Published:Updated:

முதுமையில் ஏற்படும் நுரையீரல் நோய்கள் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை நிமோனியா ஊசியை எடுத்துக் கொண்டால் போதும். ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியை போட்டுக் கொள்ளலாம்.

முதுமையில் ஏற்படும் நுரையீரல் நோய்கள் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை நிமோனியா ஊசியை எடுத்துக் கொண்டால் போதும். ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியை போட்டுக் கொள்ளலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நடுத்தர வயதினருக்கு வரும் நுரையீரல் சார்ந்த எல்லா நோய்களும் முதுமையிலும் வருவதுண்டு. காசநோய், புற்றுநோய், ஆஸ்துமா, நிமோனியா மற்றும் இன்புளூயன்ஸா போன்ற பல நோய்கள் முதுமையில் வரலாம்.


நிமோனியா

முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுநோய். இந்நோய் உள்ளவர்கள் இரும்பும் பொழுது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி. இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சு திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் இரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (ஸ்சைனஸ்) மற்றும் மூளையை பாதித்து உயிருக்கே ஆபத்தைக்கூட விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம்.

Representational Image
Representational Image

நிமோனியா வர வாய்ப்பு உள்ளவர்கள்

  • வயதானவர்கள்

  • நீரிழிவு நோய் உள்ளவர்கள்

  • ஸ்டீராய்டு மருந்து உண்பவர்கள்

  • சமீபத்தில் ப்ளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்

  • நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்

  • இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள்

  • துாசி நிறைந்த இருப்பிடத்தில் வசிப்பவர்கள்

  • புகைப்பிடிப்பவர்கள்

  • மது அருந்துபவர்கள்

  • புற்றுநோயாளிகள்

தடுப்பூசி

சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை நிமோனியா ஊசியை எடுத்துக் கொண்டால் போதும். ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியை போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. நிமோனியா தடுப்பூசியுடன் தேவைப்பட்டவர்களுக்கு இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஒரே சமயத்தில் போட்டுக் கொள்ளலாம். இந்த ஊசியினால் பல நன்மைகள் உண்டு அவைகள் :

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள்

  • நிமோனியா சளி ஜீரம் வராமல் தடுக்கிறது.

  • அடிக்கடி மருத்துவமனையில் இந்நோய்க்காக சிகிச்சை பெற்று பணம் விரயம் ஆவது தடுக்கப்படுகிறது.

  • தடுப்பூசி மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு. இவங்கள் மூலம் இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

நிமோனியாவை இரத்தப் பரிசோதனை, சளி பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்ரே மூலம் எளிதில் கண்டுகொள்ளலாம்.

இந்நோய்க்கு தக்க கிருமி நாசினி, பிராண வாயு மற்றும் அதிகம் திரவம் கலந்த னவு தேவைப்படும். இச்சிகிச்சை முறையிலேன்ய முதியவர்கள் குணமடைந்துவிட்டார்கள்.

நிமோனியாவை "முதுமையின் நண்பன்" என்பர். "பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாய்த் துன்புறும் முதிய நோயாளர்களுக்கு நின்மானியா ஏற்பட்டால் அது அவரது தொல்லைகளுக்கு எல்லாம் மரணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விடும்" என்பர். உயர்வகை மருந்துகள் இல்லாத காலத்தில் இது ஓரளவிற்கு உண்மையாய் இருந்திருக்கலாம். மருத்துன முன்னேற்றம் அடைந்துள்ள இக்காலத்தில், நிமோனியாவை எனிதில் கண்டறிந்து, சிறப்பு சிகிச்சை செய்து இந்நோயின் கொடுமையிலிருந்து முதியவரை விடுவிக்கலாம்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

இன்புளயன்ஸசா

இது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இருமலிலிருந்து அல்லது தும்மலிலிருந்து இக்கிருமி மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது. இந்நோய் முக்கியமாக குளிர் காலத்தில் தான் தாக்கும். இன்புளுயன்ஸசா வராமல் தடுப்பதற்கும் தடுப்பூசி உண்டு. வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொறு ஆண்டும் போட்டுக் கொள்வது நல்லது. நிமோனியா தடுப்பூசியையும் இன்புளயன்ஸசா தடுப்பூசியும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம். இந்த ஊசியினால் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. இந்த ஊசியை ஆஸ்துமா, நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

காசநோய்

நம் நாட்டில் காசநோய் குழந்தைகளையும் முதியவர்களையும் மிகுதியாய் தாக்குகிறது; பிறரை அந்த அளவிற்குத் தாக்குவதில்லை. இது ஒருவித தொற்று நோயாகும்; பரம்பரைநோய் அன்று. "மைக்கோ பேக்டிரியம் டியூபிர்குளோசிஸ்" எனும் கிருமியால் இது ஏற்படுகிறது. முதுமையில் காசநோய் மிகுதியாய் வருவதற்கு நீரிழிவு நோய், வயிற்றுப் புண்ணிற்காக முன்பே அறுவை சிகிச்சை செய்த நிலை, மதுக்குடித்தல், சத்துள்ள உணவு குறைவு. ஸ்டீராய்ட்ஸ் போன்ற மருந்துகள் முதலியவை குறிப்பிடத்தக்க காரணங்களாகும்.

காசநோய் நுரையீரலை மிகுதியாய்த் தாக்குவதோடு பிற உடல் உறுப்புகளையும் ஓரளவிற்குத் தாக்கும். அவற்றுள் குடல், மூளை, சிறுநீரகப்பை, தோல், ஜண், எலும்புகள் மூட்டுகள் குறிப்பிடத்தக்கன.

Representational Image
Representational Image

நுரையீரல் காசநோயாளருக்கு முதலிற் பொதுவான நோய் அறிகுறிகள் சில தோன்றும். அவை: பசி குறைதல், உடல் வலிமையிழத்தல், எடை குறைதல், இரவு நேரத்தில் மிகுதியாய் வியர்த்துக் கொட்டல், மாலை நேரத்தில் இலேசான காய்ச்சல். முதியவருள் பலர் இத்தொல்லைகள் எல்லாம் முதுமையால் வருவன என்று எண்ணி அவற்றைப் பொருட்படுத்தாதிருந்துவிடுவர். இத்தொல்லைகளே காசநோயின் தொடக்க அறிகுறிகள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்நோய் நுரையீரலைச் சற்று மிகுதியாய்த் தாக்கும்போது இருமல், சளிவரல், சளியோடு இரத்தம் வருதல், மூச்சுத் திணறல் போன்ற பல தொல்லைகள் வரும். முதுமையில் இவ்வித நோயின் அறிகுறிகள் மிகுதியாய் இல்லாமலும் காசநோய் இருத்தலுண்டு. இதனை மறைந்துள்ள காசநோய் என்பர் (Silent TB). எக்ஸ்ரே மூலமே இதனைக் கண்டறிய முடியும்.

முதுமையில் பசிகுறைதல், எடை குறைதல், காரணம் இன்றி உடல் வலிமையிழத்தல், மிகுதியாய் வியர்த்துக் கொட்டல், தொடர்ந்து இருமல் வரல், சளி வெளிப்படல் முதலானவை இருப்பின், “இவை காசநோயின் அறிகுறியாய் இருக்கலாம்”, என்று எண்ணி உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். உடல் பரிசோதனைக்குப் பின்பு, மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதோடு சளி உள்ளிட்ட சில பரிசோதனைகளையும் இரத்தப் பரிசோதனைகளையும் செய்வார்; நோய் இருப்பது உறுதியாகிவிட்டால் தக்க சிகிச்சையளிப்பார்.

காசநோய் சிகிச்சை பெறுவோர் அறிய வேண்டியவை

  • இதனை முழுமையாயக் குணப்படுத்த முடியும். ஆனால், நோயாளி, மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

  • புதிய சிகிச்சை முறை மூலமாக ஆறு அல்லது ஒன்பது மாதங்களிலேயே நலமடைந்து விடலாம். முன்புபோல இரண்டாண்டுகள் வரை சிகிச்சை பெற வேண்டுவதில்லை.

  • சிகிச்சை பெறும்பொழுது முழு ஓய்வு தேவையில்லை. 1

  • நோயாளர் “தனித்து இருக்க வேண்டும்”, என்னும் அவசியம் இல்லை என்றாலும், நோய் உள்ளவர், குழந்தைகளோடு மிகுதியாய்ப் பழகாமல் ஒதுங்கியிருத்தல் நல்லது. நோய்க் கொடுமை மிகுதியாய் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டும்.

முதுமையில் காசநோயை எளிதில் கண்டுகொள்ள முடியாது. தொடர்ந்து பசி குறைந்து, உடல் இளைத்து, சற்று இருமலும், சளியும் இருப்பின், “அவை காசநோய்த் தொல்லைகளாய் இருக்காலம்”, என்றெண்ணி, உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். நோயிருப்பின், குறுகிய காலத்திலேயே மருத்துவர் செய்யும் புதிய சிகிச்சை முறையால் முழுநலமடையலாம்; காசநோய் எனும் காலனிடமிருந்து தப்பி முதுமையிலும் இன்பமாய் வாழலாம்.

Representational Image
Representational Image

ஆஸ்துமா

சுமார் 60 வயதைக் கடந்தவர்கட்கு முதன் முறையாய் “ஆஸ்த்துமா” வருதல் சற்றுக் குறைவே. நடுத்தர வயதில் இருந்த ஆஸ்த்துமா, முதுமையிலும் தொடர்ந்து வருதலை மிகுதியாய்க் காணலாம். முதுமையில் ஒவ்வாமையினாலும் துாசி, புகை, மருந்து, கெட்ட நெடி போன்றவற்றினாலும் இந்நோய் மிகுதியாகும்.

வயதானவர் ஒருவர் திடீரென்று மூச்சு விடத் திணறினால், அது "ஆஸ்த்துமாவினால் தான் நேர்கிறது” என்று எண்ணிப் புறக்கணித்தல் கூடாது. முதுமையிற் சிலருக்கு திடீரென்று “ஆஸ்த்துமா" போல மூச்சுத் திணறல் ஏற்படுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவை :

  • இதயம் வலிமையிழத்தல்

  • நுரையீரலில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்படல்

  • செயற்கைப்பல், உணவு, சளி, பல வெளிப்பொருட்கள் முதலானவை நுரையீரலில் அடைப்பினை ஏற்படுத்தல்

  • ஒவ்வாமை மருந்து, பூச்சுக்கடி, உணவு

ஆஸ்த்துமா மிகுதியாய் இரவில் தான் வரும். இருமல் விட்டுவிட்டுத் தொடர்ந்து வரும் சளி மிகுதியாய் இராது. மூச்சு விடத் தொல்லைப்படும் பொழுது நெஞ்சில் ஒருவித அழுத்தம் ஏற்படும்; அது இதய நோயைப் போலவே இருக்கும். மூச்சை இழுத்து விடும் பொழுது ஒருவித சத்தம் ஏற்படும். இத்தோடு நோய் தொற்றும் ஏற்பட்டால் காய்ச்சலும் சேர்ந்து இருக்கும். மூச்சு திணறல் அதிளிக்கும் பொழுது மிகவும் படபடப்பும், மனக்குழப்பமும் ஏற்பட வாய்ப்புண்டு.

இத்தொல்லையை இரத்தம் மற்றும் சளி பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம்.

சிகிச்சை முறை

நோய் அறிகுறி தோன்றிய உடனேயே மருத்துவர் கொடுத்த மருந்தினை உட்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தி உண்டால் உடனே பயன் விளையாது. மாத்திரையினால் பயன் பெறாதவர், புகை வடிவாய் வரும் மருந்தினை வாய் வழியாய்ச் சுவாசிக்கலாம். இது உடனே நல்ல பயனைத் தரும். இதனைத் தொடர்ந்து உபயோகித்தாலும் மிக்க கெடுதலை விலளவிக்காது. இதனாலும் பயன் விளையவில்லையென்றால், மருத்துவரிடம் சென்று, ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தேவைப்படின் மருத்துவமனையில் சேர்ந்து, பிராணவாயு முதலாய தீவிர சிகிச்சைகளைப் பெறலாம்.

செய்யக் கூடியவை

  • முறையாக மருத்துவரை கலந்தாலோசிப்பது ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு அவசியம்

  • எந்த அளவிற்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஆஸ்த்துமா விரைவில் குணமாகும்

  • வாகனம் ஓட்டும் போதும், சமையல் செய்யும் போதும், ஓட்டடை அடிக்கும் போதும் முகத்தை துணியால் முடிக்கொள்வது அவசியம்

  • மருத்துவரிடம், ஆஸ்த்துமா நோயாளிகள் தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளை காண்பிப்பது மிக முக்கியம்.

  • பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சி மிகவும் அவசியம்

  • சரியாக உட்காருதல் மற்றும் துாங்கும் நிலைகளை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  • உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்கவும்

  • மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் அவசியம்.

  • ஆஸ்த்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.

  • சைனஸ் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற தொல்லைகளுக்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • தேவைப்பட்டால் நீராவி பிடித்துக் கொள்ளலாம்

  • இன்புளூயன்ஸா, நிமோனியா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை இன்புளுயன்ஸா தடுப்பூசியும், ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் நிமோனியா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்

  • உள் இழுப்பான் (Inhaler) மற்றும் உள் ஊறிஞ்சி (Ncbulizcr)ஆகியவற்றை உபபோகிக்கும் முறையை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். மூச்சு விடும் சிரமத்திலிருந்து உடனே நிவாரணம் கிடைக்கும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை. குறைந்த அளவு மருந்தே உள்ளே செல்லும்.

  • முடிக்கு சாயம் (Hair dye) அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்

  • நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளிக்கொணர மார்பு இயன்முறை சிகிச்சை தேவைப்படும்.

  • சளி இருகாமலிருக்க நிறையத் திரவ உணவினை வாய்மூலமோ, ஊசி மூலமோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • நோய் தீவிர நிலையில் இருக்கும் போது வெந்நீர் அருந்துவது நல்லது.

  • காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.

  • அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) வீட்டில் இருக்க வேண்டும்.

  • தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்க தயங்கக் கூடாது.

Representational Image
Representational Image

செய்யக் கூடாதவை

  • சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது

  • புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விட்டுவிடவும்

  • அலர்ஜி, ஆஸ்த்துமாவை துாண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளை தவிர்க்கவும்

  • ஆஸ்பிரின் மாத்திரையை (இருதய இரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் மாத்திரை) சுயமாக ஆஸ்துமா நோயாளிகள் உபயோகிக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

  • மூச்சுத் திணறல் வரும் பொழுது தவிர்க்க வேண்டிய மருந்துகள்: துாக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை, நாடித் துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து,(உ.ம். அட்டிரினிலின்), உயர்இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உ.ம். புரோபரனலால்)

  • மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), துாக்கமின்மை, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டால் கால தாமதம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகவும்.

  • வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளி.

  • துாசு குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும்

  • படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்த்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.

  • நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் போது பயப்படக் கூடாது.

  • வீட்டில் உபயோகிக்க ஆக்சிஜன் சிலிண்டரை வாங்க தயங்கக் கூடாது. ஆக்சிஜன் சிலிண்டரை உபபோகப்படுத்தும் போது புகைபிடிக்ககூடாது, வெடித்து விடும்.

  • சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது

  • தினமும் காற்றோட்டமான இடத்தில் செய்யும் உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தூசு படிந்த இடங்களைத் தவிர்த்தல் மற்றும் சத்தான உணவு ஆகியவை ஆஸ்துமாவிலிருந்து காத்து முதுமையில் நலமாய் வாழலாம்.

நுரையீரல் புற்றுநோய்

இந்நோய் 50 முதல் 70 வயதினரையே மிகுதியாய்த் தாக்கும். தொடர்ந்து புகை பிடிப்பார்க்கு இந்நோய் வர வாய்ப்பு மிகுதி. புகை பிடியாதவரைவிடப் புகை பிடிப்பவருள் சுமார் 40% இந்நோயால் இறக்கின்றனர். புகைப்பதை நிறுத்தினாலும் பல ஆண்டுகள் கழித்து, நுரையீரலில் “புற்றுநோய்" வர வாய்ப்பு மிகுதியாய் உண்டு. புசை பிடிப்பார் அருகில் இருந்தாலும் அப்புகையின் கொடுமை புகை பிடியாதாரையும் தாக்கும். சிற்றுார்களில் வாழ்வோரைவிட, நகரத்தில் வாழ்வாரிடையே இந்நோய் சற்று மிகுதியாயக் காணப்படும். இதற்குத் தீய, துாய்மையில்லாத காற்றும் ஒரு காரணமாகும்.

நுரையீரல் புற்றுநோய் தோன்றின், அதன் முதல் அறிகுறி இருமலாகும். அது தொடர்ந்து இருக்கும்; சாதாரண மருந்துக்குக் கட்டுப்படாது; சிறிது இரத்தமும் வெளிப்படும்; சளியும் அடிக்கடி வரும். நடந்தால் சற்று மூச்சுத் திணறலும் ஏற்படும். புற்றுநோய் மார்பு எலும்பிற்கோ, நரம்பிற்கோ பரவின, அவ்விடத்தில் தொடர்ந்து கடுமையான வலி உண்டாகும்; குரலும் மாறலாம். உணவு கொள்ளும் பொழுது அடைப்பும் தோன்றலாம்.

முதுமை
முதுமை

ஒன்றனை மட்டும் நன்றாய் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முதுமையில் நோய் அறிகுறி ஏதுமின்றியும் நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புண்டு. இதனை “எக்ஸ்ரே” மூலமே கண்டறிய முடியும். மேற் குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் முதியவர்க்கு ஏற்படும் பொழுது "மிகுதியாய் அந்நோய் முற்றிய நிலையை அடைந்திருக்கும்; அதாவது சிகிச்சை செய்ய முடியாத நிலையை அடைந்திருக்கும்” எனக் கருதலாம். முதுமையில் நுரையீரலில் தோன்றும் புற்றுநோயினைத் தொடக்க நிலையிலேயே கண்டறிதலும் மிகக் கடினம். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்க்கு (அண்மைக் காலத்தில் அப்பழக்கத்தை கைவிட்டிருந்தாலும் கூட) தொடர்ந்து இருமல் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். அவருக்கு புற்றுநோய் உள்ளது" என்று முடிவு செய்யப்பட்டால், அதுவும் தொடக்க நிலைதான் என்று உறுதி செய்யப்பட்டால், அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம்; அதற்குப் பதிலாக மருந்து மற்றும் ரேடியம் சிகிச்சை முறையினையும் மேற்கொள்ளலாம். எவ்வகைச் சிகிச்சை முறையைச் செய்து கொண்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காது.

தினமும் காற்றோட்டமான இடத்தில் செய்யும் உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, துாசு படிந்த இடங்களை தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல் மற்றும் சத்தான உணவு மூலம் நுரையீரளை முதுமையில் இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.