Published:Updated:

ஓசில வர்றீங்க சீட் எதுக்குனு கேட்குறாங்க! - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேருந்தில்ஆபத்தின் விளிம்பிலும் பயணித்த பள்ளி மாணவர்கள்.
பேருந்தில்ஆபத்தின் விளிம்பிலும் பயணித்த பள்ளி மாணவர்கள். ( தே.சிலம்பரசன் )

பாராட்டுக்குரிய இந்த மாற்றத்துக்கு முழுக்க முழுக்க விகடனே காரணம். நன்றி விகடன்! அதே சமயம் இந்தப் பேருந்து விவகாரம் குறித்து எனக்கும் சிறுவயது முதலே ஒரு ஆசை உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணித்த வீடியோ செப்டம்பர் 7-ம் தேதியன்று விகடனில் வெளியானது. அந்த ஆபத்தான பயணத்தைக் கவனித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், ``பள்ளி மாணவர்கள் மட்டும்" பயணிக்கும் வகையில் கூடுதல் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். பாராட்டுக்குரிய இந்த மாற்றத்துக்கு முழுக்க முழுக்க விகடனே காரணம். நன்றி விகடன்! அதே சமயம் இந்தப் பேருந்து விவகாரம் குறித்து எனக்கும் சிறுவயது முதலே ஒரு ஆசை உண்டு. அரசுப் பள்ளிகளுக்கு என்று அரசாங்கம் தனியாகப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

மாணவர்கள்
மாணவர்கள்

இப்போது நடந்துகொண்டிருக்கும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு போக்குவரத்து வசதியை அமைத்துக் கொடுக்கும் வகையில் ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வசதி உள்ளது என்றாலும், அது எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் இல்லை. இதனால் நிறைய மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவச பஸ் பாசில்தான் பயணித்து வருகின்றனர். அப்படி அரசுப் பேருந்தில் பயணிக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் நிறைய உண்டு.

1. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை பேருந்தில் ஏற்றிச் செல்லும் கண்டக்டர்கள் மதிப்பதே இல்லை. நிறைய கண்டக்டர்கள் எப்போதும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம் எரிச்சலாகத்தான் பேசுகின்றனர். குறிப்பாக, மாணவ மாணவிகளை, ``அதுங்க... இதுங்க..." என்று ஆடுமாடுகளை பேசுவது போல் பேசுகின்றனர் நிறைய கண்டக்டர்கள். இது மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது.


2. கூட்டம் இல்லாத பேருந்துகளில் சீட் காலியாக இருந்தாலும் இலவசமாகப் பயணிக்கும் மாணவ மாணவிகளை சிலர் அமர விடுவதில்லை. ஓசில வர்றீங்க, ஒழுங்கா நின்னுட்டு வாங்கடா என்று சில கண்டக்டர்கள் பேசியுள்ளதை நானே பலமுறை கேட்டுள்ளேன்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

3. மாணவர்கள் படியில் நின்று தொங்கியபடி பயணிப்பது போல மாணவிகளும் பல சமயங்களில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இந்தக் காரணத்தாலாயே மக்கள் பலர் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட மஞ்சள் கலர் பள்ளிப் பேருந்துகள் வரிசையாக நிற்கும். அதுபோல அரசுப் பள்ளிகளிலும் மஞ்சள் கலர் பேருந்துகள் வரிசையாக நிற்க வேண்டும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர் மாணவிகளின் எண்ணிக்கையோ தனியாகப் பேருந்துகள் இயக்கும் அளவுக்கு இல்லை. அதனால் அரசு முதற்கட்டமாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு தலா எட்டு பேருந்துகள் எட்டு திசையிலும் பயணிக்கும் வகையில் இலவசமாகக் கொடுத்து பொறுப்பான டிரைவர்களை நியமிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது வெற்றிகரமான செயல்பாடாக மாறினால் தமிழகத்தில் உள்ள 4,322 மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலா எட்டு பேருந்துகள் இயக்கலாம். அப்படி இயக்கினால் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை இரட்டிப்பாகும். அப்படி நடந்தால் 29,347 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 8,351 நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலா நான்கு/எட்டு பேருந்துகள் அல்லது வேன்கள் மாணவ மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கலாம்.

அரசுப் பள்ளி மாணவர்கள் - Representational Image
அரசுப் பள்ளி மாணவர்கள் - Representational Image

நான் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் ஐந்து வருடங்களாகப் படித்தேன். சரியான பேருந்து வசதி இல்லை என்ற ஒரே காரணத்தை வைத்து ஐந்து வருடங்களாக எந்தச் சுற்றுலாவுக்கும் பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை/ எங்களை அழைத்துச் செல்லவே இல்லை. புத்தக திருவிழாக்கள் மாதிரியான விழாக்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்கின்றன. ஆனால், நிறைய அரசுப் பள்ளிகளில் அப்படி மாணவ மாணவிகளை எங்கும் அழைத்துச் செல்வது இல்லை. இது போன்ற சூழல்கள் `கல்வி சமத்துவம்' என்ற நிலை தமிழகத்தில் வரவே வராது என்பதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆகவே இப்போது பொறுப்பேற்று இருக்கும் அரசு... குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு என்று தனியாகப் பேருந்துகள் (government school bus) நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும்!

- மா.யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு