Published:Updated:

தீபாவளி வரிசை நினைவுகள்! | My Vikatan

Representational Image

எஸ்எம் எஸ்ஸில் நான்கு நாட்களாக ; இந்தியா போஸ்ட்; பெயரில் செய்தி வந்திருந்தது. ஆர்டிகிள் நம்பர் என்று போட்டு ; டெலிவரி செய்யப்படவில்லை, கதவு பூட்டப்பட்டிருக்கிறது; என்றும் போடப்பட்டிருந்தது.

தீபாவளி வரிசை நினைவுகள்! | My Vikatan

எஸ்எம் எஸ்ஸில் நான்கு நாட்களாக ; இந்தியா போஸ்ட்; பெயரில் செய்தி வந்திருந்தது. ஆர்டிகிள் நம்பர் என்று போட்டு ; டெலிவரி செய்யப்படவில்லை, கதவு பூட்டப்பட்டிருக்கிறது; என்றும் போடப்பட்டிருந்தது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பாட்டியின் செல் போன் அடிக்க, அதை அவரிடம் கொடுக்க எடுத்தேன். கூப்பிட்டது அவரது ஆன்மீக வகுப்புத்தோழி. பாட்டி அப்போது பூஜை அறையிலிருந்தார்.

நான் போனில், "பாட்டி! வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா? பூஜைநேரம் இன்னும் முடியவில்லை" என்றேன். "சரி பூரணி! சில நாட்களாக பார்க்க முடியவில்லையே என்றுதான் கூப்பிட்டேன்" என்றார் . நான், “திருப்பதியில் புரட்டாசி மாதம் குடும்பத்துடன் ஒரு நேர்த்திக்கடன் முடித்துவிட்டு, அப்படியே பக்கத்து ஊர்களுக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தோம்" என்றேன்.

“சரிம்மா பூரணி! பிரசாதம் பாட்டியிடம் வாங்கிக் கொள்கிறேன். வேறு விஷயமில்லை. உனக்கு காலேஜுக்கு நேரமாகி விடப் போகிறது.” என்றார். இதுபோன்று நிறைய ஆன்மீக அன்பர்கள் தொடர்பு பாட்டிக்கு உண்டு.

வாட்ஸ் ஆப்பை அவர் காண்பிக்கும்போது ஒரே சாமி மயம்! 'போ, பாட்டி! நான் உன்னைப்போல் ஆனபின் தெரிந்துகொள்கிறேன்" என்பேன். எஸ்எம் எஸ்ஸில் நான்கு நாட்களாக ; இந்தியா போஸ்ட்; பெயரில் செய்தி வந்திருந்தது. ஆர்டிகிள் நம்பர் என்று போட்டு ; டெலிவரி செய்யப்படவில்லை, கதவு பூட்டப்பட்டிருக்கிறது; என்றும் போடப்பட்டிருந்தது.

Representational Image
Representational Image

பூஜை முடிந்து வெளியே வந்த பாட்டியிடம், செல்லைக் காண்பித்து, "என்ன ஆர்டர் பண்ணியிருக்கிறீர்கள்? நான்கு நாட்களாக தபால்காரர் பார்த்துவிட்டு வீட்டுக்கதவு பூட்டியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்" என்று கேட்க, "நான் தனியாக என்னடி ஆர்டர் செய்யப்போகிறேன்?" என்றார். குளித்துவிட்டுவந்த அப்பாவிடம் செல்லைக்காண்பிக்க, சற்று நேரம் யோசித்துவிட்டு, "இது மாமா அம்மாவுக்கு அனுப்பும் தீபாவளி வரிசைப்பணமாக இருக்கும். ஆகா! நான்கு நாட்களாகிவிட்டதே" என்றார். பின்னர் அவர் போனில், யாரிடமோ பேசிவிட்டு, "மூன்று நாட்களுக்குப்பிறகு, திருப்பி அனுப்பிவிடுவார்களாம்" என்றார்.

களைப்பாக இருந்ததால், கல்லூரிக்கு மட்டம். அப்பாவும் லீவு. அம்மா சமையலறையில்.என் ரூமிற்கு சென்று சற்று ஓய்வு. கண்ணயர்ந்து எழும்போது மணி பன்னிரண்டு.வெளியே வந்து பார்த்தால், பாட்டி எதையோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

"என்ன பாட்டி? தூக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுங்களேன்" என்றேன். "இல்லையடி. ஏதோ பழைய நினைவுகள்" என்றார். "ஓஹோ! பணம் திருப்பி அனுப்பிவிட்டார்களே என்ற கவலையா? அது என்ன, பெரிய தொகையா? நான் வேண்டுமானால் கொடுத்துவிடுகிறேன்" என்றேன்.

" அடி அசடு! அனுப்புகிற தொகையா, முக்கியம்? ஆரம்பத்தில், தீபாவளி, பொங்கலுக்கு அப்பா வருவார். அவர் இறந்தபிறகு அண்ணன். இப்போது அண்ணனுக்கு வயது எழுபது. பெரிய அக்காவுக்கு அறுபது ஏழு: சின்ன அக்காவுக்கு அறுபது ஐந்து. வரிசைப் பொருட்களுடன் அவரவர்க்குப் பிடித்தவைகளை பார்த்து பார்த்து வாங்கி வருவார்.

Representational Image
Representational Image

நாங்களும் எங்கள் வீடுகளில் விருந்து உபசாரம் என்று தடபுடலாக ஏற்பாடு செய்து வரவேற்போம். முடியாமல் போனபிறகு, மணி ஆர்டர் அனுப்புவார். அது பாசப்பிணைப்பின் அடையாளம். அதை பண மதிப்பை வைத்து அளவிட முடியாது. எனக்கு என்ன கவலையென்றால், ‘பணம் திரும்பி விட்டதே எனக்கு ஏதாவது கோபமோ’ என்று அண்ணன் கவலைப்படுவாரே என்றுதான்!" என்றார்.

நான், "தாத்தா பேரக்குழந்தைகள் யாரிடமாவது சொல்லி, மணி ஆர்டருக்கு பதில், கூகிள் பே, எம் பே என்று எதிலாவது அனுப்பலாமல்லவா?" என்றேன்.

"வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளச் சொல்லியாகி விட்டது. தபாலாபீஸ் தூரம்தான். இருந்தாலும் அவரே போய் அனுப்புவதில் அவருக்கு ஒரு திருப்தி" என்றார்.

" சரி பாட்டி! நாம் திருப்பதி சென்று வந்த விஷயத்தைச்சொல்லி, நாங்கள் இல்லாததால் பணம் திருப்பி அனுப்பட்டு விட்டது என்பதை நான் சொல்லிவிடுகிறேன்" அதற்குள் வெளியில் சென்றிருந்த அப்பா திரும்பிவர, "அம்மா! தபாலாபீஸ் போனேன். உன்னை மதியம் மூன்றரைக்குள் நேரில் வரச்சொகிறார்கள். நாம் போய்விட்டு வருவோம்" என்றார். "பணம் திருப்பி அனுப்பப்படவில்லை" என்று கேட்டுவிட்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தார் பாட்டி..

அம்மா டீ போட்டுக்கொண்டு வந்து, "போய் குளிச்சுட்டு வாடி. சாப்பிட்டு மற்ற வேலைகளை கவனிக்கலாம்" என்றாள்.

"இரும்மா. என்ன அவசரம்? எனக்கு பசியில்லை" என்று டீவி பார்க்க உட்கார்ந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணி சத்தம். அப்பா போய் பார்த்துவிட்டு, " உள்ளே வாங்க, சார்!" என்று அழைத்தார்.

வந்தவர் தபால்காரர்.

போஸ்ட் பாக்ஸ்
போஸ்ட் பாக்ஸ்
vikatan

"போஸ்ட்மாஸ்டர் எனக்கு போன் செய்து, "இந்த பீட்டை இன்னும் முடிக்கவில்லையென்றால், மணி ஆர்டர் பணத்தை வயதானவர்கள் என்பதால், அலையவிடவேண்டாம், அப்படியே பட்டுவாடா செய்துவிட்டு வாருங்கள் என்றார்” என்று சொல்ல, அப்பா ," எங்கே திருப்பி அனுப்பட்டுவிடுமோ என்றுதான் நான் விசாரிக்க வந்தேன்”, தபால்காரர், "அவ்வளவு அவசரப்பட்டு திருப்பி அனுப்ப மாட்டோம், சார், விழாக்காலங்களில் அனுப்பப்படும் பணம், மனித மனத்தோடு தொடர்புள்ளது. தினமும் எத்தனை பேர்களை சந்திக்கிறோம்." என்று பாட்டியிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு, பணத்தை அவரிடம் கொடுத்து, விடைபெற்றுச்சென்றார். நான், "அம்மா! நீயும் வந்து பாரேன் பாட்டியின் முகத்தை! சூரியப்பிராகாசம் என்றால் இதுதானா?" அதற்குள் பாட்டி வெட்கப்படுவதுபோல் தோன்றியது. "அப்பா, அம்மா பாருங்கள் பாட்டியின் வெட்கத்தை!" என்றதும், கொல்லென்ற சிரிப்பலையில், வீடே அதிர்ந்தது.

-தர்மபுத்ரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.