Published:Updated:

20,000 புத்தகம் படிக்க சொல்லல, இந்த ரெண்டு மட்டும் படிச்சு பாருங்க! - வாசகர் சாய்ஸ்

Representational Image

20,000 புத்தகங்களுக்கு மேலாக படித்துள்ளேன் என்று ஒருவர் கூறியது இன்றைய பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

20,000 புத்தகம் படிக்க சொல்லல, இந்த ரெண்டு மட்டும் படிச்சு பாருங்க! - வாசகர் சாய்ஸ்

20,000 புத்தகங்களுக்கு மேலாக படித்துள்ளேன் என்று ஒருவர் கூறியது இன்றைய பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

Published:Updated:
Representational Image

சென்னையில் எனது கல்லூரிக் காலமது. சைதாப்பேட்டையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள எம்.சி.ராசா விடுதியில் தங்கிப் படித்த காலமது.

ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல் இன அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு முன்பே பட்டியல் இன மக்களுக்காக பாடுபட்டவர். இன்றைய அண்ணா சாலையில் அன்றைய மவுன்ட் சாலையில் தனக்கு சொந்தமான இடத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் சென்னையில் வந்து தங்கி படிக்க வசதியாக இருக்க வேண்டுமென அமைத்த விடுதி. இன்றும் கூட எம்.சி.ராஜா விடுதி என இயங்கி வருகிறது.

20,000 புத்தகம் படிக்க சொல்லல, இந்த ரெண்டு மட்டும் படிச்சு பாருங்க! - வாசகர் சாய்ஸ்

கல்லூரி முடிந்ததும் விடுதி செல்வதற்கு முன்பாக சைதையில் உள்ள நூலகத்திற்கு செல்வேன். அந்த நூலகத்தினுள் நுழைந்தவுடன் "சைதை கிட்டு, கழகப் பணிகளில் சிட்டு - கலைஞர் " என்ற பலகை வரவேற்கும் நூலகத்தில் நுழைவேன். அங்குதான் கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், கு.அழகிரி சாமி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றோரின் சிறுகதைகளை வாசித்து மூழ்கி திளைத்தேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி ' போன்ற நாவல்கள் அறிமுகம். நூலகரே தம்பி கிளம்புங்கள் என்று கூறும் வரை வாசிப்பில் மூழ்கி கிடப்பேன். நாவல்களை வாசிக்கும் போது சிறு டைரி ஒன்றை வைத்துக் கொள்வேன். கதையில் வரும் கதா பாத்திரங்களின் பெயர், கதையில் அவர்களுடைய பயணம் என சிறு குறிப்பு என எழுதி வைத்துக் கொள்வேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தக் காலக்கட்டத்தில் வாசிக்க கிடைத்தது பரிசாக ஒரு நாவல். தகழி சிவசங்கர் எழுதி சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த நாவல். சுந்தர ராமசாமி ஜேஜே. சில குறிப்புகள் உட்பட ஏராளமான நவல்களை,கதைகளை எழுதிக் குவித்தவர், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளை படைத்தவர். அவர்கள் மொழி பெயர்த்த "செம்மீன்" எனும் நாவல் தான் எனக்கு பரிசாக கிடைத்தது.

புத்தகங்களை வாசிப்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா அவர்களுடைய சுவாரஸ்யமான தகவல் அனைவரும் பின்பற்ற வேண்டியது. ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான புத்தகங்களை வாசிப்பதை விட பல்வேறு வகையான புத்தகங்களை மாற்றி, மாற்றி படிக்கலாம்
வைகை சுரேஷ்

சுமாராக மாலை ஆறு மணியளவில் வாசிக்க ஆரம்பித்த நான், ஒரே மூச்சாக தண்ணீர் குடிக்க கூட எழுந்திருக்காது எங்கும் செல்லாது ஒரே மூச்சாக உட்கார்ந்து பரீக்குட்டி, கருத்தம்மா நாவல் கதையை இரவு 10.30-க்கு படித்து முடித்த பின்புதான் எழுந்தேன். பின்னாட்களில் அந்த நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட "செம்மீன்" மலையாள திரைப்படத்தில் நடித்த நாயகி ஹீலா, கடைசிவரை "செம்மீன் ஷீலா" என்றே அழைக்கப்பட்டார்.

செம்மீன் நாவல்
செம்மீன் நாவல்

என்னுடன் அறிமுமான பிரேம் என்ற நண்பன், அவனுடைய தந்தை ஒரு ஆசிரியர் எனவும் "செம்மீன்" படம் பார்த்த அவர் அந்த திரைப்படத்தில் பரீக்குட்டியாக நடித்த "பிரேம் நஸீர்" அவருடைய மனம் கவர்ந்த நடிகராக, நண்பனுக்கு பிரேம் என்ற பெயரை சூட்டியதாக சிலாகித்து கூறியதாக நெகிழ்வுடன் கூறினான். நானும் செம்மீன் நாவலை படித்த ஞாபகத்தில் செம்மீன் திரைப்பட குறுந்தகட்டை வாங்கி பார்த்து மகிழ்ந்தேன். இன்றுவரை எத்தனை நாவல்களை படித்த போதும் ஒரே மூச்சாக அமர்ந்து நாவலை படித்து முடித்த பின்பு எழுந்தேன் என்பது மறக்க முடியாத அனுபவம்.

வாய்ப்பு கிடைத்தால் செம்மீன் நாவலை வாசியுங்கள், செம்மீன் படத்தையும் பாருங்களேன்.

புத்தகங்களை வாசிப்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா அவர்களுடைய சுவாரஸ்யமான தகவல் அனைவரும் பின்பற்ற வேண்டியது. ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான புத்தகங்களை வாசிப்பதை விட பல்வேறு வகையான புத்தகங்களை மாற்றி, மாற்றி படிக்கலாம், கழிவறை நேரத்தில் கூட வாசிக்க கழிவறையில் கூட ஒரு புத்தகத்தை வைத்துக் கொள்ள வேண்டுமென கூறியவர்.

நாயகன் பெரியார்
நாயகன் பெரியார்

"பாட்ஷா" என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களால், அதன் பிறகு அந்த பாட்ஷா படத்தை விஞ்சும் வகையில் ஒரு படத்தை கூட இயக்கவில்லை, அந்த திரைப்படத்தை தயாரித்த ஆர். எம்.வீரப்பன் அவர்களிடம் நடிகர் ஒரு வேண்டுகோள் வைத்து பெற்றுக் கொண்டாராம். பாட்ஷா பட திரைப்பட கதையினை எந்த சூழ்நிலையிலும், எவ்வளவுக்கும் யாருக்கும் விற்க கூடாது என்ற உறுதிமொழியை. அப்படியான ஆயிரம் பாட்ஷாவை விஞ்சும் வகையில் ஒரு உண்மையான வரலாற்று நூல் அஜயன்பாலா அவர்களுடைய எழுத்து நடையில் ஆனந்த விகடனில் "நாயகன் " தொடராக வந்து நூலாக வந்த பெரியார் நூல்தான்.

கலைஞர்.கருணாநிதி அவர்களே அஜயன்பாலா எழுதிய நாயகன் பெரியார் தொடரை படித்து, நாயகன் பெரியார் புத்தகத்தை ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாசிக்குமாறு கூறினாராம். நீங்களும் வாசியுங்களேன்.

இப்போது கூட 20,000 புத்தகங்களை படியுங்கள் என பட்டியலை கூறவில்லை. சுஜாதா அவர்கள் கூறியபடி சிறுகதை, நாவல், வரலாறு, அறிவியல், கவிதைகள் என கலந்து கட்டி வாசியுங்கள். வாசிப்பு அது ஒரு சுகானுபவம். நேசித்து, வாசிப்போம்.


-வீ.வைகை சுரேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.