Published:Updated:

ஒரு க்யூட் சர்ப்ரைஸ்! - விழா மேடையில் அரங்கேறிய அழகிய அப்பாலஜி

Representational Image
Representational Image

மந்தகாசம் சிந்தும் முகத்துடன் அந்த யுவன் தனது கையை கூட்டதின் ஒருபுறம் நீட்டினான். குழுமியிருந்தோர் அத்தனை பேரின் கண்களும், தலையும் ஒருசேர திரும்பியது அந்த திசையை நோக்கி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நிலவில் கால் பதித்த நாட்களைப் போல் சில நினைவில் தடம் பதித்த நாட்களும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறது. எண்ணும் போதெல்லாம் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் தொடர்கிறது.

படித்த புத்தகம் ஒன்றை மீண்டும் மீண்டும் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் காட்சிகளும், நிகழ்வுகளும், புரிதல்களும் கற்பனையில் படமாவதைப் போல் சில நிகழ்வுகளும் பசுமை மாறா புதுமையாய் என்றும் நினைவில் நீங்காதொரு இடம்பிடிக்கிறது.

அன்று அந்த வெட்டவெளி அரங்கத்தில் சுமார் 500 பேர் குழுமியிருந்தார்கள், ஆரவாரத்திற்கு பஞ்சமோ, குதூகலத்திற்கு குறைவோ சிறிதும் இல்லை. அது ஒரு தொழில்நுட்பப் பூங்காவில் அமைந்திருந்த ஓர் அலுவலகத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வெளியரங்கம்.

Representational Image
Representational Image

கழுகுப் பார்வையில் அந்த அரங்கம் சுற்றிலும் மரங்கள், வட்ட வடிவில் அமைந்த படிகள், மேடையைச் சுற்றிலும் நாற்காலிகள் என வட்ட வடிவ பூங்காவைப் போலிருந்தது. நவீனத்தின் அடையாளங்களாய் பளிச்சிடும் மின்விளக்குகள், நாகரீக உடை மற்றும் கழுத்தில் அலுவலக-Tag அணிந்த யுவன், யுவதிகள் பலர் அந்த விழாவில் கலந்திருந்தனர். மேடையில் மைக் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்த அத்தனை பேரின் கவனத்தையும் வெகு நயமாக ஆங்கிலம் கலந்த தமிழில் தன்பக்கம் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தார் அந்த தொகுப்பாளர்.

பெத்த மனசு..! - குறுங்கதை #MyVikatan

அந்த சமயம் கூட்டத்திலிருந்து மிடுக்கான யுவன் ஒருவன் மேடைக்கு ஏறினான். அவன் தோற்றம் பார்க்கையில், அவன் அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் என்பது நன்றாக புரிந்தது. Full Hand Shirt, Jean, Shoe, Id tag மற்றும் முகத்தில் நீளவடிவ Specs நவீன காலத்தின் IT-Employee-கான அத்தனையும் அவனிடம் தென்பட்டது. அவன் ஏதோ அந்த தொகுப்பாளரிடம் சொல்கிறான். உடனே தொகுப்பாளர் சிரித்துக் கொண்டே மைக்கில் சொன்னார், அடுத்ததாக ஒரு Surprise Event நடக்கப் போகிறதென்று. அது உண்மையாகவே அங்கிருந்த யுவன் யுவதிகளை Surprise செய்தது போலும் அவர்கள் ஆரவாரக் கூக்குரலிட்டனர்.

அந்த யுவன் கையில் மைக்கை வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

Hi… guys, நேத்து Valentine’s Day எல்லாரும் Happy-ஆ Celebrate பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன், என்று மைக்கை ஆரவாரம் வரும் திசை நோக்கி நீட்டினான். கூட்டத்தில் இருந்தவர்களில் பலர் அவன் கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் போலும் மற்றொரு சாரர் இல்லை என்பது போலும் கூச்சலிட்டனர்.

சிரித்துக் கொண்டே அந்த யுவன், சிறிது இடைவெளி விட்டு பேச தொடங்கினான். "But I disappointed my girl…. அவள் இன்னும் என்மேல் கோவமா தான் இருக்கா, So அவளுக்காக ஒரு Song Dedicate பண்ணலான்னு இருக்கேன், Hope You all will enjoy it, என்று சொன்னதும். குழுமியிருந்தோர் அனைவரும் சந்தோசத்திலும் புன்னகையிலும் ஆர்ப்பரித்தனர்.

Representational Image
Representational Image

இசை ஒலித்தது, அது ஒரு பிரபலமான பாடல்,

என் சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்...

எஹ் என்னை தாண்டி போறவளே........


சிற்சில இடங்களில் பாட்டும் தாளமும் நழுவியதிலிருந்து தெரிந்தது அவன் பெரிதாக Prepare செய்துவிட்டு பாடவில்லையென்று, இருந்தும் கூட்டதிலிருந்தோர் அனைவரும் பாட்டில் மெய்மறந்திருந்தனர் என்றே சொல்ல வேண்டும். பாடல் நிறைவடைந்ததும் கைத்தட்டல்களும், ஆரவாரமும் ஒலிக்கிறது. அந்த யுவன் சொல்கிறான், என்னோட Song-அ இவளோ பொறுமையா கேட்ட உங்க எல்லாருக்கும் என்னோட Girl-அ Introduce பண்ண வேண்டாமா என்று கேட்கிறான்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டதிலிருந்தோர் அனைவரும், yes… yes… என்று சத்தமிட்டனர்,

காதலை உணரும் நொடி சுகமென்றால்..... காதலை உணர்த்தும் நொடி அதனினும் சுகமல்லவா
ஐஷ்வர்யா சந்திரன்

மந்தகாசம் சிந்தும் முகத்துடன் அந்த யுவன் தனது கையை கூட்டதின் ஒருபுறம் நீட்டினான். குழுமியிருந்தோர் அத்தனை பேரின் கண்களும், தலையும் ஒருசேர திரும்பியது அந்த திசையை நோக்கி. அங்கு ஒரு யுவதி அமர்ந்திருந்தாள், நடப்பவைகள் அனைத்தையும் ஆச்சர்யத்தின் உச்சமாய் அவள் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

Representational Image
Representational Image

திருதிருவென அந்த மையிட்ட கருவிழிகள் அலைமோதுகின்றன. அவன் அவளை அறிமுகம் செய்வானென சற்றும் எதிர்பார்த்திராத அவள், நாணத்தின் உச்சமாய் விரிந்த இதழ்களும், குருகும் கண்களும், சுருங்கும் நெற்றியயையும் தன் உள்ளங்கைகளுக்குள் புதைத்துவிட எண்ணி…, முகம் புதைக்க முற்படுகிறாள் பின் அதிலும் தாளாத தன் நாணத்தால் தன் மடியில் முகம் புதைத்துவிட்டாள்...

அங்கிருந்தோரின் ஆரவாரம் ஒலித்துக் கொண்டே இருக்க அந்த யுவன் “Sorry நித்தி…. I Love you soo much…” என்று சொல்லி தொகுப்பாளரிடம் மைக்கை கொடுத்து விட்டு அந்த யுவதியை நோக்கி நடந்தான், அவன் அவள் இருப்பிடம் செல்லும் வரை அங்கிருந்தோர் அனைவரின் கண்களும் அவ்விருவரையும் விட்டு அகலவில்லை.


காதலை உணரும் நொடி சுகமென்றால்.....

காதலை உணர்த்தும் நொடி அதனினும் சுகமல்லவா....


அன்று, கடந்து போகும் நிகழ்வை காலத்திற்கும் கடந்து போகாத நினைவாய் மாற்றிப் போனான் காதலினால் அவன், அந்த யுவதிக்கு மட்டுமல்ல அரங்கத்திலிருந்த அனைவருக்கும் அன்றைய தினம் நீங்கா நிழலானது நினைவுகளில்... இன்றும்.... என்றும்....!


-ஐஷ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு