Published:Updated:

சத்தமில்லாமல் அரங்கேறிய மற்றுமொரு நெகிழ்ச்சி தருணம்! - FIFA பகிர்வு | My Vikatan

Representational Image ( unsplash )

மன உறுதியுடன் உடல் உறுதியும் ஒரே புள்ளியில் இணைந்த மனிதனின் உத்வேகத்துக்கு உதாரணமான இந்த போட்டி, உலக கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகத் திகழும்.

சத்தமில்லாமல் அரங்கேறிய மற்றுமொரு நெகிழ்ச்சி தருணம்! - FIFA பகிர்வு | My Vikatan

மன உறுதியுடன் உடல் உறுதியும் ஒரே புள்ளியில் இணைந்த மனிதனின் உத்வேகத்துக்கு உதாரணமான இந்த போட்டி, உலக கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகத் திகழும்.

Published:Updated:
Representational Image ( unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

றக்குறைய ஒரு மாத காலம் உலகின் ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களை மட்டுமல்லாது கால்பந்து விளையாட்டை கவனிக்காதவர்களைக் கூட காது திருப்பச் செய்த கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றில், பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை வென்று மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கை பற்றியிருக்கிறது அர்ஜெண்டினா.

வெற்றி தோல்வியை அலசுவதற்கு முன்னதாக இந்த இறுதிப் போட்டி பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுபவத்தை மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்! மன உறுதியுடன் உடல் உறுதியும் ஒரே புள்ளியில் இணைந்த மனிதனின் உத்வேகத்துக்கு உதாரணமான இந்த போட்டி, உலக கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகத் திகழும்.

Lionel Messi
Lionel Messi

ட்டத்தின் ஆரம்ப நிமிடங்களிலிருந்தே மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணிதான் கோலோச்சியது. மொரோக்கோவின் தடுப்பு அரண் ஒன்றும் தகர்க்க முடியாதது அல்ல என நிரூபித்த பிரான்ஸ் அணியோ தட்டு தடுமாறித்தான் விளையாடியது , அவ்வப்போது பிரான்ஸ் அணி பந்தினை தட்டிபறித்த போதெல்லாம் சிலந்திவலையாகப் பின்னி, பந்தினை மீட்டு பிரான்ஸ் வீரர்களை அலைக்கழித்தது அர்ஜெண்டினா.

போட்டியின் 23வது நிமிடத்தில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பளே செய்த தவறினால் கிடைத்த பெனால்டி, மெஸ்ஸியின் கால்களில் மிக இலகுவான கோலாக மாறியது.

 36வது நிமிடத்தில் டி மரியா அடித்த இரண்டாவது கோலுடன் ஆட்டத்தில் ஆணித்தரமாகக் கோலாச்சியது அர்ஜெண்டினா...

Lionel Messi
Lionel Messi

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் டி மரியா, மெக் ஆலிஸ்டர், மெஸ்ஸி ஆகிய மூவரும் பந்தினை தலா 11, 10 மற்றும் 9 முறை கைப்பற்றியிருந்தனர்.

 அந்த தருணத்தில்,  மெஸ்ஸியின் தலைமையில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருக்கும் அர்ஜெண்டினாவிடம் திணறும் பிரான்சின் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் தோல்வி அவமானகரமானதாக இருக்கும் என்றே கணித்திருப்பார்கள்...

ஆட்டத்தின் இடைவேளையின் போது,  "அவர்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறோம் என்ற நினைப்புடன் விளையாடுகிறார்கள் ," எனப் பிரெஞ்சு அணியின் பயிற்சியாளர் திதியே தெஷாம், பிரெஞ்சு ஊடகத்திடம் கூறியதும் அதையே பிரதிபலித்தது ,

ஆனால்... 80வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நிக்கோலஸ் ஒட்டன்மெந்தியின் தவறினால் கிடைத்த பெனால்டியை பிரான்சின் கிலியான் எம்பாப்பே கோலாக மாற்றிய தருணத்திலிருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்தது பிரான்ஸ் அணி.

Lionel Messi
Lionel Messi

அடுத்த ஒரு நிமிடத்தில் கிலியான் எம்பாப்பெவின் இரண்டாவது கோல் ,

2 - 2 என ஆட்டம் சமன் செய்யப்பட்டத்திலிருந்து, ஏறக்குறைய உறுதியாகிவிட்டிருந்த வெற்றியின் தூரம் விலகத் தொடங்கியதில் அர்ஜெண்டினாவின் இருப்பும் தளர தொடங்கியது. தேறுமா எனச் சந்தேகம் கொள்ள வைத்த பிரான்ஸ் இறங்கி அடிக்க ஆரம்பித்தது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சமன் செய்யப்பட்டு, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போட்டியின் 110வது நிமிடத்தில் மெஸ்ஸியின் மூன்றாவது கோல் ,...

அதைத் தொடர்ந்த ஆறாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை பிரான்சுக்குச் சாதகமான கோலாக மாற்றி, ஆட்டத்தை மீண்டும் சமன் செய்தார் எம்பாப்பே , இந்த போட்டியின் மூன்று கோல்களின் மூலம் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மூன்று கோல்கள் அடித்த சாதனையாளர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார் எம்மாப்பே. பிரான்சின் ஜீனுதீன் ஜித்தான், பிரேசில் நாட்டு பெலே மற்றும் வாவெ, இங்கிலாந்தின் ஜியோப் ஹர்ஸ்ட் ஆகியோர் முந்தைய சாதனையாளர்கள்.

kylian mbappe
kylian mbappe
Twitter

கூடுதல் நேரத்திலும் "டை" ஆன விளையாட்டு பெனால்டி ஷூட் அவுட்டுக்கு செல்ல, அதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது அர்ஜெண்டினா.

 1978 மற்றும் மரடோனா தலைமையில் 1986ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை மெஸ்ஸியின் தலைமையில் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜெண்டினா. 24 வயது கிலியான் எம்பாப்பே எனும் துடிப்பான இளம் கால்பந்து வீரனின் கடினமான தடைகளை தாண்டி மெஸ்ஸி எனும் 35 வயது கால்பந்து மாயாவியின் வெற்றி மகுடத்தை வந்தடைந்திருக்கிறது இந்த உச்ச அங்கீகாரம்.

மெஸ்ஸி என்ற தனித்த வீரனுடன் அவர் சார்ந்த அணியின் கூட்டு முயற்சியையும் இங்கே குறிப்பிட வேண்டும்...

 அந்துவான் கிரீசுமன், ஒலிவியர் ஜிரூட் போன்ற பிரெஞ்சு வீரர்கள் கிலியான் எம்மாப்பேவுடன் சேர்ந்து கட்டமைக்கத் தோற்ற கூட்டு முயற்சியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றதே அவர்களின் பலம்.

 கோப்பை கனவு தகர்ந்ததில் துவண்டு நின்ற,  "தங்கக் காலணி" விருதினை வென்ற எம்பாப்பேவை மைதானத்துக்குள் இறங்கி பிரெஞ்சு அதிபர் அணைத்து ஆறுதல் கூறியது நெகிழ்வான நிகழ்வு , இத்துடன் சத்தமில்லாமல் மற்றொரு மனதுக்கு நெகிழ்வான பிரெஞ்சு சாதனையும் இந்த இறுதிப் போட்டியில் நிகழ்ந்தது...

lilian thuram
lilian thuram

39ம் நிமிடத்தில் களத்தில் இறங்கிய பிரெஞ்சு வீரர் மார்க்குஸ் துய்ராமின் தந்தை லிலியான் துய்ராம் 1998ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரெஞ்சு அணியில் விளையாடியவர். மகனின் ஆட்டத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்தார் தந்தை.  தந்தைக்குப் பிறகு அவரது மகனும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது இதுவே முதல் முறை ,

ர்ஜெண்டினாவின் வெற்றிக்கு வாழ்த்து கூறியதுடன் மெஸ்ஸி மற்றும் எப்மாப்பேவுக்கும் டிவிட்டரில் வாழ்த்து சொன்ன பெலே, டியாகோ மரடோனா இப்போது புன்னகைத்துக் கொண்டிருப்பார் எனக் குறிப்பிட்டிருந்தார்...

கால்பந்தை மதமாகப் போற்றும் தேசத்தை சேர்ந்தவரான மரடோனாவின் ஆத்மா மெஸ்ஸி முத்தமிட்ட கோப்பைக்கு அருகிலேயே தான் சிரித்துக்கொண்டிருந்திருக்கும் !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.