Published:Updated:

முதுமையில் நீரிழிவு நோய் -2 | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரையின் அளவு குறையாமல் இருந்தால் மாத்திரைகளை உண்ண வேண்டி இருக்கும். தற்போது நீரிழிவு நோய்க்கு பல உயர்தர மாத்திரைகள் வந்துள்ளன.

முதுமையில் நீரிழிவு நோய் -2 | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரையின் அளவு குறையாமல் இருந்தால் மாத்திரைகளை உண்ண வேண்டி இருக்கும். தற்போது நீரிழிவு நோய்க்கு பல உயர்தர மாத்திரைகள் வந்துள்ளன.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சிகிச்சை முறைகள்

நீரிழிவு நோயை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

முதுமையில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதை உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே கட்டுப்படுத்தி விடலாம். இவற்றால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மட்டுமே மாத்திரைகள் தேவைப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவுக்கட்டுப்பாடு

தினமும் மூன்று முறை உணவு என்ற முறையை மாற்றி, சிறிய அளவில் ஐந்து முறை உண்ணலாம். சாப்பிடும் போது மெதுவாக உணவை நன்றாக மென்று, உண்ணும் போது தண்ணீர் குடிக்காமல், யாரிடமும் பேசாமல் அமைதியாக சாப்பிட வேண்டும். வயிற்றிற்கு பற்கள் கிடையாது, ஆகையால் ஜீரணம் வாயிலிருந்தே தொடங்கட்டும்! இப்படி சாப்பிடும் பொழுது உடலில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவதில்லை.

தவிர்க்க வேண்டியவை

சீனி, குளுக்கோஸ், தேன், பாகு, வெல்லம், இனிப்பு ஜாம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டை வகைகள், குளிர்பானங்கள், கேக், ஆர்லிக்ஸ், போர்ன்விட்டா, சாக்லேட், பானங்கள், இனிப்புப் பிஸ்கட், கிழங்கு வகைகள், முந்திரிப் பருப்பு, மதுபானங்கள்.

Representational Image
Representational Image

சேர்க்க வேண்டியவை

தெளிந்த சூப்பு, உப்பு சேர்ந்த ஊறுகாய் (எண்ணெய் இல்லாதது), மிளகு தண்ணீர், காய்கறி (சேலட்), காபி அல்லது தேநீர் (சர்க்கரை இல்லாதது), கடைந்த மோர், இனிப்பில்லாத எலுமிச்சம்பழச் சாறு, தக்காளிச் சாறு, சோடா, சாம்பல் பூசணிக்காய், முட்டைசோஸ், பீன்ஸ், வாழைத்தண்டு, காலிஃப்ளவர், கத்திரிக்காய், வெண்டைக்காய், வாழைப்பூ, முருங்கைக்ாய், காராமணி, பாகற்காய், புடலங்காய், கீரைகள், நுாற்கோல், கறிவேப்பிலை முதலியவற்றை மிகுதியாக உண்ணலாம். இவை உணவில் பெருமளவு இருப்பின் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு தோன்றும்.

கூழ் (உம்: கேழ்வரகு போன்ற திரவ உணவை முடிந்தவரை தவிர்க்கவும். பதிலாக திட உணவை (உம்: கேழ்வரகு களி, புட்டு) சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரைச் சத்து இருக்கும். அதனால், கூடுமானவரை பழங்களைக் குறைத்தல் நல்லது. ஒரு நாளைக்கு ஒரு சிறிய சாத்துக்குடி அல்லது சிறிய ஆப்பிள் உண்ணலாம். ஒரு பெரிய வாழைப்பழத்தில் 100 கலோரி சத்து உள்ளது. அதனால், சிறிய மலைப்பழம் ஒன்றே போதுமானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடலை எண்ணெய் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது.

மாமிச உணவு வகைகளை உண்பதால் ரத்தத்தில் கொழுப்புச் சத்து மிகுதியாகும்; உடலின் எடையும் கூடும்; அதனால், அசைவ உணவைக் குறைப்பதும், தவிர்ப்பதும் நல்லது.

உடற்பயிற்சி

உடலிலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க, உடற்பயிற்சி மிகவும் உகந்தது.

உடற்பயிற்சிகளில் வேகமாக நடத்தல் மிக்க நன்மை தரும். தவிர, மருத்துவர் சொல்லித்தரும் தரையில் செய்யும் பயிற்சிகளையும் (floor exercise) தவறாமல் செய்தல் நல்லது. நீரிழிவு நோயால் கண் விழித்திரை பாதிக்கப்பட்டவர், நீரிழிவு நோயுடன் உயர் ரத்த அழுத்தம் உடையவர், தலையைக் கீழே வைத்தோ குனிந்தோ செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. துள்ளக்கூடாது; முக்குதல் கூடாது. நீரிழிவு நோயுடன் இதய நோயும் உள்ளவர் மூச்சு வாங்கும் வேலை எதையும் செய்யக்கூடாது.

பிராணாணயாமம், யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகலினால் மனம் அமைதியடைய சர்க்கரையின் அளவு குறை வாய்ப்புண்டு.

Representational Image
Representational Image

மாத்திரைகள்

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரையின் அளவு குறையாமல் இருந்தால் மாத்திரைகளை உண்ண வேண்டி இருக்கும். தற்போது நீரிழிவு நோய்க்கு பல உயர்தர மாத்திரைகள் வந்துள்ளன. பலருக்கு இன்சுலின் ஊசியில்லாமலேயே மாத்திரைகள் மூலம் முதுமையில் வரும் நீரிழிவு நோய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க முடியும்.

டாக்டர்கள் கூறிய மாத்திரைகளை நாள் தவறாமல் உண்ண வேண்டும். மாத்திரைகளை உண்ட பிறகு அவசியம் உணவு உட்கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனை இன்றி மாத்திரைகளை குறைப்பதோ, நிறுத்துவதோ, அதிகப்படுத்துவதோ கூடாது. நீரிழிவு நோயுள்ள முதியவர்கள் எல்லோரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகளை உண்ண வேண்டிய அவசியம் இருக்காது. சிலருக்கு மாத்திரைகளை டாக்டர் நிறுத்தினாலும், தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டுகளையும், உடற்பயிற்சிகளையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்சுலின்

முதுமையில் ஒரு சிலருக்கே இன்சுலின் ஊசி தேவைப்படும். இன்சுலின் ஊசி போட்டாலும் உணவுக் கட்டுப்பாடடையும் உடற்பயிற்சியையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

காலையிலும் மாலையிலும் (தேவைப்பட்டால்) உண்பதற்கு அரைமணிக்கு முன் இன்சுலினை உடலில் செலுத்திக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்து, தாழ்நிலை சர்க்கரை (Hypoglycemia) ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Representational Image
Representational Image

தாழ்நிலை சர்க்கரை (Hypoglycemia)

உடலில் சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்துவிட்டால் (40 மி.கி% கீழே) அதிக தீமையை விளைவிக்கும். திடீரென்று சர்க்கரையின் அளவு குறையக் காரணங்கள்:

 • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை

 • அளவுக்கு அதிகமான வேலைப் பளு

 • மாத்திரைகள் வலி நிவாரணி

 • அளவுக்கு அதிகமான இன்சுலின் அல்லது நீரிழிவு நோய் மாத்திரைகள்

 • மது அருந்துதல்

அறிகுறிகள்:

அளவுக்கு அதிகமான பசி, வியர்வை, பலவீனம், வேகமான இருதயத் துடிப்பு, படபடப்பு, நடுக்கம், அமைதியின்மை, எரிச்சல் அல்லது சிடுசிடுப்பு, வாந்தி, தலைவலி, பார்வையின் பாதிப்பு, மூளை மங்குதல், குழப்பம், வலிப்பு நோய்.

மேலே கொடுத்துள்ள அறிகுறிகளில் ஏதாவது தெரிந்தால் உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

இதற்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். தாழ் சர்க்கரை நிலை தொடர்ந்து ஆறுமணி நேரம் நீடித்தால் மூளையை நிரந்தரமாகப் பாதித்து விடும். அடிக்கடி இந்நிலை ஏற்பட்டாலும் இது மனநிலையை வெகுவாகப் பாதிக்கும்.

சிகிச்சை முறை

சர்க்கரைத் தண்ணீர், குளக்கோஸ் அல்லது இனிப்பு பானங்களை உடனே குடிக்க வேண்டும். அடுத்து, மாவு சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். மயக்க நிலையில் இருப்பவருக்கு உடனே ஊசியின் மூலம் குளுக்கோசை செலுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அந்நிலையைப் பற்றி நோயாளியிடம் எடுத்துக் கூறி, இது மாதிரி வராமல் இருப்பதைப்பற்றி டாக்டர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

Representational Image
Representational Image

நீரிழிவு நோய் உள்ள முதியவர்கள் கீழ்கண்ட பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

 • இதயம் - மறைந்து இருக்கும் இதயம் பலவீனத்தைக் கண்டறிய ஈ.சி.ஜி. மற்றும் எக்கோ

 • சிறுநீரகம் - இரத்தத்தில் உள்ள யூரியா, கிரியேட்டினின், ஜி.எவ்.ஆர். (G.F.R.) பரிசோதனை மற்றும் சிறுநீரில் உள்ள புரதப் பரிசோதனை

 • கண் விழித்திரை - கண் நோய் சிறப்பு மருத்துவர் மூலம் கண் விழித்திரை பாதிப்பு கண்டறியும் பரிசோதனை

 • பாதம் பராமரிப்பு - பாதங்களில் உள்ள நரம்பு பாதிப்பினால் தொடு உணர்ச்சி குறையலாம். பாதத்திற்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறையலாம். பாதம் பராமரிப்பு மிகவும் அவசியம்.

 • பற்கள் - சொத்தை பற்களினாலும், சொத்தை ஏற்பட்ட ஈறுகளினாலும், நீரிழிவு நோய் கட்டுக்குள் அடங்காமல் இருக்கலாம். குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது பற்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 • மறதி நோய் - ஆரம்ப நிலையில் உள்ள மறதி நோயைக் கண்டறிய பரிசோதனை செய்வது அவசியம்.

 • நெஞ்சு மார்பு படம் வருடத்திற்கு ஒரு முறை அவசியம் எடுக்க வேண்டும்.

 • அல்ட்ராசோனாகிராம் பரிசோதனை பீத்தநீர்பையில் உள்ள கற்கள் மற்றும் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தை அறிய வயிற்றுப் பகுதி ஸ்கேன் அவசியம். கொழுப்பு கல்லீரல் தொல்லைகள் இன்றி மறைந்து இருக்கும். இப்பரிசோதனை கொழுப்பு கல்லீரலையும் கண்டறிய உதவும்.

 • மலம் வெளியேறுவதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் கோலனோஸ்கோபி பரிசோதனை தேவைப்படடலாம்.

 • உங்களின் வயது 70க்கு மேல் இருந்தால், எச்.பி.ஏ 1 சி.யை 8 % அளவிற்கு கீழே வைத்துக் கொள்ளவும். வயதானவர்கள் தங்களின் எச்.பி.ஏ.1 சியின் அளவு 6.5% ல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Representational Image
Representational Image

நீரிழிவினர் தவறாமல் பின்பற்ற வேண்டியவை

 • உணவுக் கட்டுப்பாடு

 • தேவையான உடற்பயிற்சி

 • தவறாமல் செய்யும் இரத்த பரிசோதனை

 • அடிக்கடி உடல் எடையை சரிபார்த்தல்

 • பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல்

 • எப்பொழுதும் பாக்கெட்டில் 2-3 டீஸ்புன் சர்க்கரையை மடித்து வைத்து இருப்பது தக்க சமயத்தில் உதவும்.

 • காலம் தாழ்த்தாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுதல்

 • டாக்டர் கூறியபடி தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்தல்.

 • எப்பொழுதும் தங்கள் கைவசம் ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதில் அவரின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண், குடும்ப டாக்டரின் பெயர், அவருடைய தொலைபேசி எண், நீரிழிவு நோய்க்கு எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரை மற்றும் வேறு ஏதாவது நோய்கள் இருந்தால் அதனுடைய விவரமும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

மக்களிடைய பொதுவான கருத்து என்னவென்றால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரம் குறைந்து விரைவிலேயே மரணம் அடைந்து விடுவார்கள் என்ற தவறான எண்ணம் உண்டு. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின்படி நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதால் அவரின் வாழ்க்கை தரம் நன்றாக இருப்பதாகவும், அவர்கள் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு உண்டு என்றும் தெரிய வருகிறது !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.