Published:Updated:

வாழு... வாழ விடு!

Representational Image

முகத்திறையிட்டு யாரோ கூட்டத்தில் ஒருவராய் வீசியெறியும் உங்கள் விமர்சனங்களையும் பதிவுகளையும் அவரவர் முகத்திற்கு நேரே ஒரு முறையேனும் கூற முடியுமெனில் அது நியாயாமாய் இருக்கும்.

வாழு... வாழ விடு!

முகத்திறையிட்டு யாரோ கூட்டத்தில் ஒருவராய் வீசியெறியும் உங்கள் விமர்சனங்களையும் பதிவுகளையும் அவரவர் முகத்திற்கு நேரே ஒரு முறையேனும் கூற முடியுமெனில் அது நியாயாமாய் இருக்கும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தேடித் திரிதலின் அர்த்தம் 'தேவை' என்று தேடித் தோற்ற ஒருவன் சொன்னான்..., மனதின் தேடலே மாற்றத்தின் வித்துக்கள். ஆர்ப்பரிக்கும் நேரமதில் அலைமோதும் மக்கள் திரள்கள், எண்ணிலடங்கா பொழுதுபோக்கு துறைகள் அதில் தன் விரல்களை பத்திக்க துடிக்கும் எத்தனையோ திரையிட்ட முகங்கள். Facebook, instagram, share chat, twitter... என பல செயலிகள் அதில் திறமைகளின் தேடல்களில் தொடங்கி பாராட்டு, அங்கீகாரம், மதிப்பு, அன்பு என பலவாறு தேடல்கள் விரிந்து கொண்டே செல்கிறது . நவ நாகரீக உலகில் கருத்துக்களை பதிவிட மட்டுமல்ல, சுதந்திரமாய் தன் கருத்துகளை பகிரவும் பொதுவெளி ஒன்றை உருவாகியுள்ளது இந்த செயலிகள்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் திறமை எனக்கென்று ஒரு அங்கீகாரம் எனக்கான மேடை, என் விசிறிகள் என்ற கர்வத்தையும் தருகிறது. தலைமுறைகள் பலவாய் அங்கீகாரமற்று தனக்குள் புதைக்கப்பட்ட திறமைகள் ஒவ்வொன்றையும் திரையிட்டு உலகுக்கு காட்டும் சாளரமாய் விளங்குகிறது இச்செயலிகள். எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நபர் முதல் எதிர்வீட்டில் இருக்கும் முகமறியா நண்பர் வரை அத்தனை பேரும் தனக்கென்று தன் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொதுவெளியில், கருத்துகளை பதிவிடுகையிலும் அக்கருத்துகளை ஆராய்ந்து விமர்சிப்பதிலும் சற்றே கவனம் தேவை. உலகமே உங்கள் மேடை எனில் அதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை பேரும் அதன் அங்கத்தினர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முகத்திறையிட்டு யாரோ கூட்டத்தில் ஒருவராய் வீசியெறியும் உங்கள் விமர்சனங்களையும் பதிவுகளையும் அவரவர் முகத்திற்கு நேரே ஒரு முறையேனும் கூற முடியுமெனில் அது நியாயாமாய் இருக்கும். அரங்கம் நிறைந்த அவையில் நிற்கும் ஒருவனின் சொல்லும் செயலும் தான் அவனின் திறமையையும் தன்மையையும் தீர்மானிக்கும். பொழுதுபோக்கு செயலிகள் மற்றும் தளங்கள் என நாம் நினைக்கும் ஒவ்வொன்றும் ஒரு அரங்கம் நிறைந்த அவை, அதில் நிற்கும் ஒவ்வொருவரும் நாம் என்ற நினைவோடு பதிவுகளை பதிவிடுவதும் விமர்சனப் பதிவிடுவதும் இருக்குமாயின் இந்த தொழில்நுட்ப செயலிகளைக் கண்டு எங்கோ ஒரு மூலையில் தன் திறமைகளை வெளிப்படுத்த வழி இருந்தும் விமர்சனங்களின் வீண் அச்சத்தால் அதை தன்னுள் புதைக்கும் நிலை எவர்க்கும் வராது. சமீபத்தில் "Digital eve teasing" என்றொரு வார்த்தை வெகுவாக பேசப்பட்டு வருவது வேதனைக்குரியது.

Representational Image
Representational Image

வாய்ப்புகளை எட்டத் துடித்து எண்ணற்ற கனவுகளோடு வரும் பலரை வாழக்கையை வெறுக்கும் நிலைக்குத் தள்ளுதல் பாவத்தின் உச்சம். பிறர்க்கு உதவாவிடினும் அவர்களை உந்தித் தள்ளாதீர்கள், அவர்களும் வாழ்ந்துவிட்டு போகட்டும்.... வாழ்க்கை எல்லாரும் வாழ்வதற்குத் தானே...

- S. Ishwarya Chandran

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism