வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அண்மையில் தஞ்சாவூர் சென்றிருந்த போது,தஞ்சை பெரிய கோயில் கடை வளாகத்தில் எங்கு திரும்பினும் தலையாட்டி பொம்மை இருப்பதை கண்டேன். 'தலையாட்டி பொம்மை'யை... (வித்தியாசமாய்) நம் வாழ்வில் தொடர்புபடுத்தி பார்க்கலாமே என தோன்ற, எழுந்த பதிவே இது.
ஒரு விஷயத்தை பதிலை, விளக்கத்தை , வார்த்தைகளில் விளக்குவதை விட உண்டு, இல்லை என சிறு தலையசைப்பில் சொல்வது என்பது... சொல்பவர்களுக்கும் எளிது! புரிந்துகொள்பவர்களுக்கும் எளிதில் விளக்(ங்)குவதாக இருக்கும்.
ஆம்... நான் என் வாழ்க்கையில் பலதடவை மற்றவர்கள் (என்நலன் மேல் அக்கறை கொண்டவர்கள்) சொல்லும் அனைத்துக்கும் தலையாட்டி இருக்கிறேன்.(தலையாட்டி வருகிறேன்)


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனக்கு நினைவு தெரிந்து நாள்முதல்...என் அம்மா.,அப்பா சொல்லும் எல்லாவற்றிற்கும் முதலில் தலையாட்டிவிடுவார். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.விவாதமும் செய்யமாட்டார். பிறகு தக்க சமயம் பார்த்து பொறுமையாக அப்பாவிடம் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர்கள் இருவரும் சண்டை போட்டு நான் பார்த்ததே கிடையாது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதேபோல்தான் என் புகுந்த வீட்டிலும் . இத்தனைக்கும் என் மாமியார் ஆசிரியையாக பணி புரிந்தவர். மாமா சொல்லும் எந்த ஒருவிஷயத்திற்கும் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாமல் தலையாட்டி விடுவார். நான் கூட அடிக்கடி கேட்பதுண்டு ..என்ன அத்தை?, மாமா எது சொன்னாலும் நீங்க கேள்வியே கேட்க மாட்டேங்கிறீங்க . எல்லாவற்றிற்கும் 'சரி',' சரி 'ன்னு தலையை ஆட்டறீங்க என்பேன். அதற்கு அவர்கள் சொல்லும் பதில் 'உன் மாமா சொல்வது எல்லாமே என் நலனுக்காகவும், நம் குடும்ப நலனுக்காகவும் தான் இருக்கும். அப்படி இருக்கையில் நான் எதற்காக விவாதம் செய்ய வேண்டும்.?

வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளைக்கூட தலை அசைப்பால் உணர்த்திவிட முடியும் .மாமா சொல்லும் அனைத்துக்கும் தலையாட்டுவதென்பது பேரன்பின் வெளிப்பாடு . தன் சௌகரியத்தை தனக்கானவர்களின் சௌகரியத்திற்காக விட்டுக்கொடுப்பது ஆதிரை இது என்று அவர்' தலையாட்டியதற்கு ' புது விளக்கமும் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல் மாமா சொல்வதை கேட்காமல் விவாதம் செய்தால் சாதிக்கப் போவது எதுவுமில்லை. அவரை அனுசரித்து அவர் சொல்வதை தலையாட்டி கேட்டுவிட்டு பிறகு நம் கருத்தை சொல்லும்போது நிச்சயம் அவர் ஏற்றுக்கொள்வார் என்பார். மாமாவும் அப்படி தான் அத்தையின் வார்த்தைகளுக்கு அதீத மதிப்பு கொடுப்பார். இருவரும் ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொண்டு அனுசரித்து கொள்வார்கள்.
உறவுகள் மேம்பட அன்பு தான் ஒரே வழி .அந்த அன்பு மலர வேண்டுமானால் விவாதம் செய்யாமல் எதிர்த்துப் பேசாமல் கணவர்/மனைவி சொல்லும் கருத்துகளுக்கு முதலில் பொறுமையாக தலையாட்டி பிறகு நம் கருத்தை சொல்வதில் தான் எல்லா விஷயமும் அடங்கி இருக்கிறது .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வியாபார உலகத்தில் ஒரு பொன்மொழி உண்டு வாடிக்கையாளர்கள் சொல்வதுதான் எப்போதுமே சரி. (Customer is always right)! அதுபோல , உறவுகளின் விஷயத்தில் உள்ள பொன்மொழி நம்முடன் உறவு கொண்டுள்ள மற்றவர்கள் சொல்வது தான் எப்போதுமே சரி . (in relationships, is always right)... இப்படி நினைத்து செயல்பட வேண்டுமெனில் எளிதாக ஒரு வழி உள்ளது, ' நான்' என்ற அகந்தை,' என்னால் மட்டுமே முடியும்' என்ற தற்பெருமை ஆகியவற்றை நாம் ஒரேடியாக தலை முழுக வேண்டும். அப்படி செய்தால் எந்த உறவும் நம்மை விட்டு விலகி போகாது.

ஏற்படும் உறவுகள் அனைத்துமே ஆழமான உறவுகளாக மட்டுமே அமையும் என்பார். (ஆசிரியை அல்லவா ! பாடம் கற்பிப்பது அவருக்கு கைவந்த கலை) அவர் சொல்வதை கேட்ட போது எனக்கு முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்படிக்கூட ஒரு மனுஷியால் இருக்க முடியுமா? எல்லாவற்றிக்கும் தலையாட்டிக் கொண்டுஎன்று. .ஆனால் எனக்கு வயதாக,வயதாகத்தான். அவர் வாழ்க்கையை எவ்வளவு அழகாக ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தார் என்று புரிந்தது. ஆக , இன்று 50+ ல் இருக்கும் நானும் மற்றவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலையாட்டிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அது யாருக்காக, எதற்காக என்பதில்மட்டும் கவனமாக இருக்கிறேன். ஆர்ப்பாட்டமான பேச்சுக்கு' bye,' 'bye' சொல்லி ஆழமான உணர்வுக்கு warm welcome சொல்ல இந்த தலையாட்டல் மிகவுமே உதவி செய்கிறது என்றால் மிகையன்று.
பேசமுடியாமல் சொல்வது அனைத்துக்கும் தலையாட்டி சமயம் பார்த்து பேசுதல் என்பது ஒரு சின்ன விட்டுக்கொடுத்தல் போலதான் .
விட்டுக்கொடுத்தல் இழப்பல்ல.. மூலதனம்.
அது உரிய நேரத்தில் திரும்ப வரும் அதுவும் இரட்டிப்பாய்! என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நீங்களும் வீட்டில் தலையாட்டி பொம்மையாக இருந்து தான் பாருங்களேன்! வாழ்க்கை சுவாரஸ்யமாக மாறுவதை கண்கூடாக பார்ப்பீர்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.