Published:Updated:

முதுமையும் மன நோய்களும்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

இன்றைய வாழ்க்கைமுறை பெண்களுக்கு மிகுந்த மனச்சோர்வு தருவதாக இருக்கிறது. தனிக் குடித்தன வாழ்க்கைமுறையில் பெண்களுக்கு சுமைகள் அதிகமாகிவிட்டன. இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு கணவரும் குழந்தைகளும் கிளம்பிப் போனபிறகு நாள் முழுக்க தனிமை வாட்டுகிறது.

முதுமையும் மன நோய்களும்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

இன்றைய வாழ்க்கைமுறை பெண்களுக்கு மிகுந்த மனச்சோர்வு தருவதாக இருக்கிறது. தனிக் குடித்தன வாழ்க்கைமுறையில் பெண்களுக்கு சுமைகள் அதிகமாகிவிட்டன. இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு கணவரும் குழந்தைகளும் கிளம்பிப் போனபிறகு நாள் முழுக்க தனிமை வாட்டுகிறது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

முதுமையில் ஏற்படும் மனநோய்கள் பலவும் தற்பொழுது 50 வயதிலேயே ஆரம்பமாகி விடுகின்றன. முக்கியமாக மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனக்குழப்பம் போன்றவகைகளே அதிகமாகி வருகின்றன.

மனச்சோர்வு

மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கைத்தரம் சற்று மாறுபடும். முதுமையில் இந்நோயை கண்டறிவது எளிதல்ல, ஏனென்றால் முதுமையில் ஏற்படும் மாற்றங்களுக்கும், மனச்சோர்வினால் ஏற்படும் தொல்லைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடல் சார்ந்த தொல்லைகளுக்காகவே முதலில் மருத்துவரிடம் செல்வார்கள். (உ.ம்.) வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, துாக்கமின்மை மற்றும் பசியின்மை போன்றவைகள்.


அறிகுறிகள்

மற்ற நோய்களைப் போல அல்லாமல் இந்நோயின் அறிகுறிகள் பலதரப்படும் - தொடர்ந்து சோகநிலை, குற்ற உணர்வு, தகுதியற்ற உணர்வு, நம்பிக்கையின்மை, எல்லாம் கெட்டது என்று எண்ணும் மனப்பான்மை, பொழுதுபோக்கில் நாட்டமில்லாமை, துாக்கமின்மையால் அதிகாலையில் எழுந்து விடுவது, அளவுக்கு அதிகமாகத் துாங்குவது, பசி குறைதல், எடை குறைதல் அல்லது அதிகமாக உண்டு உடற்பருமன் அடைவது, சக்தியின்மை, மிக்க களைப்பு, தற்கொலை பற்றிய எண்ணம், தற்கொலைக்கு முயற்சி செய்வது, மனப்பதற்றம், கவனமின்மை, மறதி, எதிலும் முடிவு எடுக்காத நிலை மற்றும் சிகிச்சைக்குப் பயனளிக்காத உடல் உபாதைகள். (உ.ம்.) தலைவலி, வயிற்றுக்கோளாறு, உடல் வலி.

முதுமை
முதுமை

இன்றைய வாழ்க்கைமுறை பெண்களுக்கு மிகுந்த மனச்சோர்வு தருவதாக இருக்கிறது. தனிக் குடித்தன வாழ்க்கைமுறையில் பெண்களுக்கு சுமைகள் அதிகமாகிவிட்டன. இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு கணவரும் குழந்தைகளும் கிளம்பிப் போனபிறகு நாள் முழுக்க தனிமை வாட்டுகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு இருமடங்கு வேலை பெரும் சுமை தருகிறது. இதெலலாம் மனச்சோர்வை வரவழைக்கின்றன.

தனியாக இருப்பவர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், கணவனை இழந்தவர்கள், குடும்பத்தின் அரவணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த பாதிப்பு வரக்கூடும். மிக நெருங்கியவர்களின் மரணமும் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடல் நோய்க்கும், மனச்சோர்வுக்கும் உள்ள தொடர்பு

நாள்பட்ட மற்றும் தொடர்ந்து தொல்லைகள் தரக்கூடிய பலவித உடல் நோய்களினாலும் மனச்சோர்வு வரலாம்.

உ.ம். :

 • புற்றுநோய் - மார்பகம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் இரத்தம் சார்ந்த புற்று நோய்கள்.

 • இருதய நோய்கள் - இருதயம் வலிமை இழத்தல், மாரடைப்பு வந்தவர்கள்.

