Published:Updated:

காது மூக்கு - தொண்டை நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

வெளிப்புற சப்தங்கள் இன்றி காதில் ஏற்படும் ஒருவித சப்தத்தைத் தான் காது இரைச்சல் எனப்படும். இரைச்சல் தொடர்ந்து இருக்கலாம் அல்லது விட்டு விட்டும் வரலாம்.

காது மூக்கு - தொண்டை நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வெளிப்புற சப்தங்கள் இன்றி காதில் ஏற்படும் ஒருவித சப்தத்தைத் தான் காது இரைச்சல் எனப்படும். இரைச்சல் தொடர்ந்து இருக்கலாம் அல்லது விட்டு விட்டும் வரலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஐம்புலன்களுள் காது ஓர் இன்றியமையாத உறுப்பாகும். காதினுள் அமைந்திருக்கும் உறுப்புகளுள் ஒன்று; ஒயைக் கிரகித்து மூளைக்கு அனுப்பும் (Hearing); பிறிதொன்று உடலைச் சமநிலையில் வைக்க (Equilibrium) உதவுகிறது. முதுமையில் ஏற்படக்கூடிய சில முக்கிய காது - மூக்கு - தொண்டை நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

காது இரைச்சல் (Tinnitus)

வெளிப்புற சப்தங்கள் இன்றி காதில் ஏற்படும் ஒருவித சப்தத்தைத் தான் காது இரைச்சல் எனப்படும். இரைச்சல் தொடர்ந்து இருக்கலாம் அல்லது விட்டு விட்டும் வரலாம். ஒரு காதில் மட்டும் அல்லது இரண்டு காதிலும் இரைச்சல் வரலாம்.

காரணங்கள்

காது இரைச்சல் வருவதற்கு காது கேளாமை ஒரு முக்கிய காரணம். காது இரைச்சல், காது கேளாமை வருவதற்கு முன்னரே தோன்றலாம்.

காதில் மெழுகு அடைப்பு

உட்காது பாதிப்பு

நாள்பட்ட நோய்தொற்று

இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், உதாரணம்: பக்கவாதம்

மருந்துகள், உதாரணம்: சிறுநீரக மாத்திரை, மலேரியாவிற்கு கொடுக்கும் மாத்திரை, கிருமி நாசினி (Gentamycin - காச நோய் ஊசி மருந்து, Streptomycin)

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

காது இரைச்சலுக்கு சிகிச்சை அளிப்பது மிக கடினமானது மட்டுமல்ல சற்று ஏமாற்றம் அளிப்பதும் கூட. மருந்துகள் ஒரு காரணமாக இருந்தால் அதை நிறுத்திவிடவும். மது, புகை, காபி ஆகியவற்றை நிறுத்த வேண்டும். காது இரைச்சலுக்கான காரணத்தைக் கண்டு அறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கவேண்டும். காது கேளாமை ஒரு காரணமாக இருந்தால் காது ஓ கேட்கும் கருவியை பொருத்திக் கொள்ளலாம்.

மருந்துகள் Giinkogobiloba, துத்தநாகம் (Zinc), மெலோடினின் (Melotinin) ஆகியவைகள் சற்றே பலனளிக்கலாம்.

மேற்கொண்ட சிகிச்சை முறைகளினால் தக்க பயன் அளிக்கவில்லையென்றால் காது இரைச்சலை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரு சிறந்த வழியாகும் !

காது கேளாமை (Deafness)

முதுமையில் ஏற்படும் காது கேளாமை இரண்டு வகைப்படும்.

1. காதிருந்து நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும் நரம்பு பாதிப்பால் ஏற்படும் காது கேளாமை (Sensory Neuron hearing loss). முதுமையில் காது கேளாமைக்கு 95 சதவீதம் நரம்பு பாதிப்பினால் ஏற்படுவது தான்.

காரணங்கள்

மரபு நிலை, முதுமை, காதில் நோய்த்தொற்று, காதில் ஏற்படும் காயம், அதிக இரைச்சல், மருந்துகள் (உ.ம்.: கிருமி நாசினி - (Gentamycin, Streptomycin), நீர் மாத்திரை, புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்துகள்.

2. சப்தம் காதுக்குள் செல்வதில் இடையூறுகளால் ஏற்படும் காது கேளாமை (Conductive hearing loss).

· வெளிக் காதில் ஏற்படும் அடைப்புகள், உதாரணம்: மெழுகு, வெளிப்புற பொருட்கள் (Foreign bodies), உட்காது ஜவ்வில் ஏற்படும் ஓட்டை, பரம்பரையாக வரும் உட்காது எலும்பு பாதிப்பு.(Otosclerosis)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறிகுறிகள்

சப்தம் சற்று குறைவாகக் கேட்டால் அது முதுமையின் விளைவு என்று எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். உறவினர்கள் மற்றம் நண்பர்கள் கூறிய பின்னரே மருத்துவரை நாடுவர். கூட்டம் நிறைந்த இடங்களில் ஒ தெளிவாக கேட்காததால் அங்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதனால் மற்றவர்களோடு இயல்பாக பழகமுடியாது, ஒரு தாழ்வு மனப்பான்மையால் தனித்தே இருக்க விரும்புவர். தனிமை மனச்சோர்வுக்கு வித்திடுகிறது. தனிமை, காது கேளாமை மற்றும் மனச்சோர்வு ஒன்றோடு ஒன்று சேர்ந்து மறதிநோய் வர வாய்ப்பு அதிகரிக்கும். காது கேளாமையினால் குடும்பத்தினர் முதியவரிடம் பேசுவது சிரமம் என்று எண்ணி அவரிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பார்கள்.

பரிசோதனைகள்

காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனை (Audiometry test) மூலம் எந்தளவுக்கு காது கேளாமை உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் மற்றும் காது கேளாமை எந்த வகையைச் சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ளலாம். காது கேட்கும் திறன் சரியாக இருப்பதாக எண்ணிக்கொண்டு பலர் காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையை செய்ய முன் வரமாட்டார்கள். ஆகையால் ஆரம்ப நிலையிலேயே உள்ள காது கேளாமையை கண்டு அறிய சுமார் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையை அவசியம் செய்து கொள்ளவேண்டும். முதியவர்கள் முழுஉடல் பரிசோதனை செய்யும் போது இப்பரிசோதனையையும் அவசியம் அதனுடன் சேர்த்துக் செய்து கொள்ளவேண்டும்.

Representational Image
Representational Image

சிகிச்சை முறை

காது கேளாமைக்கான காரணத்தை கண்டுயறிந்து அதற்க தக்க சிகிச்சை அளிக்கவேண்டும்.

காதினுள் மெழுகு

காது – மூக்கு – தொண்டை மருத்துவரிடம் சென்று மெழுகை அகற்றினால் ஒ நன்றாக கேட்கும்.

மத்தியக் காதில் அடைப்பு

நுண்கிருமிகளால் தொண்டை தாக்கப்படும் போது மத்தியக் காதும் தாக்கப்பட்டுத் தற்காக அடைப்பினை ஏற்படுத்தும். இதனை தக்க மருந்தினால் குணமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.

உட்காது எலும்பில் மாற்றம்

வயதான காலத்தில் சிலருக்கு உட்காதில் உள்ள எலும்புகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் காது கேளாமை ஏற்படலாம். நுண்ணிய அறுவைச் சிகிச்சை மூலம் (Stapedectomy) குணமளிக்க முடியும். ஆனால் முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை அவ்வளவாக பயனளிக்காது.

மருந்தின் விளைவு

காதை பாதிக்கும் மருந்தை உடனே நிறுத்திவிட வேண்டும். காது

ஒலி கேட்கும் கருவி

காது கேளாமைக்கு காது ஒலி கேட்கும் கருவி தான் சிறந்த சிகிச்சை ஆகும். இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். காது கேளாமை ஒரு காதில் மட்டும் இருந்தால் கருவியை அந்த காதுக்கு மட்டும் பொருத்தினால் போதும். இரண்டு காதுகளிலும் காது கேளாமை இருந்தால் இரண்டு காதுகளுக்கும் கருவியை அவசியம் பொருத்திக் கொள்ள வேண்டும். இரண்டு காதுகளுக்குப் பதிலாக ஒரு காதில் மட்டும் பொருத்தினால் தக்க பலன் கிடைக்காது.

காது ஒலி கருவியை காதுக்கு பின்னால் பொருத்தி கொள்வது : மிதமான மற்றும் அதிகமாக காது கேட்காதவர்கள் பொருத்திக் கொள்ளலாம். இது அளவில் சற்று பெரிதாக இருக்கும்.

காதுக்குள்ளேயே பொருத்தி கொள்வது : சற்று குறைவாக ஒலி கேட்பவர்கள் பொருத்திக் கொள்ளலாம். இது அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் விலை சற்று அதிகம்.

கண் பார்வை குறைந்தால் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு கண்ணாடி போட்டுக்கொள்வது போல, காது கேளாமை இருந்தால் காது ஒலி கேட்கும் கருவியை பொருத்திக் கொண்டு வாழும் நாட்களில் மற்றவர்களோடு இனிமையாக பழகி நலமுடன் வாழலாமே

தலைச் சுற்றல் (Vertigo)

நோயாளிகளில் சிலருக்குத் தான்சுற்றுவது போலவும் மற்றும் சிலருக்குத் தம்மை சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவது போலவும் தோன்றும். சிலர் மயக்கம் ஏற்படுவது போலவோ அல்லது தலை பாரமில்லாமல் இருப்பது போல இதை வர்ணிப்பார்கள். இத்தோடு குமட்டல், வாந்தி, மயக்கமும் கூட ஏற்படலாம். உட்காது மற்றும் அது சார்ந்த காது நரம்பு பாதிப்பு, இதுவே 85% தலைச்சுற்றலுக்கு காரணம். மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு 15% தலைச்சுற்றலுக்கு காரணம்.

சிகிச்சை முறை

கழுத்து எலும்பு தேய்மானத்தினால் தலைச்சுற்றல் ஏற்பட்டால், கழுத்தின் அசைவுகளை குறைத்து கொள்ள வேண்டும். உயரமான தலையணையை தவிர்க்கலாம். உள்காது பாதிப்பினால் தலைச்சுற்றல் ஏற்பட்டால் அதற்குண்டான சிறப்பு மருத்துவரிடம் தக்க சிகிச்சை பெற வேண்டும். தலைச்சுற்றலை தவிர்க்கவோ, குறைக்கவோ பீட்டாஹிஸ்டின் மாத்திரையை (Betahistine) உபயோகிக்கலாம். இம்மாத்திரையினால் பக்கவிளைவுகள் அதிகம் இல்லை. இயன் முறை சிகிச்சை மூலம் தக்க பயிற்சிகளை எடுத்து கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

மூக்கில் இரத்தம் சொட்டல்

காரணங்கள்

. உயர் இரத்த அழுத்தம் திடீரென்று அதிகரித்தல், மூக்கில் அடிபடுதல், மூக்கினுள் கல், ஊசி போன்றவை இருத்தல், மூக்கில் சளி, மூக்கெலும்பு அதிகமாக வளருதல், மூக்கினுள் ஏற்படும் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், இரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரைகள் (உ.ம்.: ஆஸ்பிரின், குளோப்பிகிரல்), ஒவ்வாமை. மூக்கின் உட்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் உடைவதினால் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இவ்வாறு இரத்தக் கசிவு ஏற்படும் போது, மூக்கை ஐந்து முதல் இருபது நிமிடங்கள் அழுத்திப் பிடித்தால் இரத்தக் கசிவு நின்றுவிடும். மேற்கூறிய முறையில் இரத்தம் வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் உடனே டாக்டரை அணுகவும்.

குரல் கம்மல் (Hoarseness of voice)

குரல் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டால் அது முதுமையின் விளைவு என்று புறக்கணிக்கக்கூடாது. குரல் மாற்றம் மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.

காரணங்கள்

தொடர்ந்து பேசிக் கொண்டு அல்லது பாடிக்கொண்டு இருப்பது, புகை பிடிப்பது, புகையிலை போடுவது, மருந்துகள், உதாரணம்: பக்கவாதம் மற்றும் மனநோய்களுக்கு கொடுக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவு, பல் மற்றும் சயினஸ் தொல்லைகள். தொண்டையில் ஏற்படும் நோய்தொற்றினால் தான் அதிகம் பேருக்கு குரல் மாற்றம் ஏற்படுகிறது. குரல் வளையில் (Vocol cord) ஏற்படும் சாதாரண கட்டி, குரல் வளை மற்றும் தொண்டையில் ஏற்படும் புற்று நோய், நரம்பு சார்ந்த நோய்கள், உதாரணம்: குரல் வளை வமையிழத்தல் (paralysis of vocal cord), உதறுவாதம், வயிற்றில் இருக்கும் அமிலம் தொண்டைக்குச் செல்லுவது (Reflux larynxitis), தைராய்டு குறைவாகச் சுரத்தல்.

குரல் மாற்றம் தொடர்ந்து இருப்பின் பொதுநல மருத்துவரையோ அல்லது காது-மூக்கு-தொண்டை மருத்துவரையோ அணுக வேண்டும். குரல் மாற்றத்திற்கான காரணத்தை கண்டு அறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். அதிகமாக பேசுவதை குறைத்து கொள்ளவேண்டும். புகை, புகையிலை, மதுவை தவிர்க்க வேண்டும். குரல் வளையில் சிறு கட்டிகள் ஒரு காரணமாக இருப்பின் அதை அகற்ற வேண்டியிருக்கும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.