Published:Updated:

ஷேர் மார்கெட் முதலீடு அரசு ஊழியர்களுக்கு செட் ஆகுமா? - வாசகர் வாய்ஸ்

Representational Image
Representational Image

வேலைக்கு சேர்ந்த முதல் வருடமே 25 ஆண்டு கால கடன், வாழ்நாள் கடன் என கடன்காரனாக்கிய வங்கிகள் மூலம் பெற்று, வீடு, கார் ஆகிய எளியமுறையில் கடனுடன் சேர்த்து பெற்ற வசதிகள் நம்மை குருடாக்கியது தான் மிச்சம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொஞ்சம் நீளமான கட்டுரைதான். ஆனால், இந்த பெருந்தொற்று கால பொருளாதார சிக்கல்களை கடக்க உதவும். இதனை வாசித்தல் கண்டிப்பாக சிறிதாவது நலன் பயக்கும். நம்பி வாசியுங்கள்.

பொருளாதாரம் குறித்து வெளிவரும் சமீபத்திய செய்திகளை நம்புகிறோமா, இல்லையா? அல்லது இவை அரசியல் ரீதியான கருத்துகளா என்ற விஷயத்திற்குள் எல்லாம் நாம் செல்ல வேண்டாம்.

அரசியல் கூட பேசவும் வேண்டாம்.

பொருளாதாரம் படித்தவர்கள் "Demand-Supply chain" பற்றி அறிவார்கள்.

ஆனால், நாம்

"Supply, demand, need" என மாற்றி பார்ப்போம்.

இவற்றில் நமக்கு சொல்லும் அர்த்தம் பற்றி பின்புலம் அறிந்தால்

நாம்,

நம் குடும்பம்,

நம் தேவைகள்,

நம் அபிலாஷைகள்,

நம் கடன்,

நம் தாக்குபிடிக்கும் திறன்,

இறுதியாக நம் சேமிப்பு ஆகியன குறித்த சில அடிப்படை கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதிப்பது எந்த காலகட்டத்திற்குமே நல்லதுதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுவோம்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை பற்றி சற்று திரும்பி பார்ப்போம்.

வெகு கட்டுப்பெட்டித்தனமான ஒரு வாழ்க்கை முறை நம்முடைய அரசு ஊழியரின் வழக்கம்.

Representational Image
Representational Image

"நாட்டிலேயே, நிலையான வருவாய் நமதே.."

சம்பளம் கூடுதல் / குறைவு என்பதெல்லாம் வேறு,

ஆனால், மாதம் பிறக்கும் போது கையில் இத்தனை பைசா இருக்கும் என்ற கணக்கு நமக்கு உண்டு என்பதே நல்ல விசயம் தான்.

வரவு எட்டணா,

செலவு ஏழரையனா,

சேமிப்பு அரையணா,

இந்த கணக்கில் இருந்த வரை தடுமாற்றம் இல்லை.

நிலையான கணக்கில் வரும் வருமானம் என்பதால்,

அரசு வரித்துறைகளிடம் அதிகமாக இழப்பதும் நாம் தான் என்பது ஒரு பக்கம் என்றாலும், மாதம் பிறந்தால், செலவுகளை செய்ய போதிய கையிருப்பு உண்டு என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை.

எனவே, இன்றைய இந்த பெருந்தொற்று கஷ்ட காலத்தில் பேராசைப்படாமல், இருப்பதை கொண்டு வாழ கற்ற குடும்பங்கள் மட்டுமே நிறைவாக வாழ இயலும்.

சரி... இது என்ன சொந்த பெருமை பேசும் வகையில் நீள்கிறது என்ற சலிப்பா?

Demand, Supply theory பற்றி படித்திருப்பீர்கள்.

இது தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்துவதில்லை.

இந்த விதிப்படியே

ஒரு நாட்டின்,

ஒரு வீட்டின் பொருளாதாரமும் நடக்கும் என்பதால், நம் அரசு ஊழியரின் supply குறித்த நம் எண்ணத்தை நிலைநிறுத்தவே இத்தனை பீடிகை.

Supply சரி.. Demand என்பது அவரவர் மனநிலை பொறுத்தது அல்லவா?

இங்கேதான் பெரும்பான்மையானோர் சறுக்குகிறோம்.

இதற்கு பெரிய பொருளாதார அறிவோ, ஆராய்ச்சியோ வேண்டாம். நம் supply திறனில், அதாவது இங்கு நம் நியாயமான, நேர்மையான சம்பாத்திய திறனில் கிடைக்கும் வருமானம் தான் ஒரு அரசு ஊழியரின் supply.

இந்த supply திறனிற்கேற்றவாறு நம் demand இருக்க வேண்டும்.

உதாரணமாக,

1. Monthly recurring demand ( மாதாந்திர மளிகை, கல்வி, வீட்டு பராமரிப்பு, வாடகை, போக்குவரத்து ஆகியன) - 50%

2. Future asset creation ( வீடு வாங்கிய முதல், கடன் திருப்பல், நகை சீட்டு போன்றவை)-30%

3. Casual Savings ( வங்கி சேமிப்பு, மாத சீட்டு போன்றவை)-15%

4. Emergency கையிருப்பு -5% என நான்கு வகை விகிதாச்சாரம்

வகுத்து வாழும் வரை எல்லாம் சுகமே.

Representational Image
Representational Image

2000 ம் வருடம் வரை இப்படி தான் வாழ்க்கை சென்றது,

இழுத்து பிடித்து குடும்பம் நடத்தினாலும் பொருளாதாரம் எல்லாம் கட்டுக்குள் தான் இருந்தது.

The great American recessionல் கூட நாமும், நம் நாட்டு தொழில் துறையும் தாக்குப் பிடித்தோம்.

நம்மை பார்த்து வியந்த மேற்கத்திய நிபுணர்களால், பின்பு தான் செயற்கையாக need குறித்த பிம்பங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

மேற்கத்திய வாழ்க்கைமுறை, வசதியான வாழ்க்கைமுறை, விளம்பரம் சார்ந்த வாழ்க்கைமுறை, நுகர்வோர் சார்பு வாழ்க்கைமுறை,

வீடு, கார்களை எளிய முறையில் கடன் மூலம் வாங்கும் தூண்டல், கடன் அட்டைகள் என ஆசையை தூண்டும் வாழ்க்கை முறை மாற்றமே தற்போதைய சிக்கலை உண்டாக்கின என்றால் தவறே இல்லை.

எல்லாவற்றிற்கும் மேல், அப்போதெல்லாம் பத்தாண்டுக்கு பின் வாங்க உள்ள வீடு, வாகனம், நிலம், கல்யாணம் இவற்றிற்கு சிறுக சிறுக சேமிக்கும் வழக்கம் மூலம் பணம் சேர்த்து அதற்கு பின், தலைநிமிர்ந்து, கம்பீரமாக அடைந்த சொத்துகளை எல்லாம் இன்று,...

வேலைக்கு சேர்ந்த முதல் வருடமே 25 ஆண்டு கால கடன், வாழ்நாள் கடன் என கடன்காரனாக்கிய வங்கிகள் மூலம் பெற்று, வீடு, கார் ஆகிய எளியமுறையில் கடனுடன் சேர்த்து பெற்ற வசதிகள் நம்மை குருடாக்கியது தான் மிச்சம்.

Inflation குறியீட்டுடன் வட்டி விகிதம் இணைக்க பெற்று நாம் வாங்கும் கடன் வட்டி, குட்டி என குறைந்தது இரண்டு மடங்காக திருப்பி கட்டுவது வாடிக்கையாகி விட்டது.

ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 25 லட்சம் கடனுடன் தினம் காலை கண் விழித்தால், அக்குடும்பம் எங்கிருந்து விளங்கும்?

இதை விட பெரிய சிக்கல் பங்கு வர்த்தகம் மீதான இளைஞர்களின் ஈர்ப்பு. Online மூலம் எளிய முறை investment என இன்றைய இளைஞர்கள் விட்டில் பூச்சியாய் இழுக்க படுகிறார்கள்.

நானும் கூட 2000- 2007 ம் ஆண்டு வரை பங்கு வர்த்தகத்தின் மீதும், அது தரும் உடனடி வருமானம் மீதும் வெறிப் பிடித்து அலைந்திருக்கிறேன்.

ஏன், ஒரு பைசா முதலீடு இல்லாமல், day-trading முறையில் ஒரே நாளில் ஒரு முறை 35000 ரூபாய் சம்பாதித்தேன். அப்போது அது பெரிய அளவு பணம்.

Suryachakra என்ற நிறுவனம் பணமழை பொழிந்த கதை எல்லாம் எம் வாழ்வில் உண்டு.

இந்த 35000 ரூபாய் கொண்டு ஒரே நாளில் motorbike ( அப்ப விலை அவ்வளவு தான்) வாங்கியதும் உண்டு.

ஆனால், புலி வால் பிடித்த கதையாக, இன்னும், இன்னும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிந்த காலம் அது.

அதே Suryachakra கம்பெனியால் 2011ல் 50000 நஷ்டம் அடைந்த கொடூர நாட்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

பங்கு வர்த்தகத்தால், பணம் சம்பாதித்தவர் நூற்றில் ஒருவர் கூட இருக்க முடியாது.

எனவே, கையில் கொஞ்சம் கையிருப்பு உள்ளதே, மொபைல் ஆப் மூலமே day trade செய்யலாமே என யாராவது ஆசை காட்டினால் முதலில் அவர் கூட பேசுவதை நிறுத்தி விடுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்கு வர்த்தகம் பக்கம் மட்டும் இன்னும் ஐந்தாண்டுக்கு தலை வைத்து படுத்துவிடாதீர்கள். பெரிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் நம் பங்கு வர்த்தக முதலீட்டினை வைத்து தான் குளிர் காய்ந்திருக்கிறார்கள்.

ஏனெனில், நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்களை குறிவைத்து பல பெரும்புள்ளிகள், பன்னாட்டு கம்பெனிகள்,

பங்கு வர்த்தக கலையை கரைத்து குடித்துள்ள வடநாட்டு தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்.

இன்றைய நிலையில், சம்பள பணத்தையோ, கஷ்டப்பட்டு சேமித்த பணத்தையோ பங்கு வர்த்தகத்தில் போடும் ஆசை இருந்தால், தயவு செய்து ஐந்தாண்டு பொறுங்கள்.

மீறி பணத்தை போட்டீர்களானால், ஆபத்துதான்.

சரி, என்ன தான் செய்யலாம்?

விலைவாசிக்கேற்ற சேமிப்புகளாக பாருங்கள். 7-8% வட்டி கிடைத்தால், அதுவே நல்ல முதலீடாக இருக்கும்.

போதுமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட RD, வங்கி FD, PF என ஐந்தாண்டுக்கு கொஞ்சம் அடக்கத்தோடே முதலீடு செய்யுங்கள்.

Representational Image
Representational Image

இன்னும் மூன்றாண்டுகளுக்காவது பண புழக்கம் குறைவாக தான் இருக்கும்.

வாங்கிய கடன்கள் அதிக வட்டி கேட்கும்.

முடிந்தால் flexible floating interest ல் இருந்து வீட்டு கடன், வாகன கடன்களை fixed interest வகைக்கு மாற்றி அமைதியாக இருங்கள்.

நம் கையில் போதிய சேமிப்பு எப்போதும் கையிருப்பாக இருக்கட்டும்.

நாம் பணத்தை இறுக்கி பிடித்து கொண்டால், தொழில்கள், கடைகளுக்கு பண புழக்கம் குறையுமே,

பின் "பொருளாதாரம், தொழில்துறை எப்படி மீண்டெழுவது?"

எனவே, கடன்களை வாங்கியாவது தொழில்களை, கடைகளை வளர்க்க வேண்டும் என்றெல்லாம்

சில அதிபுத்திசாலிகள் TV, Newspaper ல் வகை வகையாக வந்து தூண்டுவார்கள்.

இதைபற்றி எல்லாம் நம் அரசு ஊழியர்கள் கவலை பட வேண்டியதில்லை.

அதெல்லாம் தொழில் நடத்துபவர்கள் பாடு, வட்டிக்கு விடுபவர்கள் பாடு.

நாம் ஓய்வூதியம், வேலைக்கேற்ற ஊதிய உயர்வு என கஷ்டப்பட்ட போதெல்லாம் எந்த முதலாளியும், எந்த கடைக்காரரும் நமக்கு துணைக்கு வரவில்லை. எனவே மற்றவன் தொழிலை காப்பாற்றுகிறேன் என வலிய போய் கடனுக்கு பொருள் வாங்கி சொந்த காசில் சூடு வைத்து கொள்ளாதீர்கள்.

நாம் வாங்கும் பொருட்களின் உண்மையான தேவை ( இதை தான் need என முன்பே சொன்னேன்) ஆராய்ந்து, விலை சரியா என பார்த்து செலவு செய்யுங்கள்.

குறிப்பாக, ஒரு பொருள் ( உதாரணத்திற்கு மொபைல், car) தேவை எனில், அதை வாங்குவதை ஒரு வாரம் தள்ளி போடுங்கள். அதற்குள் offer முடிந்து விடுமே என்ற பரபரப்பெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வையுங்கள்.

உங்களுக்கு அந்த பொருள் தேவையா என ஒரு வாரம் பொறுத்து முடிவு செய்தாலே, பாதி கடன் குறையும்.

இதுவரை சம்பாதித்தது, இனி இரண்டாண்டுக்கு சேமிப்பது என நம் கையில் உள்ள பணத்தை கொஞ்சம் இறுக்கி பிடியுங்கள்.

கடைக்காரர்களை வாழ வைக்க நாம் பிச்சைகாரனாக முடியாது என்பதை மறுபடி மறுபடி உங்கள் மனதிலும், வீட்டோர் மனதிலும் பதிய வையுங்கள்.

கொஞ்சம் சுயநலமாக,

கொஞ்சம் புத்திசாலித்தனமாக,

கொஞ்சம் பொருளாதார அறிவோடு, நம் Demand, supply ஆகியவற்றை கட்டுக்குள் வைத்து need குறைத்து இந்த கடின காலத்தை கடப்போம்.

நம்மிடம் உள்ள நியாயமாக சம்பாரித்த கொஞ்சூண்டு பணத்தை பாதுகாப்போம்.

வாழ்த்துகள்..

-ச.இளங்குமரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு