Published:Updated:

மொரோக்கோ அணியின் மிகக் கண்ணியமான தோல்வி! | My Vikatan

Morocco team

அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்கு காரணமான நடுவரின் பெனால்டி தீர்ப்பைப் பற்றி, இந்த வருட உலகக் கோப்பை அர்ஜெண்டினாவுக்கு என முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சலசலப்புகள் தொடங்கிவிட்டன.

மொரோக்கோ அணியின் மிகக் கண்ணியமான தோல்வி! | My Vikatan

அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்கு காரணமான நடுவரின் பெனால்டி தீர்ப்பைப் பற்றி, இந்த வருட உலகக் கோப்பை அர்ஜெண்டினாவுக்கு என முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சலசலப்புகள் தொடங்கிவிட்டன.

Published:Updated:
Morocco team

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

த்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றில் குரோஷியாவை 3-0 கோல் கணக்கில் வென்று ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறது அர்ஜெண்டினா.

சவுதி அணியிடம் வாங்கிய சற்றும் எதிர்பாராத அடியிலிருந்து மீண்டு,  உத்வேகம் பெற்ற அர்ஜெண்டினா அணியை மீண்டும் ஒரு முறை உலகக் கோப்பைக்கு மிக அருகே அழைத்துவந்திருக்கிறார் மெஸ்ஸி !

மெஸ்ஸி
மெஸ்ஸி

முதல் இருபது நிமிடங்கள் குரோஷி மிக சிறப்பாகவே விளையாட, பந்தும் பெரும்பான்மையான நேரம் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ரொனால்டோ, மெஸ்ஸி அளவுக்கு ஊடக முக்கியத்துவம் கொடுக்கப்படாத குரோஷிய நடுக்கள வீரர் லூகா மாட்ரிச்சின் விளையாட்டும் அபாரம்.

அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்கு காரணமான நடுவரின் பெனால்டி தீர்ப்பைப் பற்றி, இந்த வருட உலகக் கோப்பை அர்ஜெண்டினாவுக்கு என முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சலசலப்புகள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு முறையும் அரையிறுதியிலிருந்து இது போன்ற "ஆருடங்கள்" கிளம்புவது சகஜம் தான்!

34ம் நிமிடத்தின் முதல் கோலுக்கு நடுவரின் பெனால்டி தீர்ப்பு காரணமாக அமைய, 39 மற்றும் 69ம் நிமிடங்களில் ஜூலியன் ஆல்வெரெஸ் அடித்த இரண்டு கோல் காட்சிகளும் கால்பந்து ரசிகர்கள் காணத்துடிக்கும் "மேஜிகல் மொனெட்ஸ்".

அர்ஜெண்டினா அணி
அர்ஜெண்டினா அணி

குரோஷிய தடுப்பு அரணை ஒற்றை ஆளாக தாண்டி ஆல்வெரெஸ் தன் முதல் கோலை அடிக்க, இரண்டாவது கோல் 35 வயது மெஸ்ஸி விவேகமும் 22 வயது ஆல்வெரெஸ் வேகமும் கலந்த அற்புத கலவை.

அவ்வப்போது நடுவரிடம் உரையாடிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்த மெஸ்ஸி, பந்து தன் காலுக்கு வந்த அந்த நொடியில் பந்துடன் சூறாவளியாய் சுழன்று எதிரணியின் ஆபத்தான கோல் எல்லையில் தாக்குப்பிடித்துச்  சரியான நேரத்தில் ஆல்வெரஸுக்கு கடத்திய அந்த சில நொடிகள் மெஸ்ஸி போன்ற ஒரு சில வீரர்களுக்கே உரித்தான மாய தருணங்கள்.

மெஸ்ஸி
மெஸ்ஸி

குரோஷியாவுக்கு எதிராக இரட்டை கோல் அடித்ததன் மூலம், கால்பந்து வீரர் பெலேவுக்கு பிறகு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இரட்டை கோல் அடித்த மிக இளம் வயது வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார் 22 வயது ஜூலியன் ஆல்வெரெஸ். 1958ம் ஆண்டில், தனது 17வது வயதில் இரட்டை கோல் சாதனையைப் படைத்தார் பெலே.

 ரசியல் ஒரு ஒட்டுண்ணி. மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளில் தானாகவே வந்து அது ஒட்டிக்கொள்ளும். பிரான்ஸ் மற்றும் மொரோக்கோவுக்கு இடையே புதன்கிழமை நடந்த அரையிறுதி போட்டிக்கான எதிர்பார்ப்பில் அரசியலும் நிறையவே கலந்திருந்தது.

மக்ரேப் எனப்படும் வடக்கு ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா போன்ற நாடுகள் பிரெஞ்சு காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகள். இந்நாடுகளின் வம்சாவழியினர் பிரான்சில் பெருவாரியாக வாழுகின்றனர். இந்நாடுகளுக்கு இடையிலோ அல்லது இந்நாடுகளில் ஏதாவது ஒன்று பிரான்சுடன் விளையாடும் கால்பந்து போட்டிகளின்போதோ நடைபெறும் வெற்றிக்கொண்டாட்டங்கள் பல சமயங்களில் கலவரங்களில் முடியும்.

