Published:Updated:

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

பெண்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள், செய்துகொண்ட அறுவை சிகிச்சையின் தன்மை மற்றும் உளவியல் ரீதியான காரணங்களால் கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வெளியேறலாம்.

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

பெண்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள், செய்துகொண்ட அறுவை சிகிச்சையின் தன்மை மற்றும் உளவியல் ரீதியான காரணங்களால் கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வெளியேறலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பெண்களில் சிலர் தமக்கு வரும் நோய்களைப் பற்றி வெளியே சொல்லவோ அல்லது டாக்டரிடம் செல்லவோ தயங்குவார்கள். இதற்கு முக்கிய காரணம், வயதானால் சில தொல்லைகள் வருவது சகஜம், அதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைப்பதுண்டு. வேறு சிலர் தனது தொல்லைகளை சொல்லி கணவருக்கோ மற்றும் குடும்பத்தாறுக்கோ சிரமம் கொடுக்கக்கூடாது என்றும் சிலர் எண்ணுவதுண்டு. ஒரு சில பெண்கள் கூச்சப்பட்டுக் கொண்டு வெளியே தனது பிரச்சனைகளை சொல்லுவது இல்லை. உதாரணம்: மார்பில் ஏற்படும் கட்டி, மாதவிடாய் சேர்ந்த பிரச்சனைகள் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் கசிவால் ஏற்படும் தொல்லைகள். தொல்லைகள் தோன்றியவுடனேயே மருத்துவரிடம் சென்றால் மேலே கூறிப்பிட்ட பல தொல்லைகளுக்கு தக்க சிகிச்சையளித்து நோயை குணப்படுத்த முடியும்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுநீர்க் கசிவு


பெண்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள், செய்துகொண்ட அறுவை சிகிச்சையின் தன்மை மற்றும் உளவியல் ரீதியான காரணங்களால் கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வெளியேறலாம். இதை, முதுமையில் ஏற்படும் இயல்பான ஒரு செயல்தான் என்று நினைப்பது தவறு.

சிறுநீர்ப் பை நிரம்பியதும் ஒருவருக்கு சிறுநீர் கழீக்க வேண்டும் என்ற உணர்வு எழும். கழிப்பறை இல்லாத இடங்கிளல், அந்த உணர்வை அடக்கி வைப்போம். இந்தக் கட்டுப்பாடு இயல்பாகவே நம் சிறுநீர்ப் பையில் இருக்கிறது. இதை இழக்கும்போது சிறநீர்க்கசிவு பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு மிக அரிதாக ஏற்படும் இந்தப் பிரச்சினை, சிலருக்கு அடிக்கடி ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. கர்ப்பம், குழந்தைப்பேறு, மாதவிடாய் நின்று போவது என உடல்ரீதியான மாற்றங்களின் விளைவாக இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல முதுமையில் நிறைய பேரை பாதிக்கும் பிரச்சினையாகவும் இது உள்ளது. உடல் பருமன் பிரச்சினை உள்ளர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் ஏற்படும். புகைபப்பழக்கம் உள்ளவர்கள், நரம்புக் கோளாறு உள்ளவரகள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கம் இது வரலாம்.

இப்படி சிறுநீர் நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல் கழிவது சிறுநீர் அடங்காமை அல்லது யூரினரி இன்கான்டினன்ஸ் (Urinary incontinence) என்று அழைக்கப்படுகின்றது. இது மூன்று வகைப்படும். இருமினாலோ அல்லது தும்மினாலோ. சிரித்தாலோ அல்லது எடை தூக்கும் போதோ, அவர்களுடைய கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கழிவது ஸ்டெரஸ் யூரினரி இன்கான்டினன்ஸ் (Stress urinary incontinence) என்று அழைக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றிய உடனேயே அதை கட்டுப்படுத்த முடியாமல் உடனேயே சிறுநீர் பிரிந்துவிடுவதை (Over active bladder) மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி என்று அழைக்கப்படும். இவர்களுக்கு தண்ணீர் ஓடும் சப்தம் கேட்டால் கூட அவசரமாக சிறுநீர் கழிந்து விடும்.

நிரம்பி வழியும் நீர்க்கசிவு (Overflow Incontinence)

சிறுநீர்தாரையில் அடைப்பு ஏற்பட்டால் இத்தொல்லை ஏற்படலாம். உதாரணம்:

  • சிறுநீரை வெளியே அகற்றும் பகுதியில் அடைப்பு (Urethral stenosis) அல்லது அப்பகுதி சுருங்கி இருத்தல் (Stricture urethra).

  • கர்ப்பப்பை கீழே இறங்கி விடுவது (Prolapsed uterus)

  • கர்ப்பப்பையில் கட்டி இருப்பது (Fibroid uterus).

  • நீண்டகால நீரிழிவு நோயாளிக்கும் சிறுநீர்ப்பையில் இருந்து சிறிது சிறிதாக நீர் கசிந்து கொண்டே இருக்கும்.

  • ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவினாலும் சிறுநீர் தாரையில் அடைப்பு இருப்பது போல் தொல்லை உண்டாகலாம்.

Representational Image
Representational Image

ஒருவருக்கு சிறுநீர்க்கசிவு எப்படி ஏற்படுகின்றது? இருமும் போதும் ஏற்படுகிறதா அல்லது அவசரமாக போகவேண்டும் என்று தோன்றிய உடனேயே கசிகிறதா? அடிக்கடி சிறுநீர் போகவேண்டிய நிலைமை உள்ளதா? பகலில் எத்தனை முறையும், இரவில் எத்தனை முறையும் சிறுநீர் கழிக்கின்றீர்கள்? ஒவ்வொரு முறையும் தோராயமாக எவ்வளவு சிறுநீர் கழிக்கின்றீர்கள்? உங்களுடைய இரவு தூக்கம் எப்படி உள்ளது, சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையினால் உங்கள் தூக்கம் கலைகன்றதா? அல்லது பல காரணங்களினால் தூங்கமுடியாத நிலையில் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றீர்களா என்று ஆராய வேண்டும்.

பரிசோதனைகள்

  • முழுமையான சிறுநீர்ப் பரிசோதனை.

  • அல்ட்ரா சோனோகிராம் நீர்த்தாரை மற்றும் பிறப்புறுப்புகளில் கல் அல்லது கட்டி ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும்.

  • மலம் இறுகியுள்ளதா என்பதைக் கண்டறிதல்.

  • இரத்தத்தில் சர்க்கரை, உப்புச் சத்து அதிகரித்து உள்ளதா என்பதைக் கண்டறிவது.

  • பெண்களுக்கு பெண் டாக்டர் மூலம் நீர்த்தாரை மற்றும் பிறப்புறுப்புகளில் பரிசோதனை.

சிகிச்சை முறைகள்

  • எடை அதிகம் உள்ள பெண்கள் தங்கள் எடையை குறைப்பது அவசியம்.

  • நாள்பட்ட மலச்சிக்கலினாலும் நீர்க்கசிவு ஏற்படலாம். அதற்கு தக்க சிகிச்சை செய்து மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஆஸ்துமா மற்றும் இருமல், சளி தொல்லைகளாலும் நீர்க்கசிவு ஏற்படும். அதற்கும் தக்க சிகிச்சை பெறுவது அவசியம்.

  • களிம்பு தடவுதல் வயதான பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் அடிக்கடி சிறுநீர் போகும் தொல்லை ஏற்பட்டால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை காலையிலும மாலையிலும் நீர்தாரையிலும் மற்றும் பிறப்பு உறுப்புகளிலும் தடவி வந்தால் நல்ல குணம் ஏற்படும்.

  • உடற்பயிற்சி பெண்களின் அடிவயிற்றுத் தசை, வலிமையடைய சிறப்பு உடற்பயிற்சி (pelvic muscles exercise) செய்யவேண்டும். அதாவது ஆசன வாயை இறுக்கி உள்ளே இழுத்து சிறிதுநேரம் கழித்து விடுதல். அதேபோல் சிறுநீரை அடக்கிக் கொள்ளுவது போல் செய்து சிறிதுநேரம் கழித்து வெளியேற்றுதல். இந்த இரண்டு பயிற்சிகளையும் ஒரே சமயத்தில் செய்யவேண்டும். சுமார் 20 30 தடவை இது போன்ற பயிற்சியை காலையிலும், மாலையிலும் செய்தால் சிறுநீர்க் கசிவு கட்டுக்குள் அடங்கும். இந்த சிகிச்சை முறை முக்கியமாக அழுத்த நீர்க்கசிவு உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

  • மருந்துகள் முறையாகப் பரிசோதனை செய்து, மேற்கூறிய வாழ்வியல் மாற்றங்கள் சிலருக்குப் பலன் இல்லாமல் போகலாம். அவசரமாக அவர்களுடைய கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர்க்கசிவு ஏற்படுபவர்களுக்கு தரமான சாலிஃபினாசின் டாரிஃபினாசின் மற்றும் மீராபாக்ரான் (Solifenacin, Darifenacin, Mirabegron) மாத்திரைகள் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

  • அறுவை சிகிச்சை இந்த சிகிச்சை முறைகளில் பலன் ஏதும் இல்லாமல் போனால், சிறுநீர் தாரையில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் நீர் கசிவை கட்டுப்படுத்த முடியும்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

Sling surgery என்னும் எளிய அறுவை சிகிச்சை மூலம் (Minimal invasive pro ure) நல்ல பயன் பெறலாம். இதற்கு இத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற Urologist அல்லது Urogynaecologist டாக்டர்களின் ஆலோசனைப் பெறவும்.

நிரம்பி வழியும் நீர்க்கசிவு உள்ளவர்களுக்கு அடைப்பு அல்லது கட்டி ஒரு காரணமாக இருந்தால் அதை அகற்றினால், நீர் கட்டுக்குள் வந்துவிடும். உதாரணம்: கர்ப்பப்பை கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்குதல்.

சிறுநீர் தாரையில் ஏற்படும் சுருக்கத்தை (Stricture) சிறு கருவி மூலம் (Dilatation) அடைப்பை விரிவுபடுத்தலாம்.

சிறுநீர் கசிவை மறைக்கவோ அலட்சியப்படுத்தவோ வேண்டியது இல்லை. அதற்கு தக்க சிகிச்சை பெற்று மற்ற பெண்களைப் போல் நீங்களும் ஒரு சுதந்திர பறவையாய் வெளியே சுற்றி வரலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.