Published:Updated:

அட..!

நாகேஷ்

எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடந்து அதை நாம் எதிர்பாராத நபர் செய்து இருந்தால் அதுதான் 'அட' சொல்லி ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ தரும். அந்த இரண்டெழுத்து பற்றி பேச வைத்தவர்களைப் பற்றி பார்ப்போம்.

அட..!

எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடந்து அதை நாம் எதிர்பாராத நபர் செய்து இருந்தால் அதுதான் 'அட' சொல்லி ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ தரும். அந்த இரண்டெழுத்து பற்றி பேச வைத்தவர்களைப் பற்றி பார்ப்போம்.

Published:Updated:
நாகேஷ்

அட அவனா...நம்பவே முடியலியே. மக்குன்னு நெனச்சிட்டு இருந்தோம் இவ்வளவு நாளா....? என்ன மாயம் நடந்தது... திடீர்ன்னு ஒருத்தர் பெரிய ஆளா மாறுனா இப்படி நம்பாம ஆச்சரியமா கேப்போம்.

'அட' என்று ஆரம்பித்தாலே நடந்து முடிந்த விஷயம் மிகப் பெரியதாகவே இருக்கும். நம்ம வீட்டில் தானாகவே சில சமயம் தங்கிக்கொண்டு நமக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரு சில தெரு நாய்கள். அறிமுகப்படுத்தாமலே நமது அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை அடையாளம் கண்டு கொண்டு குலைக்காமல் வாலை ஆட்டி நம்மை `அட' என்று சொல்லி ஆச்சர்யப்பட வைக்கும். எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடந்து அதை நாம் எதிர்பாராத நபர் செய்து இருந்தால் அதுதான் 'அட' சொல்லி ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ தரும். அந்த இரண்டெழுத்து பற்றி பேச வைத்தவர்களைப் பற்றி பார்ப்போம்.

நாகேஷ்
நாகேஷ்

நாகேஷ் என்றாலே நம் நினைவுக்கு வருவது செல்லப்பா, தருமி கேரக்டர்கள் தான். ஒரு சிரிப்பு நடிகராக திரை உலகில் வாழ்க்கையை தொடங்கினார். பாலசந்தர் என்ற மோதிரக் கையால் ஓங்கி குட்டப்பட்டு 'அட..அட.. என்று பலமுறை சொல்ல வைக்கும் உயர்ந்த நிலைக்கு சென்றார். அவருக்காகவே எழுதப்பட்ட கதைதான் 'சர்வர் சுந்தரம்'. துணிந்து அவரை ஹீரோவாக்கி நாடகம் போட்டு வெற்றி பெற்றார் பாலச்சந்தர். அது படமாகும் போது ஏ.வி.எம். செட்டியார் அவர்களும் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இருவரும் நாடகத்தில் நடித்த நாகேஷையே சினிமாவிலும் ஹீரோவாக நடிக்க வைத்தார்கள் . படம் பெரிய வெற்றியை பெற்றது. எல்லாரையும் சிரிக்க வைத்தவர் தன்னால் ஒரு முழு படத்தையும் சுமக்க முடியும் என்று நிரூபித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது முதல்படத்திற்கு 'நீர்க்குமிழி' என்று பெயர் வைத்து அதே நாகேஷை 'சேது' வாக உலாவவிட்டு செண்டிமெண்டை உடைத்து நம்மை 'அட..' என்று முதல் படத்திலே சொல்ல வைத்தவர் பாலசந்தர். கருப்பு வெள்ளை படங்களின் மூலமாகவே புது புரட்சியை திரை உலகில் நடத்திக் காட்டினார். 'நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு யார் அணைப்பாரோ..' என்று பாடும் கவிதா ஒரு புறம். 'வேண்டுமட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன்..' என்று விதியைக்கூட விரட்டியடிக்க நினைக்கும் லலிதா மற்றொரு புறம்... 'நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்..' அதிரடியாகப் பாடி அம்மாவாக மாறிப்போன வெள்ளி விழா 'ஷீலா' - அடுத்தாத்து அம்புஜத்தை பற்றி பேசும் பட்டு மாமி... -பெண்மையின் தன்மைகளை வெவ்வேறு கோணங்களில் காட்டி சிகரம் தொட்டு அண்ணாந்து பார்க்க வைத்தவர்.

நீர்க்குமிழி
நீர்க்குமிழி

ஆனந்த விகடன் என்றாலே நிச்சயம் புதுமை என்றும் எப்போதும் இருக்கும். பொதுவாக வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் பதில் சொல்லும் பகுதி வார இதழ்களில் இடம்பெறும். முதன் முதலாக வாசகர்களே கேள்வி கேட்டு வாசகர்களே பதிலும் சொல்லும் 'நானே கேள்வி...நானே பதில்...என்ற புதிய பகுதியை கொண்டு வந்து அட...இப்படி நாம யோசிக்கவே இல்லையே என்று சக வார இதழ்களை சிந்திக்க வைத்தார் விகடனார். தலையங்கம் ஆசிரியர் மட்டுமே எழுதுவார். அதையும் வாசகர்களை விட்டே எழுத வைத்து 'வாசகர் தலையங்கம்' என்று ஒரு பகுதியை 'ஜூனியர் போஸ்ட்' வார பேப்பரில் அறிமுகப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசகர்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கு தீனி போடும் விதமாகவே புதிய புதிய அறிவிப்புகள் வெளி வந்து கொண்டே இருந்ததன. ஒரே ஒரு வருத்தம் அந்த 'ஜூனியர் போஸ்ட்' இடையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அது 'விகடன் போஸ்ட்' ஆக வெளி வந்தால் நன்றாக இருக்கும். அனுராதா ரமணன் அவர்களின் சிறுகதையான 'சிறை' ஆனந்த விகடனில் வெளியாகி 10,000/- ரூபாய் பரிசு பெற்ற புரட்சிகரமான படைப்பு.

ஆனந்த விகடன்
ஆனந்த விகடன்

அதே பெயரில் ஆர்.சி.சக்தி இயக்கி திரைப்படமாக வெளிவந்தது. பாகீரதியாக லட்சுமியும் அவளை கெடுத்த அந்தோணிசாமியாக ராஜேஷும் நடித்து இருந்தார்கள். யார் மனதையும் புண் படுத்தாமல் மிகவும் அற்புதமாக படத்தை எடுத்திருந்தார் இயக்குனர். இந்த 'சிறை' யைப் பற்றி மட்டும் மிகப் பெரிய கட்டுரையாக...ஆய்வுக் கட்டுரையாக எழுதலாம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் கணவன் கைவிட்டு சென்ற நிலையில் எப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுத்து செயல்படுகிறாள். அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியவன் இறந்த போன பிறகு அப்பெண் எடுத்த முடிவு... அவளைத் தேடி கணவன் திரும்ப வரும்போது 'அடப் பாவி நீ நல்லா இருப்பியா..? என்று கேட்க வைக்கத்தோன்றும் அளவுக்கு இருந்தது. விகடனின் மைல்கல்லில் 'சிறை' க்கு பிரதான இடம் உண்டு.

அட...அட..அட.. என்று மூச்சு விடாமல் சொல்லவைத்தவர் எழுத்தாளர் சுஜாதா. அவரின் கதைகள் ஒவ்வொன்றும் தனி ரகமாக.. பூபாள ராகமாக நம் சிந்தனைகளை உறக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு மாற்றி விடும். 'கனவுத்தொழிற்சாலை' திரைத்துறைக்கு வேறு பெயர் கொடுத்து அவர் எழுதிய நாவல். அவரது நாவல்கள் சிறுகதைகளை நாடகமாக்கினார் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். அதில் குறிப்பிடத்தக்கது 'வந்தவன்' , டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு. நாடக உலகில் கால்பதித்து புகழ்பெற்றார். அவரை திரைத்துறைக்கு கொண்டு வந்தவர் கமல்.

எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர்கள் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் இருவரும். அந்நியன் படத்தில் '5 கோடி பேர் 5 முறை 5 பைசாவ திருடுனா...' - இந்த வசனம் மிக பிரபலம். என்ன ஒரு சிந்தனை. இத்தனைக்கும் படம் வெளிவந்த ஆண்டியில் 5 பைசா புழக்கத்தில் இல்லை. 'சுஜாதாட்ஸ்' என்ற பெயரில் ஜூனியர் போஸ்டில் இவர் எழுதிய சிறு சிறு கட்டுரைகள் பெரிய வரவேற்பை பெற்றது. விகடன் பிரசுரம் அதை தனி புத்தகமாக போட்டுள்ளார்கள். அதைப்போலவே அவரின் 'கற்றதும் பெற்றதும்'. புத்தகக்கண்காட்சிகளில் அதிகளவில் விற்பனையாவது இவரின் புத்தகங்களே.

காலங்காலமாக அரசியல்வாதிகள் கொட்டிய ஊழல் குப்பைகளை கூட்டித்தள்ளி சுத்தமாக்க 'துடைப்பம்' கையிலெடுத்து அதிரடியாக வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் வெற்றிக்கொடி நாட்டி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலத்திலும் தனது கட்சியை ஆட்சியில் அமரவைத்தார். மாநிலக்கட்சி என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேசியக்கட்சியாக மாறிக்கொண்டு வருகிறது ஆம் ஆத்மி கட்சி. பாஜகவுக்கு மாற்று அடுத்த பிரதமர் வேட்பாளர் நான்தான் என்று அவர் அறிவிச்சாலும் அறிவிக்கப்பட வைக்கச் செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மற்ற கட்சிகள் தங்கள் மாநிலத்திலேயே தடுமாறும் சூழ்நிலைகள் உருவாகின்றன. ஆம் ஆத்மியோ வளர்ச்சியை நோக்கியே செல்கிறது. சமீப காலத்தில் என்னை ஆச்சரியப்பட வைத்த அரசியல்வாதி கேஜ்ரிவால்.

அரசியல் பேசாமல் அரசியலைப்பற்றி சிந்திக்காமல் நம்மால் ஒரு நாளும் இருக்க முடியாது. நமது ஒவ்வொரு செயல்களிலும் அரசியல் தலையீடு நிச்சயம் இருக்கும். தாளிக்க வெங்காயம் வாங்க வேண்டுமென்றாலும் தாலிக்கு தங்கம் வேண்டும் என்றாலும்.. அட இப்படி ஒருவரா...என்று இன்னமும் நாம் காமராஜரையும், கக்கனையும் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம். 50 ஆண்டுகள் தாண்டியும் புதிதாக அதே போல ஒருவர் வரவில்லையே. காமராஜர் ஆட்சி அமைப்போம் அமைப்போம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். செயலில் இறங்கி அடடே பரவாயில்லையே என்று சொல்ல வைக்க முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

வாழும் நாட்களில் அட...என்று சொல்லும் அளவுக்கு வாழ முடியாமல் போனாலும் 'அடப் பாவி' நீ நல்லா இருப்பியா என்று சாபம் வாங்காமல் வாழ்வதே பெரிது. 'அட என்னடா பொல்லாத வாழ்க்கை' என்று விரக்தியாக வாழ்வதும் வாழ்க்கையல்ல. 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.' அப்போதுதான் நல்ல விஷயங்களுக்குள் நம் வரலாறு அடங்கிப்போகும். நமக்குள்ளே ஆயிரம் அட..டாக்கள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன. அவைகள் வெளியே வர துடித்துக் கொண்டே இருக்கின்றன. அதன் ஓசைகள் காதில் விழாமல் இருக்க தொடர் முயற்சிகளை செய்வது செல்போன்கள்தான். அதற்கு விளம்பர இடைவேளை கொடுத்து உள்ளுக்குள் கூர்ந்து கவனித்தால் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் அடடாக்கள் கண்ணுக்குத் தெரியும். வெளியே கொண்டு வந்து பரிசோதனை முறையில் செயல்படுத்த ஆரம்பித்தால் வெற்றிகள் கூட கட்டுக்குள் 'அட...' ங்காமல் போகும். உங்களை `அட’ சொல்ல வைத்த விஷயங்களை பற்றி கமெண்ட் செய்யலாமே!

-திருமாளம் எஸ். பழனிவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism