Published:Updated:

அரசு நூலகங்களை மேம்படுத்த எளியவனின் கோரிக்கைகள்! | My Vikatan

தற்காலிக நூலகம்

நூலகத்தினை மேம்படுத்த பத்து வருட நூலக வாசகர் என்ற முறையில் சில கோரிக்கைகளை வைக்கிறேன்.

அரசு நூலகங்களை மேம்படுத்த எளியவனின் கோரிக்கைகள்! | My Vikatan

நூலகத்தினை மேம்படுத்த பத்து வருட நூலக வாசகர் என்ற முறையில் சில கோரிக்கைகளை வைக்கிறேன்.

Published:Updated:
தற்காலிக நூலகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தமிழகத்தில் ஊர்ப்புற நூலகம், கிளை நூலகம், மாவட்ட மைய நூலகம் என்று பலதரப்பட்ட நூலகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான நூலகங்கள் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது என்பது தான் வேதனைக்குரிய விஷியம். ஒரு ஊரின் தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால் அந்த ஊரிலுள்ள நூலகத்தின் தன்மையை கவனித்தாலே போதுமானது. அவ்வகையில் நூலகத்தினை மேம்படுத்த பத்து வருட நூலக வாசகர் என்ற முறையில் சில கோரிக்கைகளை வைக்கிறேன்.


1. அண்ணா நூற்றாண்டு நூலகம் மாதிரியான பெரிய பெரிய நூலகங்கள் மற்றும் ஒரு சில மாவட்ட மைய நூலகங்களுக்கு தனித்தனி வெப்சைட் உள்ளன. அதுபோல ஊர்ப்புற நூலகம் முதற்கொண்டு கிளைநூலகம் என அனைத்து விதமான நூலகங்களுக்கும் தனித்தனி வெப்சைட் (உதாரணம்: http://www.annacentenarylibrary.org/?m=1) தொடங்கப்பட வேண்டும். அதில் நூலகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் பற்றி பதிவிடலாம். நூலகத்தில் படித்து அரசுப்பணியில் சேர்ந்தவர்களை பற்றி பதிவிடலாம். அந்நூலகம் உள்ள பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்களை பற்றி, அந்தந்த பகுதி எழுத்தாளர்கள் பற்றி (கட்சி சார்பில்லாத சாதி சங்கம் சார்பில்லாத சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் - அரசு விருதுபெற்ற படைப்பாளிகளால் பரிந்துரைக்கப்படுபவர்கள்) பதிவிடலாம். நிறைய நூலகங்களில் இந்த வசதிகள் இருப்பினும் அவை முறையாக அப்டேட் செய்யப்படுவதில்லை.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்

2. ஒருசில நூலகங்களில் மாதந்தோறும் சிந்தனை மன்றம் என்ற பெயரில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் சிந்தனையாளர்களை அழைத்து வந்து சிறப்புரை ஆற்ற வைக்கிறார்கள். ஆனால் அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் முறையாக தொடர்ந்து நடைபெறுவதில்லை. ஆதலால் ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திலும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிந்தனை மன்றம் நடத்தப்பட வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் பொன்மாலைப் பொழுது நிகழ்வு வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன. அதுபோல "நூலகத்துறை சிந்தனை மன்றம்" என்று அரசு சார்பில் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு அதில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சிந்தனை மன்ற உரையாடல் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அரசு சார்பில் புத்தக திருவிழா நடத்துகிறார்கள். அந்த விழாக்களில் நடைபெறும் சிறப்பு விருந்தினர்களின் உரையாடல்கள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை அந்த யூடியூப் சேனலில் பதிவிடலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3. நூலகத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பொது நூலகத்துறையால் சோசியல் மீடியா பக்கம் ஒன்று உருவாக்கி அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இடம்பெற செய்ய வேண்டும். எழுத்தாளர்களின் பிறந்தநாள், இலக்கிய துறை முன்னோடிகளின் பிறந்தநாள் போன்ற நாட்களில் அவர்கள் எழுதிய புத்தகங்களை பற்றி பதிவிடலாம். எழுத்தாளர்களின் கவிதைகள், முக்கியமான வரிகள் போன்றவற்றை நாள்தோறும் அந்த சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடலாம். இலக்கியம் படித்த முதல்தலைமுறை பட்டதாரிகளை அந்தப் பொறுப்பில் நியமிக்கலாம். நிறைய இலக்கிய அமைப்புகள் பத்திரிக்கைகள் இதழ்கள் சிறுகதை போட்டி, கவிதை போட்டிகள் நடத்துகின்றன. அந்தப் போட்டிகள் குறித்த அறிவிப்புகளையும் அந்த சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடலாம்.

Representational Image
Representational Image

4. நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவ்வாறு நூலகத்தில் படித்து அரசுப்பணியில் இணையும் மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் அல்லது அமைச்சர் கையால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவை வழங்க வேண்டும். அவர்களை நூலகத்திற்குப் பெருமை சேர்த்த இளைஞர்கள் என்று நூலகத்தில் நன்கொடையாளர்கள் பெயர்களுக்குப் பக்கத்தில் அவர்கள் பெயரை எழுதி அங்கீகரிக்க வேண்டும்.


5. ஊர்ப்புற நூலகங்கள் முதற்கொண்டு அனைத்து நூலகங்களிலும் கணிணி பயன்பாடு வர வேண்டும். நாம் என்ன தலைப்பில் புத்தகம் எடுக்க விரும்புகிறோமோ அந்த தலைப்பை கணிணியில் தேடி தற்போது நூலகத்தில் உள்ளதா அல்லது வேறொருவர் எடுத்துச் சென்றுள்ளாரா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் கணிணி பயன்பாடு அமைய வேண்டும்.

6. நூலகங்களில் குடிநீர் வசதி சரிசெய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நூலகத்திலும் குடிநீர் வழங்கும் எந்திரம் வைக்கப்பட வேண்டும்.

7. ஊர்ப்புற நூலகம் உட்பட அனைத்து நூலகங்களிலும் இலக்கியத்துக்கான தமிழக அரசு விருது மற்றும் மத்திய அரசு விருது பெற்ற படைப்புகளை தனிப்பகுதியாக இடம்பெற செய்ய வேண்டும்.

8. நூலகத் தந்தை அரங்கநாதர் பிறந்தநாளன்று சிறந்த நூலகர்கள் கௌரவிக்கப்படுவது போல் சிறந்த நூலக வாசகர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். கட்டுரை, கவிதை, சிறுகதை, ஓவியம் போன்ற இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு மத்திய மாநில விருது பெற்ற படைப்பாளிகளை நடுவராக கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அரங்கநாதர் பிறந்தநாள் விழாவன்று அந்த வெற்றியாளர்களுக்கு முதல்வர் கையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட வேண்டும். அப்படைப்புகளை நூலகத்துறை சார்பில் தனித்தனி புத்தகங்களாக தொகுத்து அனைத்து நூலகங்களிலும் அவற்றை கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

Representational Image
Representational Image

9. மத்திய மாநில அரசு விருதுபெறும் கலைஞர்களுக்கு அந்தந்த மாவட்ட நூலகம் சார்பில் அருகிலுள்ள கலையரங்கங்களில் பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நிகழ்வு வீடியோக்களை சிந்தனை மன்றம் யூடியூப் சேனலில் பதிவிடலாம்.

10. நூலகத்துறை சார்பில் இணைய இதழொன்று தொடங்கப்பட வேண்டும். மூத்த பத்திரிக்கையாளர்கள், இதர துறை வல்லுனர்கள் உள்ளிட்டோரை தலைமை பொறுப்பில் அமர்த்தி நூலக உறுப்பினர்களாக இருக்கும் இளைஞர் இளைஞிகளை கட்டுரைகள் எழுத வைக்கலாம். அக்கட்டுரைகளுக்கு தகுந்த சன்மானம் வழங்கினால் பார்ட் டைம் வேலை தேடும் பலருக்கு மற்றும் குடும்ப பெண்கள் பலருக்கு நிதி கிடைக்க செய்யலாம். சிறந்த கட்டுரையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நூலகத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் கேடயம் போன்றவை வழங்கலாம்.

பெரும்பாலான அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்துவிடுவதால் தான் பெரும்பாலான அரசு நூலகங்கள் மாசு படிந்து கிடக்கின்றன. மாசுக்களை அகற்றும் மாற்றங்கள் நிறைய தேவை!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.