Published:Updated:

பாயம்மாவிடம் படித்த பாடம்! | My Vikatan

Representational Image

இந்த சமயத்தில்தான் சோதனையாக குடிக்கும் நீர் தீர்ந்து விட்டது. கார்டு கொடுத்தாலும் அதை ஸ்வைப் செய்யும் இயந்திரம் கெட்டுக் கிடப்பதாகவும் கூறி விட்டார். இருந்த முப்பது ரூபாய் உபயோகமற்றுப் போனதால் சோகமாக வீடு திரும்பினோம் இருவரும்.

பாயம்மாவிடம் படித்த பாடம்! | My Vikatan

இந்த சமயத்தில்தான் சோதனையாக குடிக்கும் நீர் தீர்ந்து விட்டது. கார்டு கொடுத்தாலும் அதை ஸ்வைப் செய்யும் இயந்திரம் கெட்டுக் கிடப்பதாகவும் கூறி விட்டார். இருந்த முப்பது ரூபாய் உபயோகமற்றுப் போனதால் சோகமாக வீடு திரும்பினோம் இருவரும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தீபாவளிக்கு வந்திருந்த மகளையும், மருமகனையும் சென்னையில் விட்டு வரலாம் என்று போயிருந்த நானும் மனைவியும் செம்மையாக சென்னை மழையில் மாட்டிக்கொண்டோம்.

முதல் நாள் மின்சாரம் போனது. அடுத்த நாள் நெட்வொர்க் அனைத்தும் போனது. மூன்றாம் நாள் செல்போன் அனைத்திலும் சார்ஜ் போனது. பேப்பரும், பாலும் நின்றது. அடுத்த ஆறு நாட்களும் இருளில் எந்த தொடர்பும் இல்லாமல் காலம் கழிந்தது.

அனைத்து பணமும் செலவாகி கையில் காசும் தீர்ந்தது. நான்கு டெபிட் கார்டுகள் தேவையான பணத்துடன் இருந்தாலும் ஏ.டி.எம். எதுவும் இயங்காததால் ஒரு முப்பது ரூபாய் காசு மட்டும் (அனைவரிடமும் சேர்த்து) கை வசம் இருந்தது.

இந்த சமயத்தில்தான் சோதனையாக குடிக்கும் நீர் தீர்ந்து விட்டது. நானும் மகளும் அருகில் இருந்த ஸ்டோருக்கு சென்று கேட்ட போது ஒரே ஒரு கேன் மாத்திரம் இருப்பதாகவும், அதுவும் பழைய கேனைக் கொடுத்தால் ரூபாய் அறுபது என்றும் இல்லாவிட்டால் ரூபாய் இருநூறு கொடுத்து கேனை அப்படியே கொண்டு செல்லலாம் என்றும் கூறினார்.

கார்டு கொடுத்தாலும் அதை ஸ்வைப் செய்யும் இயந்திரம் கெட்டுக் கிடப்பதாகவும் கூறி விட்டார். இருந்த முப்பது ரூபாய் உபயோகமற்றுப் போனதால் சோகமாக வீடு திரும்பினோம் இருவரும்.

பாயம்மாவிடம் படித்த பாடம்! | My Vikatan

கேட் திறக்கும் சப்தம் கேட்டு, கீழ் வீட்டு பாயம்மா எட்டிப் பார்த்தார்.

" கடைக்கா போய் வரீங்க?" என்றார்." ஆமாங்க்கா.. குடிக்க தண்ணீர் தீர்ந்து விட்டது. கடையிலும் ஸ்டாக் இல்ல.." கையில் காசில்லை என்று சொல்ல கெளரவம் இடம் கொடுக்கவில்லை. " நம்ம வீட்ல ரெண்டு கேன் இருக்கு.. டேய்.. சபீரு..ஒரு கேன் தண்ணிய கொண்டு போய் அக்கா வீட்ல வெச்சுட்டு வா"..என்று சொல்லி முடிக்கும் முன்பு சபீர் தோளில் கேனைத் தூக்கி வைத்துக் கொண்டான், எங்களின் பலவீனமான ஆட்சேபணைகளை லட்சியம் செய்யாமல்.

படி ஏறும்போது பாயக்கா சத்தமிட்டார். " ஏதாவது வேணுமின்னா எங்கிட்ட சொல்லு கண்ணு. அப்பாவை தொந்தரவு பண்ணாத. சபீரு சொம்மாதான் இருக்கான். நிமிசத்தில போய் வாங்கி வந்துடுவான்'..

தண்ணீர் கிடைத்த நிம்மதியுடன் வீட்டிற்குள் நுழைந்த போது மகளின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம். பணத்தால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் மாறி, நட்பும், அன்பும், அனுசரணையும் உலகிற்குத் தேவை என்பதை உணர்ந்து கொண்ட பாவம் தெரிந்தது.

காலண்டர் கண்ணில் பட்டதும் ஏதோ சுரீரென்று உரைத்தது. அன்று தேதி டிசம்பர் ஆறு.

********

-சின்னுசாமி சந்திரசேகரன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.