Published:Updated:

அப்பாவின் டைரி! | My Vikatan

Representational Image

அம்மா உண்மையை சொல்லு மா அப்பா எப்படி இருந்தார் என மீண்டும் மீண்டும் அம்மாவை கேட்டுக்கொண்டே இருக்கிறான் கார்த்தி , என் மேல சத்தியம் பண்ணி சொல்லு என கேட்க உண்மையை சொல்ல ஆரம்பிக்கிறார் அம்மா.

அப்பாவின் டைரி! | My Vikatan

அம்மா உண்மையை சொல்லு மா அப்பா எப்படி இருந்தார் என மீண்டும் மீண்டும் அம்மாவை கேட்டுக்கொண்டே இருக்கிறான் கார்த்தி , என் மேல சத்தியம் பண்ணி சொல்லு என கேட்க உண்மையை சொல்ல ஆரம்பிக்கிறார் அம்மா.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் பிளாட்பார்ம் நம்பர் 4 -ல் புறப்பட தயார் நிலையில் உள்ளது என்ற சத்தம் கேட்க, அப்போதுதான் டிக்கெட் கவுண்டரில் பாதி வரிசையில் நின்று கொண்டிருக்கிறான் கார்த்தி . நேரம் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டு விரைந்தோடுகிறான் கார்த்தி ட்ரெயின் ஐ நோக்கி. பிளாட்பார்ம்-ற்கு செல்வதற்குள் புறப்பட்டது ட்ரெயின் . பதட்டமாக ஓடுகிறான், ஒரு வழியாக ஓடும் ரயிலில் ஏறினான் கார்த்தி.

ஏறி பெருமூச்சுவிட்ட அடுத்த நொடியில் அதிர்கிறது கார்த்தியின் மொபைல். அம்மாவிடமிருந்து அழைப்பு . ஆமா மா ட்ரெயின் ஏறிட்டேன், ம்ம் இப்பதான் கிளம்புது, நான் அப்பவே வந்துட்டேன், ஆமா மா சீட் லாம் ஃப்ரீ ஆ தான் இருக்கு, ம்ம் சாப்டன் மா ...இப்போதான் , ஸ்டேஷன் ல சப்பாத்தி., ம்ம் ஓகே மா மார்னிங் இறங்கிட்டு கூப்பிட்ரேன்னு சொல்லிட்டு போனை வைக்கிறான்,,,, தோள் பையை கூட வைக்க முடியாத அளவு கூட்ட நெரிசல். அண்ணா அந்த கூடையை மட்டும் கொஞ்சம் நகத்தி வையுங்களேன்னு சொல்லி ஒருவழியாய் கார்த்திக்கு கிடைக்கிறது ஒன்றரை ஜான் அளவில் இடம் கழிப்பறை அருகில்….

ரயில்
ரயில்

இரு கால்களையும் மடக்கி தனது தோள் பையை கட்டி அணைத்தவாறு அமர்கிறான் கார்த்தி. நேரம் செல்ல நீண்ட ஓசையுடன் அடுத்த ஸ்டேஷனில் நின்றது ரயில், ஒரு 5,6 பேர் இறங்க, கால் நீட்டும் அளவிற்கு இடம் கிடைத்தது கார்த்திக்கு… ஓரளவிற்கு வசதியாக அமர்கிறான் கார்த்தி. வசதியாக உட்கார்ந்த பிறகு பாக்கெட்டில் இருந்து தனது மொபைலை வெளியே எடுக்கிறான். லாக் ஸ்கிரீன் ல் உள்ள தனது அப்பா புகைப்படத்தை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறான், கண்களில் கண்ணீர் அரும்ப தன் அப்பாவை பற்றிய நினைவுகளை நினைவு கூறுகிறான். தான் சிறு வயதாக இருக்கும் போதே கார்த்தியின் அப்பா இறந்துவிட்டார், நாளையுடன் அப்பா இறந்து ஏழு வருடம் நிறைவடைகிறது. அதற்காகத்தான் தன் கல்லூரியிலிருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறான் கார்த்தி. அப்பாவுடனான சிறுவயது நினைவுகளை நினைத்து கலங்கியவாறே கழிகிறது கார்த்தியின் ரயில் பயணம்.

