Published:Updated:

ஒரு விஷயத்தில் மட்டும் தோல்வி! - வியாபார சூரன் எலான் மஸ்க் வாழ்க்கை பக்கங்கள்

எலான் மஸ்க்

அதுவரை நாசா போன்ற அரசின் பெரும் நிறுவனங்கள் மட்டுமே செய்து வந்த இந்த தொழிலில் சாதிக்கும் முனைப்பில் எப்போதும் போல மிக ஆர்வமாகவே மிக பெரும் ரிஸ்க் எடுத்து இறங்கினார் எலான். ஆனால் மிகவும் தொழில் நுட்ப அறிவு தேவையான இந்த தொழிலை நடத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் அவருக்கு இருந்தன.

ஒரு விஷயத்தில் மட்டும் தோல்வி! - வியாபார சூரன் எலான் மஸ்க் வாழ்க்கை பக்கங்கள்

அதுவரை நாசா போன்ற அரசின் பெரும் நிறுவனங்கள் மட்டுமே செய்து வந்த இந்த தொழிலில் சாதிக்கும் முனைப்பில் எப்போதும் போல மிக ஆர்வமாகவே மிக பெரும் ரிஸ்க் எடுத்து இறங்கினார் எலான். ஆனால் மிகவும் தொழில் நுட்ப அறிவு தேவையான இந்த தொழிலை நடத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் அவருக்கு இருந்தன.

Published:Updated:
எலான் மஸ்க்

எலான் மஸ்க்.. வியாபாரத்தில் உச்சம் தொட்டு விண்ணை அளந்து கொண்டு இருக்கும் இந்த வியாபார சூரனின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய அருமையான பாடங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

நிறவெறி பிடித்தாட்டிய தென்னாப்பிரிக்காவில் பிறந்து, பள்ளிப்பருவம் முடியும் வரை வளர்ந்தவர் எலான் மஸ்க் . பெரும் வியாபார சூரர்களுக்கு இருந்தது போலவே எலானுக்கும் இளம்பிராயத்தில் பிரச்சினைகள் இருந்தன. அவருடைய பெற்றோரின் இளம் வயது விவாகரத்து, நல்ல நண்பர்கள் இல்லாதது போன்ற பிரச்சினைகளை தன் இளம் வயதில் சந்தித்த எலான் தன் முழுக்கவனத்தையும் படிப்பதில் காட்டி அவருடைய இன்றைய பெரும் தொழில் சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரமாக இருக்கும் அவருடைய அகண்ட அறிவை பெருக்கி கொண்டார். 10 வயதிலேயே கம்பியூட்டர் பயன்பாட்டில் கரைகண்டு, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் எலான் மஸ்க்.

Elon Musk | எலான் மஸ்க்
Elon Musk | எலான் மஸ்க்

16 வயது வரை என்ஜினீயர் அப்பா மற்றும் தாத்தாவின் அரவணைப்பில் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்த எலான், 16 வயதில் விவாகரத்து பெற்ற கனடியரான அவருடைய தாய் இருக்கும் கனடாவுக்கு படிக்க இடம் பெயர்ந்தார். அங்கு குயின்ஸ் (QUEENS ) பல்கலையில் இளங்கலை இயற்பியல் பயில ஆரம்பித்து பின் தன்னுடைய அமெரிக்க கனவை நனவாக்க அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கு நகர்ந்தார். இங்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பின் மிகப்பெரும் புகழ் பெற்ற அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் (STANFORD) பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். ஆனால் இன்டர்னெட் மூலம் நடக்கும் டாட் காம் தொழில்கள் பெரும் புகழடைந்து கொண்டு இருந்த அந்த காலத்தில் தானும் எதாவது டாட் காம் தொழில் செய்ய வேண்டும் என்ற அவருடைய அதீத ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய ஸ்டேன்போர்ட் ஆராய்ச்சி படிப்பை விட்டு விட்டு சிறிய அளவில் ஒரு டாட் காம் தொழிலை ஆரம்பித்தார்.

லோக்கல் செய்தித்தாள் நிறுவனங்களுக்கு உதவ ஆரம்பித்த அந்த டாட் காம் தொழிலை சில வருடங்களிலேயே காம்பேக் என்னும் பெரிய நிறுவனத்துக்கு 300 மில்லியன் டாலர் அளவுக்கு விற்று 30 வயதிலேயே ஒரு மல்டி மில்லியனராக உருவெடுத்தார் எலான் . அத்துடன் திருப்திப்பட்டாரா என்றால் இல்லவே இல்லை. அது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று உலகுக்கு சொல்லும் வகையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வுகள் இருந்தன .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

PAY PAL என்ற மிகவும் புகழ்பெற்ற ஆன்லைன் பேமெண்ட் நிறுவனத்தை 1998 ல் ஆரம்பித்து சில வருடங்களில் அதை பிரபலப்படுத்தி 2002 இல் e BAY என்னும் நிறுவனத்துக்கு 1.5 பில்லியன் டாலர்களுக்கு விற்று அதன் 12 சதவீத பங்குகளை கைப்பற்றி தன்னுடைய பணபலத்தை மேலும் பன்மடங்கு அதிகரித்தார் எலான். அத்துடன் திருப்திப்பட்டாரா என்றால் இல்லவே இல்லை. அனைவரும் வியக்கும் வகையில் தன்னுடைய மிக பெரும் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்தார்.