Achraf Hakimi
Achraf Hakimi
Achraf Hakimi Twitter

மேற்சொன்ன மூன்று நாடுகளும் அரசியல் ரீதியாகச் சகோதர எதிரிகள். மொரோக்கோவின் வெற்றிச் செய்திகள் அல்ஜீரிய ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இப்படியான அரசியல் ஒரு புறம் என்றால் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்த மொரோகோவுக்கு பின்னால் ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளின் அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு விட்டனர். 25000க்கும் மேற்பட்ட மொரோக்கோ ரசிகர்கள் செங்கடலாகத் திரண்டிருந்த அல் பயத் அரங்கத்தில் ஏறக்குறைய 5000 பிரெஞ்சு ரசிகர்களைக் கொண்ட நீல குழு சிறிய நீர் குட்டையாகத் தெரிந்தது!

இதுவரையிலும் நட்பு ரீதியாக மட்டுமே மோதிக்கொண்ட இரண்டு அணிகளும் சந்தித்த முதல் தொழில்நுட்ப ரீதியிலான போட்டியில் 2-0 கோல் கணக்கில் வென்று மொரோக்கோ சிங்கங்களின் கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிரான்ஸ்!

தனி நபர்கள் தங்களின் தனித்த பாணி விளையாட்டுகளால் கவரும் போட்டிகள், ஒட்டுமொத்த அணியும் ஒற்றுமையாக இறுதி நொடிவரை மூச்சை பிடித்துக்கொண்டு விளையாடும் விளையாட்டுகள் எனக் கால்பந்து போட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். பிரான்ஸ் மொரோக்கோவுக்கு இடையில் நடந்தது இரண்டாவது ரகம்.

MOROCCO
MOROCCO
Achraf Hakimi Twitter

ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே அந்துவான் கிரீசுமன் மிக அழகாகக் கடத்திய பந்து எம்பாப்பேவின் இரண்டு முயற்சிகளுக்குப் பின்னர் தெயோ ஹெர்னான்டேஸ் கால்களுக்கு வர,... கோல் !

11வது நிமிடத்தில் மொரோக்கோவின் உனாஹி அடித்த கோல் பிரான்ஸ் கோல் கீப்பரால் தடுக்கப்பட, 17வது நிமிடத்தில் பிரான்சின் ஜிரோட் முயன்ற கோல் மொரோக்கோ கோல் கம்பத்தில் முட்டி நழுவியது. இப்படியாக இரண்டு அணிகளுக்குமே பல கோல் வாய்ப்புகள் தவறின !

 நீண்ட நேரம் 1-0 என்ற நிலையில், வெற்றி வாய்ப்பு எந்த நேரமும் மொரோக்கோ பக்கம் சாயலாம் எனப் பதைபதைக்க வைத்துக்கொண்டிருந்த விளையாட்டின் 80வது நிமிடத்தில் களமிறங்கிய சில நொடிகளிலேயே பிரான்சின் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார் கோலோ முவானி.

Antoine Griezmann
Antoine Griezmann

அனுபவமிக்க வீரர்களுடனும் அணி மனப்பான்மையுடனும் ஒருங்கிணைந்து விளையாடிய பிரெஞ்சு அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியைப்போலவே அரணாக நின்றவர்கள் அந்துவான் கிரீசுமன், ஒரேலியன் சுவாமெனி  மற்றும் கோல்கீப்பர் ஹூயூகோ லோரிஸ்.

மொரோக்கோ அணி அடைந்தது மிகக் கண்ணியமான தோல்வி.

ஆட்டத்தின் இறுதியில், பிரெஞ்சு பயிற்சியாளர் மட்டுமல்லாமல் அல் பயத் அரங்கத்துக்கு வந்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதியின் கண்களிலும் உணர்ச்சி பிரவாகம்...

 பல்வேறு அரசியல் பிரச்சனைகளையும் பொருளாதார சிக்கல்களையும் சில நாட்களாவது மக்கள் மனதிலிருந்து நீக்க, இம்மானுவேல் மக்ரானுக்கும் இந்த வெற்றி மிக அவசியம் !

இம்மானுவேல் மாக்ரான்
இம்மானுவேல் மாக்ரான்

அர்ஜெண்டினாவும் பிரான்சும் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல வரும் ஞாயிறன்று இறுதிச் சுற்றில் மோதப்போகின்றன...

வெல்லப்போவது உலக கோப்பையையும் வென்று எடுத்துக்கொண்டு ஓய்வு பெற விரும்பும் மெஸ்ஸியின் கனவா அல்லது மூன்று நட்சத்திரங்களைப் பெறத் துடிக்கும் பிரான்சின் ஆசையா என்பது அன்று தெரிந்துவிடும் !

 -காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.