Published:Updated:

தானமும் தவமும் காகமும்! | My Vikatan

காகம்

அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்தபிறகு காக்கைக்கு உணவிடுதலை பன்னெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.இருந்தாலும் ஒருசிலருக்கு..

தானமும் தவமும் காகமும்! | My Vikatan

அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்தபிறகு காக்கைக்கு உணவிடுதலை பன்னெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.இருந்தாலும் ஒருசிலருக்கு..

Published:Updated:
காகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

‘அரிதரிது மானிடராய் ஆதல் அரிது’

என்று ஆரம்பித்த ஔவையார் இறுதியாகத்

‘தானமும் தவமும் தான்செய்வ ராயின்

வானவர் நாடு வழிதிறந் திடுமே!

என்று செய்யுளை இறுதி செய்வார்!

மரபுகளும், நம்பிக்கைகளுமே மகிழ்வான வாழ்வின் அடித்தளங்கள் என்பது ஆண்டாண்டு காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது!’நதி மூலம்,ரிஷி மூலம் பார்க்கக் கூடாது!’என்பதும் பழம்பெரும் வாக்கு.

இந்த நிலையில்தான் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், சஷ்டி போன்ற விரதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன!மாதாமாதம் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாத அமாவாசைதான் மஹாளய அமாவாசை என்ற சிறப்பைப் பெறுகிறது. சாதாரணமானவர்கள் ஆத்மாக்கள் என்றால் காந்தி, மகாத்மா என்றழைக்கப்பட்டார் என்பதிலிருந்தே மஹா என்ற சொல்லின் மகத்துவத்தை நாம் உணர்ந்திடலாம்!

ஆவணி மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் மஹாளய பட்சம் என்றழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை மிகுந்த சிறப்புக்குரியன என்றாலும், மற்ற இரண்டு அமாவாசைகளிலும் அந்தந்த நாட்களில் மட்டுமே முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் மஹாளய பட்சம் உள்ள 15 நாட்களிலும் தர்ப்பணம் கொடுக்கலாமென்பது இப்பட்சத்தின் தனிச் சிறப்பாகும்.

புரட்டாசி மஹாளய அமாவாசை
புரட்டாசி மஹாளய அமாவாசை

அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்தபிறகு காக்கைக்கு உணவிடுதலை பன்னெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.இருந்தாலும் ஒருசிலருக்கு, ‘பறவையினத்தில் ஏகப்பட்ட பறவைகள் இருக்கையில் போயும் போயும் இந்தக் காக்கைகளுக்குத் தானா உணவிட வேண்டும்?’என்ற எண்ணமும், காக்கை குறித்த ஏளனமும் உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காகத்தின் அருமை புரியாதவர்களே அவ்வாறு சொல்கிறார்கள் என்பதே பெரியோரின் கருத்து .ஒரு முறை காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் மஹா பெரியவரிடம்’எத்தனையோ உயர்வான பறவைகள் இருக்கையில் நம் முன்னோர்களை காக்கை மூலந்தான் காண வேண்டுமா?இது நம் முன்னோர்களை இழிவு படுத்துவதாகவல்லவா தோன்றுகிறது!’ என்று பணிவாக வினவ,பெரியவரோ மெல்லப் புன்னகைத்தபடி கூற ஆரம்பித்தாராம்.

நாம் காகத்தைக் ‘காக்கா’ என்று தானே அழைக்கிறோம்.அதுவும் ‘காகா’ என்று தானே கரைகிறது? அது பேசும் மொழியிலேயே அதனை அழைப்பதே அதன் தனிச் சிறப்பு!’ மியாவ்’என்று கத்தும் பூனையை நாம் மியாவ் என்று அழைப்பதில்லை! ’கீகீ’ என்று பேசும் கிளியை கீகீ என்று பெயரிட்டு அழைப்பதில்லை! கா என்றால் ‘காப்பாற்று’,’பாதுகாப்பு கொடு’என்றுதானே பொருள். அதற்கு உணவு வைத்து விட்டுக் ‘காகா’என்று கூப்பிடுகையில்’காப்பாற்றுங்கள்!காப்பாற்றுங்கள்!’என்று நம் முன்னோரை வேண்டுவதாகவல்லவா பொருள், வேறு எந்தப் பறவையையும் இவ்வாறு கூப்பிட முடியாதே!

காகம்
காகம்

எங்கும் அதிகமாகக் காணப்படுவதாலும், எல்லாவற்றையும் உண்பதாலுந்தானே அதனைத் தகுதி குறைந்த சாதாரணப் பறவையாக எண்ணுகிறோம். உண்மையில் காகம் அழகிய, அறிவுள்ள பறவை. எப்படி என்று பார்க்கலாமா?

பிரம்ம முகூர்த்தம் அல்லது அமிர்த வேளையில் நம்மை எழுப்பி விட்டு ஜெபம் செய்யவும், அவரவர்களை அவரவர் தொழிலைச் செய்யச் செய்வதிலும் காகங்களின் பங்கு மகத்தானதல்லவா?சேவல் கூடச் சில நேரங்களில் முன்னதாகவே கூவி விட்டுப் பிரம்ம முகூர்த்தத்தைக் கோட்டை விட்டு விடும்.ஆனால் காக்கைகள் அவ்வாறு செய்வதேயில்லை!அதிகாலையை உலகுக்கு அணுதினமும் உணர்த்தி விடும்.

தனக்கு உணவு கிடைத்ததும் ‘கா கா’ என்று கரைந்து, சுற்றத்தைச் சேர்த்துக் கொண்டு பகிர்ந்துண்ணும் முறையை,ஆறறிவு படைத்த நமக்குமல்லவா பாடமாகப் போதிக்கிறது! அதனை எப்படித் தரம் தாழ்ந்த பறவையென்று வகைப்படுத்த இயலும்?

மீண்டும் மாலையில் உறங்கச் சொல்லும் முன்னர் காகா என்று கத்தி இறைவனுக்கு அன்றைய பொழுதிற்கான நன்றியையும் அல்லவா தெரிவித்துக் கொள்கிறது.அது மட்டுமல்ல!சாஸ்திரப்படி உயிரினங்கள் இரவில் உண்பது தடை செய்யப்பட்டுள்ளது!எந்த ஒரு காக்கையும் இருட்டிய பிறகு உணவு உண்பதில்லை.இதன் மூலம் உயிரினங்களுக்கே உயரிய பண்பைப் போதிக்கிறதல்லவா!இப்படி எல்லா வகையிலும் உயர்ந்து விளங்கும் காக்கையை நாம் நமது பித்ருக்களின்,அதாவது முன்னோர்களின் வடிவமாக வணங்கிப் போற்றுதல்தானே சிறப்பு!

அதோடு நிற்கவில்லை!அத்வைதப்படி கொடுப்பவர்,வாங்குபவர் இருவருமே திருப்தியடைந்து மகிழ வேண்டும்.முன்னோர்களாக எண்ணிக் காகங்களுக்கு உணவிடுகையில் நாமும் மகிழ்கிறோம். அவைகளும் மகிழ்ந்து உண்கின்றன. இன்றைக்கும் கிராமப்புறங்களில் அமாவாசையன்று காகம் உணவை எடுக்கவில்லையென்றால், அது உணவை எடுக்கும் வரை உண்ணாமல் காத்திருப்போர் அநேகருண்டு!

காகம்
காகம்

காகங்களின் நற்பயன் இன்னும் முடியவில்லை. ஆல மரங்களும், அரச மரங்களும்  எக்காலமும் சிறப்புப் பெற்றவை. பிள்ளைப்பேறு இல்லாத ஒரு பெண்மணி ‘அரசினைச் சுற்றி அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்!’என்று ஊரில் கூறுவார்கள். அரச மரத்தின் மீது அந்தப் பெண்மணி கொண்ட நம்பிக்கையே அவ்வாறு கூறக் காரணம். அந்த அரச மரத்தை யாரும் விதை போட்டோ,போத்து வைத்தோ உண்டாக்க முடியாது. அதனை வளரச் செய்வது காகங்களே. அதைப் போலவே ஆல மரங்களும்!

இவ்விரண்டின் விதைகளை உட்கொள்ளும் காகங்கள் தாங்கள் இடும் எச்சத்தின்(கழிவு) மூலமாக அவற்றைப் பூமி மீது வளரச் செய்கின்றன. இந்த மகத்தான பணியை மனிதர்களாகிய நம்மால் கூடச் செய்ய முடியாது. ஆலும்,அரசும் சுற்றுப்புறச்சூழல் நலத்திற்கு மகத்தான பங்களிப்பவை!

     எனவே, நமது முன்னோர்கள் எதையும் காரண காரியங்கள் இன்றிச் சொல்லி வைக்கவில்லை!சமுதாய நோக்கும் மக்களின் நல்வாழ்வு ஒன்றுமே அவர்களின் எண்ணத்தில் எப்பொழுதும் நிழலாடி வந்திருக்கிறது! 

   உரிய விளக்கத்தைப் பெரியவர் விளக்கமாகக் கூறியதும்,அந்த பக்தர் திருப்தியடைந்து மஹா பெரியவரை மீண்டும் ஒரு முறை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிச் சென்றாராம்!பெரியவர் கூறியது அந்தப் பக்தருக்கு மட்டுமல்ல…நம் அனைவருக்குந்தான்!

    அமாவாசை தினங்களில் மட்டுமல்லாது அணுதினமும் காக்கைகளுக்குச் சோறிடுவதை வழக்கமாக்கிக் கொள்வோம்!பித்ருக்களை மட்டுமல்ல,நாம் வாழும் இந்தப் பூமிப் பந்தையும் செழிப்பாக்கும் சிறப்புப் படைத்தவை இந்தக் காக்கைகளே!

-ரெ.ஆத்மநாதன்,

  காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.