Published:Updated:

விவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார்! - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்

தலை போற பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு உண்டு. தேவை நம்பிக்கை, கேள்வி கேட்காத நம்பிக்கை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

*விசர்ஜன்*


1999, முதல் உலக இருதய அறுவை சிகிச்சை மயக்குனர்கள் மாநாடு. வரவேற்பு மாலை மரியாதை இத்யாதிகளுக்கு பிறகு, முதல் கருத்தரங்கம். *நீதா சக்ஸேனா* ( இந்தியாவில் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை யில் மயக்குனராக இருந்தவர்.) தனது உரையை தொடங்கிய போது திரையில் விநாயகர். உலகில் நடந்த முதல் உறுப்பு(வெற்றிகரமான) மாற்று சிகிச்சை என்றார் ஆங்கிலத்தில். அங்கிருந்த மெலனின் குறைந்த வெளிநாட்டவர் அனைவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து கொண்டார்கள். சிவபெருமான் கோபத்தால் தலை வெட்டபட்டு, சக்தியின் இறைஞ்சலில் வெள்ளையானை தலை *Transplant* செய்யப்பட்ட கதை சொன்னார். அல்பினிச விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

ஆன்மீக ஆராய்ச்சி வேண்டாம்.

அறியும் நீதி....

தலை போற பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு உண்டு. தேவை நம்பிக்கை, கேள்வி கேட்காத நம்பிக்கை.

Representational Image
Representational Image

ஒரு வருடம் பின்னால் போவோம் . 1998 ஆவணி . போபாலில், மயக்கவியல் மாணவனாக இருந்த போது ஆசிரியர்கள் அனுமதி பெற்று ஒரு சிரிய களிமண் பிள்ளையார் வைத்து சதுர்த்தி கொண்டாடினோம். ஏழு நாள் கழித்து இன்று விசர்ஜன் என்றார்கள் வட இந்திய மாணவர்கள். மூழ்குதல் அல்லது நகர்தல் என அர்த்தம் சொன்னார்கள். விநாயகர் plaster of Paris ல் பிரமாண்ட அவதாரம் எடுத்து, ஊர்வலம் போய் மதகலவரங்களில் கல்லடி பட்டு, கடலில் கரைந்து மாசு படுத்த தொடங்கிய காலம் அது. ஊர்வலம் எல்லாம் வேண்டாம் , சும்மா நகர்த்தி வைத்தாலே போதும் என ஒரு ஜூனியர் மாணவி சொன்னார் . நான் கதை சொன்னேன்.

ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் ஆனைமுகன் அவதரித்தார். எல்லா மாதமும் சதுர்த்தி வருகிறது. ஏன் ஆவணி மாதம். ஆடியில் ஆற்றில் தண்ணீர் வரத்து....ஆவணியில் கறை புரண்டு ஓடும். வண்டல் மண் வந்து, மணலை அரித்து கொண்டு போகும். மணலுக்கு நீரை பிடித்து வைக்கும் திறன் இல்லை. களிமண் ஆற்றில் படிந்தால்,

மண் அரிப்பு தடுக்க படும்.

களிமண் நீரை உள்வாங்கும்.

நிலத்தடி நீர் உயரும்.

கிணறுகள்,

கண்மாய்கள் நிறையும்.

ஆடி பட்டம் தேடி விதைத்த நாற்றுகள் தழைக்கும் .

*விவசாயம் செழிக்கும்.* இதையெல்லாம் சொன்னால் மக்களுக்கு புரியாது என தெரிந்து தான் அவர் ஆவணி சதுர்த்தியில் பிறந்தார்.

Representational Image
Representational Image

கதை கேட்ட 11 பேரில் இருவர் இஸ்லாமியர். முகம்மது யூனுஸ் ( ஒரு வருடம் இளையவன். ஒரு வார்த்தை சொல்லாமல் எந்த களிமண் சிலையை தூக்கி தோளில் வைத்து முன்னே நடந்தான். மற்றவர் சையது ஆசிம் 5 வேளை தொழும் நேர்மையான முஸ்லீம். ( வெண்டிலேட்டர் இல்லா காலத்தில் நோயாளியின் செயற்கை சுவாச பைகளை என்னிடம் கொடுத்து அங்கேயே தொழும் நேர்மை) என்னை பார்த்து ,இவ்ளோ இருக்குன்னு தெரியாது அருண் என்று உருதில் சொல்லி, கூட நடந்தான். அவன் உள்ளூர்வாசி. யாரிடமோ பேசி 15 நபர்கள் பயணம் செய்ய வசதியான ஒரு படகு ஏற்பாடு செய்தான். அனைவரும் அதில் ஏறி.... ஏரியின் நடுப்பகுதி சென்று ( போபால் ஏரிகளின் நகரம்) கரைத்தோம். கண்பதி பப்பா மோரியா கோஷம் இல்லாமல், கல் வீச்சு இல்லாமல் நான் கலந்து கொண்ட ஒரே *விசர்ஜன்* அதுதான். ( இதில் ஒரு துளி கூட கற்பனை இல்லை. அந்த இரு இஸ்லாமிய நண்பர்கள் இன்னும் என் தொடர்பில் இருக்கிறார்கள். )


களிமண்... plaster of Paris ஆகி,

ஆறு.... கடலாகி, ஊர்வலமாகி,

மத கலவரம் ஆகி,

ஏழு நாள் இரவு பகல் போலீஸ் ஐ தூங்க விடாமல் காவல் வைத்து,

கடலை மாசு படுத்தி,

என்ன செய்கிறோம் என தெரியாமல் மத துஷ்பிரயோகம் செய்ய.....

விவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார்...!

-நான் மயக்கும் மருத்துவன்,

மரு.அருண்குமார் (MD Anesthesiology)

Thumbay Hospital, Ajman,

United Arab Emirates.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு