Published:Updated:

புற்றுநோயை முறியடிப்போம்! |முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வயிறு சார்ந்த புற்றுநோய்களும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் அதிகம் காணப்படுகிறது.

புற்றுநோயை முறியடிப்போம்! |முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வயிறு சார்ந்த புற்றுநோய்களும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் அதிகம் காணப்படுகிறது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

புற்று நோய் என்பது முதுமையில் தாக்கக்கூடிய முக்கிய நோய்களில் இது முதலாவதாகும். ஆரம்பநிலையிலேயே புற்று நோயை கண்டறியப்பட்டால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும் அல்லது தக்க சிகிச்சை மூலம் நீண்ட நாட்களுக்கு அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். வயதான காலத்தில் புற்று நோய் இருப்பதை தெரிந்தால் அது தனக்கு கிடைத்த மரண தண்டனை என்று எண்ண வேண்டியது இல்லை. ஏனெனில் முற்றிய நிலையில் உள்ள புற்று நோயைக் கூட தக்க சிகிச்சையின் மூலம் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.


புற்றுநோய் வரக் காரணங்கள்

  • நீண்ட ஆயுட் காலம் வாழ்வதினாலேயே புற்று நோய் வர வாய்ப்பு அதிகம் ஆகிறது.

  • புற்று நோயை உண்டாக்கும் காரணிகள் உதாரணம்: புகை, புகையிலை, மது, வெப்பக் கதிர்வீச்சு மற்றும் இராசாயன பொருட்கள் இவற்றுடன் நெடுநாட்கள் தொடர்பு கொள்வது

  • முதுமையில் ஏற்படும் திசுக்களின் மாற்றம்

  • மரபு நிலை, உதாரணம்: மார்பகம், பெருங்குடல்

Representational Image
Representational Image

முதுமையில் அதிகம் காணும் புற்றுநோய்கள்

கழுத்து மற்றும் தலையில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல், பிராஸ்டேட் மற்றும் இரத்தம் சார்ந்த புற்றுநோய்கள் 50 வயதிற்கு மேல் அதிகம் காணப்படும். ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வயிறு சார்ந்த புற்றுநோய்களும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் அதிகம் காணப்படுகிறது.

புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நோய் ஒருவித தொற்று நோய் அல்ல ஆகையால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இது பரவாது. புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் என்றுதான் நினைக்கிறார்கள். புற்றுநோய் வரிசையில் சுமார் 200 வகைகள் உண்டு. மேலும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வகை புற்றுநோய் மிக அதிக அளவில் இருக்கும். கல்லீரல் புற்றுநோய், ஆப்பிரிக்க தேசத்தில் அதிகம். இந்தியாவில் வாய்புற்றுநோயும், இங்கிலாந்தில் நுரையீரல் மற்றும் மார்புப் புற்றுநோய்யும் அதிகம். ஐப்பானில் வயிற்றுப்புற்றுநோய் அதிகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புற்று நோய் பலவிதத்தில் பாதிப்புபை ஏற்படுத்தும்

  • புற்று நோய் ஒரு உறுப்பில் தொடங்கி அருகில் உள்ள உறுப்புகளுக்கும் பரவுதல். உதாரணம்: கணையத்தில் தோன்றும் புற்று நோய் அருகில் உள்ள பித்தநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி காமாலையைத் தோற்றுவிக்கும்.

  • புற்று நோய் ஏற்பட்ட உறுப்புகளின் செயல் திறன் குறையும். உதாரணம்: சிறுநீரகத்தில் புற்று நோய் தோன்றினால் அதன் செயல் திறன் வெகுவாக குறையும்.

  • புற்று நோய் அருகில் உள்ள உறுப்புகளை அழுத்துவது. உதாரணம்: தைராய்டில் ஏற்படும் புற்று நோய் அதன் அருகில் உள்ள நரம்பை அழுத்துவதால் குரல் வளம் மாறுபடும்.

  • உடலில் உள்ள வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தின் மூலம் பரவுதல். உதாரணம்: பிராஸ்டேட்டில் தோன்றும் புற்று நோய் இரத்தத்தின் வழியாக சென்று முதுகு எலும்பை பாதிக்கும்.

  • புற்று நோய் ஒருவித திரவத்தின் (Hormones) மூலம் இரத்தததில் கலந்து உடலில் பலவித தொல்லைகளை உண்டாக்கலாம். உதாரணம்: கணையத்தில் ஏற்படும் புற்று நோயினால் கால்களில் இரத்தக் கட்டி தோன்றலாம்.

  பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

புற்று நோயின் மாறுபட்டுக் காணப்படும் அறிகுறிகள்

வயதாகும்பொழுது உடலில் ஏதாவது திடீரென்று மாற்றங்கள் ஏற்பட்டால் அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று எண்ணி உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். உதாரணம்:

  • திடீரென்று தொடர்ந்து வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

  • தொடர்ந்து ஆறாத புண்

  • பெண்களுக்கு பிறப்புறுப்புகளிலிருந்து ரத்தக்கசிவு அல்லது வெள்ளை படுதல்

  • மார்பகம் அல்லது உடலில் எந்த ஒரு பகுதியிலும் திடீரென்று கட்டி தோன்றுதல்

  • எந்த விதமான (திரவம் அல்லது கட்டியான) ஒரு உணவையும் விழுங்குவதற்கு சிரமப்படுதல்

  • உடலில் உள்ள மச்சம் அல்லது மரு ஆகியவற்றின் நிறம் மாறுதல் மற்றும் அளவு அதிகரித்தல்

  • தொடர்ந்து இருமல் அல்லது குரலில் மாற்றம் தோன்றுதல் (முக்கியமாக புகைப்பிடிப்பவர்களுக்கு)

  • தொடர்ந்து எடை குறைதல்

  • தொடர் காய்ச்சல்

  • தொடர்ந்து தாங்கமுடியாத வலி

புற்று நோயின் அறிகுறிகள்

  • ஆரம்பத்தில் புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் பொதுப்படையாகவும், அதிக தொல்லையில்லாததாகவும் இருக்கும், உதாரணம்: உடல் பலவீனம், இரவில் வேர்த்து கொட்டல், நாள்ப்பட்ட வலி.

  • சில நேரத்தில் முதுமையின் விளைவு என்று எண்ணக் கூட வாய்ப்பு உண்டு. உதாரணம்: பசி குறைதல், முதுகு வலி.

  • சில தொல்லைகள் புற்று நோயைத் தவிர வேறு சில காரணங்களாலும் வரலாம். உதாரணம்: காச நோயினாலும் பசி குறையலாம், எலும்பு தேய்மானத்தினாலும் முதுகு வலி வரலாம்.

  • சில விதமான தொல்லைகள் எல்லா புற்று நோய்களுக்கும் பொதுவானதாக காணப்படலாம். உதாரணம்: உடல் வலி, இரத்தப் போக்கு, கழுத்தில் தோன்றும் கட்டி, குமட்டல், உடல் இளைத்தல்.

  • சில புற்று நோய்களுக்கு குறிப்பிட்ட தொல்லைகள் தோன்றும். உதாரணம்: மார்பக புற்று நோய் உள்ளவர்களுக்கு மார்பில் கட்டிதோன்றும், உணவுக் குழல் புற்று நோய் உள்ளவர்களுக்கு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும், கணையப் புற்று நோய் உள்ளவர்களுக்கு மஞ்சள் காமாலை தோன்றும்.

உடலில் எந்த பாகத்தில் புற்று நோய் ஏற்பட்டதோ அதை பொறுத்துத் தான் அறிகுறிகள் இருக்கும். உதாரணம்: நுரையீரல் புற்று நோய் உள்ளவர்களுக்கு இருமல் சளியுடன் இரத்தம் கலந்து இருக்கும்.

நோயை கண்டறிந்தல்

முழு உடல் பரிசோதனை

ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக சந்தேகப்பட்டால் அவரின் உடலை முழு பரிசோதனை செய்வார்கள். எந்த இடத்தில் புற்றுநோய் (உதராணம்: மார்பு, கழுத்து, தோல், எலும்பு) எந்த நிலையில் உள்ளது, ஆரம்பநிலையிலா அல்லது முற்றிய நிலையிலா, வேறு எங்காவது பரவியுள்ளதா என்பதை அறிய சில பரிசேதனைகள் தேவைப்படும். இரத்தப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே மற்றும் சி.டி., எம்.ஆர்.ஐ., பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை செய்ய வேண்டியிருக்கும். புற்றுநோய் இருப்பது கண்டயறியப்பட்டால் அதை உறுதி செய்ய அக்கட்டிக்குள் சிறு ஊசியை செலுத்தி அதன் மூலம் கட்டியிலிருந்து சிறிய திசுவை பரிசோதனைக்கு எடுக்கப்படும் (FNAC). தேவைப்பட்டால் கட்டியை சிறிய அளவிற்கு அறுவை செய்து பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும். இப்பரிசோதனைகளின் மூலம் கீழ்கண்ட விபரங்கள் அறியப்படும்.

  • ஒருவருக்கு புற்றுநோய் உண்டா அல்லது இல்லையா என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிடும்

  • அது எந்த நிலையில் உள்ளது - அதாவது ஆரம்பநிலையிலா அல்லது முற்றிய நிலையிலா

புற்றுநோயின் வகை அதாவது மிக்க வீரியமுடையதா அல்லது வீரியம் அதிகமில்லாத புற்றுநோயா மேற்கண்ட விபரங்களை சேகரித்த பின்னர் தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.

புற்றுநோய் இல்லாத புதிய உலகம்
புற்றுநோய் இல்லாத புதிய உலகம்

சிகிச்சை முறைகள்

புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளித்து பின்பு தொல்லை ஏதுமின்றி சுமார் 5 ஆண்டுகள் கழிந்தால் அவர் புற்றுநோயிலிருந்து குணமடைந்து விட்டதாக எண்ணலாம்.

  • மருத்துவ சிகிச்சை : புற்றுநோயின் தன்மைக்கு தகுந்தவாறு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ சிகிச்சை (மருந்துகள்) அளிக்கப்படும். இதன் பக்கவிளைவுகளும் நிறைய உண்டு. உதாரணம் : இரத்த சோகை, குமட்டல், வாந்தி, முடி கொட்டல். இதய நோய், சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு புற்றுநோயின் மருந்துகளை போதிய அளவிற்கு கொடுக்க முடியாது. மேலும் இம்மருந்துகளின் பக்கவிளைவுகளும் இவர்களுக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு.

  • கதிர்வீச்சு சிகிச்சை : கட்டியின் அளவைக் குறைக்க இச்சிகிச்சை மிகவும் உதவும் உதாரணம்: தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய். புற்று நோய் எலும்பில் பரவி வலி ஏற்பட்டு இருந்தால் வலியை குறைக்க இச்சிகிச்சை முறை உதவும்.

  • அறுவை சிகிச்சை : புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் அக்கட்டியை முழுமையாக அகற்ற முடியும். சில புற்றுநோய் கட்டிகளை பூரணமாக அகற்ற முடியாவிட்டாலும் ஒரு பகுதியை அகற்றினால் அது (de-bulk) பிற சிகிச்சையின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

  • மாற்று சிகிச்சை : சிலர் மாற்று சிகிச்சைக்குப் (alternate medicine) போக விருப்பப்படுவார்கள். அதற்கு மருத்துவர்கள் குறுக்கே இருக்கக்கூடாது. அதே சமயத்தில் தற்பொழுது எடுத்துவரும் (allopathic) சிகிச்சையின் நிறை மற்றும் குறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது ஒரு மருத்துவரின் கடமையாகும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை, வலி மற்றும் இதர தொல்லைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்தால் போதும் என்பார்கள். புற்றுநோய்க்கு சிகிச்சை தக்க பலனளிக்காத நிலையிலோ அல்லது சிகிச்சையின் பக்க விளைவுகள் அதிகமாக இருந்தாலோ, நோயாளியின் கோரிக்கைக்கு தக்க மதிப்பளித்து, வேண்டிய உதவிகளைச் செய்வது ஒரு மருந்துவரின் முக்கிய கடமையாகும்.

முதுமையில் புற்றுநோய் வராமல் இருக்க நடுத்தரவயதிலிருந்தே ஒரு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழித்து, காய்கறி, பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டு, தேவையான உடற்பயிற்சியும் செய்து வந்தால், புற்றுநோய் முதுமையில் நெருங்காது! இப்படி இருந்தும் உடலில் ஏதேனும் திடீர் மாற்றம் ஏற்பட்டால் டாக்டரிடம் உடனே சென்று தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால் முதுமையில் புற்றுநோயிலிருந்து விடுதலை பெற்று நலமாக வாழலாம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.