பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
பொதுவாக நாம் சாப்பிடும்போது, ஏதேனும் பருகும்போது பேசக் கூடாது, அவசரப் படக் கூடாது என்பார்கள். நம்மில் பலரும் இவ்வாறு பேசிக்கொண்டே சாப்பிடும்போது, பருகும் பொழுதுகளில் புரையேறுதல் என்ற நிகழ்வை அனுபவித் திருப்போம். அவ்வாறான நேரங்களில் உண்ணும் உணவுத் துகள்கள், பருகும் திரவங்கள் நேராக மூக்கின் வழியாக வெளி வந்த அனுபவம் இருக்கும். அவ்வாறான நேரங்களில் பலரும் தலையில் தட்டி விட்டு அன்பை, அக்கறையை வெளிப் படுத்துவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிடுகையில் புரையேறினால் யாரோ திட்டுகிறார்கள் என்பார்கள். எது உண்மை, தலையின் மீது தட்டுவது சரியா, எங்கு தட்டுவது சரியான செயல்?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாம் அனைவரும் பேசும்போது காற்று வெளிவரும். நெஞ்சுக்குள் உள்ள பஞ்சு போன்ற நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்றுதான் அது. நமது நாசித் துவாரங்களில் இருந்து செல்லும் நாம் சுவாசிக்கும் காற்று காற்றுக் குழாய் வழியாக நுரையீரலுக்குள் செல்லும், உணவருந்தும்போது உணவு மற்றும் பருகும் திரவங்கள் உணவுக் குழாய் வழியாக இரைப் பைக்குள் செல்லும்.
நாம் உட்கொள்ளும் உணவு, தொண்டையில் Pharynx எனும் உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குள் செல்லும். நாசி வழியாக சுவாசிக்கும் காற்று Larynx எனும் சுவாசக் குழாய் வழியாக நுரையீரலை அடையும். இந்த Pharynx - Larynx எனும் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் ஆகிய இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. இந்த இரண்டு குழாய்களுக்கும் நடுவே எபிகிளாட்டிஸ் என்ற வால்வு தற்காலிகமாக உணவு உண்ணும்போது மூச்சுக் குழாயை மூடி உணவுக்குழாயான Pharynx வழியாக செல்ல அனுமதிக்கும், சுவாசிக்கும் பொழுதுகளில் Larynx வழியாக சுவாசக்குழாய்க்குள் நாம் சுவாசிக்கும் காற்று நுரைப்பையுக்குள் செல்ல அனுமதிக்கும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநாம் பேசும் குரல் ஒலிக்க தேவையான காற்று நுரையீரலில் இருந்து வெளிவரும். அப்போது எபிகிளாட்டிஸ் உணவுக்குழாயை மூடிக்கொள்ளும். நாம் பேசிக்கொண்டே உண்ணும் பொழுதில் இந்த எபிகிளாட்டிஸ் உணவுக் குழல், மூச்சுக் குழல் ஆகிய இரண்டையும் மூடுவதில் எதை மூடுவது, எதைத் திறப்பது எனத் தடுமாறும் நிலை ஏற்படும். இந்தக் கோளாறு ஏற்படுமேயானால் 'புரையேறுதல்' நிகழலாம். அதனால்தான் உணவு உண்ணும் போது பேசக்கூடாது என்று பெரியோர் சொல்லுவதுண்டு. வயதானவர்களுக்கு இந்தச் செயல்முறை தடைபடுவதால் புரையேறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். மேலும் புரையேறுவதால் Aspiration Pneumonia ஏற்படலாம்.

இவ்வாறான புரையேறுதல் நிகழ்வின்போது வழக்கமாகப் பலரும் தலையில் தட்டுவதை பழக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வாறாக தட்டும்போது எபிகிளாட்டில் சரியாக மூடாத நிலையில் தவறான குழாய்க்குள் சென்ற உணவுத் துகளோ, திரவமோ மேலும் அந்தக் குழாயுக்குள் செல்லவே வழிவகுக்கும். உணவுக்குழாய்க்குள் செல்ல வேண்டிய உணவு சுவாசக் குழாய்க்குள் நுழைகையில் இந்தத் தகவல் உடனடியாக மூளைக்குச் செல்வதற்கு முன்பாகத் தண்டுவடப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக அனிச்சை செயலாக நுரையீரல் முழுமையாக சுருங்கி காற்றை வெளிப்படுத்த அந்தக் காற்று மூச்சுக்குழாய்க்குள் நுழைந்த காற்று அல்லாத பொருள்களை உடனடியாக வெளியேற்றுகிறது.
அப்போது தலையில் தட்டுவதன் காரணமாக வெளியேற்ற வேண்டிய பொருள்களை மேலும் நாமே உள்ளே செல்ல வைக்கிறோம். எனவே, இந்தப் புரையேற்றம் எனும் அனிச்சை செயலின்போது நுரையீரல் உள்ள நெஞ்சுப் பகுதியைத் தட்டிக் கொடுப்பதன் மூலமாகவோ, முதுகுப் பகுதியைத் தட்டிக் கொடுப்பதன் மூலமாக அனிச்சை செயலை ஊக்குவிக்கும் விதமாக அமையும்.
எனவே, இனிவரும் காலங்களில் உணவருந்தும் பொழுதுகளில் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்ப்போம். நம்மையுமறியாது புரையேறிவிட்டால் தலையில் தட்டிக் கொடுப்பதைத் தவிர்த்து முதுகில், நெஞ்சுப் பகுதியில் தட்டிக் கொடுப்போம்.
- வீ.வைகை சுரேஷ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.