Published:Updated:

கீழே விழாமல் நலமாய் வாழ்வோம் ! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image ( Photo by Alberto Barbarisi on Unsplash )

முதியோரைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்களிடமிருந்து இது போன்ற கேள்விக்கனைகள் எனக்கு தற்பொழுது அதிகமாக வருகின்றன. கீழே விழுதல் அப்படி என்ன பயங்கரமான ஒரு தொல்லையா?

கீழே விழாமல் நலமாய் வாழ்வோம் ! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

முதியோரைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்களிடமிருந்து இது போன்ற கேள்விக்கனைகள் எனக்கு தற்பொழுது அதிகமாக வருகின்றன. கீழே விழுதல் அப்படி என்ன பயங்கரமான ஒரு தொல்லையா?

Published:Updated:
Representational Image ( Photo by Alberto Barbarisi on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"டாக்டர் சார் என் அப்பா மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்பொழுது மங்கிய வெளிச்சத்தில் படி சரியாகத் தெரியாததினால் கால் தவறி கீழே விழுந்துவிட, தலையில் பலத்த அடிபட்டு, இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவிற்கு சென்று பல வேறுவிதமான சிகிச்சைக்குப் பின் மூன்று மாதங்கள் கழித்து தற்பொழுதுதான் வீட்டிற்கு வந்தார். அதன் விளைவு இப்பொழுது பக்கவாதத்தினால் படுத்த படுக்கையாக கிடக்கிறார்.”

"என் பாட்டிக்கு வயது 86. எந்தக் காரணமும் இன்றி வீட்டிலேயே விழுந்துவிட்டதால், மணிக்கட்டு எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு விருப்பம் இல்லாததால் மாவுக் கட்டு போட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பாட்டி படும் சிரமம் சொல்லிமாளாது. லேசாக கீழே விழுந்ததற்காகவா இவ்வளவு தொல்லைகள். இத்தொல்லையை தடுக்க ஏதாவது வழி உண்டா? "

முதுமை
முதுமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"என் தகப்பனாருக்கு 70 வயது தான் ஆகிறது. பிரஷர் மாத்திரை தினமும் எடுத்துக் கொள்கிறார். ஒரு நாள் டெலிபோன் மணி தொடர்ந்து அடிக்க அதை எடுப்பதற்காக திடீரென்று எழ, மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டார். நல்ல வேலை தலைக்காயம் அல்லது எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அதில் இருந்து படுக்கையில் இருந்து எழுந்து நடக்கவே பயப்படுகிறார். எங்கே தான் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தினால் நடக்கவே பயப்பட்டு மனச்சோர்வுடன் இருக்கிறார். இதற்கு என்னதான் தீர்வு?”

முதல்முறை விழுதல் - முதுமையின் தொடக்கம்

(First fall - beginning old age)

இரண்டாம்முறை விழுதல் - முதுமையின் முடிவு

(Second fall - end of it)

இக்கூற்றின் உண்மை நிலையை புரிந்து கொள்ள இக்கட்டுரை ஓரளவுக்கு உதவி புரியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதியோரைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்களிடமிருந்து இது போன்ற கேள்விக்கனைகள் எனக்கு தற்பொழுது அதிகமாக வருகின்றன. கீழே விழுதல் அப்படி என்ன பயங்கரமான ஒரு தொல்லையா? அது ஏன் முதியோர்களை அதிகம் தாக்குகிறது? அதை தடுக்க ஏதாவது வழி உண்டா? அதைப்பற்றி விபரமாக தெரிந்து கொள்ளவோம்.

குழந்தைகள் கீழே விழுவதற்கும் முதியவர்கள் கீழே விழுவதற்கும் உள்ள வித்தியாசங்கள் மடுவுக்கும் மலைக்கும் இடையே உள்ளதைப் போன்றவையாகும். குழந்தை கீழே விழுந்தால் சிறிது நேரம் அழுதுவிட்டு பழைய படியே சிரித்து கொண்டே விளையாட ஆரம்பித்து விடும். ஆனால் முதியவர்களின் விழுதல், சாதாரண உடல் சிராய்பில் இருந்து தலைக் காயம் ஏற்பட்டு மரணத்தைக் தழுவும் நிலைமை கூட ஏற்படலாம்.

Dr V S Natarajan
Dr V S Natarajan

சம நிலை பாதிப்பு (Imbalance)

நமது உடல் சம நிலையில் இருப்பது என்பது ஒரு சிக்கலான செயல் முறையாகும். நனக்கு தெரியாமலேயே மூளை நம்மை சம நிலையில் வைத்துக் கொள்கிறது. சமநிலையை பெற உடலின் பல்வேறு உறுப்புகளிலிருந்து மூளைக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

அவைகள்:

 • நரம்புகளிலிருந்தும், மூட்டுகளிலிருந்தும் தண்டுவடத்தின் மூலமாக தகவல்கள் மூளைக்கு அனுப்பப்படுகிறது.