மறுநாள் காலை தன் வீடுசென்றடைகிறான். ரொம்ப நாட்களுக்கு பிறகு தம்பியைப் பார்க்க ஆர்வமாக வாசலிலேயே காத்திருந்தார்கள் கார்த்தியின் அக்கா, அண்ணன், அம்மா அனைவரும் பாசத்துடன் நலம் விசாரித்துவிட்டு அப்பாவிற்கு அஞ்சலி செலுத்த ஆயத்தம் ஆகிறார்கள். சிறிது நேரம் செல்ல அனைவரும் சென்று அப்பாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வீடு திரும்பினர். நெடுநேரத்திற்கு அமைதி,,,, ஆளுக்கொரு மூலையில் சோகமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி யோசிச்சிட்டு இருந்து என்ன ஆக போகுது நடக்கவேண்டிய வேலையை பார்ப்போம் என்றவாறே எழும்பி சமையலறையை நோக்கி சென்றார் அம்மா. பின் ஒவ்வொருவராய் செல்ல, தன் அறைக்கு சென்றான் கார்த்தி . அப்பாவின் நினைவுகள் மட்டுமே வலம் வருகின்றன கார்த்திக்கு. சிறுவயதில் அப்பாவுடன் ஆன நாட்கள், நினைவுகள் எல்லாம் நினைத்துக் கொண்டே இருக்கிறான். சிறிது நேரம் செல்ல, சிறுவயதில் அப்பா வாங்கித்தந்த விளையாட்டு பொருட்கள் மீது எண்ணம் மாற, அவை இன்னமும் ஸ்டோர் ரூமில் இருப்பது நியாபகத்தில் வர , வேகமாய் செல்கிறான் ஸ்டோர் ரூமை நோக்கி .

அலமாரியில் உள்ள பெரிய பெட்டியை திறக்கிறான், மகிழ்ச்சி கலந்த ஆர்ப்பரிப்பு கார்த்திக்கு. உடைந்த விளையாட்டு பொருட்கள், துப்பாக்கி, கிரிக்கெட் பேட் , டோரிமோன் டீ சர்ட் , இத்துடன் ஸ்கூல் யூனிஃபார்ம், ரேங்க் காட் , ஐடி காட் , 33 மார்க்-அ 88 - ஆ மாத்துன கணக்கு டெஸ்ட் பேப்பர்.. ஐ லவ் யூ அகல்யா - னு எழுதி குடுக்காமயே வச்சி அப்பாகிட்ட மாட்ன லவ் லெட்டர் , என ஏராளம், அனைத்திற்கும் பின்னால் உள்ள அப்பாவுடனான நினைவுகள். சிரிப்பு தாங்கல கார்த்திக்கு, ஒவ்வொரு பொருளாக எடுக்கிறான் , கடைசியாக பெட்டியில் இருந்து கிடைக்கிறது அப்பாவின் பழைய சட்டை ஒன்று, சட்டைப பையில் கை விடுகிறான் ஏதோ ஒன்று... எடுத்துப் பார்க்கிறான் சிறிய டைரி ஒன்று,

*அதுதான் அந்த டைரி*

டைரியை திறக்கிறான், முதல் பக்கத்திலேயே நெகிழ்ச்சி அடைகிறான் கார்த்தி. டைரியின் முகப்பு பக்கத்தில் தன் பெயருடன் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எழுதியுள்ளார் அப்பா.

ம.மாணிக்கம்

மேரி

மலர்

யோகராஜ்

கார்த்தி


சிறிதும் தாமதிக்காமல் அடுத்த பக்கத்தை திருப்புகிறான் ,,, தேதி குறிப்பிடப்பட்டு நிறைய குறிப்புகள். முதல் குறிப்பே சிரிக்க வைக்கிறது கார்த்தியை..., சின்னவனுக்கு ஸ்கூல் bag வாங்கணும் என எழுதியிருக்கிறார் அப்பா.

அந்த சின்னவன் நாம் தானே என உணர்ந்து சிரிப்புடன் மற்ற குறிப்புகளை வாசிக்கிறான்.

*சந்தைக்கு போகணும்

*தென்னை மரத்துக்கு உரம் வைக்கணும்

*புதன்கிழமை குழுவுக்கு பணம் கட்டணும்


என அந்தத் தேதியில் 4 குறிப்புகள்.4 -ம் டிக் அடிக்கப்பட்டுள்ளது. பின்னர் தான் நியாபகத்துக்கு வருகிறது கார்த்திக்கு , தன் அப்பா மறதி நோய் கொண்டவர் எனவே ,அந்த நாளுக்குரிய நிகழ்வுகளை முன்குறிப்பு எடுத்துக்கொண்டு மேற்கொள்ளும் முறையை புரிந்து கொள்கிறான்.

Representational Image
Representational Image

அத்தனை ஆர்வம் இப்போது கார்த்திக்கு,,, வேறு என்னவெல்லாம் இருக்கிறது அந்த டைரியில் என்று... ஆர்வத்துடன் அடுத்த பக்கத்தை வாசிக்க ஆரம்பிக்கிறான். கார்த்தி சாப்பிடவா என்ற சத்தம்... மீண்டும் மீண்டும் அம்மா அழைக்க சாப்பிட செல்கிறான் கார்த்தி. சாப்பிட மனமே இல்லை எண்ணம் அனைத்தும் டைரியில். வேகமாக கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு அறைக்கு செல்கிறான். மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறான். அந்தக் குறிப்பிட்ட தேதியில் சில குறிப்புகள்

*ரேஷன்ல கோதுமை வாங்கணும்

*மலர்க்கு டியூஷன் ஃபீஸ் கட்டணும்

*டிவி ரிப்பேர் கொடுக்கணும்

*மேரிக்கு கால் வலி தைலம் வாங்கணும்

என அனைத்து குறிப்புகளும் டிக் அடிக்கப்பட்டுள்ளது...

சிறிய சிரிப்புடன் அடுத்த பக்கத்தைத் திருப்புகிறான். அடுத்த நாளில் குறிப்பிட்ட தேதியில் சில குறிப்புகள்

*வவ்வால் கொசு பத்தி

*இட்லி தட்டு வாங்கணும்

*மேரி செல்லுக்கு காசு போடணும்

*பெரியவனுக்கு பெல்ட் வாங்கணும்

*மலர்கு ஜாமெண்டரி பாக்ஸ் வாங்கணும்

சிரித்துக்கொண்டே ஒவ்வொரு பக்கமாய் படித்துக் கொண்டே செல்கிறான் கார்த்தி. சில குறிப்புகள் மிகவும் சிரிக்க வைக்கின்றன கார்த்தியை

*7.30 கு கே . டிவி ல சூரியவம்சம் போட்றான்

* சின்னவனுக்கு மழை கோட்டு வாங்கணும்

* செல்லுல காசு பிடிக்கான் கடைல போய் என்னனு கேக்கணும்

* நேத்து மணி கடைல வாங்குன அவுள் நமத்து போனது இன்னைக்கு போய் மாத்தணும் .

என சில குறிப்புகள் சிரிக்க வைக்கின்றன. இப்படி வாசித்துக்கொண்டே செல்கிறான் ஒவ்வொரு பக்கமாய் பின்னர்தான் உணருகிறான் கார்த்தி ஒரு விஷயத்தை,, சின்னவனுக்கு என ஒரு இருபது முறையாவது வாசித்து இருப்பான். மலருக்கு, பெரியவனுக்கு, மேரிக்கு என்றும் பலமுறை வாசித்து இருப்பான். ஆனால் தனக்கு என அப்பா எதுவுமே குறிப்பிடாததை நினைத்து சிந்திக்க ஆரம்பிக்கிறான். தனக்கென்று தன் அப்பா எதுவுமே செய்து கொண்டதில்லை என்று உணர்ந்த கார்த்திக்கு அப்பாவின் குடும்பத்தின் மீதான அளவுகடந்த அன்பு, பாசம் புரிகிறது. தன் குடும்பத்திற்காக தன் அப்பா பட்ட கஷ்டம் குடும்பத்தின் மேல் வைத்த பாசம் எல்லாம் அவன் கண்முன்னால் உள்ள டைரியின் மூலம் மொத்தமாக தெரிகிறது…

பின் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறான். வாசித்துக் கொண்டே இருக்கிறான், திடீரென்று குறிப்பிட்ட ஒரு தேதியில் டிக் அடிக்காமல் ஒரு குறிப்பு, அதே குறிப்பு மீண்டும்மீண்டும் அடுத்தடுத்த தேதியில் தொடர்வதை கவனிக்கிறான் கார்த்தி. ஒரு இருபது முறையாவது தொடர்ந்திருக்கும் அந்த குறிப்பு. டைரியின் கடைசியாக எழுதப்பட்ட பக்கம் வரை குறிப்பு தொடர்ந்துள்ளது. அந்த குறிப்பை தவிர மற்ற நாளுக்குரிய மற்ற அனைத்து குறிப்புகளும் டிக் அடிக்கப்பட்டுள்ளன. வண்டி டயர் மாத்தணும் என்ற குறிப்பு தான் அது. ஏதோ உறுத்த சற்று சிந்தித்தவாறே கடைசியாக குறிப்புகள் எழுதப்பட்ட தேதியை கவனிக்கிறான் கார்த்தி. அது அவன் வாசித்துக் கொண்டிருக்கும் அதே தேதி , அதே மாதம்.

கண்கள் கலங்க கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறது கார்த்திக்கு. தன் அப்பா இறந்த நாளான இதே நாள்தான் டைரியில் உள்ள தேதி. உடனே வேகமாய் அம்மாவிடம் சென்று அம்மா அப்பா எப்படி இறந்தார் என கேட்கிறான் கார்த்தி. புருவத்தை சுருக்கியவாறு கார்த்தியை உற்றுப் பார்க்கிறார் அம்மா. ஏன் இப்படிக் கேட்கிறான் என்று புரியாமல். மீண்டும் மீண்டும் கார்த்தி கேட்க அப்பா ஹார்ட் அட்டாக்-ஆல் இறந்ததாகக் கூறுகிறார் அம்மா . அப்படித்தான் அப்பா இறந்ததாக கார்த்திக்கும் தெரியும் அம்மா சொல்லி சிறுவயது முதல் , ஆனால் இப்போது அதில் உடன்பாடு இல்லை கார்த்திக்கு.

அம்மா உண்மையை சொல்லு மா அப்பா எப்படி இருந்தார் என மீண்டும் மீண்டும் அம்மாவை கேட்டுக்கொண்டே இருக்கிறான் கார்த்தி , என் மேல சத்தியம் பண்ணி சொல்லு என கேட்க உண்மையை சொல்ல ஆரம்பிக்கிறார் அம்மா.

Representational Image
Representational Image

அப்பா ஒரு சாலை விபத்தில் லாரி மீது மோதி இறந்துடாங்க, அப்போ நீங்களாம் சின்ன பசங்க விபத்துல அப்பா இறந்துட்டாங்கனு உங்கட்ட சொன்னா கஷ்டமா இருக்கும்னு அப்டி சொல்லி வச்சிருந்ததா கண்ணில் கண்ணீர் கட்டியவாறே சொன்னார் அம்மா. ஆமா ஏண்டா திடீர்னு கேக்ற என்னாச்சுனு அம்மா கேக்க பதில் சொல்லாமல் அமைதியாக கடந்து செல்கிறான் கார்த்தி. இதற்குமேல் தெளிவாய் புரிய தேவையில்லை கார்த்திக்கு. தன் அறைக்கு சென்று அழ ஆரம்பிக்கிறான். தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்காய் அவர்களின் தேவைக்காய் தேய்ந்த தன் அப்பா தனக்கு தேவையான சிறு விஷயத்தை கூட அர்ப்பணித்திருக்கிறார் அது அவரை மரணம் வரை அழைத்துச் சென்றிருக்கிறது என்று புரிகிறது கார்த்திக்கு. பைக் டயர் கூட மாற்றாமல் கடைசியில் விபத்தில் சென்று முடிந்ததை நினைத்து அழுது கொண்டே இருக்கிறான். நெடுநேரம் அழுகிறான். பின் தன் அப்பாவின் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கையில் இருந்து வெகுவாய் கற்றுக்கொள்கிறான் கார்த்தி. நேரம் செல்ல சிந்தித்துக் கொண்டே இருந்த கார்த்திக்கு ஒரு விஷயம் தோன்றுகிறது. கையில் உள்ள அப்பாவின் டைரியில் கடைசியாக டிக் அடிக்கப்படாத குறிப்புகளை நிறைவு செய்து முடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறான் கார்த்தி. கடைசிப் பக்கத்தில் உள்ள குறிப்புகளை வாசிக்கிறான்.


