Published:Updated:

தரமான கல்வி வழங்கும் பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி? | My Vikatan

Representational Image

அந்தப்பள்ளியில் அந்தச்சிறு குழந்தைக்கு நேர்காணல் நடத்தினார்கள். அதற்குப்பிறகு அந்தப்பள்ளியின் நிறுவனரிடம் நான் 'நீங்கள் பள்ளி தொடங்கியதின் நோக்கம் என்ன? நீங்கள் உங்கள் பள்ளியில் வழங்கும் கல்வியின் குறிக்கோள் என்ன?' என்று கேட்டேன்.

தரமான கல்வி வழங்கும் பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி? | My Vikatan

அந்தப்பள்ளியில் அந்தச்சிறு குழந்தைக்கு நேர்காணல் நடத்தினார்கள். அதற்குப்பிறகு அந்தப்பள்ளியின் நிறுவனரிடம் நான் 'நீங்கள் பள்ளி தொடங்கியதின் நோக்கம் என்ன? நீங்கள் உங்கள் பள்ளியில் வழங்கும் கல்வியின் குறிக்கோள் என்ன?' என்று கேட்டேன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெற்றோருடன் அவர்களின் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக அவர்களுடன் சென்றிருந்தேன். அந்தப்பள்ளியில் அந்தச்சிறு குழந்தைக்கு நேர்காணல் நடத்தினார்கள். அதற்குப்பிறகு அந்தப்பள்ளியின் நிறுவனரிடம் நான் 'நீங்கள் பள்ளி தொடங்கியதின் நோக்கம் என்ன? நீங்கள் உங்கள் பள்ளியில் வழங்கும் கல்வியின் குறிக்கோள் என்ன?' என்று கேட்டேன்.

இந்தக்கேள்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தப்பள்ளியின் முதல்வர் கேள்வியைப்புரிந்து கொண்டு அதற்கு ஒரு பதிலைக்கூறினார். ஆனாலும் எனக்கு அந்தப்பள்ளியை அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே துவங்கியுள்ளார்கள் என்று தெளிவாகப் புரிந்தது. கல்வியைப்பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாத இவர்களால் எப்படி ஒரு குழந்தைக்கு தரமான கல்வியை வழங்க முடியும்?

Representational Image
Representational Image

தரமான கல்வி என்றால் என்ன? தரமான கல்வி வழங்கும் பள்ளியை நாம் எப்படித்தேர்ந்தெடுப்பது? இவை இரண்டும் எந்த ஒரு பெற்றோருக்கும் மிக முக்கியமான கேள்விகள். இது குறித்து நாம் சிறிது விவாதிக்கலாம்.


தரமான கல்வி என்றால் என்ன?

தரத்தின் பெரும்பாலான வரையறைகள் 'வாடிக்கையாளர்' என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளன. கல்வியில் தரம் என்ற கருத்தை நாம் புரிந்து கொள்ள விரும்பும்போது, ​​​​கல்வித் துறையில் 'வாடிக்கையாளர்' என்ற கருத்தைப் பற்றிய பொதுவான புரிதல் இல்லாததால் அது கொஞ்சம் சிக்கலாக மாறும். பள்ளிக் கல்வியின் சூழலில், 'வாடிக்கையாளர்' என்ற சொல்லுக்கு வெவ்வேறு வாதங்கள் உள்ளன. மாணவர்கள் பள்ளியின் வாடிக்கையாளர்கள் என்று வாதிடலாம். பெற்றோர், சமூகம், அரசு அல்லது பெரிய சமுதாயத்திற்கு ஆதரவாகவும் வாதங்கள் உள்ளன. இது மிகவும் சுவாரஸ்யமான விவாதம். தர மேம்பாட்டிற்கான எந்தவொரு நிலையான கட்டமைப்பையும் பயன்படுத்தி பள்ளிக் கல்வி மற்றும் பள்ளியின் மேம்பாட்டுத் தேவைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் எவரும், பள்ளிக் கல்வியின் சூழலில் தரம் தொடர்பான இந்த தெளிவின்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தரமான கல்வி வழங்கும் பள்ளியை நாம் எப்படித்தேர்ந்தெடுப்பது?

தரமான கல்வியை வழங்கும் பள்ளியை தேர்ந்தெடுக்க பல காரணிகள் இருந்தாலும் ஒரு சில முக்கியமான காரணிகளை மட்டும் நான் இங்கே பட்டியலிடுகிறேன் –

  1. நீங்கள் உங்கள் குழந்தைக்கு தனியார் பள்ளியை தேர்ந்தெடுக்க விரும்பினால், ஒரு மதத்தையோ / சமூகத்தையோ சார்ந்த கல்வி நிறுவனத்தை விட, ஒரு தொழில் நிறுவனமோ / தொழிலதிபரோ தொடங்கிய பள்ளியை விட, ஒரு கல்வியாளர் தொடங்கிய பள்ளியே பெரும்பாலும் சிறந்த தேர்வாக அமையும். ஏனெனில் அத்தகையவர்களின் கல்வி நோக்கங்கள் பரந்த அடிப்படையிலானதாக இருக்கும். இதை நீங்கள் வெகு எளிதாக உணர முடியும்.

  2. ஒரு பள்ளியின் முதன்மை இலக்குகளில் ஒன்று குழந்தைகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாணவர்களின் சாதனை மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் இந்த முதன்மை இலக்கை ஒரு பள்ளி எந்த அளவிற்கு அடைகிறது என்பதைப் பொறுத்து பள்ளி செயல்திறனை நாம் அறிந்து கொள்ளலாம்.

  3. ஒரு பள்ளியை நடத்தும் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிவதன் மூலம் நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். ஒரே பள்ளியில் பல ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணி புரிந்தால் நிச்சயம் அந்த பள்ளியை தேர்ந்தெடுக்க அது ஒரு காரணமாக அமையலாம்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

4. நாம் தேர்ந்தெடுக்கும் பள்ளியின் ‘மாணவர் - ஆசிரியர் விகிதம்’ 35 முதல் 40க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதை அந்தப்பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் மற்றும் எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள் என்ற விவரங்களை சேகரித்தால் எளிதாக நாம் கணக்கிடலாம்.

  1. ஒரு பள்ளியில் வகுப்பறைக்குள் மற்றும் வெளியே ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே என்ன மாதிரியான உரையாடல் நடக்கிறது என்பது ஒரு முக்கியமான அம்சம். மாணவர்கள் ஆசிரியர்களை எளிதாக அணுக முடிகிறதா மற்றும் கேள்விகளை கேட்க முடிகிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை நாம் அந்தப்பள்ளியில் ஏற்கனவே படிக்கும் மாணவர்களை அணுகி பேசுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். கல்வியின் தரத்தை நிர்ணயிப்பதில் பள்ளியின் கலாச்சாரம் ஒரு முக்கிய காரணியாகும்.

  1. இவை எல்லாவற்றையும் விட ஒரு பள்ளியில் எல்லா சமூகத்தையும் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்க வேண்டும். ஒரே வகையான சமூகம் மற்றும் ஒரே வகையான பொருளாதாரப் பின்னணி கொண்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி அவ்வளவு சிறப்பானதல்ல. ஆசிரியர்களிடமிருந்து தான் மாணவர்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் கருதுகிறார்கள். இது தவறான புரிதல். ஆசிரியர்களிடம் தெரிந்து கொண்டவற்றை சக மாணவர்களிடம் விவாதிக்கும் போது தான் ஒரு குழந்தைக்கு அறிவு விரிவடைகிறது. ஒரே வகையான சமூகம் மற்றும் பொருளாதாரப் பின்னணி கொண்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பலதரப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.

ஒரு சிறிய பொருளை வாங்குவதற்குக்கூட நாம் நேரம் செலவிடத்தயாராக இருக்கிறோம். ஆனால் கல்வி வாழ்க்கைக்கு ஒரு அடிப்படை மற்றும் நமது குழந்தையின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் திறன் கொண்டது. நமது குழந்தைக்கு ஒரு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கு நாம் உழைப்பு மற்றும் நேரத்தை அர்ப்பணிக்க தயாராக வேண்டும். அதற்கு இந்தக்கட்டுரை உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.