 • கண்களின் மூலம் நமது உடலின் சமநிலைப்பற்றிய தகவல் மூளைக்கு தெரிவிக்கப்படுகிறது.

 • காது, முக்கியமாக உள்காது அதே வேலையைச் செய்கிறது.

இவைகள் எல்லாம் ஒருங்கிணைந்து உடலின் நிலையைப் பற்றி மூளைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. தகவலைப் பெற்றபின் அத்தகவலை பல உறுப்புகளுக்கும் அனுப்பி நம் உடலை சமநிலையில் வைத்து கொள்ள உதவுகிறது. வயதாக ஆக ஆக உடலை சரிசமமான அளவில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு. இந்த மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதியவர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரணங்கள்

 • உடல் சார்ந்த தொல்லைகள் (Intriunsic factor)

 • வெளி இடம் சார்ந்த தொல்லைகள் (Extrunsic factor)

 • சூழ்நிலை சார்ந்த தொல்லைகள் (Situational factor)

உடல் சார்ந்த தொல்லைகள் (Intriunsic factor)

 • கண் சார்ந்த தொல்லைகள், உதாரணம்: பார்வைக் குறைவு, கண் புரை, க்ளுக்கோமா.

 • காது சார்ந்த தொல்லைகள், உதாரணம் : காது கேளாமை, வெர்டிக்கோ

 • மூட்டு எலும்பு சார்ந்த தொல்லைகள், உதாரணம்: கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், மூட்டு தேய்மானம், சதை வலிமை இழத்தல்

 • மூளை, நரம்பு சார்ந்த தொல்லைகள், உதாரணம் : மறதி நோய், உதறுவாதம், பக்கவாதம்

 • குறைந்த இரத்த அழுத்தம்

 • உடலில் சர்க்கரையின் அளவு திடீரென்று குறைதல் (Hypoglycemia)

 • உடல் நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும் இரத்த அழுத்தம் (Change of blood of pressure with change of position - Postural hypotension). இரத்த அழுத்தத்தை படுத்து நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும் மற்றும் நிற்கும் நிலையிலும் பரிசோதனை செய்வதின் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

 • கை, கால் நரம்புகள் பாதிப்பு, உதாரணம் : நீரிழிவு நோய், வைட்டமின் பி12 குறைவு

 • அளவிற்கு அதிகமாக மது அருந்துதல்

மருந்துகள், உதாரணம் : நீர்மாத்திரை, துாக்கமாத்திரை, உயர்இரத்தஅழுத்தமாத்திரை, மனநோய்மாத்திரை

முதுமை
முதுமை

வெளி இடம் சார்ந்த தொல்லைகள் (Extrunsic factor)

கீழே விழுதலுக்கு உடல் சார்ந்த தொல்லைகளைத் தவிர, ஒருவர் வசிக்கும் இடத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும் கீழே விழும் வாய்ப்பு அதிகமாகும்.

 • வழுவழுப்பான தரை, ஈரமான தரை, மேடு பள்ளமான தரை, அதிக உயரம் உள்ள படிக்கட்டுகள்.

 • மங்கிய வெளிச்சம்

 • அறையில் உள்ள தேவையற்ற பொருட்கள், உதாரணம்: மேசை, நாற்காலி, தரை விரிப்பு (mattress)

 • சமையல் அறையில் உயரத்தில் உள்ள அலமாரிகள்

 • குளியல் அறை மற்றும் படிக்கட்டுகளில் கைப்பிடி இல்லாத நிலை (railings)

சூழ்நிலை சார்ந்த தொல்லைகள் (Situational factor)

முதியவர்கள் செய்யும் ஒரு சில செயல்கள் மூலமாகவும் கீழே விழ வாய்ப்பு ஏற்படலாம். உதாரணம் : மற்றவருடன் பேசிக்கொண்டே நடப்பது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபடுவது (நடந்து கொண்டே கைபேசி உபயோகப்படுத்துதல்), ஏதோ ஒரு சிந்தனையில் நடக்கும் பொழுது தரையில் கிடக்கும் பொருட்களை கவனிக்காமல் இருப்பது, அரை தூக்கத்தில் அவசரமாக கழிவறைக்குச் செல்லுவது, தொலைபேசி மணி அடித்தவுடன் அவசரமாக எடுக்க முயற்சிப்பது.

முதுமையில் கீழே விழுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

தொல்லைகள்

கீழே விழுவதால் சிறிய சிராய்ப்பிலிருந்து எலும்பு முறிவு வரையிலான பல தொல்லைகள் ஏற்படலாம். சுமார் 20 சதவிகித முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. தலையில் அடிபட்டு காயமும், அதனால் மூளையில் ரத்தக்கசிவும் எற்பட வாய்ப்பு உண்டு. ஒருமுறை கீழே விழுந்ததும் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால் பலர் நடக்கவே பயந்து, படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள். இதனால் தன் தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை நாடும் கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது. இது இறுதியாக மனச்சோர்வுக்கு வித்திடுகிறது.

கீழே விழும் முதியவர்கள் 50 சதவீதத்தினர் மற்றவர்களின் உதவியின்றி எழுந்து கொள்ள முடியாது. கீழே விழுந்து 2 மணி நேரத்திற்குப் பின்பும் எழுந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு நீர் வறட்சி, படுக்கைப் புண் மற்றும் நிமோனியா சளி ஜூரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 கீழே விழாமல் நலமாய் வாழ்வோம் ! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

பரிசோதனை

 • முழு உடல் பரிசோதனைகள்

 • ஆய்வகம் பரிசோதனைகள்

முழு உடல் பரிசோதனைகள்

கீழே விழுந்தவர்களுக்கு முதல் உதவி அளித்தபின்பு அவர்கள் விழுந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். நோயாளியிடம் மற்றும் அவருடைய உறவினரிடம் இருந்து கீழே விழுதலுக்கான காரணத்தை அறியவேண்டும். விழுவதற்கு முன்பு மார்பு வலி, படபடப்பு, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய தொல்லைகளைப் பற்றி அறிய வேண்டும். விழுந்த பின்னர் சுயநினைவை இழந்துவிட்டாரா என்பதையும் அறிய வேண்டும். இதைத் தவிர கீழே விழுதலுக்கு சுற்றுப்புறச் சூழல் சார்ந்த தொல்லைகளையும் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அவருக்கு இருக்கும் நோய்களைப் பற்றியும், தற்பொழுது எடுத்து கொள்ளும் மருந்துகளைப் பற்றியும் மற்றும் மது அருந்துதலைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். கீழே விழும் போது உடலில் எந்த இடத்தில் அடிபட்டது என்பதை பற்றியும் விழுந்த பின்பு பிறரின் உதவியின்றி தானாகவே எழுந்து கொண்டாரா என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

உடல் பரிசோதனையில் கண் பார்வை, காது கேட்கும் திறன், காய்ச்சல், நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம் (மூன்று நிலைகளில் - படுத்து இருக்கும் போதும், உட்காரும் போதும், நிற்கும் போதும்) கண்டு அறிய வேண்டும், கழுத்து பகுதி சரியான நிலையில் அசைக்க முடிகிறாதா என்பதை பார்க்கவேண்டும். நரம்பு பரிசோதனையில் சதையின் வலிமை மற்றும் தொடு உணர்ச்சி குறைபாடு ஆகியவற்றை பரிசோதனை செய்யவேண்டும். முதியவரால் நடக்க முடிந்தால் பிறர் உதவியின்றி, அவர் எப்படி நடக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

நிலை தடுமாற்றத்தை அறியும் பரிசோதனைகள்

ராம்பெர்க் பரிசோதனை (Romberg test)

முதியவரின் கால்களை நெருக்கமாக வைத்து நிற்கச் சொல்லவேண்டும். பின்னர் கண்களை திறந்து மறுபடியும் கண்களை மூடி திறக்கச் சொல்ல வேண்டும். கண்களை மூடியபின்னர் அவர் நிலை தடுமாறினால் கீழே விழுவதற்கு நிலை தடுமாற்றம் தான் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

டேண்டம் நடை (Tandem walk)

நேர்கோட்டில் அடிமேல் அடி வைத்து நடக்கச் சொல்ல வேண்டும். எவ்வித சிரமமும் இன்றி 10 அடித் துாரத்தை சரியாக நடந்தால், அவர் உடலில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் தொல்லை எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

எழுந்து நடக்கும் பரிசோதனை (Get- up - and go)

முதியவர் கைப்பிடியுள்ள நாற்காலியிலிருந்து எழுந்து நேர் கோட்டில் 10 அடி தூரம் நடந்து, பின்பு திரும்பி வந்து நாற்காலியில் அமரவேண்டும். இந்த பரிசோதனை செய்ய 12 வினாடிக்கு மேல் ஆனால் அவருக்கு கீழே விழும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின் மூலம் கால்களில் உள்ள பலம், நிற்கும் போது ஏற்படும் நிலைதடுமாற்றம், உட்காரும் போது ஏற்படும் நிலைதடுமாற்றம் மற்றும் சரியாக நடை இல்லாத நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Representational Image
Representational Image
Photo by Alex Boyd on Unsplash

ஆய்வகம் பரிசோதனைகள்

முழு இரத்த பரிசோதனை, இரத்ததில் சர்க்கரையின் அளவு, உப்பின் அளவு, ஈ.சி.ஜி, எக்கோ, கழுத்து பகுதி எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை தேவைப்பட்டால் எடுக்க வேண்டும்.

சிகிச்சை முறை

 • கீழே விழுதலுக்கு நோய் ஒரு காரணமாக இருந்தால் அதற்கு தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். உதறுவாதம் என்ற பார்க்கின்சன்ஸ் நோய், பக்கவாதம்

 • கீழே விழுவதற்கு மருந்துகள் ஒரு காரணமாக இருந்தால் அதை நிறுத்தவேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

 • எலும்பு வலிமை இழந்து (Osteoporosis) இருப்பின் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.

 • வைட்டமின் டி குறைவு உள்ளவர்களுக்கு, வைட்டமின் டி மற்றம் கால்சியம் மாத்திரையை கொடுக்க வேண்டும். இத்தோடு தினமும் 30 60 நிமிடங்கள் வெய்யில் உடலில் படுமாறு அறிவுறுத்த வேண்டும்.

 • மூட்டு தேய்மானம் (Arthritis) உள்ளவர்களுக்கு வலி நிவாரணி, இயன்முறை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கீழே விழுதலை தடுக்கமுடியும்.

 • பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடியை மாற்றியோ அல்லது கண் புரை அறுவை சிகிச்சை மூலமோ கீழே விழுதலை தடுக்க முடியும்.

இயன்முறை சிகிச்சை முறை

சிறப்பு பயிற்சி பெற்ற இயன்முறை சிகிச்சை நிபுணர் உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டி சில பயிற்சி முறைகளைச் சொல்லிக் கொடுப்பார் (Balance training exercise). இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நிலை தடுமாற்றம் மெதுவாகக் குறையும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து குறைந்தது மூன்று மாதங்கள் செய்தால்தான் தக்க குணம் தெரியும்.

எலும்பு வலிமை இழத்தல் நிலையில் உள்ளவர்களுக்கு சதையை வலிமையடையச் செய்யும் பயிற்சிகளை கொடுக்கவேண்டும்.

உபகரணங்கள்


கீழே விழுதலை தடுக்ககைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரங்களை உபயோகிக்கலாம்.

கீழே விழுதலை தடுக்க

 • உடலை முழுமையாக பரிசோதனை செய்து, கீழே விழுவதற்கு நோய்கள் ஏதேனும் காரணமா என கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

 • கண் பார்வை சரியாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 • பார்வைக் குறைவால் அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால் கூட கீழே விழ ஒரு காரணமாக அமையும். ஆகவே, சரியான கண்ணாடி அணிவது மிகவும் அவசியம்.

 • காதை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காதில் அழுக்கு (wax) சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் கூட நிலை தடுமாறலாம். அதை அகற்றிவிட்டால் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படாது.

 • முதியவர்கள், சாப்பிடும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட கீழே விழ வாய்ப்பு உண்டு.

 • மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

 • படுக்கையில் இருந்து எப்போதும் வேகமாக எழுந்து, உடனே நடக்கக்கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர்கள், எழும்போது முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும், பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்க வேண்டும், அதன்பின்னரே நடக்க வேண்டும்.

முதுமை
முதுமை
 • நடக்கும்போது கைத்தடி அல்லது தேவையான உபகரணங்களை (walking frame) உபயோகிக்க வேண்டும். மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்று கூச்சப்படத் தேவையில்லை. நம் உடலை நாம் தான் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்.

 • கால்களுக்குப் பொருத்தமான காலணிகளை அணிவது சிறந்தது.

 • தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் திறனை அதிகப்படுத்தி கீழே விழுவதைத் தடுக்க உதவுகிறது, உடலைச் சரிசமமாக வைத்துக்கொள்ள சிறப்பு உடற்பயிற்சிகளும் (balance training exercise) தேவை.

 • படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கைக்கு எட்டும் துாரத்திலேயே வைக்க வேண்டும். உதாரணம்: டெலிபோன், பேனா, கண்ணாடி, டைரி, சாவி.

 • முதியவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும். உதாரணம்: குளியலறை, கழிவறை, படிக்கட்டு.

 • குளியலறை வழுவழுப்பு இல்லாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக

"நடந்தால் நாடும் உறவாடும்

படுத்தால் பாயும் பகையாகும்” - என்பதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

கீழே விழுதலினால் விளையும் தொல்லைகளின்றி நாமும் மற்றும் நம்மை சார்ந்தவர்களும் நலமுடன் வாழ்வோம் !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism