Published:Updated:

கூட்டாட்சி முறையில் அதிகார பரவல்! | மாநில சுயாட்சி -6 | My Vikatan

Representational Image

ஏன் இது மிக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது என்றால்? , கடந்த எட்டு ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவில், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அது ஒன்றிய அரசில், அதாவது டெல்லியில் மையப்படுத்தப்படுகிறது.

கூட்டாட்சி முறையில் அதிகார பரவல்! | மாநில சுயாட்சி -6 | My Vikatan

ஏன் இது மிக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது என்றால்? , கடந்த எட்டு ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவில், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அது ஒன்றிய அரசில், அதாவது டெல்லியில் மையப்படுத்தப்படுகிறது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

2014 இல் இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அரசியல் ஆர்வலர்களால் மிக அதிகமாக உச்சரிக்கப்படுகின்ற, கவலை கொள்ள வைக்கின்ற ஒரு வார்த்தை “அதிகார குவிப்பு,” (Centralization).

ஏன் இது மிக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது என்றால்? , கடந்த எட்டு ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவில், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அது ஒன்றிய அரசில், அதாவது டெல்லியில் மையப்படுத்தப்படுகிறது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். ஒருவேளை ஒரு நாட்டில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, அந்த உரிமைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு நகருகிறது என்றால் அந்த நாட்டின் கூட்டாட்சி முறை என்பது நீர்க்க தொடங்கி, அந்த நாடானது கூட்டாட்சி முறையிலிருந்து ஒற்றை ஆட்சியை நோக்கி நகர்கிறது என்று அர்த்தம். இந்தியா போன்ற பரந்து விரிந்து, பல இன, மொழி மக்கள் வாழக்கூடிய ஒன்றியத்தில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில், அதாவது டெல்லியில் குவிந்து இருந்தால் அது நிர்வாக ரீதியில் மிக சிக்கலாக இருக்கும்.

தலைநகர் டெல்லி
தலைநகர் டெல்லி

எடுத்துக்காட்டாக ஒரு மாநிலத்தின் கல்வியை அந்த அந்த மாநிலங்கள் தான் தீர்மானிக்க முடியும். அதே போல ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை அந்த மாநில அரசே பேணிக்காக்க முடியும், மாறாக கன்னியாகுமரியின் சட்ட ஒழுங்கை டெல்லியில் இருந்து கண்கணிப்பது என்பது இயலாத காரியம். அதனாலேயே இந்தியாவில் ஒற்றை ஆட்சி என்று ஒன்று இல்லாமல் கூட்டாட்சி உருவாக்கப்பட்டது. இது ஒன்றும் 1947 இல் நாடு விடுதலை அடைந்த பின் உருவாக்கப்பட்டது இல்லை. இந்த கூட்டாட்சி முறையானது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆம், நாடு விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவானது, பல மாகாணங்களாக பிரிக்கப் பட்டு, அதாவது மெட்ராஸ் மாகாணம், பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம் என்று பிரிக்கப்பட்டு அந்த மாகாணங்களுக்கு என்று தனியாக அரசுகள் இயங்கி வந்தன. 1947 இல் நாடு விடுதலை அடைந்த போது, பிரிட்டிஷ் இந்தியாவானது பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, எஞ்சியுறுத்த பகுதிகளை இணைத்து சுதந்திர இந்தியா உருவானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகார பகிர்வுகளை பொறுத்தவரை, இந்தியாவில் மூன்று அடுக்குகள் உள்ளன, முதலாவது ஒன்றிய அரசு, இரண்டாவது மாநில அரசு, மூன்றாவது உள்ளாட்சி அமைப்புகள். இதில் முதல் மற்றும் இரண்டாவது மிக முக்கியமானது ஆகும். ஒன்றியத்தையும், மாநிலங்களையும் நிர்வகிக்கும் முக்கியமான உரிமைகள் இந்த முதல் இரண்டு அமைப்புகளுக்கு மட்டுமே பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நாட்டின் பாதுகாப்பு, பண அச்சடிப்பு, குடியுரிமை, ரயில்வே போன்றவைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலும், சட்டம் ஒழுங்கு, உள்ளாட்சி, போக்குவரத்து, சிறைத்துறை போன்றவைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

ஒற்றை ஆட்சியில் இது போன்ற அதிகார பரவல்கள் இல்லையா என்றால், அங்கும் அதிகார பரவல் என்பது உள்ளது. ஆனால் அது ஒரு முழுமையான அதிகார பரவல் அல்லது அதிகார பகிர்வாக இருக்காது. ஒரு உறுப்பு அரசானது (Unitary government) பொறுப்பு சுமைகளை குறைக்க வேண்டி தனக்கு கீழ் உள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு பிரித்து கொடுப்பதும் அதிகார பரவல் தான். ஆனால் அந்த அதிகார பரவல் என்பது முழுமையானதா? என்றால் கண்டிப்பாக இல்லை.

parliment
parliment
vikatan

உதாரணமாக, ஒரு உறுப்பு அரசானது தன் பொறுப்புகள் சிலவற்றை மாவட்ட ஆட்சி தலைவருக்கு வழங்குகிறது. அவரும் அதை நிர்வகிக்கிறார், மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை செயல்படுத்துகிறார். ஆனால், அவர் அந்த உறுப்பு அரசு என்ன சொல்கிறதோ அதன்படி தான் நடக்க முடியுமே தவிர, அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது . அவரும் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் எந்த மாற்றத்தையோ அல்லது சட்ட திருத்ததையோ கொண்டு வர முடியாது, மாறாக சட்ட திருத்தம் என்பது அந்த உறுப்பு அரசின் நாடாளுமன்றத்தில் தான் கொண்டுவரமுடியும்.

சுருங்க சொல்ல வேண்டுமானால், உறுப்பு அரசாங்கத்தின் அதிகார பகிர்வு என்பது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு பகிர்வாக இருக்குமே தவிர, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகார பகிர்வாக இருக்காது. மேற்படி, உறுப்பு அரசில் இருக்கும் மாவட்ட ஆட்சியாளர் என்பவர் அந்த உறுப்பு அரசுக்கான ஒரு ஏஜென்ட் அல்லது முகவராகவே இருப்பார். அதனால் தான் உறுப்பு அரசின் அதிகார பரவல் என்பது முழுமையான அதிகார பரவல் அல்ல என்று கூறுகிறோம். மேலும், இந்த முறையில் மாவட்ட ஆட்சி தலைவருக்கு, கூட்டாட்சியில் இருக்கும் மாநில முதல்வரை விட கூடுதலான அதிகாரங்கள் இருக்கலாம், ஆனால், அதற்காக அது ஒரு கூட்டாட்சி ஆகிவிடாது.

மறுபுறம், மாநில முதல்வர், அவர் அவர் சார்ந்த துறைகளில்(மாநில பட்டியலில்) மாற்றம் கொண்டு வர வேண்டுமென்றால், அதை அவர் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானமாக நிறைவேற்றி நடைமுறை படுத்தலாம். அதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த தீர்மானம் என்பது அதன் பின் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக மாற்றப்படும். நாடு விடுதலை அடைந்து கடந்த எழுபது ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர்கள் சட்டமன்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து தங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் கொடுத்த பொறுப்பையும், கடமையும் நிறைவேற்றி வந்தனர். ஆனால், தற்போது உள்ள ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பொறுப்புகளை தட்டிக் கழித்து, ஒன்றிய அரசின் நேரடி முகவர்களாகவும் செயல் படுகின்றனர்.

Indian Flag
Indian Flag

வெறும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதால் மட்டும், ஒரு நாட்டில் நடக்கும் ஆட்சி கூட்டாட்சி ஆகி விடாது. மாறாக, ஒரு மாநில அரசு அந்த அதிகாரங்களை சரியாக எந்த இடையூறும் இல்லாமல், யாருடைய உத்தரவுகளுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவதே முழுமையான கூட்டாட்சி ஆகும். ஆனால், அப்படி ஒரு சுதந்திரம் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களுக்கு கொடுக்கப்பற்றுகிறதா என்றால்? நேர்முகமாக சொல்லவேண்டுமானால் "கொடுக்கப்பட்டிருக்கிறது", மறைமுகமாக சொல்லவேண்டுமானால் "கொடுக்கப்படவில்லை" என்பதே ஆகும்.

மேற்சொன்னது போல், மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது, ஆளுநர்கள் அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள சட்டமியற்றும் அதிகாரத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறார்கள். இது போன்று ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது என்பது ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் இசைவுக்கு கட்டுப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை செயல்பட விடாமல் மறைமுகமாக முடக்குகிறார்.

இப்படியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை, ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகின்ற ஒரு ஆளுநர் கட்டுப்படுத்துகிறார் என்றால், நன்றாக சிந்தித்து பார்த்தால் புரியும் ஒன்றிய அரசு என்பது இந்தியாவில் மாநிலங்களை கட்டுப்படுத்துகிறது, சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. இதனால் தான், தமிழ்நாட்டில் உள்ள திமுக உட்பட திராவிட இயக்கங்கள் ஆளுநர் பதவியே மாநிலங்களுக்கு தேவை இல்லை என்பதை ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வருகிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால், அரசியலமைப்பு படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செய்யாமல் காலம் தாழ்த்தும் ஆளுநருக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்கிறது, அதனால் ஆளுநர் என்பவர் மாநிலங்களுக்கு ஒரு தேவையில்லாத நிதி மற்றும் நிர்வாக சுமை (Financial and Administrative burden). இப்படியாக ஒன்றிய அரசு, மாநில அரசை நிர்வாக ரீதியில் கட்டுப்படுத்தினால் அந்த ஒன்றியத்தில் இருப்பது கூட்டாட்சி அல்ல? அது ஒரு குவாசி கூட்டாட்சி- அரை கூட்டாட்சி (Quasi – Federalism) அல்லது அதற்கும் கீழே.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

அரை கூட்டாட்சி என்பது கூட்டாட்சி இருப்பது போல இருக்கும், ஆனால் இருக்காது, அங்கு மாநிலங்கள் , ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்தப் படுபவையாகவே இருக்கும். இந்திய ஒன்றியத்தை பொறுத்தவரை இங்கு முழுமையான அதிகார பரவல் இருக்கிறதா என்றால்? அதற்கு பதில் “இல்லை” என்பதே, முழுமையாக அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிரப்படவும் இல்லை, பகிரப்படும் அதிகாரங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த படுபவை ஆகவே உள்ளது. இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்வது என்னவென்றால், அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிரப்பட்டிருக்கிறது, ஆனால் அதனை முழுமையாக செயல் படுத்தும் இடத்தில் மாநிலங்கள் இல்லை என்பது தான் உண்மை.

என்றைக்கு அதிகாரங்கள் என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே முழுமையாக பகிரப்பட்டு, அந்த அதிகாரங்களை மாநிலங்கள் பயன்படுத்துவதற்கு எந்த இடையூறும் இல்லாமல் முழு சுதந்திரம் கொடுப்படுகிறதோ அதுவே “முழுமையான அதிகார பரவல், முழுமையான கூட்டாட்சி மற்றும் முழுமையான மாநில சுயாட்சியாக” இருக்கும். அதுவரை என்னதான் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிரப்பட்டு இருந்தாலும் அது ஒரு கானல் நீர் போலத்தான் இருக்கும். இதே நிலை நீடித்தால் பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் கூட சுதந்திர இந்தியாவில் மாநிலங்களுக்கு இருக்காது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.