Published:Updated:

35 வருட கனவு நனவான தருணம்! | My Vikatan

1986 என் தோழிகளுடன்

இப்படி அழகாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் முந்திரி கொட்டைத் தனமாய்....ஸார் இதேபோல் தான் 'முந்தானை முடிச்சு'படத்தில் கூட "முருங்கைக்காய்'பேமஸ்ன்னுசொல்ல.. சார் அப்படியே ஷாக்காயிட்டார்.

35 வருட கனவு நனவான தருணம்! | My Vikatan

இப்படி அழகாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் முந்திரி கொட்டைத் தனமாய்....ஸார் இதேபோல் தான் 'முந்தானை முடிச்சு'படத்தில் கூட "முருங்கைக்காய்'பேமஸ்ன்னுசொல்ல.. சார் அப்படியே ஷாக்காயிட்டார்.

Published:Updated:
1986 என் தோழிகளுடன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இன்றைய வாழ்க்கை முறையில் பிரச்சினைகள் அதிகம் உள்ள சூழலில் அற்புதமான ஒரு விஷயம் தன் வெற்றியை சொல்லி மகிழ ,தோல்வியைச் சொல்லி ஆறுதல் தேட மற்றொரு சக உயிர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவை. ஆனால் ,இன்றைய நட்பில் சென்ற தலைமுறைகளில் இருந்ததைப் போன்று அழுத்தமும் ஆழமும் இல்லை.


பள்ளிக்கூட காலத்தில் தொடங்கும் பல நட்பு வாழ்வின் இறுதி நாள் வரை தொடர்ந்து இருக்கிறது ஆனால் இன்றோ .,பள்ளி கல்லூரி பருவங்களில் அமைகிற நல்ல நண்பர்களை தொலைத்துவிட்டு ,'இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது, தொடர்பே இல்லை' என்று சர்வசாதாரணமாக சொல்பவர்கள்தான் பலரும்.

Representational Image
Representational Image

தொடர்பு இல்லாமல் போனதற்கு அவர் மட்டும்தான் காரணமா?, இல்லை நாமும் காரணமா?? என்று கொஞ்சமும் யோசிப்பதில்லை. இப்படி நட்பை பற்றி யோசித்தபோது தான் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது புரிந்தது. சந்தோஷத்தை பகிரவும், வருத்தங்களை சொல்லி அழவும், நாங்கள் ஆறு பேர்.. எங்களின் நட்பிற்கு வயது 35. 1986, தர்மபுரி அவ்வையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி.. +1அக்கவுண்டன்சி க்ரூப் பில் படித்த "மகா'என்கிற மகாலக்ஷ்மி, "லலி'என்கிற லலிதா, "க்ரேஸ்'எனகிற க்ரேஸ் ராஜகுமாரி, "ஜெய்'என்கிற ஜெயலஷ்மி, "Sk'என்கிறsk.சாந்தி, "ஆதி'என்கிற ஆதிரையாகிய நான்.... இப்படி நாங்கள் 6 பேரும் அபூர்வ தோழிகள்.அடிக்காத கிண்டலில்லை..செய்யாத குறும்புகளில்லை..

வாலில்லாத குரங்கினங்கள் என்ற பட்டப்பெயர் வாங்கும் அளவுக்கு எங்கள் லூட்டிகள்பள்ளியில் பிரசித்தம். ஆனால் அதே சமயம் படிப்பிலும் நாங்கள் கில்லிகள். முதல் மதிப்பெண்களை அவ்வளவு எளிதாக யாருக்கும் விட்டுத்தரவும் மாட்டோம். ஆசியர்களுக்கு அழகழகாய் பட்டப்பெயர்கள் வைத்து கலாய்ப்போம். (மனதை புண்படுத்தாமல் )

தினமும் ஒருவர் பள்ளி வாசலில் விற்கும் இலந்தைப்பழம், மாங்காய், கமர்கட், ஜவ்வு மிட்டாய்... இப்படி வாங்கி பகிர்ந்து உண்போம். அவசரத்தில் ரிப்பன் வைக்க மறந்திருப்போம். அப்ப . அடுத்தவர் தலையில் இருக்கும் (கருப்பு) ரிப்பனில் இருந்து கொஞ்சம் ப்ளேடில் கட் பண்ணி அவசர அவசரமாக பி.டி.மிஸ் (ஜாய் மிஸ்) பார்ப்பதற்குள் கட்டிக்கொள்வோம்.

