Published:Updated:

அதிகரித்துவரும் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்று! - சில உண்மைகள் | My Vikatan

Representational Image

இந்த நோய் மேலும் பரவாமல் இருக்கவும், இந்த நிலையை சிறப்பாக நிர்வகிக்கவும் சில உண்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதிகரித்துவரும் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்று! - சில உண்மைகள் | My Vikatan

இந்த நோய் மேலும் பரவாமல் இருக்கவும், இந்த நிலையை சிறப்பாக நிர்வகிக்கவும் சில உண்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அதிகரித்துவரும் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்று

மெட்ராஸ் ஐ அல்லது  அடினோவைரல்  கான்ஜன்க்டிவிடிஸ்  தொற்றுநோய்  தற்போது சென்னை முழுவதும் வேகமாக பரவிவருகிறது.

இந்த நோய் வந்தவர்களைப் பராமரிப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே இந்த நோய் பரவுதல், மேலாண்மை குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நோய் மேலும் பரவாமல் இருக்கவும், இந்த நிலையை சிறப்பாக நிர்வகிக்கவும் சில உண்மைகளை முதலில்  தெரிந்துகொள்ள வேண்டும்.

வைரல் கான்ஜன்க்டிவிடிஸ் என்பது மிகவும் பொதுவான கண் நோய்களில் ஒன்றாகும். கண் இமைகள் வீங்குவது, கண் சிவத்தல், நீர் வடிதல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டது. இது ஒரு கண் அல்லது இரண்டு கண்களையும் பாதிக்கலாம். இது தொற்றக்கூடியது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியது. பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீருடன் நேரடி தொடர்பு, அல்லது அவருடைய கண்ணுக்கு அருகில் வைக்கப்பட்ட துண்டுகள், விரல்கள் அல்லது கைக்குட்டைகளை தங்கள் கண்களில் வைப்பதன் மூலம் இந்த நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரவும். இது எந்த வயதினரையும் பாதிக்கலாம்.

இந்த நிலைக்கான சிகிச்சையானது கண் சொட்டுமருந்து விடுதல், திரையைப் பார்க்கும் நேரத்தை முற்றிலும் தவிர்த்து கண்ணுக்கு ஓய்வு எடுத்தல்.

Dr.Srikanth
Dr.Srikanth

ர்செய்ய வேண்டியவை

1. உங்கள் கைகளை முடிந்தவரை அடிக்கடி கழுவவும்.

2. கான்ஜன்க்டிவிடிஸ் உள்ள நபருடன் நேரடி தொடர்பைத் தவிர்க்கவும்.

3. நோய் பரவாமல் தடுக்க தனித்தனி துண்டுகள், கைக்குட்டைகள், படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தவும்.

4. ஒவ்வொரு நாள் காலையிலும் கண்ணின் பார்வையை கண்காணித்து, கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறியவும்.

5. கண்கூச்சத்தைத் தவிர்க்க கூலிங்கிளாஸ்களை அணியுங்கள். (ஆனால், தொற்று பரவுவதைத் தவிர்க்க இது உதவாது)

6. சிகிச்சையைத் தொடங்க விரைவில் மருத்துவரை அணுகுங்கள் அறிவுறுத்தப்பட்ட மருந்துகளை கவனமாகப் பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை.

1. அழகுசாதனப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும்

2. உங்கள் கண்களைத் தொடவோ தேய்க்கவோ கூடாது

3. தொற்று குறையும்வரை காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்த வேண்டாம்.

 -டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்ரமணியன்,

MBBS, MS (கண்ணியல்), MRCS (எடின்பர்க்), FICO, கண் நோய் மருத்துவர், அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.