வயது முதியோர் போர் பிரகடனம் செய்கிறார்கள். இளைஞர்கள் சண்டையிட்டு மரணிக்கிறார்கள் என்று சொன்னார் ஹெர்பர்ட் ஹூவர்.
ஒரு நாட்டின் தலைவர் போரை அறிவித்து விட்டால், அந்நாட்டு ராணுவ வீரனுக்கு வேறு வழியில்லை. போரிட்டுத்தான் ஆக வேண்டும். கட்டாயங்கள் ஏதுமில்லாமல் போரின் அவலங்களை வெளிக்கொண்டுவர சுய விருப்பத்தால் களத்திற்கு செல்லும் பத்திரிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
போர்க்களத்திற்கு செல்லும் பல பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதுண்டு. சிரிய நாட்டின் உள்நாட்டு போரை பற்றி தகவல் சேகரித்து அனுப்பிக்கொண்டிருந்த மேரி கொல்வின் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மைவிகடனில் எழுதியிருந்தேன்.
சமீபத்தில் ஷிரீன் அபு அக்லே (Shereen Abu Aqleh) என்ற அல் ஜஸீரா பத்திரிக்கையாளர் பாலஸ்த்தீனத்தின் ஜெனின் நகரில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார். அவர் PRESS என்று எழுதப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்களுக்கான அங்கியும் தலைக்கவசமும் அணிந்திருந்தார். அவருடன் அவர் குழுவை சேர்ந்த மூன்று பேர் இருந்தனர். திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். உடன் இருந்த பத்திரிக்கையாளர்களும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகமும், ஷிரீனை இஸ்ரேலிய ராணுவம் கொன்றதாக சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்கள் கொன்றிருக்கலாம் என்று சொல்கிறது. நாங்கள் அங்கே சென்ற பொழுது சண்டை நடந்து கொண்டிருக்கவில்லை. நாங்கள் குறிவைத்து இஸ்ரேலிய ராணுவத்தால் தாக்கப்பட்டோம். அதில் தான் ஷிரீன் இறந்து விட்டார் என்று காயம்பட்ட இன்னொரு பத்திரிக்கையாளர் அலி சமௌடி மற்றும் ஷிரீனின் அருகே நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஹனய்ஷா ஆகியோர் உறுதிபட சொல்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇஸ்ரேலிய ராணுவம் விசாரணை செய்கிறோம், பாலஸ்தீனர்கள் கொன்றிருக்கலாம் என்று சொல்லிவிட்டது. ஷிரினின் உடலை எடுத்து வந்த பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேலிய பாதுகாப்பு படை. அவர்கள் பாலஸ்தீனிய கொடியுடன் கோசம் போட்டனர், அதனால் தாக்குதல் நடத்தினோம் என்று விளக்கம் கொடுக்கிறது இஸ்ரேலிய பாதுகாப்புப்படை.
உலகம் ஒரு சிறந்த பத்திரிக்கையாளரை இழந்து விட்டது. இதே போல போரில் கொல்லப்பட்ட இந்தியாவை சேர்ந்த புகழ்மிக்க பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கி அவர்களுக்கு புலிட்சர் பரிசு கிடைத்திருப்பது நடக்கிற அவலங்களுக்கிடையிலும் நெகிழ்ச்சியான செய்தி.

உலகிலேயே கொரோனாவினால் இறந்தவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதை தவறு என்று சொல்கிறது இந்திய அரசு. இந்த விவாதத்திற்கு செல்லாமல், கொரோனாவால் இந்தியாவில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள சில புகைப்படங்கள் உதவியது. பல உடல்கள் அருகருகே எரிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை உயரமான இடத்தில் இருந்து எடுத்து கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை உலகறியச் செய்தார் ராய்ட்டர்ஸ் நிறுவன பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கி.
அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ரானுவத்திற்கும் தாலிபான்களுக்கும் நடந்த போர் பற்றி செய்தி சேகரிக்க சென்ற டேனிஸ் சித்திக்கி கொல்லப்பட்டார். அவருக்கு இரண்டாவது முறையாக புலிட்சர் பரிசு கிடைத்திருக்கிறது, மரணத்திற்கு பின்பு.
இதற்கு முன்பு மியான்மரில் ரோஹிங்கியாக்களின் துயரை தன் புகைப்படங்களின் மூலம் உலகறியச் செய்ததற்காக புலிட்சர் பரிசு பெற்றார்.
டேனிஷ் சிதிக்கியுடன் சேர்ந்து காஷ்மீரை சேர்ந்த 28 வயதேயான சன்னா இஷ்ரத் மட்டூவிற்கும் புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது. நீண்ட ஆயுளோடு உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை வெளிக்கொண்டுவர சன்னா மட்டூவிற்கு வாழ்த்துகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.