Published:Updated:

காதல் கணவா! | My vikatan

Representational Image

தினசரி பூஜைகள் செய்யாவிட்டாலும் கடவுளின் மேல் அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. பண்டைய கலாச்சாரத்திலும் இறைவழிபாட்டிலும் குலதெய்வ வழிபாட்டிலும் அதீத ஈடுபாடு உடையவர்.

காதல் கணவா! | My vikatan

தினசரி பூஜைகள் செய்யாவிட்டாலும் கடவுளின் மேல் அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. பண்டைய கலாச்சாரத்திலும் இறைவழிபாட்டிலும் குலதெய்வ வழிபாட்டிலும் அதீத ஈடுபாடு உடையவர்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று மாலை ஐந்து முப்பது மணி.பனிக்காலம் துவங்கியதால் சீக்கிரமே வானில் இருள் சூழ்ந்துகொண்டது.என் கைபேசி சிணுங்கியது. மறுமுனையில் என்னவர், "சரியாக ஆறு மணிக்கு வீட்டுக்கு  வந்துருவேன். கிளம்பி ரெடியாயிரு.ஷாப்பிங் போகலாம்" என்றார். பரபரப்பாக கிளம்புவதற்குள் மணி ஆறை தொட்டது. காலிங்பெல் சத்தம் கேட்டது.என்னவர் தான் வந்திருந்தார். அவசரமாக கிளம்பி காரில் ஏறி பயணத்தை துவங்கினோம்.

        பீக் ஹவர் என்பதால் டிராபிக் நிரம்பி வழிந்தது. அதற்குள் குழந்தைகள் "அம்மா பசிக்குது,ஸ்னாக்ஸ் வேணும்,தண்ணி வேணும்,ஜூஸ் வேணும்"என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அட்சய பாத்திரமாய் மாறிவிட்ட என் ஹேண்ட்பேக்கில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுத்தேன்.

"சொன்ன டைம்க்கு ஷார்ப்பா கிளம்பனும்.. இல்லனா இப்படித்தான் டிராபிக்ல சிக்கி டைம் வேஸ்ட் ஆகும்" என்ற அவரின் கண்கள் கோபத்தில் பெரிதாவது என்னால் மட்டுமே உணரமுடிந்தது.மைண்ட் ரிலாக்ஸ்காக FM ஆன் செய்தேன். பாடலை முனுமுனுத்தவாறு  வேடிக்கை பார்த்துக்கொண்டே  மனம் போன போக்கில் எண்ணஅலைகள் ஓடியது.

Representational Image
Representational Image

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பார்களே அதிலும் ஆரோக்கியமாக பிறந்து நல்ல பெற்றோர்கள் உறவினர்கள் சூழ வளர்ந்து தாய் வீடு போல் நல்லொழுக்கத்தோடும்  மதிப்போடும் விளங்கும் குடும்பத்தில் திருமணமாகி சென்று வாழ்வது என்பது அதிலும் அரிது.அப்படி அரிதான வரம் வாங்கிவந்த பெண்களில் நானும் ஒருத்தி.

திருமணமான  சில நாட்களிலேயே கணவரின் உதவும் பண்பும் தொழில் பக்தியையும் கண்டு வியந்தேன். அவர் மருத்துவத் துறையில் இருந்ததால் நண்பர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டை வாசித்து அவர்களின் பிரச்சனைக்கு சிறந்த வழிமுறைகளை கூறுவார். அறியாமையால் ஆரோக்கியத்தில் தவறு செய்பவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே மெடிக்கல் அட்வைஸ் வழங்குவார். 

தினசரி பூஜைகள் செய்யாவிட்டாலும் கடவுளின் மேல் அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. பண்டைய கலாச்சாரத்திலும் இறைவழிபாட்டிலும் குலதெய்வ வழிபாட்டிலும் அதீத ஈடுபாடு  உடையவர்.விருந்தோம்பல் முதற்கொண்டு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முறைப்படி செய்யவேண்டும் என்று கருதுவார்.

அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார். பிறர் மனம் நோகாமல் நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர். அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகளை அவ்வப்போது கேட்டு தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்வார். 

என் மனதில் நினைக்கும் விஷயத்தை வாய் திறந்து கேட்காமலேயே செய்து முடிப்பவர்.குழந்தைகளோடு விளையாடும்போது அவர்களாகவே மாறிவிடுவார். 

பெற்றோர்கள் பிள்ளைகளின் வெற்றியை பார்த்து நாங்கள்தான் காரணம் என்று கர்வம் கொள்ளக்கூடாது.அதே சமயத்தில் அவர்கள் தோல்வியின் போது ஏற்படும் பழிச்சொல்லை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு பிள்ளைகளை நல்வழிபடுத்த வேண்டும் என்று புதிய பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தார்.சொன்ன சொல் தவறாதவர்.நேரம் தவறாமையை  பின்பற்றக்கூடியவர்.

  "ஆறு மணி என்றதும் சரியாக காலிங்பெல்லை அழுத்திவிட்டாரே! அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து வாசல்ல வெயிட் பண்ணி கரெக்ட்டா ஆறு மணி ஆன உடனே பிளான் பண்ணி பெல் அடிக்கிறாரோ! நெக்ஸ்ட் டைம்  சீக்கிரமா கிளம்பி டெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்"  என்று மனதிற்குள் நினைத்தவாரே சுயநினைவுக்கு வந்தேன்.

கார் டோல்கேட் ரோட்டில் சென்றுகொண்டிருந்தது. "என்னங்க ஏன் இந்த ரோட்ல போறீங்க... கொஞ்சம் லேட்டா போனாலும் பரவால்ல.. காச ஏன் வேஸ்ட் பண்றீங்க? "என்றேன். காசை செலவு செய்தாவது பொன்னான நேரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர் எண்ணம் நான் நன்கு அறிவேன். இருப்பினும் இந்த கேள்வியை கேட்டேன். அவர் fm இல் வரும் பாடல் வரியை சுட்டிக்காட்டினார். "காலதங்கம் போனாலே தம்பியே என்னாளும் வருமோடா..." நான் புரியாதது போல் விழித்தேன். "உனக்கு எல்லாம் புளி போட்டு விளக்கணும்" என்று செல்லமாக கடிந்து கொண்டார்.

FM இல் அடுத்து வந்த பாடலின் வரியை நான் மனதிற்குள் மாற்றி பாடிக்கொண்டேன். "கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!!!"

-தாமரை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.