Published:Updated:

"கடைசி நம்பிக்கை" இளைஞர்களுக்கு அரசு கைகொடுக்குமா? | My Vikatan

Representational Image

இதெல்லாம் பரிதாபம் உண்டாக்கி ஏமாற்றும் வேலை என்று அலட்சியமாக நினைப்பவர்களுக்கு ``ஒருநாள் கூத்து'' படத்தில் `அட்டகத்தி' தினேஷ் பேசும் வசனத்தை சமர்ப்பிக்கிறேன்.

"கடைசி நம்பிக்கை" இளைஞர்களுக்கு அரசு கைகொடுக்குமா? | My Vikatan

இதெல்லாம் பரிதாபம் உண்டாக்கி ஏமாற்றும் வேலை என்று அலட்சியமாக நினைப்பவர்களுக்கு ``ஒருநாள் கூத்து'' படத்தில் `அட்டகத்தி' தினேஷ் பேசும் வசனத்தை சமர்ப்பிக்கிறேன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"சம தரையிலே நடக்கிறவங்களுக்கும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்து வரவங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு" - சமீபத்தில் மைவிகடனில் வெளியான, காந்திமதி உலகநாதன் என்பவர் எழுதிய "வானத்தை போல" சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் வரி இது.

தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் பட்டாசு தொழிற்சாலை போன்ற இடங்களில் ஏற்படும் எதிர்பாராத விபத்து போன்ற சம்பவங்களினால் ஏற்படும் உயிரிழப்புகள், அதிகார மீறல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு அரசு நிதிநிவாரணம் வழங்கி வருகிறது. இதுபோன்று எதிர்பாராத விபத்துக்கள், பொதுத்தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை போன்றவற்றால் உறவினர்களை இழந்து வீட்டின் "கடைசி நம்பிக்கை"யாக, படிக்காத அம்மா அப்பாவுக்குப் பிறந்து வளர்ந்து பட்டம் வாங்கிய இளைஞர்களுக்கு அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பத்தாம் வகுப்பு தகுதி அரசுப்பணி வழங்க வேண்டும் என்பதற்காக தான் மேலே அந்த சிறுகதையின் வரியை குறிப்பிட்டுள்ளேன்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம், "சம தரையிலே நடக்கிறவங்களுக்கும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்து வரவங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு"


"கடைசி நம்பிக்கை" என்பதன் அர்த்தம் என்ன?

1. குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாராத உயிரிழப்புகளால் உறவினரை பறிகொடுத்து அம்மா அப்பாவுக்கு மிச்சமிருக்கும் அந்த வீட்டின் ஒரேயொரு பட்டதாரி இளைஞர் மட்டுமே ஆறுதல்,

2. அம்மாவோ அல்லது அப்பாவோ இருவரில் ஒருவர் மட்டுமே உயிரோடு உள்ளார் என்ற நிலையில் அவருக்கு அந்த வீட்டின் பட்டதாரி இளைஞர் மட்டுமே ஒரே ஆறுதல், என்ற சூழலில் இருக்கும் இளைஞர்கள் தான் இங்கு "கடைசி நம்பிக்கை" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசு ஒரு சில அரசுப் பணிகளை பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் (குறிப்பிட்ட மதிப்பெண் வரையறை வைத்து) நிரந்தரமாக வழங்குகிறது. அதுபோல் குறிப்பிட்ட மதிப்பெண் வரையறை வைத்து இந்த "கடைசி நம்பிக்கை" இளைஞர்களுக்கு நிரந்தர அரசுப்பணி வழங்க வேண்டும். உதாரணமாக, 10ஆம் வகுப்பில் 90% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற "கடைசி நம்பிக்கை" இளைஞர்களுக்கு அரசுப்பணி என்று சொல்லலாம்.


"ஏன் இவங்களால படிச்சு வேல வாங்க முடியாதா?" என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால்,

"எதிர்பாராத உயிரிழப்பு" ஏற்பட்ட வீடுகளில் உள்ள இளைஞர் இளைஞிகளால் உட்கார்ந்து படிக்கவெல்லாம் முடியாது... (அப்படியே படித்தாலும் மன உளைச்சல் காரணமாக அது எதுவும் அவர்கள் மனதில் பதியாது...) மிச்சமிருக்கிற உயிர்களை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று அங்குமிங்கும் ஓடிஓடி அலைந்து திரிவதே அவர்களது வாழ்க்கையாக இருக்கும்.

Representational Image
Representational Image

அதிலும் குறிப்பாக, மிச்சமிருக்கும் உறவுகளுக்கு ஏதேனும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டால் மருத்துவமனைக்கும் வட்டி கடைக்கும் அவர்கள் அலைய வேண்டியதாக இருக்கும். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்டு எந்தவொரு கூலிவேலைக்கும் போக முடியாமல், "நான்லாம் பொறந்ததே வீணுங்க... பொம்பளையா பொறந்துட்டேன்... நரக வேதனை அனுபவிக்குறேன்..." என்று அழுது புலம்பவர்களாக தான் இருக்கிறார்கள். எதிர்பாராத உயிரிழப்பு அவர்களை அந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளது.


ஆக, வீட்டின் "கடைசி நம்பிக்கை" இளைஞர்களுக்கு சிறிது சலுகை கொடுத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு நிரந்தர அரசுப்பணி வழங்க வேண்டும்.

இதெல்லாம் பரிதாபம் உண்டாக்கி ஏமாற்றும் வேலை என்று அலட்சியமாக நினைப்பவர்களுக்கு ஒருநாள் கூத்து படத்தில் அட்டகத்தி தினேஷ் பேசும் வசனத்தை சமர்ப்பிக்கிறேன். அந்த வசனம்...


"கஷ்டப்படுறவன் பேசுன்னாலும் உங்களுக்குப் புரியாது...! பேசாட்டியும் உங்களுக்குப் புரியாது...!"

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.