளதே , நம் வீடோ மிக சிறியது. அவனிடம் கார் இருக்கிறது, நம்மிடம் இல்லையே. நானும் அவனுடன் தான் படித்தேன் ஆனால், அவன் சம்பளம் அதிகம், என் சம்பளம் குறைவு.

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நாம் நம்மை தாழ்த்தி கொண்டிருக்கிறோம். இதனால் நம்மை விட சிறந்த மனிதர்களிடம் பழக நாம் தயங்குகிறோம், மிக பெரிய வாய்ப்புகளை தவிர விடுகிறோம்.

ஒப்பீடு எவ்வாறு இருக்க வேண்டும்?

கடந்த ஆண்டு நான் கற்றுக்கொண்ட புதிய விஷயம் என்ன? புதிய முயற்சிகள் என்ன? அது என் வாழ்க்கையை முன்னேற்றியதா?

இந்த ஆண்டு அதை விட நான் சிறப்பாக ஏதேனும் ஒன்றை கற்று கொள்ள வேண்டும், முயற்சி செய்ய வேண்டும், அடுத்த கட்டத்திற்கு என் வாழ்வை எடுத்து செல்ல வேண்டும், என்ற எண்ணம் நம்முள் ஏற்பட வேண்டும்.

நம் குழந்தைகளை மற்றவருடன் ஒப்பிடாமல், அவர்களின் தனித்துவத்தை புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே அவர்களின் சிறப்பை அவர்களுக்கு உணர்த்த முயற்சி செய்வோம். அவர்களுடனே அவர்களை ஒப்பீடு செய்ய கற்று கொடுப்போம். முன்னேற்றுவோம்.

நண்பர்களே, இங்கு ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமானது, ஒவ்வொரு மனிதனும் மிகத்தனித்துவமானவன்.

மற்றவரை போல் வாழ முயற்சிக்காமல், நம் வாழ்வை சிறப்பாக வாழ்ந்து, அதில் வெற்றிபெறுவோம்.


நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.