மக்களின் விண்வெளி குடியேற்றம் என்பது எலான்ழ்ழ்ழ் மஸ்கின் இளம் வயது கனவுகளில் ஒன்று . அதை நனவாக்கும் துடிப்புடன் எவரும் எதிர்பாராத வகையில் SPACE X என்னும் ராக்கெட் மற்றும் விண்வெளி ஊர்திகள் தயாரிக்கும் தொழிலை 2002 ஆம் ஆண்டு துவங்கினார். அதுவரை நாசா போன்ற அரசின் பெரும் நிறுவனங்கள் மட்டுமே செய்து வந்த இந்த தொழிலில் சாதிக்கும் முனைப்பில் எப்போதும் போல மிக ஆர்வமாகவே மிக பெரும் ரிஸ்க் எடுத்து இறங்கினார் எலான். ஆனால் மிகவும் தொழில் நுட்ப அறிவு தேவையான இந்த தொழிலை நடத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் அவருக்கு இருந்தன. பயன்படுத்தப்பட்ட பழைய ராக்கெட்டுகளை ரஷ்யாவில் இருந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கினார் எலான்.

எலான் மஸ்க் | Elon Musk
எலான் மஸ்க் | Elon Musk

ராக்கெட் என்ஜினீயர்களை வழி நடத்தும் அறிவார்ந்த தலைமை என்ஜினீயர் அவருக்கு கிடைக்காமல் போகவே, அனைவரும் திகைக்கும் வகையில் மிகவும் சிக்கலான ராக்கெட் என்ஜினீயரிங் தொழில் நுட்பங்களை வெறும் புத்தகங்களை படித்து மட்டுமே கற்று தேர்ந்து உலக வியாபார சூரர்களை திகைக்க வைத்தார். ஒரு தோல்வியாளராக உலகம் தன்னை பார்ப்பதை தான் விரும்பவில்லை. மேலும் தான் எடுத்து கொண்ட காரியத்தில் வெல்ல தான் எந்த அளவுக்கும் செல்வேன். அதற்கு இதுவே ஒரு உதாரணம் என்று கூறி அவருடைய ஆழமான அறிவு திறமையையும், கடின உழைப்பையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். முதல் 3 முயற்சிகளில் தோல்வி கண்டு நான்காம் முறை வெற்றிகரமாக விண்ணில் அவருடைய நிறுவனத்தின் விண்கலனை வெற்றிகரமாக செலுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று அமெரிக்க அரசின் நாசா நிறுவனம் நடத்தும் விண்வெளி ஆராய்ச்சியில் எலான் மஸ்கின் SPACE X நிறுவனத்துடன் பல ஒப்பந்தங்களை போட்டு கொண்டுள்ளது. அவர்களின் விண்வெளியில் நிறுவப்பட்டு இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு செல்லும் பணிகளை எலான் மஸ்கின் SPACE X நிறுவனம் கையாளுகிறது. மேலும் சொந்தமாக ராக்கெட் மற்றும் விண்ணில் பயன்படும் விண்கல ஊர்திகள் தயாரிப்பையும் தொடங்கினார் எலான். இதன் மூலமும் எலான் மஸ்குக்கு பணம் ஏராளமாக கொட்ட துவங்கியது. இந்த SPACE X நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அடுத்த கட்ட நகர்வாக வாகன போக்குவரவால் ஏற்படும் அபாயகரமான சுற்று சூழல் மாசை குறைக்கும் அவருடைய மற்றுமொரு இளம் வயது கனவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் டெஸ்லா (TESLA) என்ற மின்சாரத்தால் செயல்படும் கார் தயாரிக்கும் நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எலான். இங்கும் ராக்கெட் தொழில் நுட்பத்தை தானே பயின்றது போல கார் தொழில் நுட்பத்தையும் தானே கற்று தேர்ந்து மீண்டும் உலகை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார் எலான் மஸ்க். பல ஆரம்ப கட்ட தோல்விகளுக்கு பின் இன்று டெஸ்லா மின்சார கார்கள் உலகமெங்கும் விற்பனையில் சக்கை போடு போட்டு மேலும் மேலும் செல்வத்தை குவிக்க ஆரம்பித்தார் எலான். இந்த டெஸ்லா நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 1030 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் எலான் மஸ்க் செல்வ கடவுள் குபேரனின் பங்காளியாக இன்று மாறி போயிருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை .

ட்விட்டர் ஊடக நிறுவனத்தை இப்போது 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியிருப்பதன் மூலம் மீண்டும் உலகின் பேசுபொருளாகி இருக்கிறார் எலான் மஸ்க். தன் வாழ்க்கை பக்கங்கள் முழுக்க உழைப்பு, உழைப்பு என்று கடும் உழைப்பை கொட்டி நிரப்பி 50 வயதிலேயே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், சோலார் சிட்டி, ட்விட்டர் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு அதிபராகி உலகின் முதலாம் மிக பெரும் பணக்காரராக உருவாகி இருக்கிறார் எலான் மஸ்க்.

இவ்வளவு பேரும் புகழும் பணமும் சம்பாதித்த எலான் மஸ்க் வாழ்வில் சந்தித்த ஒரே ஒரு மிக பெரும் தோல்வி அவருடைய இரண்டு திருமணங்களும் தோல்வியடைந்து விவாகரத்தில் முடிந்ததே. ஆனாலும் இரண்டு திருமணங்கள் மூலம் பிறந்த தன்னுடைய ஐந்து குழந்தைகளுக்கும் ஒரு பொறுப்பான அப்பாவாக வாழ்ந்து அதிலும் ஒரு வாழ்வியல் உதாரணமாக மாறி போயிருக்கிறார் இந்த அதிமேதாவியான வியாபார சூரன் .

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism