Published:Updated:

முதுமையில் இயலாமை! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, பழையநிலைக்கு திரும்பிய ஒருவருக்கு, நடக்கும் பொழுது மட்டும் கூடவே ஒருவர் துணை வேண்டும். அதே சமயம் உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு, அவருடைய எல்லா தேவைகளையும் செய்ய ஒருவர் வேண்டும்.

முதுமையில் இயலாமை! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, பழையநிலைக்கு திரும்பிய ஒருவருக்கு, நடக்கும் பொழுது மட்டும் கூடவே ஒருவர் துணை வேண்டும். அதே சமயம் உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு, அவருடைய எல்லா தேவைகளையும் செய்ய ஒருவர் வேண்டும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

முதுமை என்பதே ஒரு தேய்பிறை தான். சில மகிழ்வான நிகழ்ச்சிகளுக்கு இடையே முதுமையில் நமமை வெகுவாய்ப் பாதிப்பது தொல்லை தரும் நிகழ்ச்சிகளே. முதுமையில் வறுமை கொடியது, தனிமை கொடியது, பல நோய்கள் கொடியது என்பது தெரிந்ததே. ஆனால் இவற்றை எல்லாவற்றையும் விட மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் இயலாமை. அதாவது வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது.

உதாரணம்: குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு இப்படி தன்னுடைய ஒவ்வொறு தேவைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது. தனக்குத் தேவைப்படும் பொழுது எல்லாம் உதவ ஒருவர் முன் வரவேண்டும். அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும். இதற்கு உற்ற துணை அல்லது உறவினர்களின் உதவி வேண்டும். தனக்கு உதவ ஆட்களை வைத்துக் கொள்வதென்றால், அதற்கேற்ற நிதி வசதி வேண்டும். இத்தனையும் அமைவது என்றால் அது சற்று சிரமம் தான். ஆகவே இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக்காலிலேயே நிற்க ஏதாவது வழிகள் உண்டா? அது பற்றிச் சற்று ஆராய்வோம்!

Representational Image
Representational Image

யாருக்கெல்லாம் இயலாமை ஏற்படும்.

உடல் நோய்கள்

 • பக்கவாதம்

 • உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய்

 • மூட்டு வலி

 • உடற்பருமன்

 • சத்துணவு குறைவு

 • புற்றுநோய்கள்

 • கண் பார்வை குறைவு

 • காது கேளாமை

 • ஆஸ்த்துமா, இதய பலவீனத்தால் மூச்சு விடுவதில் சிரமம் உடல் உறுப்புகளை இழத்தல், உதாரணம்: விபத்து, நோய்கள் (கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோயினால் காலுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு நோய்த் தொற்றுடன் அழுகும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியை அகற்றி விடுவது)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனநோய்கள்

 • மனச்சோர்வு

 • மறதி நோய் எனும் டிமென்சியா

குடும்பம் மற்றும் நிதி சார்ந்த ©Wf£û]Ls

 • நிதி வசதியின்மை

 • விதவையர்கள்

 • விதவைகள்

 • குழந்தைப்பேறு இல்லாதவர்கள்

 • தனிமை (எல்லாம் இருந்தும் ஒருவரும் உதவ இயலாத நிலை)

  முதுமையில் இயலாமை என்பது ஒரு தனிப்பட்ட காரணத்தினால் மட்டும் வருவது கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினால் ஏற்படும்.

  உதாரணம்: சுமார் 80 வயதடைந்தவருக்கு கண் பார்வை சற்று குறைவு, அதிக மூட்டுவலி, மனைவியை இழந்தவர், சிறிதளவு ஓய்வுதியம் மட்டுமே பெறுபவர், கவனிப்பதற்கு ஆட்கள் கிடையாது, இவர்களுடைய இயலாமையை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

Representational Image
Representational Image

ஒருவருக்கு எந்த அளவுக்கு உதவி தேவைப்படும்?

இது அவர் அவருடைய இயலாமையை பொறுத்தே இருக்கும். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, பழையநிலைக்கு திரும்பிய ஒருவருக்கு, நடக்கும் பொழுது மட்டும் கூடவே ஒருவர் துணை வேண்டும். அதே சமயம் உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு, அவருடைய எல்லா தேவைகளையும் செய்ய ஒருவர் வேண்டும். இதை விட சிரமம். மறதி நோயால் பாதிக்கப்பட்டவரின் நிலை. அவரை சிறு குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல எல்லா நேரங்களிலும் கூடவே இருந்து, அன்புடன் பராமரிக்க ஒருவர் தேவை. மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்குப் பேச்சுக்கு துணையாக ஒருவர் இருந்தாலே போதும்.

முதியவர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளுள் இதுவே மிக முக்கியமான பிரச்சனையாகத் தெரிகிறது. இதற்கு ஏதாவது மார்க்கம் உண்டா? நிச்சயம் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முதுமையினால் ஏற்படும் இயலாமையைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும் ஓரளவிற்கு வழி காண முடியும். அதற்கு முதலில் ஒருவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வயதானால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படலாம் என்று ஒரளவுக்குத் தெரிந்து கொண்டு, அதை எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகளை சுமார் 50 வயதிலிருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.


வருமுன் காக்க

ஐம்பது வயதிற்கு மேல் எந்த உபாதையும் தராமல் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்குக்கூடத் தெரியாது. உ.ம்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம். ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதின் மூலம்

மறைந்திருக்கும் பலநோய்களை கண்டுகொள்ள முடியும், அல்லது ஆரம்ப நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளித்து முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தவிர்க்க முடியும்.

Representational Image
Representational Image

தடுப்பூசி

தடுப்பூசியின் மூலம் நிமோனியா மற்றும் இன்புளூயன்ஸா போன்ற நோய்கள் வராமல் தடுத்து நலமாய் வாழலாம்.

கீழே விழுதலை தடுக்க

கண், காது ஆகியவற்றை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்களை உபயோகித்தல் அவசியம். பொறுத்தமான காலணிகளை அணிய வேண்டும்.

விபத்தை தடுக்க

வாகனங்களில் பயணம் செய்யும் போது பத்திரமாக பயணித்து முடிந்தளவிற்கு விபத்தை தடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு முறை மாற்றம்

புரதச் சத்து அதிகமுள்ள பருப்பு வகைகள், காளான், சோயா, முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் ஒட்ஸ் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தளவிற்கு அரிசியை குறைத்து கோதுமை மற்றும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் தவிர மற்ற முதியவர்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீரையாவது அருந்த வேண்டும். சீனி சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் மற்றும் கருப்பட்டியை உபயோகிக்கலாம். உப்பை குறைவாக உண்ண வேண்டும்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

இயலாமையை விரட்ட உடற்பயிற்சி

முதுமைப்பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதினால் பக்கவாதம் ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கப்படுகிறது. மேலும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மறதி நோயும் வராமல் காக்கிறது.. முதியவர்கள் தங்கள் உடல்நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றை மனதிற்கொண்டு உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


இயன்முறை சிகிச்சை

ஆரம்ப நிலையில் உள்ள பார்க்கின்சன்ஸ் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதினால் இயலாமையைத் தவிர்த்து தன் சுய தேவைகளைத் தானே செய்து கொள்ள முடியும். உரிய நேரத்தில் தொடர்பு கொண்டால் இயன்முறை சிகிச்சை நிபுணர் வீட்டிற்கே வந்து நோயாளிக்கு தக்க சிகிச்சை அளிப்பார். இவரின் பணி மிகவும் முக்கியமானது. இவர் நோயாளிக்கு தேவையான உபகரணங்களை (கைத்தடி, நடை வண்டி, சக்கர நாற்காலி, படுக்கை) வழங்கவும் ஏற்பாடு செய்வார்.

தியானம், பிராணாயாமம், யோக பயிற்சி

தொடர்ந்து தியானம் மற்றும் பிராணாயாமம் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மனச்சோர்வோ மறதி நோயோ வருவதில்லை. மேலும் பார்க்கின்சன்ஸ் நோய் உள்ளவர்களுக்கு யோக பயிற்சி மூலம் கை நடுக்கமும், தசை இறுக்கமும் வெகுவாக குறைகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை நடுத்தர வயதிலிருந்தே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இயலாமையை ஓரளவுக்கு தடுக்க முடியும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.