 • நாளமில்லா சுரப்பிகளின் தொல்லைகள் - தைராய்டு குறைவாக சுரப்பது மற்றும் அதிகம் சுரப்பது.

 • நரம்பு நோய்கள் - அறிவுத் திறன் வீழ்ச்சி, உதறுவாதம்.

 • சத்துணவு குறைவு - முக்கியமாக வைட்டமின் பி12 குறைவு.

நோய்களைத் தவிர மனச்சோர்வு வருவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. (உ.ம்.) தள்ளாமை, மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, உதாரணம்: தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பது. உறவினரின் எதிர்பாராத இழப்பு, குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ மதிக்காத நிலை. இவ்வாறு வயதான காலத்தில் மனச்சோர்வு வருவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு.

Representational Image
Representational Image

தற்கொலை முயற்சி

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோரில் ஐந்தில் ஒருவர், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர். இதற்கு மனச்சோர்வு மற்றும் அழுத்தம் தரக்கூடிய வாழ்க்கை நிகழ்வுகள் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொள்வது, முன்னரே தற்கொலைக்கு முயன்றது, தற்கொலை பற்றி அதிகம் பேசுவது போன்ற இயல்புகள் கொண்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

எதிர்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே முதியவர்களின் தற்கொலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, முதியோர்கள் பொது மருத்துவர்களைத்தான் முதலில் ஆலோசனைக்காக அணுகுவார்கள். எனவே, முதியோர்கள் தங்களுடைய மனவேதனையைக் கூறும்போது, அவர்களின் தற்கொலை எண்ணங்களை அறிய பொது மருத்துவர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

சிகிச்சை முறை

"மனச்சோர்வுக்காக சிகிச்சைக்குச் சென்றால் நம்மை மனநோயாளியாக நினைப்பார்கள்" என பயந்துகொண்டு நிறைய பேர் சிகிச்சைக்குச் செல்வதில்லை. இன்னும் பலருக்கு, தங்களுக்கு மனச்சோர்வு நோய் இருக்கிறது என்பதே தெரிவதில்லை. பெரும்பாலும் உறவினர்களே இவர்களை மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள். இந்த நோயைக் கண்டறிய முதலில் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் சார்ந்த நோய்கள் இருந்தால், அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.

மனச்சோர்வை நீக்க தற்போது பல மருந்துகள் வந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும். மருந்து பயனளிக்காத நோயாளிக்கு மின் சிகிச்சை மூலம் தீர்வு தர முடியும். எளிதான இந்த சிகிச்சையில் தீய விளைவுகள் ஏதுமில்லை. உடனேயே பலன் கிடைக்கும்.

பேச்சுப் பயிற்சி சிகிச்சை மற்றும் உளவியல் நிபுணர்களின் ஆலோசனை, மனச்சோர்வுக்கு நல்ல பயன் அளிக்கும். இத்துடன் அவர்கள் வாழ்க்கைமுறையிலும் சில மாற்றங்களைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். உதாரணம்: தினசரி சிறிது தூரம் நடப்பது, யோகா பயிற்சி செய்வது, நண்பர்களிடம் பேசுவது, மனச்சோர்வு இருந்தாலும் பிடித்தமான ஒரு செயலைத் தொடர்ந்து செய்வது மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்பது போன்றவை.

சிந்தனைகளை மாற்றி அமைக்கும் சிகிச்சையும் பலன் தரும். சிலர் “வாழ்க்கையே முடிந்து போய்விட்டது. நமக்கு என்று யாருமே இல்லை" என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இந்த சிந்தனையை மாற்றி, "உங்கள் மீது அக்கறை காட்டும் பலர் இருக்கின்றனர்” என்று புரிய வைக்க இந்த சிகிச்சை உதவும்.

ஆரம்ப அறிகுறிகளை உணர்ந்ததுமே சிகிச்சைக்குச் சென்றால், இது எளிதாக குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான்!

 பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

மனக்குழப்பம்

திடீரென்று ஏற்படும் மனக்குழப்பம் இளமைப் பருவத்தினரைவிட முதியவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புகள் உண்டு. மனக்குழப்பம் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி, நல்ல மன நிலையில் உள்ள முதியவர்களுக்கும் கூட திடீரென்று வரலாம். இந்த மனக்குழப்பமும் பதட்டமும் சில மணி நேரங்கள் தான் நீடிக்கும். அதற்குண்டான காரணத்தை கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்துவிட்டால் பழைய நிலைக்கு நலமாக திரும்பி வருவார்.


மனக்குழப்பம் வர வாய்ப்புள்ளவர்கள் :

 • மிகவும் வயதானவர்கள். - அறிவுத்திறன் வீழ்ச்சி போன்ற மூளைசார்ந்த நோயுள்ளவர்கள்.

 • நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள்.

 • பல நோய் உள்ளவர்கள்

 • பலவிதமான மாத்திரைகளை உண்ணுபவர்கள்.

காரணங்கள்

 • பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் தொல்லைகள் (Infection) உதாரணம்: நிமோனியா, சிறுநீர்த்தாரையில் பூச்சித் தொல்லை.

 • மருந்துகள். உதாரணம்: வலி நிவாரணி, உயர் இரத்த அழுத்த மாத்திரை, மன நோய்க்கு கொடுக்கும் மாத்திரை, காச நோய் மாத்திரை, உதறுவாதத்திற்கு கொடுக்கும் மாத்திரை.

 • மதுவையும், சில மாத்திரைகளையும் திடீரென்று நிறுத்துவது.

 • மூளைக்கு இரத்த ஓட்டம் குறைதல். உதாரணம்: மாரடைப்பு, இதயம் வலிமை இழத்தல், உடலில் இரத்தம் திடீரென குறைதல் (blood loss), சீரற்ற நாடித்துடிப்பு (irregular heart beat)

 • மூளையைச் சார்ந்த நோய்கள். உதாரணம்: பக்கவாதம், இரத்தக்கசிவு

 • மூளைக்கு பிராணவாயு குறைதல். உதாரணம்: நிமோனியா, ஆஸ்த்துமா

 • வலி – தொடர்ந்து தாங்க முடியாத வலி இருந்தால் மனக்குழப்பம் ஏற்படும். உதராணம்: அறுவைச் சிகிச்சைக்குப் பின்

 • மலம் இறுகும் போது (faecal impaction)

 • சிறுநீர் அடைப்பு ஏற்படுவது (urinary retention)

 • எலும்பு முறிவு

 • புற்றுநோய் - மூளையைத் தாக்கும் பொழுது

 • இரத்தத்திலுள்ள உப்பு மற்றும் இதர தாதுப் பொருட்களின் அளவு மாறுபடுதல் (electrolyte abnormalities) உதாரணம்: உப்பு, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்.

 • இதர நோய்கள். உதாரணம்: தைராய்டு தொல்லைகள்.

 • நீரிழிவு நோய் உடலிலுள்ள சர்க்கரையில் அளவு குறைவது (hypoglycaemia) மற்றும் அளவு அதிகரித்தல் (hyperglycaemia)

 • உணர்ச்சிகளை கிரகிக்கும் தன்மை குறைதல் (reduced sensory input). உதாரணம்: கண்பார்வை குறைதல், காது கேளாமை, இருண்ட சூழ்நிலை, சுற்றுபுற மாற்றங்கள்.

ஆஞ்சியோகிராம்
ஆஞ்சியோகிராம்

சிகிச்சை முறைகள்

 • மனக்குழப்பம் அடைந்த நோயாளியை முழுமையாக பரிசோதனை செய்வது மிக அவசியம். அதற்கு தகுந்தார் போல் தேவையான இரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. முதலியவற்றை செய்ய வேண்டும். அதற்குண்டான காரணத்தை கண்டறிந்தால் சிகிச்சை முறை மிகவும் எளிது. குழப்பம் அடைந்தவர்களுக்கு துாக்க மாத்திரையைக் கொடுக்கக்கூடாது. அது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். தேவையானால் மன அமைதிப்படுத்தும் மாத்திரை மற்றும் வலி மாத்திரைகளை கொடுக்கலாம்.

 • மனக்குழப்பதற்குரிய காரணத்தை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சையளிக்க வேண்டும். உதாரணம் :நிமோனியா ஒரு காரணமாக இருந்தால் அதற்கு தக்க கிருமிநாசியை கொடுத்தால் போதும். நீர் வறட்சிக்கு (dehydration) ஊசி மூலமாக உப்பி, குளுகோஸ் கலந்த மருந்தை உடலில் செலுத்தலாம் (I.V.fluids). மலம் இறுகி இருந்தால் எனிமாவே போதுமானது. சிறுநீர் அடைப்பு இருந்தால் கேத்திட்டர் மூலம் வெளியேற்றலாம். எலும்பு முறிவு – தக்க சிகிச்சையுடன் வலி மாத்திரை.

இது போன்ற எளிய சிகிச்சைகள் மூலம் முதியவர்களின் மனக்குழப்பத்திற்கு நிரந்தர தீர்வளிக்க முடியும். இது ஆச்சரியம் - ஆனால் உண்மை!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.