Representational Image
Representational Image

எங்களுக்கு அக்கவுண்டன்சி பாடம் எடுத்தவர் தங்கவேலு சார். அவர் எப்பவுமே 40 நிமிட வகுப்பில் கடைசி 10 நிமிடம் சினிமா வைப்பற்றி எங்களிடம் விவாதிப்பார். ஒருமுறை அப்படித்தான் 'தங்கமகன்' படம் பற்றி பேச்சு எழுந்தது.. அதில் ரஜினி அவர்கள் ஒரு வித்தியாசமான நாயுடு கெட்டப்பில் வருவார்.

அவரின் பெயர் நீளமாக வரும் "கமதல வெங்கட வேணுகோபால... எனநீளமா வரும். இதை யாராவது சொல்லமுடியுமா என்று அவர் கேட்க, தோழி லலிதா தங்கு தடையில்லாமல் கட் கட் வென்று கூற... பயங்கர கைத்தட்டல்.

இப்படி அழகாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் முந்திரி கொட்டைத் தனமாய்....ஸார் இதேபோல் தான் 'முந்தானை முடிச்சு'படத்தில் கூட "முருங்கைக்காய்'பேமஸ்ன்னுசொல்ல..

சார் அப்படியே ஷாக்காயிட்டார்.

'டக்'குனு புத்தகத்தை எடுத்து கொண்டு போயிட்டார்.

வகுப்பில் பயங்கர சிரிப்பு

சாரையே "ஆதி'வெட்கப்பட வைத்துவிட்டாள் என்று...

என் தோழிகள் பயங்கரமாக கிண்டல் அடிக்க.. நான் வெட்கப்பட...அது தனிக்கதை.

இப்படி எப்பவும் கலகலன்னு இருந்த நாங்கள் 6 பேரும் +2 கடைசி நாள் எங்க வீட்டில் க்ருப் ஃபோட்டோ எடுத்துகொண்டு... ஆட்டோகிராப் போட்டு... எப்பவும் இணைப்பில் இருப்போம் என சத்திய பிரமாணம் செய்து கொண்டோம். பிறகு 6 பேரும் வேறுவேறு ஊர் கல்லூரிகளில் இளங்கலை படித்தோம்.

முதலிரண்டு வருடங்கள் கடிதத்தில் இணைந்திருந்தோம். பிறகு எப்பவாவது யாரிடமிருந்தாவது அத்திப்பூத்தாற்போல் வரும்.

பிறகு அதுவும் நின்றுவிட்டது. என் திருமணத்திற்கு மகாவும், லலியும் வந்திருந்தார்கள். இதனிடையே லலிதாவின் அப்பா தவறிவிட... எதேச்சையாக எனது மாமனார் அவளுக்கு வரன்பார்க்க... லலிதாவின் திருமணம் இனிதே நடைபெற்றது.அதுமுதல் எங்கள்குடும்பத்தில் அவளும் ஒருத்தி.நானும் அவளும் அடிக்கடி எங்களது தோழிகளைப்பற்றி பேசிக்கொள்வோம்..

தோழிகளின் ரி யூனியன்
தோழிகளின் ரி யூனியன்

எப்படியாவது அவர்களை கண்டுபிடிக்கணும். அவங்ககிட்ட பேசணும் அவங்களுக்கு எத்தனை பசங்க இருப்பாங்க...

பசங்களுக்கு திருமணம் ஆகி பேரன் பேத்தி எடுத்திருப்பார்களா? என்று பேசிக்கொள்வோம்

லலிதா எப்பவும் பாஸிட்டிவ்வா சொல்லுவாள்... அவர்களுக்கும் இந்த எண்ணம் இருந்தால் அந்த எண்ணம் நம்மை ஒன்று சேர்க்குமென்பாள். அதேசமயம் 2020 மார்ச் 3 அன்று நான் உனக்கு மறக்க முடியாத பரிசு அளிப்பேன்ஆதி என்று அடிக்கடி சொல்வாள். மார்ச்3 வழக்கம்போல எழுந்தேன் . எப்பவும் போல லலிதா தான் முதலில் எனக்குபிறந்த நாள் வாழ்த்து கூறினாள்.

சிறிதுநேரம் கழித்து மீண்டும் கைப்பேசி சிணுசிணுங்க... நான் எடுத்து ஹலோ சொல்ல..

மறுமுனையில்நான்U S விருந்து "க்ரேஸ்'பேசறேன்னு சொல்ல... கண்களில் ஆனந்த கண்ணீர். கொஞ்ச நேரம் பேச்சே வரலை...

பிறகு ஆசுவாசப் படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தோம்.அடுத்து சிறிது நேரத்தில் நான்"ஜெய்"பேசறேன் காவேரிப்பட்டினத்திலிருந்து என்று ஜெயலஷ்மியும்.. முறையே. அடுத்தடுத்து தர்மபுரியிலிருந்து மகாவும், sk. சாந்தி யும் பேச....

வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள் ஆனது.

இதில் இன்னுமொரு ஸ்பெஷல் என்னவென்றால் கூடுதலாக

தங்கவேலு சார் போன் நம்பரையும் கொடுத்தாள்.

அவரிடமும் பேசி ஆசிர்வாதம் பெற்றேன் . 34 வருடங்கள் கழிந்தும் எங்க 6 பேரையும் அவர் மறக்கவில்லை. எனக்கு பயங்கர ஆச்சரியம்.

லாக்டௌன் காலத்தில் எங்க 6 பேர் நட்பும் வாட்ஸ்அப்பில் அழகாய் தொடர்ந்தது.

வாராவாரம் எங்களுக்குள் ஒரு டாஸ்க் கொடுத்து கொள்வோம். அதைப்பற்றி ஆரோக்கியமாக விவாதிப்போம்.. மீண்டும்1986க்கே போனது போல் அவ்வளவுசந்தோஷம்.

மே10 அன்று அன்னையர் தினத்தன்று 6 பேரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் அளவளாவினோம். தோற்றத்தில் மாறுபாடு இருந்தாலும்...

கேலி, கிண்டலில் மட்டும் யாரும் மாறாமல் அப்படியே இருந்தோம்.. மிகவும் சந்தோஷமாக இருந்தது. வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசும் போதே இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே... நேரில் ஆறு பேரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டோம். அப்படி ஒரு பாக்கியம் கடவுள் எப்போது அமைத்துக் கொடுப்பார் என்று ஏங்கினோம்.

மார்ச் 29.2022 .. செவ்வாய்...

மேற்கில் ஒன்றும் உதிக்கவில்லை சூரியன் எப்போதும் போல் தான் புலர்ந்தது அன்றும். ஆனால் அது எவ்வளவு பெரிய மகிழ்வை கொடுக்கக் கூடும் என்பது அப்பொழுது தெரியவில்லை மதியம் மூன்று மணி வாக்கில் பள்ளித்தோழி ஜெயலஷ்மியிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு ஏப்ரல் 3 ஞாயிறன்று எனது மகனுக்கு பெங்களூரில் நிச்சயதார்த்தம். நீ அவனுக்காக எத்தனையோ வரன்கள் பார்த்து இருக்கிறாய். அதனால் முதன்முதலாக உன்னிடம் சொல்கிறேன்.

தோழிகளின் ரி யூனியன்
தோழிகளின் ரி யூனியன்

திருமணம் ஜூன் மாதம் கண்டிப்பாக வந்து விடு என்று அவள் பேச,. நானும் வாழ்த்துகள் சொல்லி என்று சொல்லி அலைபேசியை அணைத்தேன். அலைபேசியை அணைத்த மறு நிமிடம் எனது இன்னொரு தோழி எஸ்.கே .சாந்தியிடம் இருந்து அழைப்பு தோழி கிரேஸ் யுஎஸ்ஸில் இருந்து(அவளது பெற்றோரை பார்ப்பதற்காக) வருகிறாள். அதனால் நாம் அனைவரும் சந்திக்கலாமா? என்று ஒரு கேள்வியை எழுப்பினாள். சரி அனைவரையும் கேட்கலாம் என்று சொல்ல 5 மணிவாக்கில் கத்தார் ஏர்போர்ட்டில் இருந்து ஒரு அழைப்பு. கத்தாரில் இருந்து பெங்களூர் விமான பிடிக்க 3 மணி நேர இடைவெளியில் எங்களுடன் வாட்ஸ் அப்பில் வந்த கிரேஸ் கண்டிப்பாக நாம் 6 பேரும் இந்த முறை ஏப்ரல் 3 அன்று சந்திக்கிறோம்.

நீங்கள் அனைவரும் பெங்களூர் வந்து விடுங்கள் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டாள். பிறகு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை மற்ற இரண்டு தோழிகள் மகாவிடமும், லலிதாவிடம் தொலைபேசியில் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து 35 வருடத்திற்குப் பிறகு சந்திக்கிறோம் ஏதாவது வித்தியாசமாக பரிசளிப்போம் என மூளையைக் கசக்கி, +2 கடைசி நாள் அன்று நாங்கள் எடுத்த புகைப் படத்துடன் இப்பொழுது நாங்கள் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து "தாவணிக்கனவுகள் நிஜமான புடவைகள் " என்று ஒரு வாக்கியம் எழுதி ஒரு கப்பில் பதிவு செய்து கொடுக்க எண்ணி காரியத்தில் இறங்கினேன் .

தோழிகளின் ரி யூனியன்
தோழிகளின் ரி யூனியன்

நம் சமையலை அவர்கள் சாப்பிட்டு பார்த்ததில்லையே? நம் கையாலேயே நாம் ஏதாவது தயாரித்து எடுத்து போகலாம் என்று லலிதா சொன்னது மனதினில் எழ (இந்த தருணத்தில் லலிக்கு நன்றி சொல்லிக்கொண்டு) என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் "புளிக்காய்ச்சல், தக்காளி தொக்கையும் செய்து கன்டெய்னரில் போட்டு லீக் ஆகாமல் இருக்க ரப்பர் பேஃண்டால் வாயைக்கட்டி ஃபேக் செய்து.... இப்படி இரண்டு நாட்கள் நிமிடத்தில் கரைந்தது. மனதிற்குள் என்ன பேசுவோம்? 35 வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறோம் என்னவெல்லாம் பேசுவோம் ?எல்லோரும் எப்படி இருப்பார்கள்? என்று மனதிற்குள் பல ஒத்திகைகள்.

ஆயிற்று சென்னையிலிருந்து நானும் தோழி லலிதாவும் பெங்களூர் மெயில் வெள்ளியன்று இரவு பத்தரை மணிக்கு செல்வதாக ஏற்பாடு. சனியன்று காலை 7 மணிக்கு தர்மபுரியில் இருந்து இன்னொரு தோழி மகாவும், சாந்தியும் காரில் வருவதாகவும் அனைவரும் க்ரேஸ் வீட்டில் சனியன்று காலை 10 மணிக்கு சந்திப்பதாகவும் ஏற்பாடு. இதோ ரயிலில் ஏற ரயிலும் கிளம்பியாச்சு . எனக்கும் என் தோழி லலிதாவிற்கும் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லை . நினைத்துக்கூட பார்க்கவில்லை இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இப்படி அருகருகே(பெர்த்) படுத்து கொண்டு இருவரும் பேசுவோம் என்று ... பொழுது புலர்ந்தது 35 வருடங்களுக்கு பிறகு அனைவரையும் சந்திக்க போகிறோம் . எத்தனையோ முறை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம் .ஆனால் முடியவில்லை இந்த சந்திப்பை எதிர்பாராமல் கடவுள் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்றேதோன்றியது.

இதோ ஆயிற்று காலை 10 மணிக்கு நானும் லலிதாவும் கிரேஸ் வீட்டிற்கு சென்றோம். வாசலிலேயே எங்களை கட்டி அணைத்துக் கொண்டாள். அவர்களின் குடும்பத்தாருடன் நலம் விசாரிக்க, சிறிது நேரத்தில் எனது மற்ற இரண்டு தோழிகளும் வந்து சேர ஆயிரம் மத்தாப்புகள் வெடித்து சிதறியது போல் இருந்தது. (இன்னொரு தோழி ஜெய்யின் மகனுக்குத்தான் நிச்சயதார்த்தம் என்பதால் நாளை எங்களுடன் கலந்து கொள்வதாக கூறியிருந்தாள்) ஒருவருக்கொருவர் வாங்கி வந்திருந்த இனிப்புகளையும் ,பரிசுகளையும் பகிர்ந்துகொண்டோம்.

தோழிகளின் ரி யூனியன்
தோழிகளின் ரி யூனியன்

க்ரேஸ் ஒரே மாதிரி எங்கள் ஆறு பேருக்கும் புடவை எடுத்து இருந்தாள்.பிறகு "ஹாப்பி ரியூனியன் 86"என்று எழுதி இருந்த கேக்கை அனைவரும் சேர்ந்து வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டோம். (பலத்த கைத்தட்டலுக்கிடையே) புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம் பிறகு "tamrine" என்ற உணவகத்திற்கு அழைத்து சென்றாள் க்ரேஸ்.

சூப்பில் ஆரம்பித்து ஸ்டார்டர் மெயின் கோர்ஸ்.. டெஸர்ட்டில் முடித்தோம். சோழிகளை உருட்டினாற் போல் கலகலவென்று கிண்டல்கள் ,கேலிகள். ஒருவழியாக சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தோம். மீண்டும் பிளஸ் 2 முதல் நாளில் ஆரம்பித்து இன்று வரை நடந்த நிகழ்வுகளை பலவித முகபாவங்களுடன் ஒருவருக்கு ஒருவர் ரசித்து பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.

கிண்டல்கள் கேலிகள் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழ்ந்தும் கேலி செய்தும் ஆடல் பாடல் என்றும் நேரம் போனதே தெரியவில்லை. மீண்டும் அந்த 17 வயதிற்கு சென்றது போலிருந்தது எந்தவித கவலையும் இல்லாமல். மறுநாள் காலை விடிந்தது அனைவரும் ஒரு கார் புக் செய்து நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு செல்ல அங்கிருந்த தோழி ஜெய்ஓடோடி வந்து எங்களை கட்டி அணைத்துக்கொண்டாள் .அவளும் அவள் வாங்கியிருந்த பரிசை எங்களுக்குக் கொடுத்தாள். நிச்சயதார்த்தம் நன்முறையில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி பரிசுகளைக் கொடுத்து உணவருந்த சென்றோம் .அருமையான விருந்து.

தோழிகளின் ரி யூனியன்
தோழிகளின் ரி யூனியன்

அருமையான சாப்பாடு (எல்லாம் கொதிக்க கொதிக்கவயிற்றில் தான் இடமில்லை) இதோ மீண்டும் ரயிலைப் பிடித்து சென்னை வர வேண்டும் . மற்ற தோழிகளும் தர்மபுரி செல்லவேண்டும். பிரியாமல் பிரியா விடை கொடுத்தோம் . விழிகளில் ஆனந்தக் கண்ணீர் . வருடம் ஒருமுறை கண்டிப்பாக இப்படி சந்திக்க வேண்டும் என்று ஒரு சங்கல்பம் செய்து கொண்டோம்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்

என்றார் திருவள்ளுவர்.

ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்வதற்கு தேக ஒற்றுமையும் பழக்கமும் இன்றியமையாதது அல்ல, இருவருக்கும் கருத்து ஒத்தலே நட்புத் தொடர்பைத் தரும். நாங்கள் இருவரல்ல அறுவர் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டுகாலரைத் தூக்கி விட்டுக்கொண்டோம். (அதுவும் ஒரே டெஸ்க்... வரலாற்றில் இது ரொம்ப முக்கியம் பாஸ்) உண்மையான நட்பு என்பது எதையும் மிகச் சரியாக புரிந்து கொள்வதே நட்பில் அவமானமோ தன்மானமோபார்க்கத் தேவையில்லை நிஜ நட்பு எதையும் விட்டுக் கொடுக்கும். எதையும் மன்னிக்கும்.

எதையும் மறக்கும். என்பதை உணர்ந்த தருணமது. இத்தருணத்தில் முக்கியமாக ஒருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எங்கள் ஆறு பேரையும் எந்தக் கேள்விகளையும் கேட்காமல் எங்களை அனுப்பி வைத்த எங்கள் கணவன்மார்களுக்கு மனம் நிறைந்த நன்றி .(நாங்க எல்லாம் மனம் திறந்து பாராட்டுவதில் கில்லி பாஸ் )எனக்கு ஆயிரம் பேர் அறிமுகம் இருக்கிறது என்பதை விட எனக்கு ஆத்மார்த்தமாக நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே பெருமையான விஷயம் நேசத்துடன் பாசத்துடன் நட்பு கொள்ளுங்கள். நட்பை மதித்து கொண்டாடுங்கள் ஆண்டில் ஒரு நாள் "நண்பர்கள் தினம் "அன்று குறுஞ்செய்தி அனுப்புவதில் வாழ்வதில்லை நட்பு அதை இதயத்தை போல் ஒவ்வொரு நிமிடமும் உயிரோட்டத்துடன் துடிக்க வேண்டிய ஒன்று . எங்களின் பள்ளிப்பருவ நட்பு அப்படித்தான் . இதை படிக்கும் உங்களுக்கும் பள்ளி பருவ நினைவுகள் வருகிறதா ? நீங்களும் அவர்களை சந்தியுங்கள் நட்பை கொண்டாடுங்கள். நட்பின் பயணம் அழகானது! உயிரோட்டமானது! எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றது..

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.