*திவாகர்-ட பணம் வாங்கணும்

*பெரியவனுக்கு செஸ் போர்ட் வாங்கனும்

*அண்ணாச்சி கடைக்கு பாக்கி கொடுக்கணும்

*வண்டிக்கு டயர் மாத்தணும்

என 4 குறிப்புகள். முதல் குறிப்பாக அம்மாவிடம் சென்று திவாகர்னா யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறான் . திவாகர் அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதையும் அவருடனான உறவையும் அம்மா விளக்கிக் கூறினார். ஏன் கேட்கிறாய் என்று கேட்கும்போதே காணவில்லை கார்த்தியை. உடனே வேகமாய் செல்கிறான் அப்பாவின் நண்பர் வீட்டுக்கு..

ஒருவழியாகஅப்பாவின் நண்பர் வீட்டிற்கு சென்றான். வாசலில் நின்று திவாகர் அங்கிள் என்று கூப்பிடுகிறான். யாரு என்றவாரே வெளியே வந்து பார்த்தார் திவாகர் . கதவைத் திறந்து யாருப்பா என கேட்கிறார், சிறிய சிரிப்புடன் அங்கிள் நான் கார்த்தி, உங்க ஃப்ரண்ட் மாணிக்கத்தோட பையன் என்கிறான். மகிழ்ச்சியுடன், அடடே யாரு வந்திருக்கா பாரு உள்ளவா தங்கம் என மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்து செல்கிறார். உட்காரவைத்து நலம் விசாரித்துவிட்டு,, கார்த்திக் மாணிக்கம் ம்ம்ம்... அப்படியே மாணிக்கம் மாதிரியே இருக்க என்றவாறு முதுகை தடவிக் கொடுக்கிறார். தன் மனைவியை அழைத்து யார் தெரிதா என் நண்பன் மாணிக்கத்தொட புள்ள என அறிமுகம் செய்துவிட்டு குடிக்க ஏதாவது எடுத்து வர சொல்கிறார் . பிறகு என்ன படிக்கிறாய், எங்கே என கேட்க,,,விஸ்காம் படிக்கிறேன் அங்கிள் கோயம்பத்தூர் -ல என்று சொல்றான் . பின் அப்பாவை பற்றி அப்பாவின் குணநலன்கள் அப்பாவுடன் ஆன நாட்களைக் குறித்து பேச ஆரம்பிக்கிறார் .. அவர் பேசும் போக்கில், பேசும் விதத்தில் அப்பாவுக்கும் திவாகர் அங்கிள் -கும் ஆன நட்பு நன்கு புரிகிறது கார்த்திக்கு.

அப்பாவைப் பற்றி திவாகர் அங்கிள் சொல்வதைக் கேட்டு பெருமிதம் அடைகிறான் கார்த்தி. இதற்கிடையில் குடிக்க காபி கொண்டு வந்தார் அம்மா. காபி குடித்தவாறே தான் வந்த வேலையை குறித்து பேச ஆரம்பிக்கிறான் கார்த்தி. இந்தமாரி அப்பா டைரியில் என்று ஆரம்பித்து விளக்கி கூறுகிறான். திவாகர் அங்கிள்-க்கு அடைபடுகிறது. மாணிக்கத்திடம் ஒரு நெருக்கடியான சமயத்தில் 5,000 ரூபாய் பணம் வாங்கியதாக கூறுகிறார் திவாகர் அங்கிள். அதை திருப்பிக் கொடுக்க மறந்து விட்டதாகவும் கூறுகிறார். ஏழு வருடம் கழித்து அதை வாங்க அவன் பையன் வந்து இருக்கான் என சிரித்துக்கொண்டே கூறுகிறார். பின் தன் பையன் வந்தவுடன் பணத்தை எடுத்து வீட்டிற்கே வந்து தருவதாக கூறுகிறார். அங்கிள் எதுக்கு வீணா அலச்சல் உங்க பையன் ட சொல்லி கூகுள் பே ல போட சொல்லுங்க னு சொல்றான் கார்த்தி. சிரித்தவாறே ம்ம்ம் டெக்னாலஜி என்று சொல்லி சரிப்பா என சொல்கிறார்.. சிரித்துக் கொண்டே தம்பி வட்டி ஏதும் சேர்த்து தரணுமா என கிண்டலாக கேட்கிறார். பதிலுக்கு ஐயோ அங்கிள் அதெல்லாம் வேண்டாம் என சிரித்துக்கொண்டே சொல்கிறான் கார்த்தி. நேரம் சென்றது, பேசி முடித்துவிட்டு தன் மொபைல் நம்பரை கொடுத்து விட்டு கிளம்பினான் கார்த்தி.

Representational Image
Representational Image

அடுத்து அண்ணாச்சி கடைக்கு,,, தன் வீட்டின் அருகில் உள்ள அண்ணாச்சி கடைக்கு செல்கிறான். தன் சிறு வயதில் சிறிய பெட்டிக் கடையாக இருந்த கடை இப்போது நல்ல வளர்ச்சி அடைந்து பெரிய கடையாக இருக்கிறது. கடைக்குள் சென்று அண்ணாச்சி எனக் கூப்பிட்டான் . தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டான்.பக்கத்து தெருவுல மாணிக்கம் னு ஆரம்பிக்கிறான் . அட மாணிக்கம் பையனா பா , அடையாளமே தெரியல நல்லா வந்துட்ட . சிரிச்சிட்டே ஆமா அண்ணாச்சி , பரவாலயே கண்டுபிடிச்சுடிங்கனு சொல்றான் . ம்ம் அப்ரோம் என்ன சமாச்சாரம்னு அண்ணாச்சி கேக்க , ,இந்த மாரி அப்பா இறந்து இன்னையோட 7 வருஷம் ஆகுது . அனைத்தையும் விளக்குகிறான் கார்த்தி . ச்ச ஆமா ல வருஷம் போனதே தெரில, அப்றம் அப்டி அப்பா வ பத்தி பேசுராங்க அண்ணாச்சி. சரிப்பா வேற என்ன னு அண்ணாச்சி கேக்க வந்த விஷயத்த சொல்கிறான்.

``இந்த மாரி அப்பா டைரி ல உங்களுக்கு பாக்கி தரணும்னு எழுதி இருந்தது அது எவ்ளோ னு ஏதும் தெரியுமா?’’ என்று கேட்கிறான் ,

சிரித்துக் கொண்டே கார்த்தியின் தோளை தட்டிக் கொடுத்தவாறு அதெல்லாம் இருக்கட்டும்பா என்று சொல்கிறார். இல்ல அண்ணாச்சி எவ்ளோ-னு சொல்லுங்க என்று கேட்டு கொண்டே இருக்கிறான் கார்த்தி .. உடனே அண்ணாச்சி சிரித்துக் கொண்டே 80 ரூபாய் என்கிறார்.

``எப்டி 80 ரூபானு உடனே சொல்டீங்க’’ என்று ஆச்சர்யமாக கேட்கிறான் கார்த்தி. சிரித்தவாறே விளக்க ஆரம்பிக்கிறார் அண்ணாச்சி,,,. ``மாணிக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைக்கு வந்து 4 ரோஸ் மில்க்கும் ஒரு சிகரெட்டும் இரண்டு கடலை மிட்டாயும் வாங்கிட்டு போவான், அப்புறம் மாச கடைசில மொத்தமா பணம் தருவான், அதான் அந்த 80. அப்டி வேற எதுவும் ஜாமா வாங்கினா கூட காசு கொடுத்து தான் வாங்குவான் . அதனால அந்த 80 ரூபா மட்டும் மாறாது’’ என்கிறார். இதிலிருந்து கார்த்திக்கு அண்ணாச்சிக்கும் அப்பாவுக்குமான பிணைப்பு புரிகிறது. அந்த 4 ரோஸ்மில்க் கணக்கும் புரிகிறது . மற்றும் அப்பாவின் அந்த விசித்திரமான வெள்ளிக்கிழமை சிகரெட் பழக்கத்தை நினைத்து ஒரே சிரிப்பு கார்த்திக்கு. பின் அண்ணாச்சியிடம் பணத்தை கொடுத்துவிட்டு ரோஸ் மில்க்கும் வாங்கினான். பின் நன்றி அண்ணாச்சி போயிட்டு வரேன் என்று சொல்ல நல்லதுபா ரொம்ப சந்தோசம் என சிரித்துக்கொண்டே கூறினார் அண்ணாச்சி. பின் கடந்து சென்றான்.

அடுத்த குறிப்பு வண்டி டயர் மாத்தணும். விரைவாய் வீட்டிற்கு சென்று அப்பாவின் பைக்கை பார்க்கிறான். மிகவும் பழுதடைந்த நிலையில் துருப்பிடித்து டயர் வெடித்து மோசமான நிலைமையில் உள்ளது பைக். பின்னர் பைக்கை வெளியே எடுத்து ஓரளவு சுத்தம் செய்துவிட்டு மெக்கானிக் கடைக்கு கொண்டு செல்கிறான். முழுமையாக அனைத்தையும் புதிப்பித்து டயர் மாத்தி புதுமையாக மாற்றுகிறான் பைக்கை. நெடு நேரத்துக்கு பின் சர்வீஸ் செய்து எடுத்து விட்டு வீட்டிற்கு செல்கிறான். பைக்கில் செல்லும் போது அத்தனை நினைவுகள் அப்பாவைப் பற்றி, இதே பைக்கில் அப்பாவுடன் சிறுவயதில் சென்ற நாட்கள் ,நினைவுகள் கார்த்திக்கு .பின் வீடு சென்றடைகிறான் .வீட்டிற்கு சென்று வண்டியை விடுகிறான் அம்மா , அக்கா அனைவரும் வியப்புடன் பார்க்கிறார்கள். ஏதோ புரிந்து கொள்ள முடிகிறது அவர்களால். உள்ளே சென்று அண்ணனை சத்தமாக அழைக்கிறான் அண்ணனை கூப்பிட்டு ஏற்கனவே வரும் வழியில் வாங்கி வந்த செஸ் போர்டை அண்ணனிடம் கொடுக்கிறான். அண்ணனுக்கு ஒண்ணுமே புரியவில்லை , சிரித்துக்கொண்டே அப்பா தர சொன்னாங்கடா என்று கூறி விட்டு அறைக்கு சென்றான். சோஃபா- இல் இருந்த ரோஸ் மில்க் பாக்கெட்டுகளை பார்த்ததும் நடந்ததை எல்லாம் வைத்து போதுமான அளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது அம்மாவினால்.

Representational Image
Representational Image

டைரியை திறந்து பெரியவனுக்கு செஸ் போர்டு வாங்கணும் குறிப்பு பக்கத்தில் ஒரு டிக், அண்ணாச்சி கடைக்கு பாக்கி கொடுக்கணும் பக்கத்தில் ஒரு டிக், வண்டி டயர் மாத்தணும் பக்கத்தில் ஒரு டிக் அடித்தவாரே அப்பா அப்பாவைப் பற்றி நினைத்து கலங்குகிறான் கார்த்திக். திடீரென்று ஒரு மெசேஜ் கார்த்தி மொபைலுக்கு 5000 கிரெடிட்டட் என்ற மெசேஜை பார்த்தவுடன் சிரித்தவாறே 4 வது குறிப்பையும் டிக் செய்கிறான் கார்த்தி. பின் அப்பாவை நினைத்து உருக்கமாக சிந்திக்க ஆரம்பிக்கிறான். அப்பாவின் அன்பு பாசம் அர்ப்பணிப்பு அனைத்தையும் நினைத்து பார்க்கிறான். தனக்கான எதுவுமே செய்து கொள்ளாமல் தன் குடும்பம் என உழைத்து தேய்ந்த அப்பாவின் டைரியில் உள்ள நிறைவு பெறாத குறிப்புகளை நிறைவு செய்து சிறிதளவு சந்தோஷத்துடன் பேனாவைக் கையில் எடுத்து ஏதோ எழுதுகிறான் டைரியில். கண்ணீர் துளிகள் சொட்ட சொட்ட கலங்கிய கண்களுடன் thank you என எழுதினான். கண்ணீர் துளி டைரியில் ஃபுல் ஸ்டாப் இட தேங்க்யூ அப்பாவுடன் நிறைவடைகிறது "அப்பாவின் டைரி".


தனக்கானவர்களுக்காக தன்னலமற்று தேயும் தன்னிகரில்லா உறவு *தந்தை*

-சம் மாணிக்கம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.