Published:Updated:

சைக்கிளும் நானும்!

Cycle ( Photo by Dhanasakthi )

ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் சைக்கிள் கேரியர் பிடித்துக்கொண்டே நடப்பேன்.

சைக்கிளும் நானும்!

ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் சைக்கிள் கேரியர் பிடித்துக்கொண்டே நடப்பேன்.

Published:Updated:
Cycle ( Photo by Dhanasakthi )

மூன்று நான்கு குழந்தைகள் இருக்கும் வீட்டில் மூத்த பிள்ளையாக இருந்தால் அவர்களுக்கு மறுக்கப்படுவது அப்பாவின் சைக்கிளில் அமரும் கேரியர்தான்.

ரஜினி படம் ரிலீஸானால் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்.

அப்பா வண்டியிலிருந்து வந்தால் கண்டிப்பாக பெரிய தியேட்டருக்குதான் சினிமா பார்க்க அழைத்துப்போவார்.

அதுவும் இரண்டாம் ஆட்டம் என்கிற செகன்ட் ஷோவுக்குதான் கூட்டிப்போவார். அப்பாவிடம் சொந்த சைக்கிள் இல்லை. வாடகைக்குதான் சைக்கிள் எடுப்பார். அந்த சைக்கிளில் கேரியரில் தங்கையும் தம்பியும்தான் உட்கார்வார்கள். நான் கேரியரை பிடித்துக்கொண்டே நடந்தே போவேன்.

ரஜினி படம் பார்க்கப் போகிறோம் ஆசையில் சைக்கிள் கேரியர் பிடித்துக்கொண்டே நடப்பேன்.

Representational Image
Representational Image

ஒரு முறை ஒன்னுவிட்ட மாமாவின் சைக்கிளில் முன்னால் கம்பியில் உட்கார்ந்து தேர்திருவிழா பார்ப்பதற்காக செல்லும்போது கால்களை முன் சக்கரத்தில் விட்டு பெரிய காயத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

சைக்கிள் கற்றுக்கொள்வதற்காக மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது பைசா வீதம் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுத்து வகுப்புத்தோழன் சரவணனிடம் கெஞ்சி கேட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

குரங்குபெடல் போட்டு தட்டுத்தடுமாறி கீழே விழுந்து முட்டிய உடைச்சி எப்படியோ சைக்கிளை ஓட்டிக்கற்றுக்கொண்டேன்.

இன்று சைக்கிள் தினமாம்.

-கவிஞர் தனசக்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism