Published:Updated:

மகாராஷ்டிரா பள்ளிப் பாடப்புத்தகத்தில் நம்மூர் அரசுப்பள்ளி மாணவி! | My Vikatan

ஜெய லட்சுமி

தொண்டு நிறுவனம் ஜெயலட்சுமியிடம் வேறு "எதாவது தேவைப்படுகிறதா?" என்று கேட்க "தங்கள் ஊர்ப் பெண்கள் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்" என்று ஜெயலட்சுமி பதிலளித்தார்.

மகாராஷ்டிரா பள்ளிப் பாடப்புத்தகத்தில் நம்மூர் அரசுப்பள்ளி மாணவி! | My Vikatan

தொண்டு நிறுவனம் ஜெயலட்சுமியிடம் வேறு "எதாவது தேவைப்படுகிறதா?" என்று கேட்க "தங்கள் ஊர்ப் பெண்கள் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்" என்று ஜெயலட்சுமி பதிலளித்தார்.

Published:Updated:
ஜெய லட்சுமி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவி கே. ஜெய லட்சுமி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது நாசா விண்வெளி மையம் நடத்திய தேர்வொன்றில் தேர்ச்சி பெற்று அந்த விண்வெளி மையத்திற்குச் செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் பயண செலவு உட்பட பல செலவுகள் பாதியை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அந்நிறுவனம் சொல்ல அவர் தன் நிலைமையை ஆசிரியர்களிடம் விளக்க, அரசுப்பள்ளி மாணவிக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சமூக ஆர்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அப்படி உதவிக்கரம் நீட்டியவர்களில் "கிராமலயா" நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் ஜெயலட்சுமியிடம் வேறு "எதாவது தேவைப்படுகிறதா?" என்று கேட்க "தங்கள் ஊர்ப் பெண்கள் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்" என்று ஜெயலட்சுமி பதிலளித்தார்.

அவருடைய கோரிக்கையை ஏற்று அந்நிறுவனம் அந்த ஊரில் மொத்தம் 126 தனிநபர் கழிவறைகள் கட்டி கொடுத்துள்ளது.

ஜெய லட்சுமி
ஜெய லட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண மாணவி ஊருக்கே வெளிச்சமான செயலை பாராட்டி விகடன் 2020 ஆம் ஆண்டு டாப் 10 இளைஞர்களில் ஒருவராக கே. ஜெயலட்சுமியை தேர்ந்தெடுத்து அவருக்கு "நம்பிக்கை விகடன்" விருது வழங்கி கௌரவித்தது.

இந்த வீடியோவில் ஊருக்கான உதாரணம் என்ற தலைப்பில் (3:05) அவர் பற்றிய குறிப்பு உள்ளது.

https://youtu.be/SVHaLDsLs2I

மகாராஷ்டிரா மாநில பள்ளி ஏழாம் வகுப்பு தமிழ்பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கே. ஜெய லட்சுமி பற்றிய பாடப்பகுதி இவை: