Published:Updated:

மீண்டும் ஒளிப்பெற்ற இதய அறைகள்! - மயக்கும் மருத்துவன் 3

Representational Image
Representational Image

அந்த எகிப்திய இதய நோய் நிபுணர், தமனி (Femoral Artery) வழி நுழைந்து இதய தமனிகளை அடைந்த சில நிமிடங்களில், ஒரு நொடியும் தாமதிக்காமல் செயற்கை சுவாச கருவியில் இணைந்து CPR தொடங்கியாயிற்று...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

34 வயதே நிரம்பிய அந்த இளைஞன் இதயம், கண்முன்னே பலி கொடுக்கப்பட்ட சேவல் போல துடிதுடித்து (ventricular fibrillations) அடங்கியது.

யார்?..எது குலம்?.. எந்த ஊர்?.. கொரோனா பாசிட்டிவ்வா?... எதுவும் கேட்க நேரமில்லை.

சட்டை கிழித்து நெஞ்சில் பேட் (pad) வைத்து 200J ஷாக்... இதய துடிப்பு சீரானது.

கொரோனாவும், உட்பூசல் அரசியலும் ( internal politics) செய்த சதியால் மயக்க மருத்துவத்தில் சற்றே தொய்வு ( மனதிலும்) ஏற்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனக்கு சட்டென 'ஹரி' பட பரபரப்பு தொற்றிக் கொண்டது. இண்டர்வென்ஷனல் கார்டியோலாஜிஸ்ட் உட்பட அனைவரும் அந்த நோயாளியை தள்ளிக் கொண்டு காத்லேப்-ஐ நோக்கி விரைந்தது பிரியனின் (சிங்கம் 2) கேமராவிலும் அடங்காத வேகம்.

Representational Image
Representational Image

இதயம் நின்று போனால் உடலின் மற்ற பாகங்களுக்கு (மூளை உட்பட) இரத்தம் செல்வது நின்று போகும். அந்த செல்கள் ஆக்சிஜன் இல்லாமல் அதிக நிமிடங்கள் உயிர்ப்புடன் இருக்க முடியாது. முக்கியமாக மூளை, 180 நொடிகளுக்கு மேல் இரத்தம் பாயவில்லை எனில் மூளை செயலிழப்பு தொடங்கிவிடும்.

அந்த எகிப்திய இதய நோய் நிபுணர், தமனி (Femoral Artery) வழி நுழைந்து இதய தமனிகளை அடைந்த சில நிமிடங்களில், ஒரு நொடியும் தாமதிக்காமல் செயற்கை சுவாச கருவியில் இணைந்து CPR தொடங்கியாயிற்று. நின்று போன இதயத்தை fluoroscopy யில் பார்த்து கொண்டே நெஞ்சின் எலும்பில் கை வைத்து விலா எலும்புகள் உடையா வண்ணம் 5 செமீ அழுத்தும் போது, என் கையில் நசுங்கிய இதயம் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தை மற்ற பகுதிகளுக்கு பம்ப் செய்வதை உணர முடிந்தது.

*விதவை தமனி* என அழைக்கப்படும் LAD முற்றிலும் அடைப்பட்டு கிடந்ததை உடைத்து, மீண்டும் மூடாமல் இருக்க கம்பிவலை (stent) வைத்த போது மடை திறந்து நாற்றங்காலில் நீர் பாய்வதை கண்ட பேரானந்தம்.

தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாச கருவியில் கண்மூடி கிடந்த நோயாளி, கிட்ட தட்ட 20 நிமிடங்கள் இதயம் செயலிழப்பு! நாம் செய்த CPR ? மூளைக்கு இரத்தம் பாய்ச்சி இருக்குமா? கண் விழித்தால் மூளை பழையபடி செயல்படுமா? விடையில்லா கேள்விகளுடன், அவரது நோய் பதிவேட்டை (case file) திருப்பிய போது அழகான தமிழ் பெயர்..

கார்ப்பரேட்டரில் அடைப்பு இருந்தால் திணறும் மோட்டார் வாகனம் போல மீண்டும் பாய்ந்த இரத்தத்துடன் திணறியது அவரது இதய அறைகள் (Reperfusion Arrhythmias) அமியோடரனுக்கும் (Amiodarone) அடங்க மறுத்து சண்டித்தனம் செய்த போது, வேறு ஒன்றும் செய்ய வழியில்லாமல் கை பிசைந்து இறை நோக்கி.....

Representational Image
Representational Image

வேறோன்றும் சிந்திக்க முடியாத அந்த 4 - 5 மணி நேரங்களில் ஒரு கல்விமான் திருக்குறள் கேட்டார். ' ஓ... அது வெண்பா இலக்கணத்தில் வருமா ' என ஆச்சரியித்தார். நாள், மலர், காசு, பிறப்பு சொன்னேன்.

சர்வீஸ் போய் வந்த கார் போல சீராயிற்று அவர் இதயம். கண் விழித்தார்.

என்ன இளமாறன் (பெயர் மாற்றம்) எப்படி இருக்கீங்க? தமிழ் கேட்டு கண் விரிந்தது. என்னிடம் பேச விழைந்தது..

இருங்க உங்க தொண்டையில் இருக்குற ட்யூப் எடுத்துட்றேன். அப்பறம் பேசலாம்.

தமிழ் தலையாட்டியது.

ட்யூப் எடுத்ததும் தொண்டை செருமி......

எந்த ஊரு சார் நீங்க?..

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில?

மதுக்கூர் பக்கத்தில விக்ரமம்

மேல நத்தத்தில் தான் சார் என் தங்கச்சிய கட்டிக் கொடுத்துருக்கோம். எனக்கு மயிலாடுதுறை.

தஞ்சை மண் மணம் மாறாத அந்த இளைஞனிடம், நின்று போயிருந்த உன் இதயத்தை 20 நிமிடம் நான் தான் ஏறி மிதித்தேன் (CPR) என்று சொல்லவே இல்லை...

மயக்கும் மருத்துவன்,

-மரு.அருண்குமார் முத்து சுப்ரமணியன்

MD Anaesthesiology , UAE

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு