Published:Updated:

கல்வி ஒரு மனித மூலதனத்தின் குறியீடா? | My Vikatan

Representational Image

தனிப்பட்ட அளவில், ஒருவர் கல்வியில் பணத்தையும் முயற்சியையும் முதலீடு செய்து அறிவு மற்றும் திறன்களைப் பெறுகிறார். பெற்ற திறன்களையும் அறிவையும் தனிநபரிடமிருந்து பிரிக்க முடியாது என்ற பொருளில் மூலதனம் தனிமனிதனில் பொதிந்துள்ளது.

கல்வி ஒரு மனித மூலதனத்தின் குறியீடா? | My Vikatan

தனிப்பட்ட அளவில், ஒருவர் கல்வியில் பணத்தையும் முயற்சியையும் முதலீடு செய்து அறிவு மற்றும் திறன்களைப் பெறுகிறார். பெற்ற திறன்களையும் அறிவையும் தனிநபரிடமிருந்து பிரிக்க முடியாது என்ற பொருளில் மூலதனம் தனிமனிதனில் பொதிந்துள்ளது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நான் சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, ​​பல மாணவர்களிடம் அவர்கள் ஏன் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கேட்டேன். அவர்களில் பெரும்பாலோர், தாங்கள் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை தேட வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக்கு வந்தோம் என்று பதிலளித்தனர். அவர்கள் மனதில், படிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தெளிவான தொடர்பு இருந்தது. அனேகமாக இந்தத் தெளிவை அவர்கள் பெற்றோரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் பெற்றிருக்கலாம். மனித மூலதனக் கோட்பாடு கல்வியில் முதலீடு செய்வதற்கும் அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த நன்மைகள் தனிப்பட்ட நபருக்கும் மற்றும் சமூக அளவிலும் உள்ளன.

இருப்பினும், மனித மூலதன அணுகுமுறையின் பல்வேறு அனுமானங்கள் மற்றும் கல்வியின் குறிக்கோள் பற்றிய கல்வியாளர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், மூலதன அணுகுமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் சிலவற்றைப் பற்றி நாம் விவாதிப்போம்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனித மூலதன அணுகுமுறை

இந்த அணுகுமுறையின் படி, மனித மூலதனம் என்பது கற்றலின் விளைவாகும், இது ஒரு தனிநபரில் பொதிந்துள்ளது மற்றும் தனிநபரின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வடிவத்தில் வெளிப்படுகிறது.

தனிப்பட்ட அளவில், ஒருவர் கல்வியில் பணத்தையும் முயற்சியையும் முதலீடு செய்து அறிவு மற்றும் திறன்களைப் பெறுகிறார். பெற்ற திறன்களையும் அறிவையும் தனிநபரிடமிருந்து பிரிக்க முடியாது என்ற பொருளில் மூலதனம் தனிமனிதனில் பொதிந்துள்ளது. பிற்காலத்தில், அந்த நபருக்கு பொருளாதார வருவாயைக் கொடுக்கும் சில வேலைகளைச் செய்வதில் அவர் பெற்ற அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துகிறார்.

இந்தக் கோட்பாட்டை பின்வரும் விளக்கத்தின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனித மூலதன அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதை நாம் ஒவ்வொன்றாக விவாதிக்கலாம்.

கல்வித்தகுதி விண்ணதாரர்களை வடிகட்ட மற்றும் பிரிப்பதற்கான சாதனம்

கல்வித் தகுதி என்பது தனிநபர்களின் அறிவாற்றல் திறனை உண்மையில் மேம்படுத்துவதற்குப் பதிலாக தொழிலாளர்களைப் பிரிப்பதற்கான ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, 1980 களில், வங்கி எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இப்போது அதே பதவிக்கு விண்ணப்பிக்க பட்டதாரியாக இருக்க வேண்டும். இங்கே, வேலைப் பொறுப்புகளில் கணினிமயமாக்கலைத் தவிர வேறு அதிக வித்தியாசம் இல்லை என்றாலும், விண்ணப்பதாரர்களை வடிகட்ட ஒரு முறையாக உயர் தகுதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றவர்களை விட அதிக அறிவாற்றல் திறன் கொண்டவர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

Representational Image
Representational Image

ஒருவரின் வருமானத்தை தீர்மானிப்பதில் குடும்பம் மற்றும் பிற சமூக-பொருளாதார காரணிகளுக்கும் பங்கு உண்டு

பெற்றோர்களின் வருமானத்திற்கும் அவர்களின் குழந்தைகளின் வருமானத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. ஏழைகளை விட வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியில் அதிக முதலீடு செய்கிறார்கள். இது செல்வந்தர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் இருக்கும் அபாயத்திற்கு இட்டுச் செல்கிறது, இதுவே சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் வாய்ப்புச் செலவு மற்றும் அவர்களின் வருமான நிலைகளைப் பொறுத்த வரையில், ஏழைப் பெற்றோர்கள் போதிய வருமானம் இல்லாத நிலையில் கூட தங்கள் குழந்தைகளின் கல்வியில் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சமூக தேர்வு அணுகுமுறை

ஒரு குறிப்பிட்ட துறையில் சமூக முதலீடு இருந்தால் மட்டுமே அந்தத்துறையில் தனிநபர் முதலீடு நடக்கும் என்று சமூக தேர்வு அணுகுமுறை அறிவுறுத்துகிறது. இன்று, அறிவியல் அல்லது சமூக அறிவியலில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்பைக் காணவில்லை. அதேசமயம் பொறியியல் பட்டதாரிகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சமூக முதலீடு அதிகமாக இருப்பதால் அதில் வேலை வாய்ப்புகளைப் பெற முடிகிறது. இரண்டு பொறியியல் பட்டதாரிகள் கல்வியில் ஒரே அளவு முதலீடு செய்து பட்டம் பெற்றிருந்தாலும் அதில் ஒருவர் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் மற்றொருவர் வேறொரு துறையிலும் வேலை பார்த்தால், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்ப்பவர் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார். இது அந்தத்துறையில் செய்யப்பட்ட முதலீட்டினால் தானே ஒழிய, அவரின் அறிவாற்றலால் என்று நாம் கூற முடியாது.

Representational Image
Representational Image

தரமற்ற கல்வி

மனித மூலதன அணுகுமுறை தரமற்ற கல்விக்கு வழிவகுக்கும், ஏனெனில் அது தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பின்னர் வேலைவாய்ப்பைத் தேடுவதில் கவனம் செலுத்துகிறது. பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் பதில்களை மனப்பாடம் செய்து எழுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இது ஊக்குவிக்கிறதே தவிர அறிவுத்திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

பாலின பாகுபாடு

ஒருவர் தன் பையன் அல்லது பெண்ணுக்கு கல்வியைத் தேர்ந்தெடுக்கும்போது இது பாலின பாகுபாட்டிற்கு வழிவகுக்கும். கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகள்களை விட மகன்களை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால், மகனின் கல்விக்காக முதலீடு செய்யப்பட்டால் கல்வி முதலீட்டின் நிதி வருமானம் அவர்களின் சொந்த குடும்பத்திற்குத் திரும்பும். ஆனால் பெண்கள் நம் கலாச்சாரத்தில் திருமணத்திற்குப்பிறகு வேறு வீட்டிற்கு சென்று விடுகிறபடியால் அவர்களின் வருமானம் பெற்றோருக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கின்றது

மனித மூலதன அணுகுமுறை மாணவர்களிடையே போட்டியை ஊக்குவிக்கிறது, ஏனெனில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான வாய்ப்புகளுக்காக போட்டியிடுகின்றனர். வருவாயைப் பெருக்குவதற்கான கல்வியை முதன்மையான கருவியாக மாணவர்கள் கருதினால், அவர்கள் தங்களுக்குள் ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே, குறைந்த வாய்ப்புகள் இருப்பதால் போட்டியிலிருந்து மற்றவரை ஒதுக்கி வைக்க இது ஊக்குவிக்கிறது. எனவே, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து பயில, ஒத்துழைக்க எந்த ஊக்கமும் இல்லை.

குடும்பங்களில் பதற்றம்

மனித மூலதன அணுகுமுறை கல்வியில் முதலீடு செய்பவர் நிதி வருவாயைப் பெறுகிறார் என்று கருதுகிறது, ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தையின் கல்வியில் முதலீடு செய்பவர் தந்தைதான். ஆனால் நன்மை / வருமானம் முதன்மையாக அந்த குழந்தைக்கு தான் இருக்கும். பெற்றோர்கள் தங்களின் முதன்மையான சம்பாத்தியத்தை தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் முதலீடு செய்கிறார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தங்கள் பிற்காலங்களில் நிதி உதவி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். எனது தனிப்பட்ட அனுபவத்தில், பெற்றோர்கள் முதுமை அடையும் போது இது குடும்பத்தில் நிறைய எதிர்பார்ப்புகளையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது.

கட்டுரையாளர் ஸ்ரீராம் குமார்
கட்டுரையாளர் ஸ்ரீராம் குமார்

மனித மூலதன அணுகுமுறையானது கல்வியின் பொருளாதார நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, ஆனால் கல்விக்கு உள்ளார்ந்த மதிப்பு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘கல்வியே ஒரு இலக்கு’ என்கின்றனர் கல்வியாளர்கள். கல்விக்கு பலவிதமான நோக்கங்கள் இருக்கின்றன. ஒரு நபரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி மிகவும் முக்கியமானது. மக்களின் பல்வேறு தேவைகள் மற்றும் சமூக காரணிகளின் அடிப்படையில் சமூகத்தில் கல்வி பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மனித மூலதனக் கோட்பாடு என்ற அளவில் மட்டும் நாம் கல்வியைபுரிந்துகொண்டால் அது சரியான மற்றும் முழுமையான புரிதலாக இருக்காது. இந்த தவறான புரிதலால் பொருளாதார நலன்களுக்காக மட்டுமே கல்வியைத் தொடரும் ஆபத்து இருப்பதால் மனித மூலதன அணுகுமுறையை பிரபலப்படுத்துவது சரியான தேர்வாக இருக்காது. ஒரு சமூகத்தில், பொருளாதார நலன்கள் மட்டுமில்லாமல் கல்வியின் அனைத்து நோக்கங்களையும் மேம்படுத்துவதே நமது கடமையாகும். ஆகவே கல்வி மனித முதலீட்டிற்கான குறியீடு என்று கூறுவதை விட கல்வி மனித வளர்ச்சிக்கான ஒரு குறியீடு என்ற முறையில் இதைப்புரிந்து கொள்வதே சரியான தேர்வாக இருக்கும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.